என் மலர்
ஆட்டோமொபைல்

டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி
ரூ. 1.07 லட்சம் விலையில் புதிய அபாச்சி மோட்டார்சைக்கிள் அறிமுகம்
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் 2021 அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் முந்தைய வேரியண்டை விட அதிக திறன் கொண்டுள்ளது. இதில் உள்ள என்ஜின் 17.4 பிஹெச்பி பவர் வழங்குகிறது. முந்தைய மாடல் 15.6 பிஹெச்பி பவர் கொண்டிருக்கிறது.
டார்க் இழுவிசையை பொருத்தவரை புது மாடல் 14.73 என்எம் டார்க் வழங்குகிறது. இந்த 159.77 சிசி, சிங்கில் சிலிண்டர், ஆயில் கூல்டு என்ஜினுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை 2021 அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல், எல்இடி டெயில் லைட், மஸ்குலர் பியூவல் டேன்க் வழங்கப்படுகிறது.

தோற்றத்தில் புது மாடலில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 2021 அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இரு சக்கரங்களிலும் பெட்டல் டிஸ்க் மற்றும் பாதுகாப்பிற்கு சிங்கில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது.
புதிய மாடல் ரேசிங் ரெட், நைட் பிளாக் மற்றும் மெட்டாலிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் மாடலின் பின்புறம் சக்கரத்தில் டிரம் பிரேக் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 1.07 லட்சம் என்றும் இருபுற டிஸ்க் பிரேக் மாடல் விலை ரூ. 1.10 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Next Story






