search icon
என் மலர்tooltip icon

    கார்

    இரு கார்களின் விலையை உயர்த்திய சிட்ரோயன்!
    X

    இரு கார்களின் விலையை உயர்த்திய சிட்ரோயன்!

    • இந்திய சந்தையில் சிட்ரோயன் நிறுவன கார் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    • சிட்ரோயன் C3 மாடல் புதிதாக டூயல் டோன் வேரியண்டில் கிடைக்கிறது.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது C5 ஏர்கிராஸ் மற்றும் C3 மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. கடந்த அக்டோபரில் விலை உயர்த்தப்பட்ட நிலையில், புது விலை உயர்வு ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது. விலை உயர்வு கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

    சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் ஷைன் டூயல் டோன் எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 50 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடலின் விலை தற்போது ரூ. 37 லட்சத்து 17 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    C3 மாடலின் விலை ரூ. 27 ஆயிரத்து 500 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் NA பெட்ரோல் வேரியண்ட்களின் விலை ரூ. 27 ஆயிரத்து 500 கூடுதலாக அதிகரித்து இருக்கிறது. டர்போ பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ. 20 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வு தவிர ஃபீல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், டூயல் டோன் எனும் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 8 லட்சத்து 10 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விலை உயர்வு தவிர சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் சிட்ரோயன் eC3 பெயரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. சிட்ரோயன் eC3 மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள், ஸ்டீல் வீல் மற்றும் கவர்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள், ரூஃப் ரெயில்கள், டூயல் டோன் பெயிண்ட் கொண்டிருக்கிறது.

    இந்த காரில் 20 முதல் அதிகபட்சம் 30 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 200 முதல் 250 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் eC3 மாடல் டாடா டியாகோ EV மாடலுக்கு போட்டியாக அமையும்.

    Next Story
    ×