என் மலர்

  கார்

  டெஸ்டிங்கில் சிக்கிய இன்னோவா க்ரிஸ்டா EV
  X

  டெஸ்டிங்கில் சிக்கிய இன்னோவா க்ரிஸ்டா EV

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டொயோட்டா நிறுவனம் சமீபத்திய சர்வதேச மோட்டார் விழா ஒன்றில் இன்னோவா மாடலை சார்ந்த எலெக்ட்ரிக் எம்பிவி ப்ரோடோடைப்-ஐ காட்சிப்படுத்தி இருந்தது.
  • புதிய ப்ரோடோடைப் மாடல் இன்னோவா க்ரிஸ்டா மாடல் பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு வருகிறது.

  ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் டொயோட்டா, இந்த ஆண்டு நடைபெற்ற இந்தோனேசியா சர்வதேச மோட்டார் விழாவில் இன்னோவா காரை சார்ந்து உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் எம்பிவி மாடலின் கான்செப்ட் ப்ரோடோடைப்-ஐ காட்சிப்படுத்தி இருந்தது. இந்த மாடல் தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் இன்னோவா க்ரிஸ்டா மாடல் போன்றே காட்சியளித்தது.

  எனினும், சற்றே பழைய IMV2 லேடர்-ஆன்-ஃபிரேம் பிளாட்ஃபார்மில் எலெக்ட்ரிக் வாகனம் எதையும் அறிமுகம் செய்யப் போவதில்லை என டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டது. மேலும் இந்த எலெக்ட்ரிக் கான்செப்ட் எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஆய்வு மற்றும் வளர்ச்சி பணிகளுக்காகவே உருவாக்கப்படுவதாக அறிவித்து இருக்கிறது.

  இந்த நிலையில், இன்னோவா க்ரிஸ்டா மாடலை சார்ந்து உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் எம்பிவி மாடல் சாலைகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. ஸ்பை படங்களில் காரின் முன்புறம், இன்னோவா க்ரிஸ்டா மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், பிளான்க்டு-அவுட் கிரில் டிசைன் மற்றும் புளூ அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளது.

  மற்ற காஸ்மெடிக் மாற்றங்களை பொருத்தவரை ரிடிசைன் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், எல்இடி ஹெட்லேம்ப்களில் புளூ இன்சர்ட்கள், டி-பில்லர், புதிய பக்கவாட்டு டிகல்களில் "இன்னோவா EV" ஸ்டிக்கர்கள் மற்றும் பின்புறத்தில் EV பேட்ஜிங் இடம்பெற்று இருக்கிறது. இந்த கான்செப்ட் மாடலின் தொழில்நுட்ப விவரங்கள் அல்லது மற்ற விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

  இதன் காரணமாக இந்த காரின் பேட்டரி திறன், அதிகபட்ச ரேன்ஜ் மற்றும் பவர் அவுட்புட் பற்றிய விவரங்களும் மர்மமாகவே உள்ளது. இதுதவிர டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் தான் இன்னோவா ஹைகிராஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இன்னோவா எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல் சாலைகளில் சோதனை செய்யப்பட்ட போதிலும், இது இந்தியாவில் அறிமுகமாகும் என்பது கேள்விக்குறியான விஷயம் தான்.

  Photo Courtesy: Carwale

  Next Story
  ×