என் மலர்
இது புதுசு
டொயோட்டா நிறுவனத்தின் புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் தனது பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலை ஜனவரி 6 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் வெளியீட்டுக்கு முன் புதிய டொயோட்டா புல்-சைஸ் எஸ்யுவி மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
அதன்படி புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் மொத்தம் பத்து வேரியண்ட்களில் கிடைக்கும் என்றும் இவை பல்வேறு நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவைதவிர 2021 பார்ச்சூனர் கார் உயர் ரக வேரியண்ட் லெஜண்டர் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த வேரியண்ட் முன்புறம் அதிரடி தோற்றம் கொண்டிருக்கும் என்றும் காரை சுற்றி பிளாக் நிற அக்சென்ட்கள் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இது டூயல் டோன் வைட் மற்றும் பிளாக் வெளிப்புற ஸ்கீம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், 2 மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது புதிய கார் மாடலுக்கான அசத்தல் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிதாக டைகுன் எனும் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் இந்த மாடலுக்கான டீசர் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.
டீசர் வீடியோவில் புதிய கார் விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய டைகுன் மாடல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 IN பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதன் முன்புறம் சதுரங்க வடிவம் கொண்ட ஹெட்லேம்ப்கள், செங்குத்தான கிரில், பம்ப்பரில் பாக் லேம்ப் மற்றும் ஸ்கிட் பிளேட் ஹவுசிங் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த கார் சவுகரியமான 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. காரின் பின்புற குவாட்டர் கிளாஸ் மீது இருக்கும் கிராபிக்ஸ் காரின் தோற்றத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கிறது. இத்துடன் டெயில் லேம்ப்கள் வித்தியாசமாக இருக்கின்றன.
காரின் உள்புற கேபினில் டேஷ்போர்டு மற்றும் டோர் பேனல்களில் வெளிப்புற நிறம் இன்சர்ட் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், புதிய மல்டிமீடியா சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி வழங்கப்படலாம்.
புதிய ஃபோக்ஸ்வேகன் கார் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த என்ஜின் 148 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடல் இந்தியாவில் ஜனவரி 21, 2021 தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. அறிமுகமானதும் இந்தியாவில் கிடைக்கும் நீண்ட மற்றும் அதிக இடவசதி கொண்ட என்ட்ரி லெவல் செடான் மாடலாக இருக்கும்.
இந்த கார் வாடிக்கையாளர்களுக்கு அதிக இடவசதியை வழங்கும் வகையில் நீளமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. நீண்ட வீல்பேஸ் தவிர கிரான் லிமோசின் மாடல் தோற்றத்தில் ஸ்டான்டர்டு வேரியண்ட்டை போன்றே காட்சியளிக்கிறது. இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் CLAR தளத்தில் உருவாகி இருக்கிறது.
புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 255 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஜிம்னி மாடல் இந்திய உற்பத்தி துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் தனது ஜிம்னி எஸ்யுவி மாடல் உற்பத்தியை இந்தியாவில் துவங்கி உள்ளது. முதற்கட்டமாக மூன்று கதவுகள் கொண்ட ஜிம்னி மாடல் 50 யூனிட்கள் குருகிராமில் உள்ள மாருதி சுசுகி ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்திய உற்பத்திக்கென மாருதி சுசுகி நிறுவனம் ஜிம்னி மாடல் பாகங்களின் சிகேடி கிட்களை ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்து இருக்கிறது. முதற்கட்ட யூனிட்கள் இறக்குமதி செய்யப்பட்ட சிகேடி கிட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படு உள்ளது.

ஏற்கனவே வெளியான தகவல்களின் படி மாருதி சுசுகி நிறுவனம் ஜிம்னி மாடலின் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. மாருதி சுசுகி தவிர மஹிந்திரா நிறுவனம் ஐந்து கதவுகள் கொண்ட தார் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
சுசுகி ஜிம்னி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 105 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இதே என்ஜின் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் சியாஸ் போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டார் பிளஸ் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் எஸ்யுவி மாடல் ஜனவரி 2021 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது. மேலும் எம்ஜி மோட்டார் வாகனங்கள் விலையும் ஜனவரி மாதம் முதல் உயர்த்தப்பட இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
எம்ஜி ஹெக்டார், இசட்எஸ் இவி மற்றும் பிளாக்ஷிப் குளோஸ்டர் எஸ்யுவி மாடல்கள் விலை ஜனவரி 1, 2021 முதல் மூன்று சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. மற்ற நிறுவனங்களை போன்றே எம்ஜி மோட்டார் நிறுவனமும் செலவீனங்கள் அதிகரித்து இருப்பதை விலை உயர்வுக்கு காரணமாக தெரிவித்து உள்ளது.
ஹெக்டார் பிளஸ் எஸ்யுவி மாடல் அந்நிறுவனத்தின் ஹெக்டார் பிராண்டிங்கில் புதிதாக இணைய இருக்கிறது. தற்சமயம் எம்ஜி ஹெக்டார் மாடல் ஐந்து மற்றும் ஆறு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய 6 பேர் பயணிக்கக்கூடிய ஹெக்டார் பிளஸ் மாடலில் இரண்டாம் அடுக்கு இருக்கைகள் தனித்தனியே பொருத்தப்படுகின்றன.
இருக்கை மாற்றம் தவிர புதிய ஹெக்டார் பிளஸ் மாடலில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படாது என்றே தெரிகிறது. இத்துடன் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் ஏழு பேர் பயணிக்கும் வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் மாருதி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் `YTB' எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக தெரிகிறது. இது பலேனோ மாடல் உருவான பிளாட்பார்மிலேயே உருவாக்கப்படுகிறது. மாருதி பலேனோ மாடல் நெக்சா விற்பனையகம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் மாருதி சுசுகி அரினா நெட்வொர்க் மூலம் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும், இதன் விலை பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இசட்எஸ் இவி மாடலை இந்திய சந்தையில் தனது இரண்டாவது மாடலாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது. இந்தியாவில் எம்ஜி இசட்எஸ் மாடல் துவக்க விலை ரூ. 20.88 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது இசட்எஸ் காரின் பெட்ரோல் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன்படி எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் மாடல் 2021ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்திய சந்தையில் புதிய இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட் கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் நிசான் கிக்ஸ் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
2021 எம்ஜி ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ஹெக்டார் எஸ்யுவி மாடலின் பேஸ்லிப்ட் வெர்ஷனை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பேஸ்லிப்ட் ஹெக்டார் மாடல் ஸ்பை படங்கள் பலமுறை வெளியாகி இருக்கின்றன.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி எம்ஜி ஹெக்டார் பேஸ்லிப்ட் எஸ்யுவி மாடல் 2021 ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடல் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிக மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடல் என்ஜின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் வாகனமாக ஹெக்டார் எஸ்யுவி 2019 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
அறிமுகமானது முதல் ஹெக்டார் மாடல் அதிக பிரபலமான எஸ்யுவி ஆக இருந்து வருகிறது. மேலும் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாகவும் எம்ஜி ஹெக்டார் இருந்து வருகிறது.
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிபென்டர் ஹைப்ரிட் மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா தனது முதல் பிளக்-இன் ஹைப்ரிட் வாகனத்துக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. இது டிபென்டர் P400e ஆகும். இது SE, HSE, X-Dynamic HSE, மற்றும் X என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விநியோகம் 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டு வாக்கில் துவங்கும் என தெரிகிறது.
புதிய லேண்ட் ரோவர் டிபென்டர் பிளக்-இன் ஹைப்ரிட் மாடலில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 105-kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இவை இரண்டும் 398 பிஹெச்பி பவர், 640 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.6 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 209 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் டக்சன் பிளக்-இன் ஹைப்ரிட் மாடல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புத்தம் புதிய டக்சன் மாடல் பிளக்-இன் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் முதற்கட்டமாக ஐரோப்பிய சந்தையில் 2021 மார்ச் முதல் மே மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
சர்வதேச சந்தை விற்பனையில் அசத்தி வரும் ஹூண்டாய் டச்கன் பல்வேறு எலெக்ட்ரிக் பவர்டிரெயின்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. டக்சன் பிளக்-இன் வேரியண்ட்டில் சக்திவாய்ந்த பவர்டிரெயின் வழங்கப்படும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த சிஸ்டம் 1.6 லிட்டர் டி-ஜிடிஐ ஸ்மார்ட்ஸ்டிரீம் என்ஜின் சார்ந்த உருவாகிறது. இத்துடன் 66.9kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 304 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 13.8kWh லித்தியம் பாலிமர் பேட்டரி வழங்கப்படுகிறது.
என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் ஒன்றிணைந்து 258 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஆடி நிறுவனத்தின் புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடல் உற்பத்தி துவங்கி இருக்கிறது. இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ஆடி இந்தியா நிறுவனம் தனது ஏ4 பேஸ்லிப்ட் மாடல் உற்பத்தி இந்தியாவில் துவங்கி உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. இந்த கார் மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் இது 2021 ஆண்டு ஆடி நிறுவனத்தின் முதல் வெளியீடாக ஏ4 பேஸ்லிப்ட் இருக்கும். இந்த கார் பி9 ஆடி 4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது மிட்-லைப் பேஸ்லிப்ட் மாடல் ஆகும்.
புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம், உள்புறங்களில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன்படி மேம்பட்ட முன்புற பம்ப்பர், கிரில், புதிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், புது டெயில் லைட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இந்த காரில் 2.0 லிட்டர் டிஎப்எஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. அறிமுகமானதும் ஆடி ஏ4 பேஸ்லிப்ட் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸஇ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650 ட்வின் மோட்டார்சைக்கிள் மாடல்களில் விரைவில் அசத்தல் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மாடல்களில் அலாய் வீல்களை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அப்டேட் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் வெளியாகி உள்ள தகவல்களின் படி ராயல் என்பீல்டு 650 ட்வின் மாடல்களுக்கான அலாய் வீல்கள் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதன் உறுதித்தன்மை சோதனை விரைவில் நிறைவு பெற இருக்கிறது. இது பிப்ரவரி 2021 வாக்கில் வழங்கப்படலாம் என தெரிகிறது.

அலாய் வீல்கள் வெளியானதும் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 வாடிக்கையாளர்கள் இதனை கூடுதல் அக்சஸரீயாக வாங்கிக் கொள்ளலாம். அலாய் வீல்கள் மட்டுமின்றி ராயல் என்பீல்டு நிறுவனம் டியூப்லெஸ் டையர்களையும் வழங்கலாம் என கூறப்படுகிறது.
அலாய் வீல்கள் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றே தெரிகிறது. இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு 650சிசி மாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்த வரவேற்புக்கு இவற்றின் விலை தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.






