என் மலர்
பைக்
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 180 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பிஎஸ்6 ரக பல்சர் 180 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1,04,768 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பிஎஸ்6 மாடல் தற்சமயம் பிளாக் ரெட் நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.
ஸ்டைலிங்கை பொருத்தவரை ட்வின் டிஆர்எல், டின்ட் செய்யப்பட்ட வைசர் வழங்கப்படுகிறது. காக்பிட் பகுதியில் அதிநவீன, செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் என்ஜின் கவுல், ஸ்ப்லிட்-சீட், 2 பீஸ் கிராப் ரெயில் வழங்கப்பட்டு இருக்கிறது.

மெக்கானிக்கல் அம்சங்கள் மற்றும் இதர பாகங்கள் பல்சர் 180எப் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி இந்த நேக்கட் ரோட்ஸ்டர் மாடலில் 178.6சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 16.7 பிஹெச்பி பவர், 14.52 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
சஸ்பென்ஷனிற்கு முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் கியாஸ் சார்ஜ் செய்யப்பட்ட ட்வின் ஸ்ப்ரிங் வழங்கப்பட்டு உள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 280எம்எம் ஒற்றை டிஸ்க், பின்புறம் 230 எம்எம் சிங்கில் ரோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சிங்கில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது.
புதிய பல்சர் 180 பிஎஸ்6 மாடல் ஹோண்டா ஹார்னெட் 2.0, டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர்180 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
பெனலி நிறுவனத்தின் 2021 லியோன்சினோ 500 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
பெனலி இந்தியா நிறுவனம் 2021 லியோன்சினோ 500 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பெனலி லியோன்சினோ 500 மாடல் விலை ரூ. 4.60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய 2019 வெர்ஷனை விட ரூ. 20 ஆயிரம் குறைவு ஆகும்.
2021 பெனலி லியோன்சினோ 500 மாடலில் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் பெனலி நிறுவனத்தின் மூன்றாவது மோட்டார்சைக்கிள் மாடலாக புதிய லியோன்சினோ 500 அமைகிறது.

முன்னதாக டிஆர்கே 502 மற்றும் இம்பீரியல் 400 உள்ளிட்ட மாடல்கள் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டன. இவைதவிர 2021 ஆண்டில் மேலும் சில பிஎஸ்6 மாடல்களை அறிமுகம் செய்வதாக பெனலி தெரிவித்து இருக்கிறது.
புதிய பெனலி லியோன்சினோ 500 மாடலின் முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இதன் வினியோகம் துவங்கும் என தெரிகிறது.
2021 பெனலி லியோன்சினோ 500 மாடலில் DOHC 500சிசி ட்வின்-சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 46 பிஹெச்பி பவர், 46 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
கவாசகி நிறுவனம் 2021 W175 மோட்டார்சைக்கிளை புதிய நிறத்தில் விரைவில் வெளியிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
கவாசகி நிறுவனம் W175 மோட்டார்சைக்கிளை புதிய நிறத்தில் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் எபோனி மற்றும் வைட் நிறங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் இந்த மாடல் மெட்டாலிக் ஓசன் புளூ நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மாடலின் பியூவல் டேன்க் நீல நிறத்திலும் பென்டர்களின் மேல் பின்ஸ்டிரைப், அன்டர்சீட் பேனல்களில் 175 பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. கவாசகி W175 மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது.
இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் இது அந்நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக அறிமுகமாகும் என தெரிகிறது. கவாசகி W175 மாடலில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், ஒற்றை இருக்கை அமைப்பு மற்றும் ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

2021 கவாசகி W175 மாடலில் 177சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 12.9 பிஹெச்பி பவர், 13.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டு உள்ளன.
புதிய கவாசகி W175 மாடல் ராயல் என்பீல்டு கிளாசிக் 350, ஜாவா ஸ்டான்டர்டு மற்றும் பெனலி இம்பீரியல் 400 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 2 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
கபிரா மொபிலிட்டி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து உள்ளது.
கோவாவை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் கபிரா மொபிலிட்டி இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை கேஎம் 3000 மற்றும் கேஎம் 4000 என அழைக்கப்படுகின்றன.
இதில் கவாசகி நின்ஜா 300 போன்றே காட்சியளிக்கும் கேஎம் 3000 மாடல் விலை ரூ. 1,26,990 என்றும் இசட்1000 தோற்றம் கொண்டிருக்கும் கேஎம் 4000 மாடல் விலை ரூ. 1,36,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களிலும் முறையே 6kW மற்றும் kW மோட்டார் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த மோட்டார்கள் 4.0 kWh மற்றும் 4.4 kWh பேட்டரிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த பேட்டரிகளை பூஸ்ட் சார்ஜ் மூலம் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 50 நிமிடங்களே ஆகும். இகோ சார்ஜ் பயன்படுத்தும் பட்சத்தில் 6 மணி 30 நிமிடங்கள் ஆகும்.

கேஎம் 3000 மாடல் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 முதல் 120 கிலோமீட்டர் வரை செல்லும். கேம் 4000 மாடல் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 90 முதல் 150 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
இரு மாடல்களிலும் ப்ளூடூத் சார்ந்து இயங்கும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களும் கோவா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற பகுதிகளை சேர்ந்த 27 விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புது மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் ரூ. 1.96 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் புத்தம் புதிய சிபி350ஆர்எஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய ஹோண்டா சிபி350ஆர்எஸ் மாடல் துவக்க விலை ரூ. 1,96,000 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹோண்டா சிபி350ஆர்எஸ் மாடலின் பியூவல் டேன்க்கில் பிரம்மாண்ட ஹோண்டா பேட்ஜ், 7-y வடிவ அலாய் வீல்கள், அதிநவீன ரோட்ஸ்டர் தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப், கண் வடிவி எல்இடி விண்க்கர்கள், மெல்லிய எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் 350சிசி, ஏர்-கூல்டு 4 ஸ்டிரோக் OHC சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.7 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் வழஹ்குகிறது. இதில் உள்ள மேம்பட்ட PGM-FI சிஸ்டம் ஆன்-போர்டு சென்சார்களை கொண்டு என்ஜினுக்கு சீராக எரிபொருள் செலுத்துகிறது.
இத்துடன் ஹோண்டா சிபி350ஆர்எஸ் மாடலில் மேம்பட்ட டிஜிட்டல் அனலாக் மீட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது டார்க் கண்ட்ரோல், ஏபிஎஸ், சைடு-ஸ்டாண்டு இன்டிகேட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் மற்றும் பேட்டரி வோல்டேஜ் போன்ற விவரங்களை வழங்குகிறது.
புதிய ஹோண்டா சிபி350ஆர்எஸ் மாடல் ரியல்-டைம் மைலேஜ், அவரேஜ் மைலேஜ் மற்றும் டிஸ்டன்ஸ் டு எம்ப்டி என மூன்று மோட்களில் பியூவல் ஆற்றல் விவரங்களை காண்பிக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் வாகன உற்பத்தியில் பத்து கோடி யூனிட்கள் எனும் மைல்கல் எட்டியது. மைல்கல் உற்பத்தியை கொண்டாடும் வகையில் ஆறு லிமிடெட் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்து இருந்தது.
அந்த வகையில் எக்ஸ்டிரீம் 160ஆர் 100 மில்லியன் லிமிடெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் மாடல் பிரத்யேகமாக வைட் மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது.

இத்துடன் `100 மில்லியன்' வாசகம் அடங்கிய கிராபிக்ஸ் இடம்பெறுகிறது. இவைதவிர புதிய லிமிடெட் எடிஷன் மாடலில் வெறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது. புதிய மாடலில் எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது.
ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் மாடலில் 163சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 15 பிஹெச்பி பவர், 14 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் இதன் டூயல் டிஸ்க் வேரியண்ட் விலை ரூ. 1.06 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எம்வி அகுஸ்டா நிறுவனத்தின் 2021 புருடேல் 800 ஆர்ஆர் மற்றும் டிராக்ஸ்டர் ஆர்ஆர் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
எம்வி அகுஸ்டா நிறுவனம் 2021 புருடேல் 800 ஆர்ஆர் மற்றும் டிராக்ஸ்டர் ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய மேம்பட்ட மாடல்களில் எல்இடி ஹெட்லைட், புது டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மேம்பட்ட ட்ரிபில் எக்சாஸ்ட் அவுட்லெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன் டிராக்ஸ்டர் ஆர்ஆர் மாடலில் பார்-எண்ட் மிரர்கள், பாப்டு டெயில், வயர்-ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இரு மாடல்களில் உள்ள டிஎப்டி டிஸ்ப்ளே ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்டு எம்வி ரைடு செயலியுடன் இயங்குகிறது.

புருடேல் 800 ஆர்ஆர் மாடல் ஷாக் பியல் ரெட் மற்றும் அவியோ கிரே மற்றும் கார்பன் பிளாக் மெட்டாலிக் மற்றும் அவியோ கிரே மெட்டாலிக் நிறங்களில் கிடைக்கிறது. டிராக்ஸ்டர் ஆர்ஆர் மாடல் மேட் மேக்னம் அவியோ கிரே மற்றும் மேட் மெட்டாலிக் டார்க் கிரே மற்றும் மேட் மேக்னம் சில்வர் மற்றும் மேட் மெட்டாலிக் டார்க் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
இரு மாடல்களிலும் 798சிசி, 3 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 138 பிஹெச்பி பவர், 87 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள்கள் மணிக்கு அதிகபட்சம் 244 கிலோமீட்டர் வேகத்தில் சீறி பாயும் திறன் கொண்டுள்ளன.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது கிளாசிக் 350 சீரிஸ் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு காரணமாக இதன் துவக்க விலை ரூ. 1,61,235 இல் இருந்து ரூ. 1,67,235 என மாறி இருக்கிறது.
மாற்றப்பட்ட புதிய விலை விவரம்
கிளாசிக் 350 (ஆஷ்/செஸ்ட்ந்ட்/ரெடிட்ச் ரெட்/பியூர் பிளாக்/எம்.சில்வர்) விலை ரூ. 1,67,235
கிளாசிக் 350 பிளாக் ரூ. 1,75,405
கிளாசிக் 350 கன் கிரே ஸ்போக் வீல் ரூ. 1,77,294
கிளாசிக் 350 சிக்னல் ஏர்போன் புளூ ரூ. 1,85,902
கிளாசிக் 350 கன் கிரே அலாய் வீல் ரூ. 1,89,360
கிளாசிக் 350 ஆரஞ்சு எம்பெர்/மெட்டாலியோ சில்வர் ரூ. 1,89,360
கிளாசிக் 350 ஸ்டெல்த் பிளாக் / குரோம் பிளாக் ரூ. 1,92,608

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய விலை உயர்வு இந்த மாதமே அமலுக்கு வருகிறது. விலை உயர்வு தவிர கிளாசிக் 350 மாடல்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடலில் 346சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 19.1 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2021 ஹயபுசா மாடலினை சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. மூன்றாம் தலைமுறை சுசுகி ஹயபுசா சூப்பர்பைக் வரும் மாதங்களில் இந்தியா உள்பட பல்வேறு சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்திய சந்தையில் 2021 சுசுகி ஹயபுசா சூப்பர்பைக் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்திய சந்தைக்கு புதிய ஹயபுசா மாடல் சிகேடி முறையில் கொண்டு வரப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு செய்வதன் மூலம் 2021 ஹயபுசா மாடல் விலையை சந்தையில் போட்டியை உண்டாக்கும் வகையில் நிர்ணயம் செய்ய முடியும். இந்தியாவில் முந்தைய ஹயபுசா மாடல் விலை ரூ. 13.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போதைய அப்டேட் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் இதன் விலை ரூ. 18 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 2021 சுசுகி ஹயபுசா மாடலுக்கான முன்பதிவு சில விற்பனையகங்களில் துவங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், சுசுகி சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ முன்பதிவு துவங்கப்படவில்லை. மேலும் இதன் வெளியீடு பற்றியும் சுசுகி சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
யமஹா நிறுவனத்தின் 2021 FZ மற்றும் FZS மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது 2021 FZ சீரிஸ் மாடல்கள்- FZ-Fi மற்றும் FZS-Fi மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. 2021 யமஹா FZ மற்றும் FZS மோட்டார்சைக்கிள்களில் சிறு மாற்றங்கள் மற்றும் புது அம்சங்கள் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்தியாவில் 2021 யமஹா FZ-Fi மாடல் விலை ரூ. 1.03 லட்சம் என்றும் யமஹா FZS-Fi மாடலின் விலை ரூ. 1.07 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

2021 யமஹா FZ-Fi மாடல்- ரேசிங் புளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் என இரண்டு புதிய நிறங்களிலும், FZS-Fi மாடல் மேட் ரெட் நிறத்தில் கிடைக்கின்றன. இவை தவிர இரு மாடல்களும் தற்சமயம் கிடைக்கும் நிறங்களிலும் வழங்கப்படுகிறது. இத்துடன் 2021 FZS-Fi மாடலில் புதிதாக 3டி சின்னம் வழங்கப்படுகிறது.
இவற்றுடன் 2021 FZS-Fi மாடலில் யமஹாவின் ப்ளூடூத் சார்ந்து இயங்கும் யமஹா மோட்டார்சைக்கிள் கனெக்ட் எக்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு ஸ்மார்ட் வசதிகளை வழங்குகிறது. இவைதவிர புதிய மாடல்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
2021 யமஹா FZ மற்றும் FZS மாடல்களில் 149சிசி பிஎஸ்6 ரக சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 12.4 பிஹெச்பி பவர், 13.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் இந்திய விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது பிரீமியம் 350சிசி குரூயிசர் மாடலான ஹைனெஸ் சிபி350 விற்பனையில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்த மைல்கல் விற்பனை துவங்கிய மூன்றே மாதங்களில் எட்டப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மாடல் வினியோகம் அக்டோபர் 21, 2020 துவங்கியது. புதிய ஹைனெஸ் சிபி350 மாடல் ஹோண்டா நிறுவனத்தின் பிங்விங் விற்பனை மையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஹோண்டா தற்சமயம் 5 பிங்விங் விற்பனை மையங்களையும், 18 பிங்விங் டீலர்ஷிப்களை இந்தியா முழுக்க வைத்திருக்கிறது.

இந்திய சந்தையில் ஹைனெஸ் சிபி 350 டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1.85 லட்சம் மற்றும் ரூ. 1.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹோண்டா ஹைனெஸ் 350 மாடலில் 348.36சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.5 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
சுசுகி நிறுவனத்தின் லிமிடெட் எடிஷன் சூப்பர்பைக் விற்பனை துவங்கிய மூன்றே நாட்களில் விற்று தீர்ந்தது.
சுசுகி நிறுவனம் புதிய ஹயபுசா சர்வதேச வெளியீட்டு நிகழ்வின் போது லிமிடெட் எடிஷன் மாடலையும் அறிமுகம் செய்தது. இது மொத்தத்தில் பத்து யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு அறிவிக்கப்பட்டன.
புதிய லிமிடெட் எடிஷன் மாடலை முன்பதிவு செய்வதற்கான காலக்கெடு மார்ச் 15 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. எனினும், இவை விற்பனை துவங்கிய மூன்றே நாட்களில் விற்று தீர்ந்தன. லிமிடெட் எடிஷன் மாடல் பிளாக் மற்றும் கோல்டு வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளன.

மேலும் இவற்றில் கார்பன் மிரர் கவர்கள், கார்பன் டேன்க் பேட், ரிம் ஸ்டிரைப் மற்றும் பிரத்யேக அனோடைஸ் செய்யப்பட்ட லீவர்கள் மற்றும் சீட் கவர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
புதிய தலைமுறை ஹயபுசா மாடலில் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் 1340சிசி, இன்-லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் மற்றும் ரைடு-பை-வயர் எலெக்டிரானிக் திராட்டிள் சிஸ்டம், ரிவைஸ்டு இன்டேக் மற்றும் எக்சாஸ்ட் அமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 264 கிலோ எடை கொண்டிருக்கும் புதிய சுசுகி ஹயபுசா லிட்டருக்கு 14.9 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






