search icon
என் மலர்tooltip icon

    கார்

    2023 எம்ஜி ஹெக்டார் ஃபேஸ்லிப்ட் உற்பத்தி துவக்கம்
    X

    2023 எம்ஜி ஹெக்டார் ஃபேஸ்லிப்ட் உற்பத்தி துவக்கம்

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் முற்றிலும் புதிய ஹெக்டார் காரை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • சமீபத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய உற்பத்தியில் ஒரு லட்சமாவது யூனிட் எனும் மைல்கல்லை கடந்தது.

    பிரிடிஷ் மோட்டார் பிராண்டான் எம்ஜி மோட்டார்ஸ் 2023 ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் பற்றிய விவரங்கள் பெரும்பாலும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் எம்ஜி நிறுவனம் ஒரு லட்சமாவது காரை தனது உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிட்டது. எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஒரு லட்சமாவது காராக ஹெக்டார் மாடல் வெளியிடப்பட்டது.

    புதிய ஹெக்டார் மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட முன்புற ப்ரோஃபைல், பின்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புது ஹெக்டார் மாடலில் அகலமான, பிரமாண்ட முன்புற கிரில், அதிக ஆங்குலர் சரவுண்ட்கள், டார்க் க்ரோம் ஃபினிஷ், மற்றும் இன்சர்ட்கள் வழங்கப்படலாம். இந்த காரில் ஸ்ப்லிட் ரக டேடைம் ரன்னிங் லைட்கள், பின்புறம் ஃபௌக்ஸ் எக்சாஸ்ட் டிப்கள், டெயில் லைட்களில் எல்இடி இன்சர்ட்கள் வழங்கப்படுகிறது. இதன் 18 இன்ச் அலாய் வீல்கள் புது டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    உள்புறம் புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 14 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, எம்ஜி நிறுவனத்தின் நெக்ஸ்ட்-ஜென் ஐ ஸ்மார்ட் டெக் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ரிவைஸ்டு டேஷ்போர்டு லே-அவுட், D-வடிவ ஏசி வெண்ட்கள் வழங்கப்படுகிறது.

    இந்த காரில் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), ஏராளமான ஏர்பேக், ABS, EBD, சீட் பெல்ட் ரிமைண்டர் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 170 ஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    Next Story
    ×