என் மலர்
கார்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், கியா மோட்டார்ஸ் நிறுவனம் இலவச சர்வீஸ் காலக்கெடுவை இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பதாக தெரிவித்துள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்ட இலவச சர்வீஸ் காலக்கெடுவினை இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் கியா மோட்டார்ஸ் வாகனங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஜூலை மாதம் வரை இலவச சர்வீஸ் சேவையை பயன்படுத்தி கொள்ள முடியும். இலவச சர்வீஸ் சேவை நீட்டிப்பு பற்றிய முழு விவரங்களை கியா மோட்டார்ஸ் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்து இருக்கிறது.

இந்திய சந்தையில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டு வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. முதல் வாகனமாக கியா செல்டோஸ் கார் ஆகஸ்ட் 2019 இல் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இதை தொடர்ந்து கியா கார்னிவல் எம்.பி.வி. மாடலை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது.
புதிய கியா கார்னிவல் மாடலின் விலையை செல்டோஸ் மாடலை விட அதிகமாக நிர்ணயித்து இருக்கிறது. புதிய கார்னிவல் எம்.பி.வி. மாடல் ஓட்டுனர் இருக்கையை சேர்ந்து மொத்தம் ஒன்பது பேர் பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் இருக்கைகள் நான்கு அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி300 பி.எஸ்.6 டீசல் மாடல் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி300 பி.எஸ்.6 காம்பேக்ட் எஸ்யுவி மாடல் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விலை ரூ. 8.69 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய எக்ஸ்யுவி300 பி.எஸ்.6 மாடல்களில் டபிள்யூ8 ஏ.எம்.டி. ட்ரிம் நீக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் தற்சமயம் டபிள்யூ6 ட்ரிம் மற்றும் டாப் ஆஃப் தி லைன் டபிள்யூ8 ஒ ட்ரிம்களில் கிடைக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் படி பிஎஸ்6 ரக 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. முந்தைய பிஎஸ்4 என்ஜின் 117 பி.ஹெச்.பி. மற்றும் 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
புதிய எஸ்.யு.வி. மாடலில் டூயல் டோன் கேபின், 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பிஸ்4 மாடல்களில் உள்ள அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய என்ஜின் கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால், எக்ஸ்யுவி300 மாடல்கள் அனைத்திலும் பி.எஸ்.6 ரக என்ஜின்களை கொண்டிருக்கின்றன.
மஹிந்திரா நிறுவனத்தின் 2020 பொலிரோ பி.எஸ்.6 ஃபேஸ்லிஃப்ட் எஸ்.யு.வி. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மஹிந்திரா நிறுவனத்தின் 2020 பொலிரோ ஃபேஸ்லிஃப்ட் பி.எஸ்.6 எஸ்.யு.வி. இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 7.98 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய பி.எஸ்.4 மாடலின் விலையும் இதே தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் இந்த எஸ்.யு.வி. விலை ரூ. 70 ஆயிரம் வரை அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் பி.எஸ்.6 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று காரின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
காரின் முன்புறம் புதிய கிரில், பம்ப்பர் உள்ளிட்டவை காணப்படுகிறது. இதுதவிர முன்புற ஹெட்லேம்ப்கள் மாற்றப்பட்டு கிளஸ்டரை சுற்றி பிளாக் இன்சர்ட் மற்றும் குரோம் பிட்கள் வழங்கப்படுகின்றன.

முன்புறம் போன்றே பின்புறமும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காரின் உள்புறத்தில் பொலிரோ பி.எஸ்.6 மாடலில் முன்பை விட கூடுதல் அம்சங்கள் மற்றும் மேம்பட்ட கேபின் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அப்டேட் செய்யப்பட்ட டேஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் காரிபிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகின்றன.
புதிய மஹிந்திரா பொலிரோ பி.எஸ்.6 மாடலில் 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட எம்ஹாக் 75 டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 75 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இத்துடன் இந்த கார் மேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்படுகிறது.
மஹிந்திரா பொலிரோ பி.எஸ்.6 மாடல் பி4, பி6 மற்றும் பி6 (ஒ) என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதில் பி6 ஒ மாடல் விலை ரூ. 9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என கூறப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ பி.எஸ்.6 கார் விற்பனையகங்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் விற்பனையகங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் பி.எஸ்.6 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று காரின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
காரின் முன்புறம் புதிய கிரில், பம்ப்பர் உள்ளிட்டவை காணப்படுகிறது. இதுதவிர முன்புற ஹெட்லேம்ப்கள் மாற்றப்பட்டு கிளஸ்டரை சுற்றி பிளாக் இன்சர்ட் மற்றும் குரோம் பிட்கள் வழங்கப்படுகின்றன.

முன்புறம் போன்றே பின்புறமும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காரின் உள்புறத்தில் பொலிரோ பி.எஸ்.6 மாடலில் முன்பை விட கூடுதல் அம்சங்கள் மற்றும் மேம்பட்ட கேபின் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அப்டேட் செய்யப்பட்ட டேஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் காரிபிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகின்றன.
புதிய மஹிந்திரா பொலிரோ பி.எஸ்.6 மாடலில் 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட டீசல் டி75 ரக என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 70 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இத்துடன் இந்த கார் மேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்படுகிறது.
மஹிந்திரா பொலிரோ பி.எஸ்.6 மாடல் பி4, பி6 மற்றும் பி6 (ஒ) என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. புதிய பி.எஸ்.6 பொலிரோ மாடலின் விலை தற்சமயம் விற்பனை செய்யப்படும் வேரியண்ட்டை விட ரூ. 50 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வால்வோ நிறுவன கார் மாடல்களில் கோளாறு கண்டறியப்பட்டு இருப்பதை தொடர்ந்து 7.5 லட்சம் கார்களை திரும்ப பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட சில கார் மாடல்களை இந்திய சந்தையில் திரும்ப பெற இருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் வெவ்வேறு வால்வோ மாடல்களை சேர்ந்த சுமார் 1891 யூனிட்களை திரும்ப பெறுவதாக வால்வோ அறிவித்து இருக்கிறது.
வால்வோ கார்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், அவற்றை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டதாக வால்வோ கார்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.
ஆட்டோனோமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டத்தை (AEB) இயக்கும் மென்பொருளை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வால்வோ தெரிவித்துள்ளது. இந்த கோளாறு சில வெப்பநிலைகளில் ஏற்படுவது கண்டறியப்பட்டு இருக்கிறது.

இதே பிரச்சினை வால்வோ நிறுவனம் சர்வதேச சந்தையில் விற்பனை செய்த சுமார் 7.5 லட்சத்திற்கும் அதிக யூனிட்களில் ஏற்பட்டு இருக்கிறது. வால்வோ எக்ஸ்.சி.40, எக்ஸ்.சி.60, எக்ஸ்.சி.90, வி90 கிராஸ் கண்ட்ரி மற்றும் எஸ்90 உள்ளிட்ட மாடல்களை பாதித்து இருக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாடல்களை பயன்படுத்துவோரில், கோளாறு உறுதி செய்யப்பட்ட கார்களை வைத்திருப்போரை வால்வோ தொடர்பு கொண்டு, பிரச்சினை இலவசமாக சரி செய்து தரப்படும் என வால்வோ தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினை மென்பொருள் அப்டேட் மூலமாகவே சரி செய்துவிட முடியும் என கூறப்படுகிறது.
நிசான் நிறுவனத்தின் பி.எஸ்.4 கிக்ஸ் கார் இந்திய சந்தையில் ரூ. 1.6 லட்சம் மதிப்புள்ள சலுகையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய சந்தையில் பி.எஸ். 6 புகை விதிகள் ஏப்ரல் 1 முதல் அமலாக இருக்கும் நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் பி.எஸ்.4 வாகனங்களுக்கு அதிகளவு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் நிசான் இணைந்திருக்கிறது.
அதன்படி நிசான் கிக்ஸ் பி.எஸ்.4 வேரியண்ட்டிற்கு ரூ. 1.63 லட்சம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் நிசான் கிக்ஸ் விலை ரூ. 9.55 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிசான் கிக்ஸ் டீசல் வேரியண்ட்டிறஅகு ரூ. 45 ஆயிரம் வரை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் ரூ. 40 ஆயிரம், கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 10 ஆயிரம், ரூ. 13,100 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள், ரூ. 20,500 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகை 2+3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
பெட்ரோல் வேரியண்ட்டிற்கு எக்சேன்ஜ் போனஸ் ரூ. 40 ஆயிரம், கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 10 ஆயிரம், ரூ. 13,100 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள், ரூ. 20,500 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகை 2+3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் 36 மாதங்களுக்கு 6.99 சதவீதம் வட்டியில் ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள சேமிப்பை வழங்குகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் பி.எஸ்.6 மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது.
ஸ்கோடா இந்தியா நிறுவனம் ரேபிட் பி.எஸ்.6 காருக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய ரேபிட் மாடலில் பி.எஸ்.6 ரக 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஸ்கோடா ரேபிட் மாடலுக்கான விநியோகம் ஏப்ரல் 14-ம் தேதி துவங்க இருக்கிறது. புதிய 1.0 லிட்டர் மாடலில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. எதகிர்காலத்தில் இந்த காரில் ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் போலோ மற்றும் வென்டோ பி.எஸ்.6 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 110 பி.ஹெச்.பி. பவர், 175 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதே செயல்திறன் ரேபிட் மாடலிலும் இருக்கும் என தெரிகிறது.

என்ஜின் தவிர புதிய காரில் அதிகளவு மாற்றங்கள் இருக்காது என்றே கூறப்படுகிறது. ஸ்கோடா ரேபிட் மாடலில் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ஆம்பியன்ட் இன்டீரியர் லைட்டிங், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம்.
இந்திய சந்தையில் ஸ்கோடா ரேபிட் மாடல் மாருதி சுசுகி சியாஸ், 2020 ஹோண்டா சிட்டி உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. புதிய கார் விலை தற்போதைய மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய டி ராக் எஸ்.யு.வி. கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் புதிய டி ராக் எஸ்.யு.வி. மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய டி ராக் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக இருந்தது. இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்.யு.வி. விலை ரூ. 19.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடலுக்கான முன்பதிவுகளும் துவங்கி இருக்கின்றன. இதுவரை புதிய காரை வாங்க சுமார் 300 பேர் முன்பதிவு செய்து இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. இந்த காரின் விநியோகம் விரைவில் துவங்கும் என கூறப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடலில் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. கார்னெரிங் லைட்கள், ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய டி ராக் காரில் 17 இன்ச் அலாய் வீல்கள், மெல்லிய மற்றும் அழகிய எல்.இ.டி. டெயில் லைட்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

காரின் உள்புறம் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், விர்ச்சுவல் காக்பிட், லெதர் இருக்கைகள், பானரோமிக் சன்ரூஃப், டூயல் டோன் அலாய் வீல்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், கீலெஸ் என்ட்ரி, புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், பல்வேறு ஏர்பேக், ஏ.பி.எஸ். இ.பி.டி. உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடலில் பி.எஸ்.6 ரக 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கரோக் மாடலுக்கான முன்பதிவு இந்திய சந்தையில் துவங்கப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா இந்தியா நிறுவனம் கரோக் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவுகளை இந்திய சந்தையில் துவங்கி இருக்கிறது. புதிய ஸ்கோடா கரோக் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கரோக் எஸ்.யு.வி. மாடலின் விநியோகம் மே 6-ம் தேதி துவங்குகிறது. இந்த காரில் விர்ச்சுவல் காக்பிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், 17 இன்ச் அலாய் வீல்கள், எட்டு இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், ஒன்பது ஏர்பேக், மின்சாதன முறையில் 12 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒட்டுனர் இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா கரோக் மாடலில் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 150 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 202 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
இந்திய சந்தையில் ஸ்கோடா கரோக் மாடலின் துவக்க விலை ரூ. 20 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புத்தம் புதிய 2020 கிரெட்டா மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா மாடல் கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் ix25 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் வி.ஜி.டி. டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. பெசட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை அனைத்தும் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 113 பி.ஹெச்.பி., 144 என்.எம். மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இதன் டர்போ பெட்ரோல் என்ஜின் 138 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 2020 ஹூண்டாய் கிரெட்டா - இ, இ.எக்ஸ்., எஸ், எஸ்.எக்ஸ். மற்றும் எஸ்.எக்ஸ். ஒ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

புதிய ஹூண்டாய் கிரெட்டா 7 இன்ச் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் புளூ லின்க் ஸ்மார்ட்வாட்ச் ஆப், பானரோமிக் சன்ரூஃப், வென்டிலேட்டெட் சீட்கள், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
2020 ஹூண்டாய் கிரெட்டா மாடல் விலை ரூ.9.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரெனால்ட் நிறுவனத்தின் கேப்டூர் ஃபேஸ்லிஃப்ட் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் தனது கேப்டூர் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முதற்கட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இவை ரஷ்ய மாடலுக்கானவை ஆகும். தற்சமயம் ரஷ்யாவில் விற்பனை செய்யப்படும் பிரீ ஃபேஸ்லிஃப்ட் மாடல் மற்றும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடல்கள் பி0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
புகைப்படங்ளின் படி காரின் வெளிப்புறம் சில காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய அலாய் வீல்கள், கிரில் மற்றும் பம்ப்பர் பகுதிகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய கார் மேம்பட்ட பி0+ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதாக ரெனால்ட் தெரிவித்து இருக்கிறது.

ஏப்ரல் 1, 2020 முதல் இந்தியாவில் கேப்டூர் மாடல் பெட்ரோல் வேரியண்ட் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. பி.எஸ்.6 விதிகள் அமலானதும், கேப்டூர் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ரெனால்ட் 1.5 லிட்டர் K9K டீசல் என்ஜினை பி.எஸ்.6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யாது என தெரிகிறது.
ரஷ்யாவில் தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேப்டூர் மாடல் இந்தியாவில் சில மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மேம்பட்ட கேப்டூர் மாடலில் 156 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதே என்ஜின் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் டஸ்டர் மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் டைரெக்ட் இன்ஜெக்ஷன் மற்றும் டர்போசார்ஜிங் கொண்டிருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் 2020 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கியது. புதிய காருக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் ஹூண்டாய் விற்பனையகங்களில் நடைபெறுகிறது. 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு கட்டணம் ரூ. 25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து இந்த காரின் விநியோகம் துவங்கும் என கூறப்படுகிறது. புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் காரின் வெளிப்புறம் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், கேஸ்கேடிங் கிரில், முன்புறம் ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர், டூயல் டோன் அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில்லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் கொண்டிருக்கின்றன.
உள்புறம் புதிய 9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஹூண்டாயின் புதிய புளூ லின்க் கனெக்டிவிட்டி தொழில்நுட்பம் வழங்கப்படுகின்றன. இத்துடன் 4.2 இன்ச் டி.எஃப்.டி. செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல்: 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அனைத்து என்ஜின்களும் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.






