search icon
என் மலர்tooltip icon

    கார்

    ரூ. 2 கோடி பட்ஜெட்டில் அறிமுகமான டொயோட்டா லேண்ட் குரூயிசர்!
    X

    ரூ. 2 கோடி பட்ஜெட்டில் அறிமுகமான டொயோட்டா லேண்ட் குரூயிசர்!

    • டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளாக்‌ஷிப் எஸ்யுவி மாடலாக லேண்ட் குரூயிசர் இருந்து வந்தது.
    • புது லேணட் குரூயிசர் மாடலை வாங்க உலகளவில் நீண்ட நெடிய காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

    டொயோட்டா நிறுவனத்தின் புதிய லேண்ட் குரூயிசர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய லேண்ட் குரூயிசர் மாடலின் விலை ரூ. 2 கோடியே 1 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காருக்கான முன்பதிவு 2022 ஆகஸ்ட் மாத வாக்கில் துவங்கிய நிலையில், தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வரும் வாரங்களில் இந்த ஃபிளாக்‌ஷிப் எஸ்யுவி வெளியீடு அதிகாரப்பூர்வமாக துவங்கி, அதன் பின் வினியோகமும் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஒற்றை, ஃபுல்லி லோடெட் வேரியண்டில் கிடைக்கும் லேண்ட் குரூயிசர் மாடலில் 3.3 லிட்டர் V6 டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 305 ஹெச்பி பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் புதிய லேண்ட் குரூயிசர் மாடலின் முன்புறம் ட்வீக் செய்யப்பட்ட பெரிய முன்புற கிரில், க்ரோம் இன்சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த காரின் ஹெட்லேம்ப்கள் சதுரங்க வடிவம் கொண்டிருப்பதோடு, இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 20 இன்ச் அலாய் வீல்கள், பின்புறம் எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறத்தில் 12.3 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ரிடிசைன் செய்யப்பட்ட செண்டர் கன்சோல், டூயல் டோன் இண்டீரியர் வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் புதிய டொயோட்டா லேண்ட் குரூயிசர் மாடல் CBU முறையில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த மாடல் லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் காருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×