என் மலர்
கார்
இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் மூன்று மாடல்கள், ஒரு சிகேடி மாடல் கொண்டு ஹூண்டாய் நிறுவனம் எஸ்யுவி விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் எஸ்யுவி மாடல்கள் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட யூனிட்களும் அடங்கும்.
2015 ஆம் ஆண்டு முதல் தலைமுறை கிரெட்டா மாடலை கொண்டு இந்த பயணம் துவங்கியது. இது ஹூண்டாய் எஸ்யுவி மாடல்களில் அதிக யூனிட்கள் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது.

2019 ஆம் ஆண்டு வென்யூ சப்-காம்பேக்ட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்யும் போதே ஹூண்டாய் நிறுவனம் எஸ்யுவி மாடல்கள் விற்பனையில் ஐந்து லட்சம் யூனிட்களை கடந்துவிட்டது. இதே ஆண்டில் ஹூண்டாய் தனது கோனா எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்தது.
தற்போது எஸ்யுவி மாடல்களில் பத்து லட்சம் யூனிட்களை கடந்து இருக்கும் நிலையில், ஹூண்டாய் வென்யூ, கிரெட்டா, டக்சன் மற்றும் கோனா எலெக்ட்ரிக் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. கோனா எலெக்ட்ரிக் தவிர மற்ற அனைத்து மாடல்களும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. கோனா எலெக்ட்ரிக் சிகேடி முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மாதாந்திர விற்பனை இதுவரை இல்லாத வகையில் 500 சதவீத வளர்ச்சியை கடந்த மாதம் பதிவு செய்தது. இந்த வளர்ச்சிக்கு டாடா நிறுவனத்தின் அனைத்து பயணிகள் கார் மாடல்களும் பங்களித்து இருக்கின்றன. இதில் டாடா நெக்சான் இவி மாடலும் ஒன்று.
தற்போது நெக்சான் இவி விற்பனையில் 4 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது. இந்திய சந்தையில் அறிமுகமான 14 மாதங்களில் இந்த இலக்கை நெக்சான் இவி எட்டியுள்ளது. புதிய மைல்கல் மட்டுமின்றி மாதாந்திர விற்பனையில் நெக்சான் இவி அதிக யூனிட்களை பதிவு செய்துள்ளது.

இந்திய எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 64 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. 2020 ஜனவரி மாத வாக்கில் நெக்சான் இவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. குறைந்த விலை, அதிக டிரைவிங் ரேன்ஜ் போன்ற காரணங்களால் இந்த எஸ்யுவி தொடர்ந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது.
டாடா நெக்சான் இவி மாடலில் 30.2kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இது 127 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 275 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
நிசான் நிறுவனம் மார்ச் 2021 மாத விற்பனையில் 6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
நிசான் இந்தியா நிறுவனம் மார்ச் 2021 மாதத்தில் மட்டும் 4,012 வாகனங்களை விற்பனை செய்து உள்ளது. இதில் பெரும்பாலான யூனிட்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மேக்னைட் மாடல் ஆகும். 2020-21 நிதியாண்டில் நிசான் ஆறு சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

விற்பனைக்கு பிந்தைய சர்வீசை மேம்படுத்த நிசான் சமீபத்தில் எக்ஸ்பிரஸ் சக்வீஸ் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் 90 நிமிடங்களில் கார் சர்வீஸ் செய்யப்பட்டு விடும். இதுதவிர நாடு முழுக்க 100-க்கும் அதிக பகுதிகளில் நிசான் சர்வீஸ் கிளினிக்-களை செயல்படுத்துகிறது.
நிசான் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனத்தை சர்வீஸ் செய்ய நிசான் சர்வீஸ் ஹப் வலைதளம் அல்லது நிசான் கனெக்ட் தளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். இத்துடன் நாடு முழுக்க சுமார் 1500-க்கும் அதிக நகரங்களில் நிசான் 24 மணி நேர ரோடு-சைடு அசிஸ்டண்ஸ் வசதியை வழங்குகிறது.
நாடு முழுக்க ஹூண்டாய் கார் விற்பனையாளர்கள் ஏப்ரல் மாதத்திற்கான சலுகையை அறிவித்து இருக்கின்றனர்.
ஹூண்டாய் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான சலுகை வழங்கி வருகின்றனர். இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.
அதன்படி ஹூண்டாய் சான்ட்ரோவின் Era தவிர மற்ற வேரியண்ட்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. இதில் ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. ஹூண்டாய் ஔரா டர்போ பெட்ரோல் வேரியண்ட் ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், சிஎன்ஜி வேரியண்ட் ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் உடன் வழங்கப்படுகிறது.

கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இதன் டர்போ வேரியண்டிற்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.
புதிய தலைமுறை ஐ20 iMT டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. இரு வேரியண்ட்களுக்கும் ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் சலுகை வழங்கப்படுகிறது.
நிசான் நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யுவி மாடலான மேக்னைட் இந்திய உற்பத்தியில் புது மைல்கல் எட்டியுள்ளது.
நிசான் நிறுவனம் தனது மேக்னைட் மாடல் உற்பத்தியில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் அறிமுகமான ஆறு மாதங்களில் இந்த மைல்கல் எட்டப்பட்டு இருக்கிறது.
தொடர்ச்சியான வரவேற்பு காரணமாக தமிழ் நாட்டில் செயல்பட்டு வரும் ஆலையில் உற்பத்தி எண்ணிக்கையை வெகுவாக அதிகரித்து இருக்கிறது. ஆயிரத்திற்கும் அதிக ஊழியர்கள் கொண்ட ஆலையில் உற்பத்தி பணிகளை மேற்கொள்ள நிசான் மூன்றாவது ஷிப்ட் துவங்கி உள்ளது.

இதன் மூலம் புதிய கார் வினியோகம் செய்வதற்கு ஆகும் காலக்கட்டத்தை குறைக்க நிசான் திட்டமிட்டு உள்ளது. இந்திய சந்தையில் நிசான் மேக்னைட் மாடல் கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ. 4.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. எனினும், தற்போது இதன் விலை அதிகரிக்கப்பட்டு விட்டது.
ஹூண்டாய் நிறுவனம் மார்ச் மாதத்தில் மட்டும் இத்தனை கார்களை விற்று இருப்பதாக தெரிவித்து உள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் மார்ச் 2021 மாதத்தில் மட்டும் 64,621 யூனிட்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து உள்ளது. உள்நாட்டில் மட்டும் 52,600 யூனிட்களும் வெளிநாடுகளுக்கு 12,021 யூனிட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது ஹூண்டாய் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 100 சதவீதமும், ஏற்றுமதியில் 101 சதவீதமும் வளர்ச்சியை பெற்று இருக்கிறது. உள்நாட்டில் 2020 மார்ச் மாதத்தில் 26,300 யூனிட்களும், வெளிநாடுகளுக்கு 5,979 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருந்தது.
கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் விரைவில் புதிய அல்காசர் எஸ்யுவி மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முதற்கட்டமாக இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது கிரெட்டா மாடலை தழுவி உருவாகி இருக்கிறது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் 2021 மார்ச் மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் மார்ச் 2021 மாதத்திற்கான வாகன விற்பனையில் 278 சதவீத விற்பனையை பதிவு செய்து இருக்கிறது. மார்ச் மாதத்தில் மட்டும் ரெனால்ட் நிறுவனம் 12,356 யூனிட்களை விற்பனை செய்து உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரெனால்ட் நிறுவனம் 3,269 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.
ரெனால்ட் நிறுவனத்தின் சமீபத்திய கார் மாடலானகைகர் இத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருப்பதற்கு முக்கிய காரணமாமக கூறப்படுகிறது. கைகர் மட்டுமின்றி டிரைபர் மாடலும் இந்திய விற்பனையில் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

புதிய ரெனால்ட் கைகர் மாடல் 3டி கிராபிக் பினிஷ் செய்யப்பட்ட கிரில், ஹனிகொம்ப் வடிவ க்ரோம் ஹைலைட்கள், எல்இடி டிஆர்எல்கள் கொண்டுள்ளது. இந்த கார் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இவை முறையே 70 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறனும், 97 பிஹெச்பி பவர், 160 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டர்போ என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு சிவிடி ஆப்ஷனில் கிடைக்கிறது.
ஹோண்டா நிறுவனம் உலகம் முழுக்க ஏழு லட்சம் வாகனங்களை ரீகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது.
ஹோண்டா மோட்டார் கோ நிறுவனம் உலகம் முழுக்க 7,61,000 வாகனங்களை ரீகால் செய்வதாக அறிவித்து உள்ளது. வாகனங்களின் பியூவல் பம்ப் கோளாறு இருப்பதால் ரீகால் செய்யப்படுகிறது. இது நாளடைவில் என்ஜின் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

அமெரிக்காவில் 2018-2020 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 6,28,000 அக்யூரா மற்றும் இதர ஹோண்டா வாகனங்கள் ரீகால் செய்யப்படுகின்றன. இந்த கோளாறு காரணமாக பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை ஹோண்டா நிறுவனத்திற்கு எந்த புகாரும் எழவில்லை.
ரீகால் செய்யப்படும் வாகனங்களில் அக்கார்ட், சிவிக், சிஆர்-வி, பிட், பைலட், ரிட்ஜெலின், எம்டிஎக்ஸ், ஆர்டிஎக்ஸ் மற்றும்
டிஎல்எக்ஸ் போன்றவை அடங்கும்.
ஹூண்டாய் நிறுவனம் தனது ஐ20 என் மாடல் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனம் தனது ஐ20 மாடலின் ஸ்போர்ட் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. புதிய ஐ20 என் மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என ஹூண்டாய் தெரிவித்து உள்ளது. புதிய தலைமுறை ஐ20 மாடல் அசத்தலான தோற்றம் கொண்டுள்ளது.

சர்வதேச சந்தையில் ஹூண்டாய் ஐ20 என் மாடலில் 1.0 லிட்டர் டி-ஜிடிஐ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 120 பிஹெச்பி பவர், ஐஎம்டி டிரான்ஸ்மிஷன், ட்வீக் செய்யப்பட்ட சஸ்பென்ஷன், என்ஜின் ரெஸ்பான்ஸ், ஸ்போர்ட் தோற்றம் கொண்ட பம்ப்பர், வித்தியாசமான எக்சாஸ்ட் கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் ஐ20 என் மாடல் 1.6 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் கேபின் பகுதியில் முற்றிலும் பிளாக் நிற ஸ்போர்ட்ஸ் சீட், சிவப்பு நிற ஸ்டிட்ச், என் ஸ்டீரிங் வீல், என் பேட்ஜிங் வழங்கப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனம் தனது புதிய குஷக் மாடல் அந்த வேரியண்டிலும் அறிமுகமாகும் என சூசகமாக தெரிவித்து இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் மாடலின் மான்ட் கார்லோ எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என சூசகமாக தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக ஸ்கோடா குஷக் ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும்.

இவற்றில் டாப் எண்ட் வேரியண்ட் மற்ற முன்னணி எஸ்யுவி மாடல்களில் உள்ள முக்கிய அம்சங்கள் வழங்கப்படவில்லை. தற்போது ஸ்கோடா இந்தியா தனது குஷக் மாடலின் மான்ட் கர்லோ எடிஷன் பின்னர் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறது.
இந்தியாவில் ஸ்கோடா குஷக் மாடல் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சர்வதேச சந்தையில் மான்ட் கர்லோ எடிஷன் கமிக் எனும் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆடம்பர கார் உற்பத்தி செய்யும் நிறுவனமான பென்ட்லி புது மைல்கல் பற்றிய விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.
பென்ட்லி நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சுமார் 2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் உற்பத்து செய்யப்பட்டு இருக்கின்றன. 1919 ஆண்டு துவங்கப்பட்ட பென்ட்லி 101 ஆண்டுகளாக பல்வேறு பாரம்பரியம் மிக்க கார் மாடல்களை உற்பத்தி செய்து இருக்கிறது.
அந்த வரிசையில் தற்போது உற்பத்தியில் 2 லட்சம் கார்களை கடந்து இருப்பதாக பென்ட்லி அறிவித்து உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த பென்ட்லி ஆடம்பர கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனம் புளோயர், அர்னேஜ், மல்சேன், கான்டினென்டல் ஜிடி என பல்வேறு தலைசிறந்த மாடல்களை உற்பத்தி செய்து இருக்கிறது.

2 லட்சம் யூனிட்களில் சுமார் 1,55,582 யூனிட்கள் 2003 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். தற்போது பென்ட்லி நிறுவனம் கான்டினென்டல், பிளையிங் ஸ்பர் மற்றும் பென்ட்யகா போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மூன்று மாடல்கள் மற்றும் சப்-வேரியண்ட்கள் இங்கிலாந்தில் உள்ள தலைமையகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மற்ற நிறுவனங்களை போன்றே டொயோட்டா நிறுவனமும் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் தனது அனைத்து கார் மாடல்களின் விலை இந்திய சந்தையில் உயர்த்தப்படுவதாக அறிவித்தது. இந்த நிறுவனத்தின் அனைத்து கார் மாடல்கள் விலையும் ஏப்ரல் 1, 2021 முதல் உயர்கிறது. இந்த ஆண்டில் டொயோட்டா கார் விலை உயர்த்தப்படுவது இரண்டாவது முறை ஆகும்.

முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் டொயோட்டா தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தியது. விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட் மற்றும் நகரங்களுக்கு ஏற்ப வேறுபடும். உற்பத்திக்கான செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவேதே வாகனங்கள் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகின்றன.
கார் உற்பத்திக்கு தேவைப்படும் ஸ்டீல், அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் போன்ற மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுதவிர கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது உற்பத்தி பணிகளை அதிக சவால் மிக்கதாக மாற்றி இருக்கிறது.






