என் மலர்tooltip icon

    பைக்

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஸ்டார் சிட்டி பிளஸ் மோட்டார்சைக்கிள் புதிய நிறத்தில் கிடைக்கிறது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ஸ்டார் சிட்டி பிளஸ் மோட்டார்சைக்கிள் மாடலை புதிதாக பியல் புளூ சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. புதிய டூயல் டோன் நிறம் டிரம் மற்றும் டிஸ்க் என இரு வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. டூயல் டோன் பினிஷ் ஹெட்லைட் கவுல், பியூவல் டேன்க், பக்கவாட்டு மற்றும் பின்புற பேனல்களில் காட்சியளிக்கிறது. 

    புதிய நிறம்  தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி இந்த மாடலில் ET-Fi தொழில்நுட்பம், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் யுஎஸ்பி மொபைல் சார்ஜர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ்

    டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் 109.7சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 8.08 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் மாடல் விலை ரூ. 65,865 எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    இந்திய சந்தையில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் மாடல் ஹீரோ பேஷன் ப்ரோ, பஜாஜ் பிளாட்டினா 110 மற்றும் ஹோண்டா சிடி 110 டிரீம் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    மோட்டார்சைக்கிள்களில் என்ஜின் கோளாறு காரணமாக ரீகால் செய்யப்படுவதாக டுகாட்டி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.


    டுகாட்டி நிறுவனம் தனது மல்டிஸ்டிராடா வி4 மோட்டார்சைக்கிளை அமெரக்காவில் ரீகால் செய்கிறது. வி4 மோட்டாரில் கோளாறு கண்டறியப்பட்டதே ரீகால் செய்வதற்கான காரணம் ஆகும். வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட 60 யூனிட்கள் ரீகால் செய்யப்படுகின்றன.


     டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4
    வி4 மோட்டாரின் வால்வ் கைடுகளில் உள்ள சிறு குறைபாடுகள் அதன் செயல்திறனை குறைத்து இறுதியில் செயலற்றதாக மாற்றிவிடும் என டுகாட்டி தெரிவித்து இருக்கிறது. உதிரிபாகங்களை வழங்கிய இரு நிறுவனங்கள் செய்த தவறால் இந்த கோளாறு ஏற்பட்டு இருக்கிறது.

    பாதிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களில் என்ஜின் மாற்றப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு திரும்ப வழங்கப்படும். என்ஜின் முழுமையாக மாற்றிக் கொடுக்கும் வரை புதிய மல்டிஸ்டிராடா வி4 விற்பனையை நிறுத்த டுகாட்டி உத்தரவிட்டு இருக்கிறது.
    கவாசகி நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை இந்தியாவில் மாற்றப்பட இருக்கிறது.


    ஜப்பான் நாட்டை பூர்விகமாக கொண்டு இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தியாளரான கவாசகி இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக மீண்டும் அறிவித்து இருக்கிறது. அதன்படி கவாசகி மோட்டார்சைக்கிள் மாடல்கள் புதிய விலை ஏப்ரல் 1, 2021 முதல் அமலாகிறது.

    மார்ச் 31, 2021 அல்லது அதற்கும் முன் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளுக்கு தற்போதைய விலையே பொருந்தும். அந்த வகையில், ஏப்ரல் 1, 2021 மற்றும் அதன் பின் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளுக்கு வாடிக்கையாளர்கள் புதிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். 

     கவாசகி மோட்டார்சைக்கிள்

    நின்ஜா 300 மற்றும் ZX-10R மாடல்கள் தவிர கவாசகி நிறுவனத்தின் அனைத்து மாடல்கள் விலலையும் உயர்த்தப்படுவதாக கவாசகி தெரிவித்து உள்ளது. மற்ற மாடல்களான KX, KLX மற்றும் Z H2 SE உள்ளிட்டவையும் தற்போதைய விலை உயர்வில் பாதிக்கப்படவில்லை.

    விலை உயர்வுக்கான காரணத்தை கவாசகி இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கான காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. கவாசகி மட்டுமின்றி பல்வேறு முன்னணி நிறுவனங்களும் விலை உயர்வை அறிவித்து இருக்கின்றன.

    ஐஐடி டெல்லி துவங்கி இருக்கும் கெலியோஸ் மொபிலிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.


    ஐஐடி டெல்லியின் கெலியோஸ் மொபிலிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஹோப் எனும் பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கெலியோஸ் ஹோப் ஸ்கூட்டர் துவக்க விலை ரூ. 46,999, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     கெலியோஸ் ஹோப்

    புதிய ஹோப் ஸ்கூட்டர் பயன்படுத்தினால் கிலோமீட்டருக்கு 20 பைசா மட்டுமே செலவாகும் என கெலியோஸ் மொபிலிட்டி தெரிவித்து உள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனை பயன்படுத்த ஓட்டுனர் உரிமம் அல்லது பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    கெலியோஸ் ஹோப் ஸ்கூட்டர் 250 வாட் ஹப்-மவுண்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் லி-அயன் பேட்டரி கொண்டுள்ளது. இத்துடன் இருவித பேட்டரியை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதன் குறைந்த திறன் கொண்ட பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 கிலோமீட்டர் வரை செல்லும், அதிக திறனுள்ள பேட்டரி அதிகபட்சம் 75 கிலோமீட்டர் செல்லும்.

    டிரையம்ப் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது.

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் பிராஜக்ட் டிஇ-1 கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. இது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும். இது டிரையம்ப், வில்லியம்ஸ் அட்வான்ஸ்டு என்ஜினியரிங் மற்றும் மேலும் இரு ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து உருவாகி இருக்கிறது.

    டிரையம்ப் நிறுவனம் சேசிஸ் மற்றும் பாதுகாப்பு முறைகளையும், வில்லியம்ஸ் அட்வான்ஸ்டு என்ஜினியரிங் பேட்டரி டிசைன், பேட்டரி பயன்பாட்டு முறை மற்றும் வெஹிகில் கண்ட்ரோல் யூனிட் உள்ளிட்டவைகளை உருவாக்குகிறது. இதன் இன்டெக்ரல் பவர்டிரெயின் நிறுவனம் எலெக்ட்ரிக் மோட்டார், சிலிகான் கார்பைடு இன்வெர்டர் உருவாக்கிறது.

    டிரையம்ப் பிராஜக்ட் டிஇ 1

    பிரேம் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் தவிர இந்த மோட்டார்சைக்கிள் பற்றி வேறு எந்த தகவலும் இல்லை. இதற்கான சோதனை இந்த ஆண்டு இறுதியில் துவங்குகிறது. 2022 ஆண்டு இறுதியில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படலாம்.

    முன்னதாக டிரையம்ப் நிறுவனம் தனது டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிளை ஏப்ரல் 6 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எம் 1000 ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் புத்தம் புது எம் 1000 ஆர்ஆர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது மோட்டார்சைக்கிள் ஸ்டான்டர்டு மற்றும் காம்படீஷன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை இந்தியாவுக்கு சிபியு முறையில் இறக்குமதி செய்யப்பட இருக்கின்றன.

    புதிய பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர் ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ. 42 லட்சம், காம்படீஷன் வேரியண்ட் விலை ரூ. 45 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர்

    புதிய எம் 1000 ஆர்ஆர் இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனத்தின் முதல் எம்  சீரிஸ் மாடல் இது ஆகும். இது லைட் வைட், ரேசிங் புளூ மெட்டாலிக் மற்றும் ரேசிங் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இதன் ஏரோடைனமிக் அதிகளவு மேம்படுத்தப்பட்டு க்ளியர்-கோட் கார்பன் எம் விங்லெட்கள் மற்றும் பெரிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் உள்ள 999சிசி, வாட்டர்-கூல்டு, இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் 209 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.1 நொடிகளில் எட்டிவிடும். புதிய எம் 1000 ஆர்ஆர் மாடலில் ரெயின், ரோட், டைனமிக், ரேஸ் மற்றும் ரேஸ் ப்ரோ போன்ற ரைடிங் மோட்கள் உள்ளன. 
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டெஸ்டினி 125 பிளாட்டினம் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டெஸ்டினி 125 பிளாட்டினம் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 125சிசி ஸ்கூட்டர் மாடல் விலை ரூ. 72,050 ஆகும். ஹீரோ டெஸ்டினி 125 ஸ்டான்டர்டு மாடல் விலை ரூ. 66,960 ஆகும். 

    புதிய ஹீரோ டெஸ்டினி 125 பிளாட்டினம் மேட் பிளாக் நிறம் மற்றும் பிரவுன் நிற பேனல்களை கொண்டுள்ளது. இத்துடன் குரோம் ஹேன்டில்பார் முனை, குரோம் மிரர்கள், குரோம் மப்ளர் ப்ரோடக்டர், குரோம் பென்டர் ஸ்டிரைப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    மற்ற அம்சங்கள் மற்றும் மெக்கானிக்கல் உபகரணங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் பிளாட்டினம் எடிஷன் மாடலில் 125சிசி பிஎஸ்6 ரக பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார் மற்றும் எக்ஸ்-சென்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9 பிஹெச்பி பவர், 10.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இவற்றுடன் ஐ3எஸ் (ஐடில் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம்) தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்கூட்டரின் மைலேஜ் திறனை மேம்படுத்தும். இத்துடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பக்கவாட்டில் சைடு ஸ்டான்டு மற்றும் சர்வீஸ் டியூ ரிமைன்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

    கவாசகி நிறுவனத்தின் புதிய பிஎஸ்6 நின்ஜா 300 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு அமேசான் தளத்தில் துவங்கி இருக்கிறது.


    கவாசகி இந்தியா நிறுவனம் தனது நின்ஜா 300 பிஎஸ்6 மாடலுக்கான முன்பதிவு அமேசான் தளத்தில் நடைபெறுவதாக அறிவித்து இருக்கிறது. புதிய நின்ஜா 300 மாடலை வாங்க விரும்புவோர் அமேசான் தளத்தில் ரூ. 3 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். 

    இந்தியாவில் கவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 மாடல் விலை ரூ. 3.18 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது பிஎஸ்4 மாடலை விட ரூ. 20 ஆயிரம் அதிகம் ஆகும். பிஎஸ்6 நின்ஜா 300 லைம் கிரீன்-கேஆர்டி கிராபிக்ஸ், கேன்டி லைம் கிரீன் மற்றும் எபோனி என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. 

     கவாசகி நின்ஜா 300

    புதிய மாடல் தோற்றத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலிலும் ட்வின்-பாட் ஹெட்லைட், மஸ்குலர் பியூவல் டேன்க், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட், குரோம் ஹீட்ஷீல்டு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    கவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 ரக 296சிசி, பேரலெல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 38.8 பிஹெச்பி பவர், 26.1 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    ராயல் என்பீல்டு நிறுவனம் 2021 இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.


    ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் தனது பிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது. இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள்களின் 2021 வெர்ஷனை அறிமுகம் செய்து உள்ளது.

    இரு மாடல்களும் புது நிறங்களில் கிடைக்கின்றன. 2021 இன்டர்செப்டார் 650 மாடல் துவக்க விலை ரூ. 2.75 லட்சம் ஆகும். இதன் கஸ்டம் பெயின்ட் வெர்ஷன் விலை ரூ. 2.83 லட்சம் ஆகும். டாப் எண்ட் க்ரோம் பெயின்ட் வேரியண்ட் விலை ரூ. 2.97 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     2021 ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650

    2021 கான்டினென்டல் ஜிடி 650 மாடல் இரண்டு புது நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் துவக்க விலை ரூ. 2.91 லட்சம் ஆகும். இதன் கஸ்டம் பெயின்ட் வெர்ஷன் ரூ. 2.99 லட்சம் என்றும் டாப் எண்ட் மிஸ்டர் கிளீன் நிற வேரியண்ட் விலை ரூ. 3.13 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    2021 ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மாடல்களில் 649சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு, பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 47 பிஹெச்பி பவர், 52 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் அசிஸ்ட் வழங்கப்பட்டு உள்ளது.
    டிரையம்ப் நிறுவனம் புதிய டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது என்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிளை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. டிரெடன்ட் 660 என அழைக்கப்படும் புது மாடலுக்கான டீசரை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டு உள்ளது.

    டீசர் வீடியோவில், புது மோட்டார்சைக்கிள் வெளியீடு மிக விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் #GuessTheDate ஹேஷ்டேக், புது டிரைடென்ட் 660 எப்போது இந்தியா வரும் என்ற வாசகம் கொண்டுள்ளது. புதிய டிரைடென்ட் 660 மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். 

     டிரையம்ப் டிரைடென்ட் 660

    டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிளில் 660 சிசி இன்-லைன் மூன்று சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 80 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ரோட் மற்றும் ரெயின் என இருவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது.

    இத்துடன் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் எல்இடி லைட்டிங் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதில் டிஎப்டி டிஸ்ப்ளே, ஆப்ஷனல் மை டிரையம்ப் கனெக்டிவிட்டி சிஸ்டம் வழங்கப்படுகிறது.
    டீடெல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மொபெட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    இந்திய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டீடெல், இந்திய சந்தையில் குறைந்த வேகத்தில் செல்லும் புது ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. டீடெல் ஈசி பிளஸ் என அழைக்கப்படும் புது ஸ்கூட்டர் டெலிவரி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.

    புதிய ஈசி பிளஸ் ஸ்கூட்டரை டீடெல் வலைதளத்தில் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டணம் ரூ. 1,999 ஆகும். இந்த ஸ்கூட்டர் பற்றிய விவரங்களை ரைடு ஆசியா எக்ஸ்போ நிகழ்வில் டீடெல் வெளியிட்டது. குறைந்த வேகத்தில் செல்லும் இந்த ஸ்கூட்டரில் 20ஏஹெச் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

     டீடெல் ஈசி பிளஸ்

    டீடெல் ஈசி பிளஸ் ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரங்கள் ஆகும். இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 

    குறைந்த அளவு பாடி பேனல்களை கொண்டுள்ள ஈசி பிளஸ் ஸ்கூட்டரில் ஒற்றை இருக்கை அமைப்பில் இருவர் அமரும் வகையில் உள்ளது. மேலும் இதில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார்சைக்கிளை புது புகை விதிகளுக்கு ஏற்ற அப்டேட்களுடன் அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2021 எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பிஎஸ்6 மாடலின் விலை ரூ. 1.13 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பிஎஸ்4 மாடலை விட ரூ. 19 ஆயிரம் அதிகம் ஆகும்.

    தோற்றத்தில் புது மாடல் பார்க்க பிஎஸ்4 வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி மாடலில் 200சிசி சிங்கில் சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 18.1 பிஹெச்பி பவர், 16.15 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

     ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி

    புதிய பிஎஸ்6 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி மாடல் முந்தைய பிஎஸ்4 மாடலை விட 4 கிலோ எடை அதிகமாக இருக்கிறது. இதன் மொத்த எடை 154 கிலோ ஆகும். இந்த மாடலின் என்ஜின் பியூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது முந்தைய மாடலை விட அதிக மைலேஜ் வழங்குகிறது. இவை தவிர புது மாடலில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை.

    இந்த மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல், டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டன்-பை-டன் நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது.
    ×