என் மலர்

  கார்

  இந்தியாவில் மஹிந்திரா கார் மாடல் விற்பனை நிறுத்தம்?
  X

  இந்தியாவில் மஹிந்திரா கார் மாடல் விற்பனை நிறுத்தம்?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மஹிந்திரா நிறுவனத்தின் அல்டுராஸ் G4 எஸ்யுவி மாடல் முன்பதிவு திடீரென நிறுத்தப்பட்டு விட்டன.
  • இது இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் விலை உயர்ந்த கார் மாடல் ஆகும்.

  மஹிந்திரா அல்டுராஸ் G4 மாடல் இந்திய விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த எஸ்யுவி மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. மேலும் இந்த காருக்கான முன்பதிவுகள் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இந்திய சந்தையில் 2018 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட அல்டுராஸ் G4 மாடல் CKD வழியே இந்தியா கொண்டுவரப்பட்டது.

  அறிமுகம் செய்யப்பட்ட போது, இந்த கார் சங்யோங் ரெக்ஸ்டான் மாடலின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனாகவே இருந்தது. பின் இந்த எஸ்யுவி மாடல் 2WD ஹை மற்றும் 4WD என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டது. இந்திய சந்தையில் இந்த காரின் விலை முறையே ரூ. 30 லட்சத்து 67 ஆயிரம் மற்றும் ரூ. 31 லட்சத்து 87 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

  ஏராளமான அம்சங்களுடன் போட்டியை ஏற்படுத்தும் விலை கொண்டிருந்த போதிலும், இந்த எஸ்யுவி அதிக வாடிக்கையாளர்களை கவராத காரணத்தால் விற்பனை தொடர்ந்து குறைவாகவே இருந்து வந்துள்ளது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் கொண்டிருக்கிறது.

  இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல், பவர்டு டெயில்கேட், ஒன்பது ஏர்பேக், TPMS, 8 வழிகளில் பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனஎர் இருக்கை, எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 178 ஹெச்பி பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

  இந்திய சந்தையில் மஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யுவி டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவர் மற்றும் எம்ஜி குளோஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக விளங்கியது. அல்டுராஸ் G4 நிறுத்தப்பட்டதை அடுத்து மஹிந்திரா XUV700 தற்போது அந்நிறுவனத்தின் விலை உயர்ந்த கார் என்ற பெருமையை பெறுகிறது.

  Next Story
  ×