என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
புதிய லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்த டுகாட்டி
Byமாலை மலர்12 March 2021 8:52 AM GMT (Updated: 12 March 2021 8:52 AM GMT)
டுகாட்டி நிறுவனம் ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் பாஸ்ட்ஹவுஸ் லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
டுகாட்டி நிறுவனம் 2021 ஸ்கிராம்ப்ளர் மாடல்களை ஜனவரி மாத வாக்கில் அறிவித்தது. தற்போது ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் பாஸ்ட்ஹவுஸ் லிமிடெட் எடிஷன் மாடலை ஐரோப்பியா மற்றும் அமெரிக்க சந்தைகளில் அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய லிமிடெட் எடிஷன் மாடல் ஜார்டன் கிராஹம் உருவாக்கிய மின்ட் 400 ரேஸ்பைக்கை தழுவி வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் பாஸ்ட்ஹவுஸ் மாடலில் மின்ட் 400 மாடலில் உள்ளதை போன்றே 860எம்எம் உயர சீட், ஆன்ட-ஸ்லிப் கவர், சிவப்பு நிறத்திலான டிரெலிஸ் பிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் பாஸ்ட்ஹவுஸ் மாடலில் 803சிசி, எல்-ட்வின் ஏர்-கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இது 74 பிஎஸ் பவர், 66.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது.
சஸ்பென்ஷனிற்கு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய யுஎஸ்டி போர்க், கியாபா மோனோஷாக் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் 330 எம்எம் டிஸ்க், பின்புறம் 245 எம்எம் டிஸ்க் மற்றும் போஷ் கார்னெரிங் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது.
Next Story
×