என் மலர்
பைக்
பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பிளாட்டினா 100 இஎஸ் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பிளாட்டினா 100 எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ. 53,920 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது மாடலில் ஸ்ப்ரிங்-இன்-ஸ்ப்ரிங் ரியர் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் புதிய ரியர் வியூ மிரர்கள், மேம்பட்ட டிசைன் மற்றும் டியூப்லெஸ் டையர்களை கொண்டுள்ளது. சிறு மாற்றங்கள் தவிர பஜாஜ் பிளாட்டினா 100 ரக்கட் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய பிளாட்டினா 100 எலெக்ட்ரிக் ஸ்டார்ட் அம்சம் கொண்ட விலை குறைந்த மாடல் ஆகும்.

புதிய பஜாஜ் பிளாட்டினா 100 எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்ட் காக்டெயில் வைன் ரெட் மற்றும் எபோனி பிளாக் மற்றும் சில்வர் டீகல் நிறங்களில் கிடைக்கிறது. பஜாஜ் பிளாட்டினா 100 மாடலில் 102சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 7.79 பிஹெச்பி பவர், 8.3 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் 17 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்களை கொண்டிருக்கிறது. பிரேக்கிங்கிற்கு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.
கவாசகி நிறுவனம் 2021 நின்ஜா 300 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் 2021 நின்ஜா 300 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய நின்ஜா 300 பிஎஸ்6 மாடலின் விலை ரூ. 3.18 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பிஎஸ்4 மாடலை விட ரூ. 20 ஆயிரம் அதிகம் ஆகும்.
இந்தியாவில் கவாசகி நின்ஜா 300 பிஎஸ்4 மாடலின் விற்பனை 2019 டிசம்பர் மாத வாக்கில் நிறுத்தப்பட்டது. புதிய 2021 மாடலில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் என்ஜின் மட்டும் பிஎஸ்6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி 2021 நின்ஜா 300 பிஎஸ்6 மாடலில் 296சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இது 38.4 பிஹெச்பி பவர், 27 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோ-ஷாக், டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் 2021 ஸ்டார் சிட்டி பிளஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
டிவிஎஸ் மோட்டாரம் கம்பெனி 2021 ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2021 ஸ்டார் சிட்டி பிளஸ் மாடல் விலை ரூ. 68,645 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2021 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் ரோட்டோ பெட்டல் டிஸ்க் பிரேக் கொண்டிருக்கிறது.
இத்துடன் இகோ-திரஸ்ட் பியூவல் இன்ஜெக்ஷன் (ET-Fi), யுஎஸ்பி சார்ஜிங் சாக்கெட் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளது. 2021 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் புதிதாக பிளாக் ரெட் நிறத்தில் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பிளாக் புளூ, கிரே பிளாக், ரெட் பிளாக் மற்றும் வைட் பிளாக் நிறங்களிலும் கிடைக்கிறது.

புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் 109 சிசி ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 8.08 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் உள்ள ET Fi தொழில்நுட்பம் 15 சதவீதம் கூடுதல் மைலேஜ் வழங்கும்.
மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 2021 ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் 5 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் இருபுறங்களிலும் டிரம் பிரேக்குகளும், டாப் எண்ட் மாடலின் முன்புறம் ரோட்டோ பெட்டல் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது.
சுசுகி நிறுவனத்தின் 2021 ஹயபுசா சூப்பர்பைக் விரைவில் இந்தியா வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் 2021 ஹயபுசா மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறது. இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கும் நிலையில், இதற்கான தேதியை சுசுகி இன்னும் அறிவிக்கவில்லை.
தற்போது இந்த மாடல் ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் இந்திய வெர்ஷன் சர்வதேச மாடலை போன்றே இருக்கும் என தெரிகிறது. 2021 ஹயபுசா மாடலில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு முழுமையான மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஸ்டைலிங்கை பொருத்தவரை 2021 ஹயபுசா மாடலில் டூ-டோன் நிறங்கள், எல்இடி ஹெட்லைட், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்ப்லிட் ஸ்டைல் சேடில், ட்வின்-சைடு எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. புது மாடலில் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் 1340சிசி, இன்லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ரைடு-பை-வயர் எலெக்டிரானிக் திராட்டிள் சிஸ்டம், ரிவைஸ்டு இன்டேக் மற்றும் எக்சாஸ்ட் மெக்கானிசம் கொண்டுள்ளது. இந்த சூப்பர்பைக் லிட்டருக்கு 14.9 கிலோமீட்டர் வரை செல்லும் என சுசுகி தெரிவித்து இருக்கிறது.
ஒகினாவா நிறுவனத்தின் புதிய ஒகி100 எலெக்ட்ரிக் பைக் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் தனது முதல் எலெக்டிர்க் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசரின் படி புது மோட்டார்சைக்கிள் ஒகி100 எனும் பெயரில் அறிமுகமாகும் என தெரியவந்துள்ளது. மேலும் இது விரைவில் அறிமுகமாகிறது.
முன்னதாக இந்த நிறுவனம் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான ப்ரோடோடைப் வெர்ஷனை 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. பின் கடந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் இந்த மாடலை அறிமுகம் செய்ய ஒகினாவா திட்டமிட்டது. எனினும், இது நடைபெறவில்லை. தற்சமயம் இந்த மாடலை விரைவில் வெளியிட இருக்கிறது.

புதிய ஒகினாவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் விலை ரூ. 1 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. இது ரெவோல்ட் ஆர்வி400 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இந்த மாடல் முழுக்க இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் என ஒகினாவா தெரிவித்து உள்ளது. இதற்கான பாகங்கள் 100 சதவீதம் உள்நாட்டில் இருந்து பயன்படுத்தப்படுகிறது.
ஒகினாவா ஒகி100 மாடல் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த மாடலில் முழுக்க எல்இடி லைட்டிங் கொண்டிருக்கும். இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, டெலிஸ்கோபிக் போர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன், இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்படலாம்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இரண்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் ரூ. 16.75 லட்சம் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டன.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் ஆர் நைன் டி மற்றும் ஆர் நைன் டி ஸ்கிராம்ப்லர் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. ஆர் நைன் டி மாடல் விலை ரூ. 18,50,000 என்றும் ஆர் நைன் டி ஸ்கிராம்ப்லர் மாடல் விலை ரூ. 16,75,000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
இரு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இரு மாடல்களும் சிபியு முறையில் இந்திய சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட இருக்கின்றன. ஆர் நைன் டி கிளாசிக் ரோட்ஸ்டர், ஆர் நைன் டி ஸ்கிராம்ப்லர் பெயருக்கு ஏற்றார்போல் ஸ்கிராம்ப்லர் ரக மாடல் ஆகும்.

இது கிளாசிக் வடிவமைப்பு, எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல் மற்றும் புதிய வட்ட வடிவ இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்டுள்ளது. மெக்கானிக்கல் அம்சங்கள் இரு மாடல்களிலும் ஒரே மாதிரி வழங்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி 2021 பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி மற்றும் ஆர் நைன்டி ஸ்கிராம்ப்லர் மாடல்களில் 1170சிசி, ஏர் மற்றும் ஆயில் கூல்டு, 2 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 107.2 பிஹெச்பி பவர், 116 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.5 நொடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டுள்ளது.
இரு மாடல்களும் ரெயின் மற்றும் ரோட் என இருவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளன. பாதுகாப்பிறஅகு ஆட்டோமேடிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஏபிஎஸ் ப்ரோ, டைனமிக் பிரேக் கண்ட்ரோல், புதிய சஸ்பென்ஷன் ஸ்டிரட் மற்றும் டிராவல் டிபென்டென்ட் டேம்பிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் இரண்டு புதிய அப்ரிலியா மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது.
அப்ரிலியா நிறுவனம் மிடில்-வெய்ட் மோட்டார்சைக்கிள் பிரிவில் இரண்டு புதிய மாடல்களை உருவாக்கி உள்ளது. அவை அப்ரிலியா ஆர்எஸ்660 மற்றும் டியோனா 660 ஆகும். இந்த இரண்டு மாடல்களும் அவற்றின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் காரணமாக சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவற்றின் கவர்ச்சிகர அம்சங்கள் பற்றிய ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. அப்ரிலியா நிறுவனம் ஆர்எஸ்660 மற்றும் டியோனா 660 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளது.

இந்த இரண்டு மாடல்கள் வெளியிடுவதற்கு முன், தற்சமயம் இவற்றுக்கான முன்பதிவு துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு மாடல்களும் இந்தியாவில் இரண்டாவது காலாண்டு வாக்கில் இறக்குமதி செய்யப்படுகிறது. சிபியு முறையில் கொண்டுவரப்பட இருப்பதால், இவற்றின் விலை அதிகமாகவே இருக்கும்.
அப்ரிலியா ஆர்எஸ்660 மற்றும் டியோனோ 660 ஆகிய இரு மாடல்களிலும் 660சிசி பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இரு மாடல்களும் வெவ்வேறு செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஸ்டிரீட் ட்வின் கோல்டு லைன் மற்றும் மேம்பட்ட 2021 கிளாசிக் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்டிரீட் ட்வின் கோல்டு லைன் மாடல் ஸ்டான்டர்டு ஸ்டிரீட் ட்வின் வேரியண்டை தழுவி உருவாகி இருக்கிறது.
புதிய கோல்டு லைன் மாடலின் பக்கவாட்டு மற்றும் பியூவல் டேன்க் மீது மேட் சபையர் பிளாக் பெயின்ட் மற்றும் கோல்டு ஸ்டிரைப் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் கோல்டு ரிம் டேப் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடல் கிராபைட் பினிஷன் செய்யப்பட்டு இருக்கிறது.

ஸ்டிரீட் ட்வின் கோல்டு லைன் மொத்தத்தில் 1000 யூனிட்களே உற்பத்தி செய்யப்படும் என டிரையம்ப் அறிவித்து இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஒவ்வொரு யூனிட் உடன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் சான்று வழங்கப்படுகிறது. இவைதவிர ஸ்டிரீட் ட்வின் கோல்டு லைன் தோற்றத்தில் ஸ்டான்டர்டு ஸ்டிரீட் ட்வின் மாடல் போன்றே காட்சியளிக்கிறது.
புதிய லிமிடெட் எடிஷன் மாடல் ஜூன் மாதம் முதல் சர்வதேச சந்தையில் கிடைக்கும். இந்தியாவிலும் ஸ்டிரீட் ட்வின் கோல்டு லைன் குறைந்த எண்ணிக்கையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கவாசகி நிறுவனத்தின் நின்ஜா 300 பிஎஸ்6 மாடல் முன்பதிவு துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கவாசகி நிறுவன விற்பனையாளர்கள் பிஎஸ்6 நின்ஜா 300 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கின்றனர். புதிய மோட்டார்சைக்கிள் இருவித நிறங்களில் கிடைக்கும் என கவாசகி தெரிவித்து உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட லைம் கிரீன் தவிர, லைம் கிரீன்/எபோனி மற்றும் பிளாக் நிறங்களில் புதிய பிஎஸ்6 நின்ஜா மாடல் கிடைக்கிறது.
புதிய மாடல் தோற்றத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலிலும் ட்வின்-பாட் ஹெட்லைட், மஸ்குலர் பியூவல் டேன்க், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட், குரோம் ஹீட்ஷீல்டு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

கவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோ-ஷாக், டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் மெக்கானிக்கல் அம்சங்கள் பற்றி கவாசகி இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.
எனினும், புதிய மாடலில் பிஎஸ்6 ரக 296சிசி, பேரலெல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் செயல்திறன் முந்தைய மாடலில் இருந்ததை விட வேறுபடும் என கூறப்படுகிறது. பிஎஸ்4 மாடலில் இந்த என்ஜின் 38.4 பிஹெச்பி பவர், 27 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
புதிய மாடலின் விலையும் சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். இந்திய சந்தையில் பிஎஸ்4 மாடல் விலை ரூ. 2.98 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஆர்18 கிளாசிக் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஆர்18 கிளாசிக் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ. 24 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய ஆர்18 விலையை விட ரூ. 1.5 லட்சம் அதிகம் ஆகும்.
புதிய பிஎம்டபிள்யூ மாடலில் புல் எல்இடி ஹெட்லைட், பெரிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் சேடில்பேக் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடலில் உள்ள அக்சஸரீக்கள் எளிதில் கழற்றி மாட்டிக் கொள்ளும் வகையில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஆர்18 கிளாசிக் மாடலில் 1802சிசி, பாக்சர் ட்வின், ஏர்/ஆயில் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 89.9 பிஹெச்பி பவர், 158 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் ஹார்டுவேர் உள்ளிட்டவை இரு மாடல்களிலும் ஒரே மாதிரி வழங்கப்பட்டு உள்ளன.
பிஎம்டபிள்யூ ஆர்18 கிளாசிக் மாடல் எலெக்டிரானிக் குரூயிஸ் கண்ட்ரோல், மூன்று ரைடு மோட்கள், என்ஜின் டிராக் டார்க் கண்ட்ரோல், கீலெஸ் ஸ்டார்ட் மற்றும் ரிவர்ஸ் கியர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 ஹிமாலயன் மாடல் வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 ஹிமாலயன் மாடல் வினியோகம் இந்தியாவில் துவங்கியது. புதிய மோட்டார்சைக்கிள் துவக்க விலை ரூ. 2,03,314 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடல் துவக்க விலை ரூ. 1,91,401 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
காஸ்மெடிக் அடிப்படையில் 2021 ஹிமாலயன் மாடல் பைன் கிரீன், கிரானைட் பிளாக் (டூயல் டோன் மேட் மற்றும் கிளாஸ் பிளாக்) மற்றும் மிரேஜ் சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் கிராவல் கிரே, ராக் ரெட் மற்றும் லேக் புளூ நிறங்களிலும் கிடைக்கிறது.

2021 ஹிமாலயன் மாடலில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ட்ரிப்பர் நேவிகேஷன் அம்சம் கொண்டிருக்கிறது. புதிய டன்-பை-டன் நேவிகேஷன் பாட் மோட்டார்சைக்கிளின் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் அருகில் பொருத்தப்பட்டு இருக்கிறது.
2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடலில் 411சிசி சிங்கில் சிலிண்டர் SOHC ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 24.3 பிஹெச்பி பவர், 32 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் இரு மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை உயர்த்தி உள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை உயர்த்தி உள்ளது. அதன்படி இன்டர்செப்டார் 650 மாடல் விலை ரூ. 2,69,765 என்றும் கான்டினென்டல் ஜிடி 650 விலை ரூ. 2,85,680 என்றும் மாறி இருக்கின்றன.
விலை தவிர இரு மாடல்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இரு மாடல்களிலும் 648சிசி, பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 47 பிஹெச்பி பவர், 52 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் ராயல் என்பீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மாடல்களை அலாய் வீல்களுடன் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபற்றி ராயல் என்பீல்டு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.






