என் மலர்
கார்
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் மாடல் புது லோகோவுடன் விற்பனைக்கு வர இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தனது வாகனங்களில் புது லோகோ பொருத்தி வருகிறது. புதிய லோகோ கொண்ட கியா கார்கள் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. முன்னதாக கியா மோட்டார்ஸ் தனது புது லோகோவை ஜனவரி 6 ஆம் தேதி வெளியிட்டது.

தற்போது புதிய லோகோ கொண்ட கியா சொனெட் மாடல் விற்பனையகம் வந்தடைந்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இந்த காரில் புது லோகோ பொனெட் மற்றும் பூட்லிட் பகுதிகளில் பொருத்தப்பட்டு இருக்கிறது. கியா சொனெட் போன்றே செல்டோஸ் மாடலிலும் புது லோகோ வழங்கப்படும் என தெரிகிறது.
கியா நிறுவனம் விரைவில் தனது செல்டோஸ் மாடலின் புது வேரியண்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது செல்டோஸ் கிராவிட்டி என அழைக்கப்படலாம் என தெரிகிறது. இந்த வேரியண்ட் காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டுள்ளது.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இதுவரை 10 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்துள்ளது.
நிசான் நிறுவனம் தனது மேக்னைட் மாடலுக்கான முன்பதிவு 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் நிசான் மேக்னைட் எஸ்யுவி மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.

முன்பதிவு மட்டுமின்றி இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இதுவரை 10 ஆயிரம் யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் டிசம்பர் 2, 2020 அன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. வெளியீட்டில் இருந்து இதுவரை மேக்னைட் மாடலை வாங்க 2,78,000 பேர் மேக்னைட் விவரங்களை கேட்டறிந்துள்ளனர்.
நிசான் மேக்னைட் மாடல் XE, XL, XV மற்றும் XV பிரீமியம் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா காம்பேக்ட் செடான் மாடல் இந்தியாவில் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது ஆரா காம்பேக்ட் செடான் மாடல் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு இ வேரியண்ட் தவிர அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும். ஆரா மாடல் விலை முன்பை விட ரூ. 4240 உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஆரா மாடல் புதிய விலை ரூ. 5.92 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 9.34 லட்சம் வரை மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களின் படி ஹூண்டாய் ஆரா மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி இ வேரியண்ட் தவிர அனைத்து மாடல்களிலும் பின்புற ஸ்பாயிலர் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் ஆரா மாடல் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. இது 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இரு என்ஜின்களும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி யூனிட் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது. ஹூண்டாய் ஆரா எஸ் வேரியண்ட் மட்டும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வசதியுடன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஹூண்டாய் ஆறா மாடல் மாருதி சுசுகி டிசையர், போர்டு ஆஸ்பயர், டாடா டிகோர் மற்றும் ஹோண்டா அமேஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் சில கார் மாடல்கள் விலை மட்டும் இந்தியாவில் திடீரென மாற்றப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் தனது கார் மாடல்கள் விலையை 1.6 சதவீதம் உயர்த்தி இருக்கிறது. இது கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலையில் பிரதிபலிக்கும். எந்தெந்த மாடல்கள் விலை உயர்த்தப்படுகிறது என்ற விவறங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

கடந்த மாதமே கார் மாடல்களின் உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதால், விரைவில் விலை உயர்த்துவதாக மாருதி சுசுகி அறிவித்து இருந்தது. அந்த வரிசையில், கார்களின் விலை 1.6 சதவீதம் உயர்த்தப்படுவதாக மாருதி சுசுகி அறிவித்தது. இந்த ஆண்டு துவக்கம் முதலே மாருதி கார் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்படுகிறது.
மார்ச் மாதத்தில் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 1,67,014 யூனிட்களை விற்பனை செய்தது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது 99 சதவீதம் வளர்ச்சி ஆகும்.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2021 ஆரா மாடல் கார் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
2021 ஹூண்டாய் ஆரா இந்திய சந்தையில் அறிமுகமானது. முன்னதாக 2021 ஹூண்டாய் ஆரா மாடல் விற்பனையகம் வந்தடைந்தது. இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. புதிய ஆரா மாடல் விலை முந்தைய மாடலை விட ரூ. 4 ஆயிரம் அதிகமாகி இருக்கிறது.
எனினும், இதன் பேஸ் வேரியண்ட் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் விலை ரூ. 5.92 லட்சம் எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.34 லட்சம் எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

புதிய சப்-4 மீட்டர் செடான் மாடலின் எஸ் பெட்ரோல் வேரியண்டில் 15 இன்ச் வீல்கள் உள்ளன. பேஸ் வேரியண்ட் தவிர அனைத்து வேரியண்ட்களிலும் 14 இன்ச் ஸ்பேர் டையர் வழங்கப்படுகிறது. என்ட்ரி லெவல் மாடலில் 13 இன்ச் யூனிட் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் ஆரா மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் போன்ற என்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இந்தியாவில் புதிய ஹூண்டாய் ஆரா மாடல் போர்டு ஆஸ்பையர், மாருதி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் 2021 கோடியக் பேஸ்லிப்ட் மாடல் பல்வேறு புது அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஸ்கோடா நிறுவனம் மேம்பட்ட கோடியக் பேஸ்லிப்ட் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. மூன்றடுக்கு இருக்கை கொண்ட புது எஸ்யுவி மாடலில் மேம்பட்ட முன்புறம் மற்றும் கேபின் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆர்எஸ் ட்ரிம் சார்ந்து உருவாகி இருக்கும் கோடியக் மாடல் இரு டீசல், மூன்று பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் மேம்பட்ட முன்புற கிரில், எல்இடி ஹெட்லைட் வழங்கப்படுகிறது. மேலும் பயனர் விரும்பினால் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்களை பெறும் வசதியும் வழங்கப்படுகிறது. பின்புறம் எல்இடி டெயில் லேம்ப் புது டிசைனில் வழங்கப்படுகிறது. கோடியக் மாடல் 17 முதல் 20 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது.

2021 ஸ்கோடா கோடியக் மாடல் கேபினில் இரண்டு ஸ்போக் கொண்ட ஸ்டீரிங் வீல், ஆம்பியன்ட் லைட்டிங், 9.2 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், முன்புறம் லெதர் இருக்கைகள் உள்ளன. இத்துடன் 10.25 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
புதிய கோடியக் மாடல் 2.0 லிட்டர் என்ஜின், முன்புற வீல் டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் வசதியுடன் வழங்கப்படுகிறது. இவை முறையே 147 பிஹெச்பி பவர் மற்றும் 197 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி யூனிட் வழங்கப்படுகிறது.
இத்துடன் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின், ஆக்டிவ் சிலிண்டர் தொழில்நுட்பம் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறை 147 பிஹெச்பி பவர், 188 பிஹெச்பி பவர் மற்றும் 241 பிஹெச்பி பவர் வழங்குகிறது.
இந்திய சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா தார் முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை தார் மாடல் முன்பதிவில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை புதிய தார் மாடலை வாங்க சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
அறிமுகமானது முதல் கணிசமான வரவேற்பு பெற்று வருவதை தொடர்ந்து புதிய தார் மாடல் உற்பத்தியை அதிகப்படுத்தும் பணிகளில் மஹிந்திரா ஈடுபட்டு வருகிறது. புதிய தலைமுறை தார் மாடல் மஹிந்திராவின் நாசிக் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா தார் மாடல் விலை ரூ. 9.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மஹிந்திரா தார் மாடல் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. 2020 மஹிந்திரா தார் மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 130 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் வழங்கப்படுகிறது. இது 150 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவன கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏப்ரல் மாதத்துக்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் லாயல்டி தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகிறது.
டாடா டியாகோ மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் மற்றும் ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. டிகோர் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. நெக்சான் டீசல் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் கள்ளுபடி வழங்கப்படுகிறது.

மிட்-சைஸ் எஸ்யுவி மாடலான ஹேரியர், கமோ, டார்க் எடிஷன், XZ+ மற்றும் XZA+ வேரியண்ட்களுக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. மற்ற வேரியண்ட்களுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 40 ஆயிரம் எக்சேன்ஜ் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
டாடா அல்ட்ரோஸ், டாடா சபாரி போன்ற மாடல்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த சலுகைகள் ஏப்ரல் 30 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.
ஆடி நிறுவனம் கியூ4 இ டிரான் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆடி நிறுவனத்தின் இ டிரான் எலெக்ட்ரிக் மாடலை சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கியூ4 இ டிரான் மற்றும் கியூ4 இ டிரான் ஸ்போர்ட்பேக் வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இவை காம்பேக்ட் கார் பிரிவில் ஆடி நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் மாடல்களாக இருக்கும்.

தற்போது புது எலெக்ட்ரிக் மாடலுக்கான டீசரை ஆடி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. புதிய கியூ4 இ டிரான் எலெக்ட்ரிக் மாடல் விர்ச்சுவல் நிகழ்வில் அறிமுகமாக இருக்கிறது. இ டிரான், இ டிரான் ஸ்போர்ட்பேக் மற்றும் இ டிரான் ஜிடி மாடல்கள் வரிசையில் நான்காவது மாடலாக இது இருக்கிறது.
புது மாடலில் பல்வேறு ஸ்கிரீன்கள், ஆக்மென்டெட் ரியாலிட்டி, ஏஐ போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. இதன் இருக்கைகள் நப்பா லெதர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. ஆடி கியூ4 இ டிரான் மற்றும் கியூ4 இ டிரான் ஸ்போர்ட்பேக் மாடல் ஏப்ரல் 14 ஆம் தேதி அறிமுகமாகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் 2021 6 சீரிஸ் ஜிடி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் 2021 6 சீரிஸ் ஜிடி மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 67.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய கூப் மாடல் 5 சீரிஸ் போன்ற ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. இந்த மாடல் மூன்று பவர்டிரெயின் ஆப்ஷன்கள், மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய பிஎம்டபிள்யூ காரை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு ரூ. 1.50 லட்சம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. இந்த மாடலின் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் ட்வீக் செய்யப்பட்டு கம்பீர தோற்றம் பெற்று இருக்கிறது. இதில் உள்ள அடாப்டிவ் எல்இடி ஹெட்லேம்ப்கள் மெல்லியதாகவும், புதிய டூயல் எல் வடிவ டிஆர்எல்கள் வழங்கப்படுகின்றன.

புதிய 6 சீரிஸ் ஜிடி மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 255 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 188 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. மேலும் 3.0 லிட்டர் டீசல் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 261 பிஹெச்பி பவர், 620 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்த என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 77.90 லட்சம் ஆகும்.
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் இரு கார் மாடல்களின் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் இன்னோ க்ரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் மாடல்களின் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. வேரியண்டிற்கு ஏற்ப இரு மாடல்களின் விலை ரூ. 27 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 72 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருககிறது. கிளான்சா, யாரிஸ், அர்பன் குரூயிசர் போன்ற டொயோட்டா மாடல்களின் விலை தற்போது உயர்த்தப்படவில்லை.
இன்னோவா க்ரிஸ்டாவின் அனைத்து வேரியண்ட்களும் விலை உயர்வில் பாதிக்கப்பட்டுள்ளன. அதன்படி G+ MT 7 மற்றும் 8 சீட் வேரியண்ட் அதிகபட்சமாக ரூ. 30 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. பார்ச்சூனர் மாடலின் விலை ரூ. 36 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. டாப் எண்ட் மாடலான லெஜண்டர் ரூ. 72 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

சர்வதேச சந்தையில் டொயோட்டா நிறுவனம் முன்னணி கார் உற்பத்தியாளராக அறியப்படுகிறது. இந்தியாவில் ஏழாவது பெரும் நிறுவனமாக டொயோட்டா இருக்கிறது. வாகன விற்பனையில் டொயோட்டா சர்வதேச சந்தையில் முன்னணியில் இருக்கிறது. இந்திய சந்தையில் பல்வேறு பிரிவுகளில் டொயோட்டா பல மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
எனினும், டொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் மாடல்கள் பிரீமியம் பிரிவை சார்ந்தவையாக இருக்கின்றன. டொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் மாடலாக இன்னோவா இருக்கிறது. கடந்த மாதம் மட்டும் இன்னோவா க்ரிஸ்டா 5743 யூனிட்கள் விற்பனையானது.
இந்திய சந்தையில் அதிம் எதிர்பார்க்கப்பட்ட சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் வெளியிடப்பட்டது. இதன் விலை விவரங்களை பார்ப்போம்.
சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் மாடலாக சி5 ஏர்கிராஸ் மிட்-சைஸ் எஸ்யுவி-யை வெளியிட்டது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 29.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
சி5 ஏர்கிராஸ் மாடலில் கிராஸ்ஓவர் போன்ற ஸ்டான்ஸ், ட்வின்-ஸ்லாட் முன்புற கிரில், டூயல் பீம் எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி பாக் லேம்ப், 18 இன்ச் டூயல் டோன் அலாய் வீல், குரோம் பாக்ஸ் டூயல் எக்சாஸ்ட் பைப் மற்றும் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 174 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் இரண்டு வேரியண்ட் மற்றும் ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டக்சன் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் போக்ஸ்வேகன் டிகுவான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.






