என் மலர்
பைக்
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேன்ஜ் ரோவர் கார் மாடல் விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் சர்வதேச விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. இதனை லேண்ட் ரோவர் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள அக்கவுண்ட்களில் தெரிவித்து உள்ளது.
சர்வதேச சந்தையில் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 2021 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் துவக்க விலை ரூ. 89.13 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.43 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் மொத்தம் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது. பெயருக்கு ஏற்றார் போல் இந்த மாடலில் பெரிய ஏர் டேம், கூர்மையான எட்ஜ் மற்றும் பிளாக்டு-அவுட் அம்சங்கள் என பல்வேறு ஸ்போர்ட் ஸ்டைலிங் கொண்டிருக்கிறது.

இந்த பிரீமியம் எஸ்யுவி மாடல் 296 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் 2.0 லிட்டர் 4 சிலிண்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின், 394 பிஹெச்பி பவர், 550 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் 3.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் MHEV என்ஜின் மற்றும் 296 பிஹெச்பி பவர், 650 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் 3.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
அனைத்து என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ரேன்ஜ் ரோர் ஸ்போர்ட் எஸ்விஆர் வேரியண்ட் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. இந்த என்ஜின் 567 பிஹெச்பி பவர், 700 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
சுசுகி நிறுவனத்தின் 2021 ஹயபுசா மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2021 ஹயபுசா மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய சுசுகி ஹயபுசா மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புது அம்சங்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
புதிய சூப்பர்பைக் எல்இடி லைட்டிங் கொண்டிருக்கிறது. இதன் இன்டிகேட்டர்கள் பொசிஷன் லேம்ப்களுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் பேரிங் கூர்மையான காண்டொர் கொண்டிருக்கிறது. இது மோட்டார்சைக்கிளுக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது. இத்துடன் குரோம் பிளேட் செய்யப்பட்ட எக்சாஸ்ட் பைப்கள் வழங்கப்பட்டு உள்ளன.

2021 சுசுகி ஹயபுசா மாடலில் புதிய டிஎப்டி டிஸ்ப்ளே, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதிய ஸ்விட்ச் கியர் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் லான்ச் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், கார்னெரிங் ஏபிஎஸ், ஹில்-ஹோல்டு கண்ட்ரோல், 6 ஆக்சிஸ் ஐஎம்யு, 3 லெவல் என்ஜின் பிரேக்கிங் வசதிகளை கொண்டுள்ளது.
இத்துடன் 10-லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஆண்டி-வீலி கண்ட்ரோல், சுசுகி இன்டெலிஜண்ட் ரைடு சிஸ்டம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றுடன் முந்தைய மாடல்களை போன்றே அலுமினியம் பிரேம் கொண்டிருக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் 1340சிசி இன்-லைன், 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
பெனலி நிறுவனத்தின் 2021 இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பெனலி நிறுவனம் 2021 இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2021 பெனலி இம்பீரியல் 400 விலை ரூ. 1.89 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகமான இம்பீரியல் மாடலின் பிஎஸ்6 வெர்ஷன் ஆகும்.
புதிய இம்பீரியல் 400 அந்நிறுவனத்தின் இந்திய விற்பனையை ஊக்குவிக்கும் என பெனலி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. இதன் விலை விற்பனையை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது. 2021 பெனலி இம்பீரியல் 400 மாடலுடன் இரண்டு ஆண்டுகளுக்கு வரம்பற்ற கிலோமீட்டர்களுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது.

இத்துடன் 24x7 Roadside Assistance வசதியும் வழங்குகிறது. புதிய மோட்டார்சைக்கிள் ரெட்ரோ-டிசைன் கொண்டுள்ளது. இதில் வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், டியர்-டிராப் பியூவல் டேன்க், ஸ்போக் வீல் மற்றும் இதர அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
2021 பெனலி இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிளில் 374சிசி சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 19 பிஹெச்பி பவர், 29 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய ஐ கியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் நிறுவனத்தின் ஐ கியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லியில் இதன் விலை ரூ. 1.08 லட்சம், ஆன்-ரோடு என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பெங்களூரில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ. 8 ஆயிரம் குறைவு ஆகும்.
புதிய ஐ கியூப் மாடல் புல் எல்இடி லைட்டிங் மற்றும் புல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிவிஎஸ் SmartXonnect தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இத்துடன் ஜியோ-பென்சிங், ரிமோட் பேட்டரி சார்ஜிங் இன்டிகேஷன், நேவிகேஷன் அசிஸ்ட், ஓவர்-ஸ்பீடு அலெர்ட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட்போனுடன் இணைத்து கொண்டால் இதன் டிஸ்ப்ளே அழைப்புகள், குறுந்தகவல் போன்ற விவரங்களை காண்பிக்கும். இத்துடன் இரவு மற்றும் பகல் நேரத்தில் டிஸ்ப்ளேவை தெளிவாக பார்க்க டே அண்ட் நைட் மோட் வழங்கப்படுகிறது. டிவிஎஸ் ஐ கியூப் மாடலில் 4.4 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த மோட்டார் மணிக்கு அதிகபட்சம் 78 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 2.25 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஓசூரில் கட்டமைத்து இருக்கும் புதிய ஆலையில் உற்பத்தி பணிகளை துவங்கி இருக்கிறது.
பெங்களூரை சேர்ந்த பிரீமியம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஏத்தர் எனர்ஜி ஓசூரில் கட்டமைத்த புதிய ஆலையில் உற்பத்தி பணிகளை துவங்கி இருக்கிறது. இந்த ஆலையில் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
புது ஆலையில் உற்பத்தி துவங்கி இருப்பதால், ஏத்தர் எனர்ஜி இந்தியாவில் மேலும் சில பகுதிகளில் விற்பனையை அதிகப்படுத்த முடியும். தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி ஒரு வருடம் கழித்து ஓசூர் ஆலையில் உற்பத்தி பணிகள் துவங்கி உள்ளன.
ஓசூரில் உள்ள புதிய உற்பத்தி ஆலை 4 லட்சம் சதுர அடி பரப்பளவு நிலத்தில் அமைந்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான சமயத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிக வேலைவாய்ப்புகளை இந்த ஆலை உருவாக்கும் என ஏத்தர் எனர்ஜி தெரிவித்து இருந்தது.
பெனலி நிறுவனத்தின் புதிய டிஆர்கே 502எக்ஸ் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பெனலி இந்தியா தனது இரண்டாவது பிஎஸ்6 மோட்டார்சைக்கிள், டிஆர்கே 502 அட்வென்ச்சர் டூரர் மாடலை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் வெளியீட்டை தொடர்ந்து டிஆர்கே 502எக்ஸ் பிஎஸ்6 மாடலை வெளியிட பெனலி திட்டமிட்டு உள்ளது.
டிஆர்கே 502எக்ஸ் பிஎஸ்6 மாடல் இந்தியாவில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளியாகும் என பெனலி இந்தியா நிர்வாக இயக்குனர் விகாஸ் ஹபாக் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
பெனலி டிஆர்கே 502எக்ஸ் ஆப்-ரோடு சார்ந்த மாடல் ஆகும். இது ஸ்போக்டு வீல், பெரிய என்ஜின் கார்டு, ஹை-மவுண்ட் செய்யப்பட்ட எக்சாஸ்ட், பின்புறம் லக்கேஜ் ரேக், டிஆர்கே 502 மாடலை விட அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது.
சஸ்பென்ஷனிற்கு 50எம்எம் யுஎஸ்டி போர்க், பின்புறம் மோனோ-ஷாக் செட்டப் வழங்கப்படுகிறது. இதே செட்டப் 502எக்ஸ் மாடலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 320எம்எம் டிஸ்க், பின்புறம் 260எம்எம் டிஸ்க் ரோட்டார்கள் வழங்கப்படுகிறது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஜூப்பிட்டர் மாடல் புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் 110சிசி ஜூப்பிட்டர் ஸ்கூட்டரை புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்கூட்டர் தற்சமயம் இன்டெலிகோ தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது காற்று மாசை குறைப்பதோடு, எரிபொருள் சேமிக்கவும் உதவும் என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
புதிய இன்டெலிகோ தொழில்நுட்பம் ஜூப்பிட்டர் டாப் எண்ட் மாடலான இசட்எக்ஸ் டிஸ்க் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தியாவில் புதிய வேரியண்ட் விலை ரூ. 72,347 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் ஸ்டிரெயிட் புளூ மற்றும் ராயல் வைன் நிறங்களில் கிடைக்கிறது.

இன்டெலிகோ தொழில்நுட்பம் போக்குவரத்து நெரிசல் சமயங்களில் நீண்ட நேரம் என்ஜின் இயங்கும் சூழலில் என்ஜினை தானாக ஆப் செய்துவிடும். பின் மீண்டும் ஸ்டார்ட் செய்ய திராட்டிள் செய்தாலே போதுமானது. இதுபோன்ற அம்சம் பெற்ற முதல் டிவிஎஸ் வாகனமாக ஜூப்பிட்டர் இருக்கிறது.
புதிய தொழில்நுட்பம் தவிர இந்த ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி இந்த ஸ்கூட்டரில் அதே என்ஜின், மெக்கானிக்கல் அம்சங்கள், உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. டிவிஎஸ் ஜூப்பிட்டர் மாடலில் 110சிசி சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 7.3 பிஹெச்பி பவர், 8.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சிவிடி டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் 220எம்எம் டிஸ்க், பின்புறம் 130எம்எம் டிரம் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 மோட்டார்சைக்கிள் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 மோட்டார்சைக்கிளை பாரஸ்ட் கிரீன் எனும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350 பாரஸ்ட் கிரீன் விலை ரூ. 1.33 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய நிறம் புல்லட் 350 ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இது பிளாக், ஆனிக்ஸ் பிளாக் மற்றும் புல்லட் சில்வர் போன்ற நிற வேரியண்ட்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. புல்லட் இஎஸ் வேரியண்ட்டில் இந்த நிறம் வழங்கப்படவில்லை.

பாரஸ்ட் கிரீன் நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் புல்லட் 350 அதிக பிரபலமான மாடலாக இருந்து வருகிறது. முன்னதாக புல்லட் 350 மாடல் கடந்த ஆண்டு துவக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டு பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டது.
அந்த வகையில் இந்த மாடலில் 346சிசி, சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 19.1 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்கள் விலையை உயர்த்தி உள்ளது. ஜாவா, ஜாவா பார்டி டூ, பெராக் என மூன்று மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
மூன்று மாடல்களின் விலையும் முன்பை விட ரூ. 2,897 உயர்த்தப்பட்டு உள்ளது. முன்னதாக பல்வேறு வாகன உற்பத்தியாளர்களும் தங்களின் வாகன விலையை உயர்த்தி இருக்கின்றன. தற்சமயம் அந்த வரிசையில் ஜாவா நிறுவமும் இணைந்துள்ளது.
உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் காரணமாக கூறி வருகின்றன.

புதிய விலை விவரம்
ஜாவா பார்டி டூ சிங்கில் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1.63 லட்சம்
ஜாவா பார்டி டூ டூயல் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1.72 லட்சம்
ஜாவா 300 சிங்கில் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1.76 லட்சம்
ஜாவா 300 டூயல் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1.85 லட்சம்
ஜாவா பெராக் மாடல் விலை ரூ. 1.97 லட்சம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
சுசுகி நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஹயபுசா மாடல் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சுசுகி நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஹயபுசா சூப்பர் பைக் மாடலுக்கான டீசர் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. டீசரின் படி புதிய மாடல் உலகின் அதிவேக பைக் என்ற பெருமையை தக்கவைத்துக் கொள்ளும் என தெரிகிறது. இந்த பைக் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் சீறிபாயும் காட்சிகள் டீசரில் இடம்பெற்று உள்ளன.
மேலும் இந்த மாடலின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்பீடோமீட்டருக்கு அனலாக் டையல் மற்றும் சிறிய டிஎப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இது இதர ரைடு விவரங்களை வழங்கும்.

ஒட்டுமொத்த வடிவமைப்பு பழைய மாடலை தழுவியே மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், புதிய மாடலில் அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும். தற்சமயம் புதிய மாடலின் என்ஜின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன.
புதிய மாடலில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது. அடுத்த தலைமுறை சுசுகி ஹயபுசா பிப்ரவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் இதன் விற்பனை துவங்குகிறது.
பெனலி நிறுவனத்தின் புதிய 2021 டிஆர்கே 502 மோட்டார்சைக்கிள் விற்பனையகம் வர துவங்கி உள்ளது.
2021 பெனலி டிஆர்கே 502 பிஎஸ்6 அட்வென்ச்சர் டூரிங் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனையகம் வர துவங்கி உள்ளது. விரைவில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் தனது அனைத்து பிஎஸ்4 மாடல்களையும் புதிய பிஎஸ்6 விதிகளுக்கு ஏற்ப பெனலி அப்டேட் செய்ய இருக்கிறது.
புதிய 2021 பெனலி டிஆர்கே 502 பிஎஸ்6 மாடலில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஸ்விட்ச்கியர் அப்டேட் செய்யப்பட்டு பிரீமியம் தோற்றம் பெற்று இருக்கிறது. முன்புறம் பாடி-கலர்டு மட்கார்டு, வித்தியாசமான நக்கிள் கார்டு, புதுவித வடிவமைப்பு கொண்ட ரியர் மிரர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இவைதவிர புதிய மோட்டார்சைக்கிள் தோற்றத்தில் பிஎஸ்4 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. 2021 பெனலி டிஆர்கே 502 மாடலின் பெரும் அப்டேட் ஆக மேம்பட்ட என்ஜின் இருக்கிறது. இந்த மாடலில் 499சிசி ட்வின் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.
இதே என்ஜின் பிஎஸ்4 மாடலில் 47.6 பிஹெச்பி பவர், 45 என்எம் டார்க் செயல்திறன் வழங்கியது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. முந்தைய டிஆர்கே 502 மோட்டார்சைக்கிள் இரண்டு வேரியண்ட்களில் வழங்கப்பட்டது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 ஹிமாலயன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஹிமாலயன் அட்வென்ச்சர் டூரிங் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விரைவில் அப்டேட் செய்ய இருக்கிறது. புதிய 2021 ஹிமாலயன் மாடல் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதிய ஹிமாலயன் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி 2021 ஹிமாலயன் மாடல் Make it Yours கஸ்டமைசேஷன் திட்டத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் 2021 ஹிமாலயன் மாடல் விலை ரூ. 2.51 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விலை கொண்ட மாடலில் பேணியர்கள் காணப்படுகின்றன.

அந்த வகையில் பேணியர்களுக்கான கட்டணமும் சேர்க்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இதனால் புதிய 2021 ஹிமாலயன் மாடல் விலை ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடல் பைன் கிரீன், மிரேஜ் சில்வர் மற்றும் கிரானைடே பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் தற்போதைய மாடல்களை போன்றே லேக் புளூ,, கிராவெல் கிரே மற்றும் ராக் ரெட் நிறங்களிலும் இது கிடைக்கும் என கூறப்படுகிறது.






