என் மலர்
பைக்
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது.
ஹீரோ மற்றும் யமஹா நிறுவனங்கள் வரிசையில், ராயல் என்பீல்டு நிறுவனம் தனது கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் விலையை உயர்த்தி இருக்கிறது. அதன்படி கிளாசிக் 350 விலை ரூ. 5,992 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 புதிய விலை பட்டியல்
ஸ்டான்டர்டு வேரியண்ட் புதிய விலை ரூ. 1,72,466 (முன்பை விட ரூ. 5231 உயர்வு)
கிளாசிக் பிளாக் புதிய விலை ரூ. 1,80,880 (முன்பை விட ரூ. 5475 உயர்வு)
கன்மெட்டல் கிரே ஸ்போக் வீல் புதிய விலை ரூ. 1,82,825 (முன்பை விட ரூ. 5531 உயர்வு)
கன்மெட்டல் கிரே அலாய் வீல் புதிய விலை ரூ. 1,95,253 (முன்பை விட ரூ. 5893 உயர்வு)
சிக்னல்ஸ் புதிய விலை ரூ. 1,91,693 (முன்பை விட ரூ. 5791 உயர்வு)
மெட்டாலோ சில்வர், ஆரஞ்சு எம்பெர் புதிய விலை ரூ. 1,95,253 (முன்பை விட ரூ. 5893 உயர்வு)
மேட் மற்றும் குரோம் புதிய விலை ரூ. 1,98,600 (முன்பை விட ரூ. 5992 உயர்வு)
இந்தியாவில் கிளாசிக் 350 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. எனினும், ராயல் என்பீல்டு இந்த மாடலை அப்டேட் செய்ய இருக்கிறது. புதிய கிளாசிக் 350 ஜெ பிளாட்பார்மில் உருவாகிறது. இதே பிளாட்பார்ம் Meteor 350 மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆக்டிவா மற்றும் எஸ்பி125 மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.
இந்திய சந்தையில் பல்வேறு இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வாகன விலையை உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியாவும் இணைந்துள்ளது. விலை உயர்வின் படி ஹோண்டா ஆக்டிவா 6ஜி எஸ்டிடி மாடல் ரூ. 67,843 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 71,089 என மாறி இருக்கிறது.
ஹோண்டா ஆக்டிவா 125 டிரம் பிரேக் மாடல் விலை ரூ. 71,674 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 78,797 என மாறி இருக்கிறது. ஹோண்டா டியோ எஸ்டிடி மாடல் துவக்க விலை ரூ. 63,273 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 69,171 என மாறி இருக்கிறது. கிரேசியா மாடல் துவக்க விலை ரூ. 75,859 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 84,185 ஆகும்.

ஹோண்டா சிடி டிரீம் 110 மாடல் ரூ. 64,421 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 65,421 என்றும் லிவோ மாடல் ரூ. 69,971, லிவோ டிஸ்க் மாடல் ரூ. 74,171 என மாறி இருக்கிறது. ஹோண்டா சிபி ஷைன் விலை ரூ. 71,550 என்றும் டிஸ்க் மாடல் விலை ரூ. 76,346 என மாறி இருக்கிறது. ஹோண்டா எஸ்பி 125 டிரம் மாடல் ரூ. 77,145 என்றும் எஸ்பி 125 டிஸ்க் மாடல் ரூ. 81,441 என மாறி இருக்கிறது.
ஹோண்டா யூனிகான் மாடல் ரூ. 97,356, எக்ஸ் பிளேடு எஸ்டிடி ரூ. 1,09,264 என்றும் எக்ஸ் பிளேடு டிஎல்எக்ஸ் ரூ. 1,13,654 என்றும் ஹார்னெட் 2.0 மாடல் ரூ. 1,29,608 என்றும் ஹார்னெட் 2.0 ரெப்சால் எடிஷன் ரூ. 1,31,608 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா SXR 125 ஸ்கூட்டரின் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பியாஜியோ இந்தியா நிறுவனம் தனது SXR 125 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. அப்ரிலியா SXR 125 முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் ஆகும். முன்பதிவு ஆன்லைன் மற்றும் அப்ரிலியா விற்பனையகங்களில் நடைபெறுகிறது.

அப்ரிலியா SXR 125 மாடலில் ட்வின்-பாட் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில்லைட், புல் டிஜிட்டல் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ரியர் சஸ்பென்ஷன், முன்புறம் டிஸ்க் பிரேக் மற்றும் சிபிஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை அப்ரிலியா SXR 125 மாடலில் 125சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. மூன்று வால்வுகள் மற்றும் பியூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட இந்த என்ஜின் 9.4 பிஹெச்பி பவர், 9.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
டிரையம்ப் நிறுவனம் 2021 போன்வில் டி120 மற்றும் டி120 பிளாக் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
டிரையம்ப் நிறுவனம் இந்திய சந்தையில் 2021 போன்வில் டி120 மற்றும் டி120 பிளாக் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 10.65 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
புதிய மாடல்களின் ஒட்டுமொத்த தோற்றத்தில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனினும் புது மாடலில் வட்ட வடிவ ஹெட்லைட், ரியர்வியூ மிரர்கள், ட்வின் பாட் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வட்ட வடிவ பியூவல் டேன்க், இருபுறங்களிலும் ரப்பர் பேட்கள், ஒற்றை சேடில், ட்வின்-சைடு எக்சாஸ்ட் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.

டி120 பிளாக் மாடலில் என்ஜின் கவர்கள், ரியர்-வியூ மிரர் ஹவுசிங், ரிம், எக்சாஸ்ட் கேனிஸ்டர் உள்ளிட்டவைகளில் பிளாக் பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் புதிதாக டேன்க் பேட்ஜ்கள், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் புது லே-அவுட், மேம்பட்ட ஸ்விட்ச்-கியர் வழங்கப்பட்டு உள்ளது.
இரு மாடல்களிலும் 1200சிசி, ட்வின்-சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இது 78.9 பிஹெச்பி பவர், 105 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ரோடு, ரெயின் என இருவித ரைடிங் மோட்கள், ஸ்விட்ச் செய்யக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ், குரூயிஸ் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.
புதிய டிரையம்ப் போன்வில் டி120 மற்றும் டி120 பிளாக் மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இவற்றின் வினியோகம் அடுத்த சில வாரங்களில் துவங்கும் என தெரிகிறது.
டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் வாகனங்கள் எண்ணிக்கையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து உள்ளது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் மார்ச் 2021 மாத வாகன ஏற்றுமதியில் 1 லட்சம் யூனிட்களை எட்டியதாக தெரிவித்து உள்ளது. உலகம் முழுக்க மோட்டார்சைக்கிள் விற்பனை அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

`பல்வேறு பகுதிகளில் வாகன விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வந்ததே இதற்கு காரணம். தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால மொபிலிட்டியில் தொடர் முதலீடு செய்தல் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும்' என டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேனு தெரிவித்தார்.
டிவிஎஸ் நிறுவனம் தனது வாகனங்களை ஆப்ரிக்கா, தென் கிழக்கு ஆசியா, இந்திய துணை கண்டம், மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்கா பகுதிகளை சேர்ந்த 60-க்கும் அதிக நாடுகளில் தனது வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பகுதிகளில் மேலும் சில சந்தைகளில் களமிறங்க டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் 2021 CB650R மற்றும் CBR650R மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஜப்பானை சேர்ந்த இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹோண்டா இந்திய சந்தையில் இரண்டு பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. ஹோண்டா CB650R மற்றும் CBR650R மாடல்கள் இந்திய சந்தையில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றன.
2021 ஹோண்டா CB650R மற்றும் 2021 CBR650R நியோ கபே ரேசர் மாடல்கள் விலை முறையே ரூ. 8.88 லட்சம் மற்றும் ரூ. 8.67 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இரு மோட்டார்சைக்கிள் மாடல்களும் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 2021 ஹோண்டா CB650R மாடல் கேண்டி குரோம்ஸ்பியர் ரெட் மற்றும் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் நிறங்களிலும் 2021 ஹோண்டா CBR650R மாடல் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் மற்றும் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் நிறங்களிலும் கிடைக்கிறது.
புதிய மிடில்-வெயிட் மோட்டார்சைக்கிள் மாடல்களில் மேம்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 4 சிலிண்டர் 649சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 86 பிஹெச்பி பவர், 57.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஸ்டார் சிட்டி பிளஸ் மோட்டார்சைக்கிள் புதிய நிறத்தில் கிடைக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ஸ்டார் சிட்டி பிளஸ் மோட்டார்சைக்கிள் மாடலை புதிதாக பியல் புளூ சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. புதிய டூயல் டோன் நிறம் டிரம் மற்றும் டிஸ்க் என இரு வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. டூயல் டோன் பினிஷ் ஹெட்லைட் கவுல், பியூவல் டேன்க், பக்கவாட்டு மற்றும் பின்புற பேனல்களில் காட்சியளிக்கிறது.
புதிய நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி இந்த மாடலில் ET-Fi தொழில்நுட்பம், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் யுஎஸ்பி மொபைல் சார்ஜர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் 109.7சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 8.08 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் மாடல் விலை ரூ. 65,865 எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
இந்திய சந்தையில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் மாடல் ஹீரோ பேஷன் ப்ரோ, பஜாஜ் பிளாட்டினா 110 மற்றும் ஹோண்டா சிடி 110 டிரீம் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
மோட்டார்சைக்கிள்களில் என்ஜின் கோளாறு காரணமாக ரீகால் செய்யப்படுவதாக டுகாட்டி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
டுகாட்டி நிறுவனம் தனது மல்டிஸ்டிராடா வி4 மோட்டார்சைக்கிளை அமெரக்காவில் ரீகால் செய்கிறது. வி4 மோட்டாரில் கோளாறு கண்டறியப்பட்டதே ரீகால் செய்வதற்கான காரணம் ஆகும். வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட 60 யூனிட்கள் ரீகால் செய்யப்படுகின்றன.

வி4 மோட்டாரின் வால்வ் கைடுகளில் உள்ள சிறு குறைபாடுகள் அதன் செயல்திறனை குறைத்து இறுதியில் செயலற்றதாக மாற்றிவிடும் என டுகாட்டி தெரிவித்து இருக்கிறது. உதிரிபாகங்களை வழங்கிய இரு நிறுவனங்கள் செய்த தவறால் இந்த கோளாறு ஏற்பட்டு இருக்கிறது.
பாதிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களில் என்ஜின் மாற்றப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு திரும்ப வழங்கப்படும். என்ஜின் முழுமையாக மாற்றிக் கொடுக்கும் வரை புதிய மல்டிஸ்டிராடா வி4 விற்பனையை நிறுத்த டுகாட்டி உத்தரவிட்டு இருக்கிறது.
கவாசகி நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை இந்தியாவில் மாற்றப்பட இருக்கிறது.
ஜப்பான் நாட்டை பூர்விகமாக கொண்டு இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தியாளரான கவாசகி இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக மீண்டும் அறிவித்து இருக்கிறது. அதன்படி கவாசகி மோட்டார்சைக்கிள் மாடல்கள் புதிய விலை ஏப்ரல் 1, 2021 முதல் அமலாகிறது.
மார்ச் 31, 2021 அல்லது அதற்கும் முன் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளுக்கு தற்போதைய விலையே பொருந்தும். அந்த வகையில், ஏப்ரல் 1, 2021 மற்றும் அதன் பின் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளுக்கு வாடிக்கையாளர்கள் புதிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

நின்ஜா 300 மற்றும் ZX-10R மாடல்கள் தவிர கவாசகி நிறுவனத்தின் அனைத்து மாடல்கள் விலலையும் உயர்த்தப்படுவதாக கவாசகி தெரிவித்து உள்ளது. மற்ற மாடல்களான KX, KLX மற்றும் Z H2 SE உள்ளிட்டவையும் தற்போதைய விலை உயர்வில் பாதிக்கப்படவில்லை.
விலை உயர்வுக்கான காரணத்தை கவாசகி இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கான காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. கவாசகி மட்டுமின்றி பல்வேறு முன்னணி நிறுவனங்களும் விலை உயர்வை அறிவித்து இருக்கின்றன.
ஐஐடி டெல்லி துவங்கி இருக்கும் கெலியோஸ் மொபிலிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
ஐஐடி டெல்லியின் கெலியோஸ் மொபிலிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஹோப் எனும் பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கெலியோஸ் ஹோப் ஸ்கூட்டர் துவக்க விலை ரூ. 46,999, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய ஹோப் ஸ்கூட்டர் பயன்படுத்தினால் கிலோமீட்டருக்கு 20 பைசா மட்டுமே செலவாகும் என கெலியோஸ் மொபிலிட்டி தெரிவித்து உள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனை பயன்படுத்த ஓட்டுனர் உரிமம் அல்லது பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
கெலியோஸ் ஹோப் ஸ்கூட்டர் 250 வாட் ஹப்-மவுண்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் லி-அயன் பேட்டரி கொண்டுள்ளது. இத்துடன் இருவித பேட்டரியை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதன் குறைந்த திறன் கொண்ட பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 கிலோமீட்டர் வரை செல்லும், அதிக திறனுள்ள பேட்டரி அதிகபட்சம் 75 கிலோமீட்டர் செல்லும்.
டிரையம்ப் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் பிராஜக்ட் டிஇ-1 கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. இது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும். இது டிரையம்ப், வில்லியம்ஸ் அட்வான்ஸ்டு என்ஜினியரிங் மற்றும் மேலும் இரு ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து உருவாகி இருக்கிறது.
டிரையம்ப் நிறுவனம் சேசிஸ் மற்றும் பாதுகாப்பு முறைகளையும், வில்லியம்ஸ் அட்வான்ஸ்டு என்ஜினியரிங் பேட்டரி டிசைன், பேட்டரி பயன்பாட்டு முறை மற்றும் வெஹிகில் கண்ட்ரோல் யூனிட் உள்ளிட்டவைகளை உருவாக்குகிறது. இதன் இன்டெக்ரல் பவர்டிரெயின் நிறுவனம் எலெக்ட்ரிக் மோட்டார், சிலிகான் கார்பைடு இன்வெர்டர் உருவாக்கிறது.

பிரேம் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் தவிர இந்த மோட்டார்சைக்கிள் பற்றி வேறு எந்த தகவலும் இல்லை. இதற்கான சோதனை இந்த ஆண்டு இறுதியில் துவங்குகிறது. 2022 ஆண்டு இறுதியில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படலாம்.
முன்னதாக டிரையம்ப் நிறுவனம் தனது டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிளை ஏப்ரல் 6 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எம் 1000 ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் புத்தம் புது எம் 1000 ஆர்ஆர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது மோட்டார்சைக்கிள் ஸ்டான்டர்டு மற்றும் காம்படீஷன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை இந்தியாவுக்கு சிபியு முறையில் இறக்குமதி செய்யப்பட இருக்கின்றன.
புதிய பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர் ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ. 42 லட்சம், காம்படீஷன் வேரியண்ட் விலை ரூ. 45 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

புதிய எம் 1000 ஆர்ஆர் இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனத்தின் முதல் எம் சீரிஸ் மாடல் இது ஆகும். இது லைட் வைட், ரேசிங் புளூ மெட்டாலிக் மற்றும் ரேசிங் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இதன் ஏரோடைனமிக் அதிகளவு மேம்படுத்தப்பட்டு க்ளியர்-கோட் கார்பன் எம் விங்லெட்கள் மற்றும் பெரிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.
இதில் உள்ள 999சிசி, வாட்டர்-கூல்டு, இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் 209 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.1 நொடிகளில் எட்டிவிடும். புதிய எம் 1000 ஆர்ஆர் மாடலில் ரெயின், ரோட், டைனமிக், ரேஸ் மற்றும் ரேஸ் ப்ரோ போன்ற ரைடிங் மோட்கள் உள்ளன.






