என் மலர்
கார்
- ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் உற்பத்தியில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.
- இந்திய சந்தையில் ஹோண்டா கார்ஸ் உற்பத்தி 25 ஆண்டுகளுக்கும் முன்பே துவங்கி நடைபெற்று வருகிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய உற்பத்தியில் இருபது லட்சம் யூனிட்களை கடந்து அசத்தி இருக்கிறது. இந்திய சந்தையில் பிரபல செடான் மாடலாக இருக்கும் ஹோண்டா சிட்டி இருபது லட்சமாது யூனிட்டாக வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கார் ஹோண்டா நிறுவனத்தின் தபுகாரா ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது.
1997 டிசம்பர் மாத வாக்கில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி பணிகளை துவங்கியது. முதன் முதலில் ஹோண்டா சிட்டி கார் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது உள்நாட்டு தேவை மட்டுமின்றி 16 நாடுகளுக்கும் ஹோண்டா நிறுவனம் அமேஸ் மற்றும் சிட்டி மாடல்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

கடந்த 25 ஆண்டுகளாக ஹோண்டா நிறுவனம் இந்திய வியாபாரத்தை கட்டமைப்பதற்காக ரூ. 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்து இருக்கிறது. 2020 வாக்கில் கிரேட்டர் நொய்டா ஆலை மூடப்பட்டதில் இருந்து இந்தியாவில் செயல்பட்டு வரும் ஒற்றை உற்பத்தி ஆலை ராஜஸ்தானில் செயல்பட்டு வருகிறது. 450 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் தற்போது ஹோண்டா ஜாஸ், ஹோண்டா அமேஸ், ஹோண்டா WR-V மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இத்துவர தேர்வு செய்யப்பட்ட ஹோண்டா கார்களுக்கு அதிகபட்சம் ரூ. 63 ஆயிரத்து 144 வரையிலான சலுகைகளுடன் கிடைக்கிறது. இந்த சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
- ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லேவியா மாடல் விலை இந்திய சந்தையில் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
- இந்த ஆண்டு ஸ்லேவியா மாடல் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்லேவியா மாடலின் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்வு நவம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இம்முறை ஸ்கோடா ஸ்லேவியா விலை ரூ. 40 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. முன்னதாக ஜூன் மாத வாக்கில் ஸ்கோடா ஸ்லேவியா மாடல் விலை ரூ. 60 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. புதிய விலை உயர்வு ஒவ்வொரு வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.
அதன்படி ஸ்கோடா ஸ்லேவியா ஆம்பிஷன் 1.0 AT மாடல் விலை ரூ. 40 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்லேவியா ஸ்டைல் 1.0 MT விலை ரூ. 31 ஆயிரமும், ஆக்டிவ் 1.0 MT மற்றும் ஆம்பிஷன் 1.0 MT வேரியண்ட்களின் விலை ரூ. 30 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா ஸ்லேவியா ஸ்டைல் 1.0 MT (சன்ரூப் இல்லா) மாடல் மற்றும் ஸ்டைல் 1.5 MT விலை ரூ. 21 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. டாப் எண்ட் மாடலான 1.5 DSG விலை ரூ. 1000 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டைல் 1.0 AT மாடலின் விலை ரூ. 11 ஆயிரம் உயரந்துள்ளது.
- டொயோட்டா நிறுவனம் விரைவில் கிளான்சா CNG வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புது CNG காருக்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டொயோட்டா நிறுவனம் தனது கிளான்சா CNG மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ S-CNG வெர்ஷன் விலையை இந்தியாவில் அறிவித்து இருந்தது. புதிய பலேனோ S-CNG மாடல் விலை இந்தியாவில் ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
மாருதி சுசுகியை தொடர்ந்து டொயோட்டா நிறுவன விற்பனையாளர்கள் புதிய கிளான்சா CNG மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய கிளான்சா CNG மாடல் கிளான்சா e-CNG பெயரில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த முன்பதிவுகள் விற்பனையாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது.

இந்த நிலையில், புதிய டொயோட்டா கிளான்சா CNG மாடலின் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் டொயோட்டா கிளான்சா CNG மாடல் S, G மற்றும் V என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
புதிய டொயோட்டா கிளான்சா e-CNG மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் CNG கிட் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் பெட்ரோல் மோடில் 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த கார் 76 ஹெச்பி பவர், 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
- கியா இந்தியா நிறுவனத்தின் கரென்ஸ் எம்பிவி மாடல் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
- புதிய கரென்ஸ் எம்பிவி விலை இந்தியாவில் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
கியா இந்தியா நிறுவனம் தனது கரென்ஸ் எம்பிவி மாடல் விலையை இந்திய சந்தையில் இரண்டாவது முறையாக அதிகரித்து இருக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் கியா கரென்ஸ் விலை முதல் முறையாக உயர்த்தப்பட்டது. அப்போது கியா கரென்ஸ் அறிமுக விலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு புதிய விலை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கரென்ஸ் மாடல் விலை ரூ. 70 ஆயிரம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், கியா கரென்ஸ் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கியா கரென்ஸ் புதிய விலை நவம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி கரென்ஸ் மாடல் விலை தற்போது ரூ. 50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கியா கரென்ஸ் 1.5 லிட்டர் NA பெட்ரோல் பிரெஸ்டிஜ் வேரியண்ட் விலை ரூ. 50 ஆயிரம் அதிகரித்துள்ளது.

கரென்ஸ் 1.5 லிட்டர் NA பெட்ரோல் பிரீமியம் வேரியண்ட் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் லக்சரி வேரியண்ட் விலை முறையே ரூ. 40 ஆயிரம் மற்றும் ரூ. 15 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 1.5 லிட்டர் லக்சரி வேரியண்ட் விலை ரூ. 35 ஆயிரமும், மற்ற டீசல் வேரியண்ட் விலை ரூ. 30 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.
கியா கரென்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட பிரெஸ்டிஜ் பிளஸ் டிசிடி, லக்சரி+ 6எஸ், லக்சரி+ 7எஸ், லக்சரி+ 6எஸ் டிசிடி மற்றும் லக்சரி+ 7எஸ் டிசிடி விலை ரூ. 20 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று பிரீமியம், பிரெஸ்டிஜ் மற்றும் பிரெஸ்டிஜ் பிளஸ் வேரியண்ட்களின் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய விலை உயர்வை அடுத்து கியா கரென்ஸ் மாடலின் துவக்க விலை தற்போது ரூ. 10 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- கியா இந்தியா நிறுவனம் அக்டோபர் மாத விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
- கியா நிறுவனத்தின் EV6 எலெக்ட்ரிக் மாடலின் வினியோகம் கடந்த மாதம் துவங்கியது.
கியா இந்தியா நிறுவனம் 2022 அக்டோபர் மாதத்தில் மட்டும் 23 ஆயிரத்து 323 யூனிட்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இதுதவிர 2022 நிதியாண்டில் கியா கார் விற்பனையில் இரண்டு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. 2021 நிதியாண்டில் கியா நிறுவனம் 18 ஆயிரத்து 583 யூனிட்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கியா நிறுவனம் அறிமுகம் செய்த EV6 எலெக்ட்ரிக் காரின் வினியோகத்தை ஜூன் மாத வாக்கில் துவங்கியது. கியா இந்தியா நிறுவனம் வருடாந்திர விற்பனையில் 43 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கியா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார்களில் செல்டோஸ் மாடல் முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து சொனெட் மற்றும் கரென்ஸ் மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
மூன்று கார்களும் முறையே 9 ஆயிரத்து 777, 7 ஆயிரத்து 614 மற்றும் 5 ஆயிரத்து 479 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. கடந்த ஆண்டு கியா இந்தியா நிறுவனத்தின் கார்னிவல் மாடல் 301 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. சமீபத்திய புதுவரவு எலெக்ட்ரிக் கார் கியா EV6 மாடல் இதுவரை 152 பேருக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
- மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் CNG கார் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
- முதல் முறையாக நெக்சா பிராண்டிங் காரிலும் CNG கிட் வசதியை மாருதி சுசுகி நிறுவனம் வழங்கி இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய பலேனோ மாடலில் CNG கிட் வசதியை வழங்கி இருக்கிறது. புதிய மாருதி சுசுகி பலேனோ CNG மாடல் விலை ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பலேனோ CNG மாடலை மாதாந்திர சந்தா முறையில் வாங்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பலேனோ மாடலுடன் XL6 CNG காரும் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய பலேனோ CNG மாடலில் 1197சிசி, NA, நான்கு சிலண்டர்கள் கொண்ட டூயல் ஜெட் டூயல் VVT பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த என்ஜின் 76 ஹெச்பி பவர், 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

மாருதி சுசுகி பலனோ CNG மாடல் லிட்டருக்கு 30.61 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது. புதிய பலேனோ CNG செயல்திறனும் ஸ்விப்ட் CNG மாடலின் செயல்திறனும் ஒரே அளவில் உள்ளன. பலேனோ CNG மாடலில் 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட்பிளே ப்ரோ, எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 40-க்கும் அதிக கனெக்டெட் கார் அம்சங்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 6 ஏர்பேக், ரியர்வியூ கேமரா, பார்க்கிங் சென்சார்கள் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டிஎப்டி டிஸ்ப்ளே, என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், ரியர் டி-ஃபாகர், யுஎஸ்பி டைப் ஏ மற்றும் சி போர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
- மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களில் CNG கிட் வசதியை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- மாருதி கார்களை தொடர்ந்து நெக்சா பிராண்டு மாடல்களிலும் தற்போது CNG கிட் வழங்கப்பட உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் பலேனோ மற்றும் XL6 கார்களில் CNG கிட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நெக்சா பிராண்டு மாடல்களில் CNG வசதி பெறும் முதல் கார் மாடல்களாக இவை இருக்கும். பலேனோ பிரீமியம் ஹேச்பேக் மற்றும் XL6 எம்பிவி மாடல்கள் ஒரே மாதிரியான பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது.
மேலும் அதிக கார்களில் CNG வசதியை வழங்கும் நோக்கில், மாருதி சுசுகி லிமிடெட் நிறுவனம் பலேனோ மற்றும் XL6 CNG மாடல்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. மாருதி சுசுகி நிறுவன வாகனங்களில் அதிக மைலேஜ் வழங்கும் திறன் இருப்பதே அதிக வாடிக்கையாளர்களை ஈட்ட முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இதுவரை மாருதி சுசுகி நிறுவனம் ஒன்பது கார்களில் CNG கிட் வசதியை வழங்கி இருக்கிறது.

இந்த வரிசையில் தற்போது பலேனோ மற்றும் 6-சீட்டர் எம்பிவி மாடலான XL6 இணைய இருக்கிறது. CNG பிரிவில் மாருதி சுசுகி நிறுவனம் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களும் CNG கிட் வசதியை வழங்கி வருகின்றன. வழக்கமான பெட்ரோல், டீசல் எரிபொருள்களுக்கு மாற்றாக குறைந்த விலையில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான தேர்வாக CNG விளங்குகிறது.
இவை மட்டுமின்றி CNG கிட் பொருத்தப்பட்ட கார்கள் வழக்கமான பெட்ரோல், டீசல் மாடல்களை விட அதிக மைலேஜ் வழங்கி வருகின்றன. ஏற்கனவே பல்வேறு கார்களில் CNG கிட் வழங்கி வருவதை அடுத்து பலேனோ மற்றும் XL6 மாடல்களில் CNG கிட் வழங்குவது ஆச்சரியமாக பார்க்கப்படவில்லை.
- ஹோண்டா நிறுவனம் தனது புது எஸ்யுவி மாடலுக்கான வெளியீட்டு விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் WR-V பெயரில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய எஸ்யுவி மாடலை அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் "WR-V" பெயரில் விற்பனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய எஸ்யுவி மாடல் 2021 நவம்பர் மாத வாக்கில் ஹோண்டா அறிமுகம் செய்த RS எஸ்யுவி கான்செப்ட் மாடலின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் ஆகும்.
புதிய கார் வெளியீட்டை உணர்த்தும் ஒரே டீசரை தான் ஹோண்டா இதுவரை வெளியிட்டு உள்ளது. இந்த டீசரின் படி புதிய ஹோண்டா எஸ்யுவி மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், இண்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்கள், ரூப் ரெயில்கள், டூயல் டோன் பெயிண்ட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும் என உறுதியாகி இருக்கிறது. வெளிநாடுகளில் இந்த கார் சோதனை செய்யப்பட்டது. அதில் புதிய கார் WR-V பெயரில் விற்பனைக்கு வரும் என தெரியவந்துள்ளது.

காட்சிப்படுத்தப்பட்ட மாடலில் பெரிய க்ரோம் ஸ்டட் செய்யப்பட்ட முன்புற கிரில், செங்குத்தான பாக் லேம்ப் ஹவுசிங், சில்வர் ஸ்கிட் பிளேட், பின்புறம் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் இண்டீரியர் மற்றும் என்ஜின் விவரங்கள் மர்மமாக வைக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த எஸ்யுவி மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூப் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் நவம்பர் 2 ஆம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் சர்வதேச வெளியீடு இந்தோனேசியாவில் நடைபெற இருக்கிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும்.
ஹோண்டா எஸ்யுவி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் அட்கின்சன் சைக்கிள், இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இவை இணைந்து 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இரு எலெக்ட்ரிக் மோட்டார்களில் ஒன்று அல்டர்நேட்டர் போன்று செயல்படும் நிலையில், மற்றொரு மோட்டார் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது. இதே என்ஜின் முன்னதாக ஹோண்டா சிட்டி மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஜீப் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய கிராண்ட் செரோக்கி மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய ஜீப் ஃபுல்-சைஸ் எஸ்யுவி மாடல் இந்திய ஆலையிலேயே அசெம்பில் செய்யப்பட இருக்கிறது.
ஜீப் இந்தியா நிறுவனம் 2022 கிராண்ட் செரோக்கி மாடலை நவம்பர் 11 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கிராண்ட் செரோக்கி மாடல் இந்தியாவில் ஜீப் அசெம்பில் செய்யும் நான்காவது மாடல் ஆகும். முன்னதாக ஜீப் காம்பஸ், மெரிடியன் மற்றும் ராங்ளர் போன்ற மாடல்களை ஜீப் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனேவை அடுத்த ரங்கூன் ஆலை ஜீப் நிறுவனத்தின் வலதுபுற டிரைவ் யூனிட்களுக்கான உற்பத்தி மையமாக மாறுகிறது. புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இந்த என்ஜின் செயல்திறன் பற்றி ஜீப் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.

இது மட்டுமின்றி புதியகாரில் குவாட்ரா-டிராக் 4x4 சிஸ்டம்- ஆட்டோ, ஸ்போர்ட், ஸ்னோ மற்றும் மட்/சேண்ட் என நான்கு டிரைவ் மோட்கள் வழங்கப்பட இருக்கிறது. டிசைனை பொருத்தவரை புதிய தலைமுறை ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 7 ஸ்லாட் கிரில், எல்இடி டிஆர்எல்-கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள், 2-பீஸ் எல்இடி டெயில் லைட்கள், டூயல் எக்சாஸ்ட் டிப், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.
காரின் உள்புறத்தில் ADAS அம்சங்கள், 10.1 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பவர்டு முன்புற இருக்கைகள், ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜிங், டூயல் டோன் இண்டீரியர் தீம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது.
- ஹோண்டா நிறுவனம் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் வெளியீட்டு விவரங்களை ஹோண்டா அறிவித்து இருக்கிறது.
ஜப்பானை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஹோண்டா இந்திய சந்தையில் புது காம்பேக்ட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் நவம்பர் 2 ஆம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த மாடல் இந்தியாவில் அறிமுகமாகும்.
2023 இந்திய ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவி மாடல் அமேஸ் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தியா உள்பட உலக நாடுகளில் டீசல் என்ஜினுக்கான மோகம் குறைவதை அடுத்து இந்த காரின் டீசல் என்ஜின் வேரியண்ட் இறுதிக்கட்ட உற்பத்தியை எட்டுவது கடினம் தான்.

டீசல் வேரியண்டிற்கு மாற்றாக ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவியின் பெட்ரோல் ஹைப்ரிட் வெர்ஷனை அறிமுகம் செய்யலாம். இது சமீபத்திய சிட்டி செடான் மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கும் என தெரிகிறது. தற்போது செடான் பிரிவில் சிட்டி மாடல் மட்டுமே ஹைப்ரிட் வடிவில் ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் அட்கின்சன் சைக்கிள், இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன.
இவை இணைந்து 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இரு எலெக்ட்ரிக் மோட்டார்களில் ஒன்று அல்டர்நேட்டர் போன்று செயல்படும் நிலையில், மற்றொரு மோட்டார் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது. இதே போன்ற செட்டப் புதிய ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவி மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
- ஸ்கோடா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புதிய ஸ்கோடா எலெக்ட்ரிக் கார் 295 ஹெச்பி திறன் வெளிப்படுத்துகிறது.
ஸ்கோடா நிறுவனம் தொடர்ச்சியாக தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலாக ஸ்கோடா என்யாக் RS iV இணைந்துள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட என்யாக் கூப் மாடல் RS iV வடிவில் கிடைக்கிறது.
புதிய என்யாக் மாடல் 295 ஹெச்பி பவர், 460 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 2-மோட்டார் டிரைவ் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் முழு சார்ஜ் செய்தால் 520 கிலோமீட்டர் வரை செல்லும் என WLTP சான்று பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த மாடல் குறைந்தபட்சம் 500 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

ஸ்கோடா என்யாக் RS iV மாடலில் 82 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.5 நொடிகளில் எட்டிவிடும். இதில் வழங்கப்பட்டு இருக்கும் டிராக்ஷன் மோட் கொண்டு எளிதில் வழுக்கும் சாலைகளிலும் பயணிக்க முடியும். RS மாடல் என்பதால் இந்த காரில் RS சார்ந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன், 20 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர 21 இன்ச் அலாய் வீல் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இதில் உள்ள ஆட்-ஆன் பாகங்கள் ஹை-கிளாஸ் பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் ரேடியேட்டர் கிரில், விண்டோ ஃபிரேம், மிரர் கேப்கள், ரியர் டிப்யுசர், ஸ்கோடா லோகோ உள்ளிட்டவை அடங்கும்.
இத்துடன் க்ரிஸ்டல் ஃபேஸ்- ரேடியேட்டர் கிரில் பகுதியில் 131 எல்இடி பேக்லிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஃபுல் மேட்ரிக்ஸ் ஹெட்லைட்கள், எல்இடி ரியர் லைட்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. RS மாடல் என்பதால் நான்-மெட்டாலிக் பெயிண்ட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது.
- டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- மேம்பட்ட புது எம்பிவி மாடல் முற்றிலும் புதிய ஹைப்ரிட் பவர்டிரெயின் மற்றும் அசத்தலான வெளிப்புற ஸ்டைலிங் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
டொயோட்டா நிறுவனம் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலுக்கான முதல் டீசரை வெளியிட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக இந்த மாடல் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன் படி புது மாடலில் மேம்பட்ட புதிய ஹைப்ரிட் பவர்டிரெயின் மற்றும் அசத்தல் ஸ்டைலிங் கொண்டிருக்கும் என தெரிகிறது.
டீசரின் படி புதிய காரின் முன்புறம் அளவில் பெரிய கிரில், மெல்லிய ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை எல்இடி யூனிட்களாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் எலிஇடி டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்படுகின்ன. இதன் பொனெட் உறுதியாக கிரீஸ் லைன்கள், முன்புற பம்ப்பரில் ரிடிசைன் செய்யப்பட்ட பாக் லேம்ப் கேசிங் வழங்கப்படும் என தெரிகிறது.

புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலில் டீசல் என்ஜினுக்கு மாற்றாக 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் e-CVT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இன்னோவா ஹைகிராஸ் மாடலுடன் மோனோக் ஆர்கிடெக்ச்சர் மற்றும் முன்புற வீல் டிரைவ் வசதி வழங்கப்படலாம். இத்துடன் 360 டிகிரி கேமரா, பெரிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம்.
இந்திய சந்தையில் புதிய இன்னோவா காரின் டெஸ்டிங் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம். இந்திய சந்தையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் கியா கரென்ஸ் மற்றும் மஹிந்திரா மராசோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.






