என் மலர்tooltip icon

    கார்

    • இந்திய சந்தையில் சிட்ரோயன் நிறுவன கார் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    • சிட்ரோயன் C3 மாடல் புதிதாக டூயல் டோன் வேரியண்டில் கிடைக்கிறது.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது C5 ஏர்கிராஸ் மற்றும் C3 மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. கடந்த அக்டோபரில் விலை உயர்த்தப்பட்ட நிலையில், புது விலை உயர்வு ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது. விலை உயர்வு கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

    சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் ஷைன் டூயல் டோன் எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 50 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடலின் விலை தற்போது ரூ. 37 லட்சத்து 17 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    C3 மாடலின் விலை ரூ. 27 ஆயிரத்து 500 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் NA பெட்ரோல் வேரியண்ட்களின் விலை ரூ. 27 ஆயிரத்து 500 கூடுதலாக அதிகரித்து இருக்கிறது. டர்போ பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ. 20 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வு தவிர ஃபீல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், டூயல் டோன் எனும் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 8 லட்சத்து 10 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விலை உயர்வு தவிர சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் சிட்ரோயன் eC3 பெயரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. சிட்ரோயன் eC3 மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள், ஸ்டீல் வீல் மற்றும் கவர்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள், ரூஃப் ரெயில்கள், டூயல் டோன் பெயிண்ட் கொண்டிருக்கிறது.

    இந்த காரில் 20 முதல் அதிகபட்சம் 30 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 200 முதல் 250 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் eC3 மாடல் டாடா டியாகோ EV மாடலுக்கு போட்டியாக அமையும்.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிசம்பர் மாத பயணிகள் வாகன விவரங்களை வெளியிட்டு உள்ளது.
    • உள்நாடு மற்றும் வெளிநாட்டு விற்பனையில் டாடா மோட்டார்ஸ் அசத்தல் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்நாட்டு வாகன விற்பனையில் 10 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் 72 ஆயிர்து 997 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது 2021 டிசம்பர் மாதத்தில் விற்பனையான 66 ஆயிரத்து 307 யூனிட்களை விட அதிகம் ஆகும்.

    உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை கடந்த மாதத்தில் மட்டும் 40 ஆயிரத்து 043 யூனிட்கள் ஆகும். 2021 டிசம்பரில் இது 35 ஆயிரத்து 299 என இருந்தது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவு 13.4 சதவீதம் வளர்ச்சியை பெற்று இருக்கிறது. கடந்த மாதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 868 ஆகும். இது 2021 டிசம்பரில் விற்பனையான 2 ஆயிரத்து 355 யூனிட்களை விட 64.2 சதவீதம் அதிகம் ஆகும்.

    "2022 ஆண்டு டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன விற்பனை அமோகமாக இருந்துள்ளது. சந்தை வளர்ச்சியை கடந்து, ஐந்து லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டி இருக்கிறோம். ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 26 ஆயிரத்து 798 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறோம்," என டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பயணிகள் எலெக்ட்ரிக் மொபிலிடடி லிமிடெட் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார்.

    "ஒவ்வொரு மாநிலமும் அறிவிக்கும் புதுமை மிக்க திட்டங்கள் மற்றும் தொடர்ந்து அதிகரிக்கும் பிரபலத்தன்மை காரணமாக எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தொடர்ந்து வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். அடுத்த காலாண்டிலும் பயணிகள் வாகன பிரிவு கணிசமான வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கிறோம். வினியோக பிரிவு சார்ந்த சிக்கல் தொடர்பாக சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை உற்று நோக்கி வருகிறோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • ஹோண்டா நிறுவனம் உருவாக்கி வரும் புது எஸ்யுவி பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
    • புது ஹோண்டா கார் பெட்ரோல், பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    ஹோண்டா நிறுவனத்தின் புதிய எஸ்யுவி மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய எஸ்யுவி மாடல் 2023 ஏப்ரல் மாத வாக்கில் பெட்ரோல் என்ஜின் கொண்ட சிட்டி (அதன் ஹைப்ரிட் வெர்ஷன்) மற்றும் அமேஸ் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வைத்திருக்கும். ஜாஸ் மற்றும் WR-V, 4-th Gen சிட்டி, டீசல் என்ஜின் கொண்ட சிட்டி மற்றும் அமேஸ் போன்ற மாடல்களை நிறுத்தப்பட்டு விடும்.

    2023 மத்தியில் அறிமுகமாக இருக்கும் புது எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். இதன் விற்பனை 2023 பண்டிகை கால வாக்கில் துவங்கலாம்.

    புதிய ஹோண்டா மிட் சைஸ் எஸ்யுவி அளவில் 4.2 முதல் 4.3 மீட்டர் நீளம் கொண்டிருக்கும். இது அமேஸ் மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் என தெரிகிறது. இந்த மாடல் எப்படி காட்சியளிக்கும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த மாடல் சோதனை செய்யப்படும் படங்கள் எதுவும் இணையத்தில் இதுவரை வெளியாகவில்லை.

    இந்த காரின் முகப்பு பகுதியில் பெரிய, ஹெக்சகோனல் கிரில், ராப்-அரவுண்ட் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட இருக்கிறது. புதிய எஸ்யுவி மாடல் இந்திய சந்தைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படும் என்பதால், இதில் ஏராளமான க்ரோம் அம்சங்கள் இடம்பெற்று இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக உள்ளது.
    • சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் புது மைல்கல் எட்டியதாக அசத்தல் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மாதம் தனது 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை அறிவித்தது. பூனேவில் செயல்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் ஆலையில் இருந்து 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் கார் வெளியிடப்பட்டது. தற்போது டெலிவரியில் டாடா மோட்டார்ஸ் 50 ஆயிரம் கார்களை எட்டியதாக அறிவித்து இருக்கிறது.

    டெலிவரியிலும் 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் கார் டாடா நெக்சான் EV ஆக அமைந்தது. 50 ஆயிரமாவது யூனிட் டாடா குழும தலைவர் என் சந்திரசேகரன் இடம் டெலிவரி செய்யப்பட்டது. தற்போது இந்திய சந்தையில் டிகோர் EV, X-Pres T மற்றும் நெக்சான் EV, டியாகோ EV போன்ற மாடல்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது.

    சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ EV மாடலின் விலைகளை அறிவித்தது. இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடல் விவரங்கள் செப்டம்பர் மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது. எனினும், விலை விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

    இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது அறிமுக விலை தான் என்றும், இந்த காரின் விலை அடுத்த மாதம் மாற்றப்பட இருப்பதாகவும் டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது. 

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் முற்றிலும் புதிய ஹெக்டார் காரை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • சமீபத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய உற்பத்தியில் ஒரு லட்சமாவது யூனிட் எனும் மைல்கல்லை கடந்தது.

    பிரிடிஷ் மோட்டார் பிராண்டான் எம்ஜி மோட்டார்ஸ் 2023 ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் பற்றிய விவரங்கள் பெரும்பாலும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் எம்ஜி நிறுவனம் ஒரு லட்சமாவது காரை தனது உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிட்டது. எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஒரு லட்சமாவது காராக ஹெக்டார் மாடல் வெளியிடப்பட்டது.

    புதிய ஹெக்டார் மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட முன்புற ப்ரோஃபைல், பின்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புது ஹெக்டார் மாடலில் அகலமான, பிரமாண்ட முன்புற கிரில், அதிக ஆங்குலர் சரவுண்ட்கள், டார்க் க்ரோம் ஃபினிஷ், மற்றும் இன்சர்ட்கள் வழங்கப்படலாம். இந்த காரில் ஸ்ப்லிட் ரக டேடைம் ரன்னிங் லைட்கள், பின்புறம் ஃபௌக்ஸ் எக்சாஸ்ட் டிப்கள், டெயில் லைட்களில் எல்இடி இன்சர்ட்கள் வழங்கப்படுகிறது. இதன் 18 இன்ச் அலாய் வீல்கள் புது டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    உள்புறம் புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 14 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, எம்ஜி நிறுவனத்தின் நெக்ஸ்ட்-ஜென் ஐ ஸ்மார்ட் டெக் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ரிவைஸ்டு டேஷ்போர்டு லே-அவுட், D-வடிவ ஏசி வெண்ட்கள் வழங்கப்படுகிறது.

    இந்த காரில் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), ஏராளமான ஏர்பேக், ABS, EBD, சீட் பெல்ட் ரிமைண்டர் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 170 ஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்திய விலை அறிவிக்கப்பட்டது.
    • இந்திய சந்தையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் ஐந்து வேரியண்ட், ஏழு வித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் மாடலின் இந்திய விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி புதிய இன்னோவா ஹைகிராஸ் விலை ரூ. 18 லட்சத்து 30 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 28 லட்சத்து 97 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்னோவா ஹைகிராஸ் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய TNGA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் இன்னோவா ஹைகிராஸ் G, GX, VX, ZX மற்றும் ZX (O) என ஐந்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இத்துடன் சூப்பர் வைட், பிலாட்டினம் வைட் பியல், சில்வர் மெட்டாலிக், அட்டிட்டியூட் பிளாக் மைக்கா, ஸ்பார்க்லிங் பிளாக் பியல் க்ரிஸ்டல் ஷைன், அவாண்ட் கார்ட் பிரான்ஸ் மெட்டாலிக், பிலாகிஷ் அகெஹா கிலாஸ் ஃபிளேக் என ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், TNGA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 187 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜினுடன் ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 11 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்து"ன் e-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இறுக்கிறது. ஹைகிராஸ் மாடல் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படவில்லை.

    டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர்களுக்கு ஸ்டாண்டர்டு வாரண்டி, 2 லட்சத்து 20 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு எக்ஸ்டெண்டட் வாரண்டியுடன் வழங்கப்படுகிறது. இதனுடன் வரும் பேட்டரிக்கு எட்டு ஆண்டுகள் அல்லது 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி வழங்கப்படுகிறது.

    • ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தனது கவனத்தை அதிகரித்து வருகிறது.
    • இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் கார் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வருகிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் ஐயோனிக் 5 ஆல்-எலெக்ட்ரிக் கிராஸ்ஒவர் மாடலை இந்திய சந்தையில் டிசம்பர் 20 ஆம் தேதி அறிமுகம் செய்து இருந்தது. இந்த எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. ஹூண்டாய் ஐயோனிக் 5 இந்திய விலை விவரங்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் அறிவிக்கப்பட இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஐயோனிக் 5 மாடல் ஒற்றை ஃபுலி லோடெட் வேரியண்ட் ஆக விற்பனைக்கு வருகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மூன்று வித நிறங்களில் கிடைக்கும். புதிய ஐயோனிக் 5 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஹூண்டாய் நிறுவனம் பிரத்யேக சர்வீஸ் பேக்கேஜ் வழங்குகிறது.

    அதன்படி மூன்று ஆண்டுகள் அல்லது அன்லிமிடெட் கிலோமீட்டர்கள், எட்டு ஆண்டுகள் அல்லது 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் பேட்டரி வாரண்டி வழங்க இருக்கிறது. இதுதவிர மூன்று ஆண்டுகளுக்கு ரோட்-சைடு அசிஸ்டண்ஸ், வாரண்டியை ஐந்து ஆண்டுகள் அல்லது 1 லட்சத்து 40 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு வாரண்டி வழங்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் இரண்டு (3.3 கிலோவாட் மற்றும் 11 கிலோவாட்) ஹோம் சார்ஜர்களை இலவசமாக வழங்கவும் ஹூண்டாய் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இவைதவிர ஐகேர் மெயின்டனன்ஸ் பேக்கேஜ் வழங்க இருக்கிறது. இதில் வெஹிகில்-டு-வெஹிகில் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த வசதி நான்கு நகரங்களில் வழங்கப்பட இருக்கிறது.

    • சிட்ரோயன் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே தனது புது எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
    • புது எலெக்ட்ரிக் கார் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடலை தழுவி உருவாக்கி இருக்கிறது.

    இந்திய சந்தையில் இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் சிட்ரோயன் நிறுவனத்தின் பட்ஜெட் மாடலாக சிட்ரோயன் C3 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதே காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் சிட்ரோயன் நிறுவனம் அறிவித்து இருந்தது. சில வாரங்களுக்கு முன் இந்திய சந்தையில் சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் டீசர் வெளியிடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து புதிய எலெக்ட்ரிக் கார் சிட்ரோயன் eC3 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்றும் சிட்ரோயன் அறிவித்தது. இதனிடையே புதிய சிட்ரோயன் eC3 மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் சிட்ரோயன் eC3 மாடலின் புது ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது.

    தற்போதைய ஸ்பை படங்களில் உள்ள சிட்ரோயன் eC3 மாடல் ஆரஞ்சு நிறம் கொண்டிருக்கிறது. இந்த கார் சார்ஜிங் மையம் ஒன்றில் டாடா நெக்சான் மாடலின் அருகில் நிறுத்தப்பட்டு இருக்கிறது. நெக்சானுடன் சிட்ரோயன் eC3 மாடலும் சார்ஜ் ஏற்றிக் கொண்டிருக்கும் போது ஸ்பை படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. வெளிப்புறத்தில் புதிய சிட்ரோயன் eC3 மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள், ஸ்டீல் வீல் மற்றும் கவர்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள், ரூஃப் ரெயில்கள், டூயல் டோன் பெயிண்ட் கொண்டிருக்கிறது.

    இவை புது எலெக்ட்ரிக் கார் தோற்றம் அதன் பெட்ரோல் மாடலுக்கு இணையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. புதிய eC3 மாடலின் இண்டீரியர் எப்படி இருக்கும் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது. எனினும், இந்த காரில் 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் ஓட்டுனர் இருக்கை மற்றும் பவர் விண்டோக்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த காரின் தொழில்நுட்ப விவரங்கள் மர்மாகவே உள்ளது. எனினும், இந்த காரில் 20 முதல் அதிகபட்சம் 30 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 200 முதல் 250 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் eC3 மாடல் டாடா டியாகோ EV மாடலுக்கு போட்டியாக அமையும்.

    • டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளாக்‌ஷிப் எஸ்யுவி மாடலாக லேண்ட் குரூயிசர் இருந்து வந்தது.
    • புது லேணட் குரூயிசர் மாடலை வாங்க உலகளவில் நீண்ட நெடிய காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

    டொயோட்டா நிறுவனத்தின் புதிய லேண்ட் குரூயிசர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய லேண்ட் குரூயிசர் மாடலின் விலை ரூ. 2 கோடியே 1 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காருக்கான முன்பதிவு 2022 ஆகஸ்ட் மாத வாக்கில் துவங்கிய நிலையில், தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வரும் வாரங்களில் இந்த ஃபிளாக்‌ஷிப் எஸ்யுவி வெளியீடு அதிகாரப்பூர்வமாக துவங்கி, அதன் பின் வினியோகமும் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஒற்றை, ஃபுல்லி லோடெட் வேரியண்டில் கிடைக்கும் லேண்ட் குரூயிசர் மாடலில் 3.3 லிட்டர் V6 டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 305 ஹெச்பி பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் புதிய லேண்ட் குரூயிசர் மாடலின் முன்புறம் ட்வீக் செய்யப்பட்ட பெரிய முன்புற கிரில், க்ரோம் இன்சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த காரின் ஹெட்லேம்ப்கள் சதுரங்க வடிவம் கொண்டிருப்பதோடு, இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 20 இன்ச் அலாய் வீல்கள், பின்புறம் எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறத்தில் 12.3 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ரிடிசைன் செய்யப்பட்ட செண்டர் கன்சோல், டூயல் டோன் இண்டீரியர் வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் புதிய டொயோட்டா லேண்ட் குரூயிசர் மாடல் CBU முறையில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த மாடல் லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் காருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இரண்டு புதிய கார் மாடல்கள் மும்பையில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகமாகின்றன.
    • முன்னதாக புது பிஎம்டபிள்யூ கார் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி இருக்கின்றன.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் ஜனவரி 7, 2023 அன்று இரண்டாவது ஜாய்டவுன் ஆஃப் தி சீசன் நிகழ்வை நடத்த இருக்கிறது. கடந்த ஆண்டு இதே நிகழ்வு டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது. இம்முறை ஜாய்டவுன் ஆஃப் தி சீசன் நிகழ்வில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது புதிய 7 சீரிஸ் மற்றும் i7 மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மாடல் ஸ்பை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. மேம்பட்ட புது செடான் மாடல் முற்றிலும் புது டிசைன், ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள், பெரிய கிட்னி கிரில், புதிய முன்புற மற்றும் பின்புற பம்ப்பர்கள், அலாய் வீல்கள் மற்றும் ஏராள அம்சங்களை கொண்டிருக்கிறது.

    2023 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மாடலில் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம், இருவித பிளக்-இன் ஹைப்ரிட் பவர்டிரெயின்கள் வழங்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ i7 மாடலில் 101.7 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் i7 மாடல்களின் உள்புறத்தில் 14.9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், டோர் ஹேண்டில்களின் அருகில் 5.5 இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் புதிய ஃபிலாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், 31 இன்ச் அளவில் 8K ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட தியேட்டர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புது X சீரிஸ் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய X சீரிஸ் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை பட்ஜெட் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய X1 மாடலுக்கான முன்பதிவு நாடு முழுக்க விற்பனை மையங்களில் துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு நடைபெறுகிறது. புதிய X1 மாடல் பற்றி பிஎம்டபிள்யூ சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இந்த கார் 2023 ஜனவரி மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டிசைனை பொருத்தவரை புதிய பிஎம்டபிள்யூ X1 மாடலில் கூர்மையான டிசைன் அம்சங்கள், பெரிய கிட்னி கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லைட்கள், ரிடிசைன் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. டெயில் லேம்ப் டிசைன் மாற்றப்பட்டு புதிய X3 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. புதிய X1 மாடலில் 17 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை 20 இன்ச் வரை அப்கிரேடு செய்து கொள்ளும் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

    உள்புறத்தில் ரிடிசைன் செய்யப்பட்ட டேஷ்போர்டு, புதிதாக வளைந்த டிஸ்ப்ளே, ஐடிரைவ் 8 ஒஎஸ், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. FAAR ஆர்கிடெக்கசரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் X1 மாடல் இருவித பெட்ரோல், இருவித டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 48 வோல்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இருவித என்ஜின்களுடன் 7 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் கியர்பாக்ஸ், ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹெக்டார் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய ஹெக்டார் மாடலில் ADAS உள்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தை உற்பத்தியில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. ஒரு லட்சமாவது யூனிட் ஆக எம்ஜி ஹெக்டார் எஸ்யுவி வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் குஜராத் மாநிலத்தில் உள்ள ஹலோல் ஆலையில் இருந்து வெளியானது.

    எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது புதிய ஹெக்டார் மாடலை ஜனவரி 5, 2023 அன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏராளமான புது அம்சங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய மாடலாக புதிய தலைமுறை ஹெக்டார் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரின் வெளிப்புறம், கேபின் உள்ளிட்டவைகளில் அசத்தல் மாற்றங்கள் செய்யப்பட்டு கூடுதல் அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    2023 எம்ஜி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறம் ஸ்டைலிங் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இதன் முன்புற கிரில் ரிடிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் பின்புற தோற்றம் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.

    ஏற்கனவே இணையத்தில் வெளியான ஸ்பை படங்களின் படி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் அதிக மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அளவில் பெரிய டைமண்ட் மெஷ் கிரில், க்ரோம் சரவுண்ட்கள் உள்ளது. இத்துடன் அதிரடியாக காட்சியளிக்கும் பம்ப்பர்கள், புதிய முக்கோன வடிவம் கொண்ட ஹெட்லேம்ப் ஹவுசிங் உள்ளது.

    இதே போன்ற செட்டப் ஹெக்டார் பிளஸ் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் தற்போதைய மாடலில் இருப்பதை போன்ற டேடைம் ரன்னிங் லேம்ப்கள் உள்ளன. இவை புதிய முன்புற கிரிலின் மேல்புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் புதிய எல்இடி டெயில்லைட்கள், மேம்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), ஏராளமான ஏர்பேக், ABS, EBD, சீட் பெல்ட் ரிமைண்டர் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 170 ஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    ×