என் மலர்tooltip icon

    பைக்

    • சமீபத்தில் ஹிமாலயன் எலெக்ட்ரிக் வெர்ஷன் கான்செப்ட் படங்கள் இணையத்தில் வெளியாகின.
    • ராயல் என்பீல்டின் எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த தகவல் அந்நிறுவனத்தின் கடந்த ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில் தெரியவந்தது. இந்த முறை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனத்தின் வெளியீடு பற்றிய தகவல் அம்பலமாகி இருக்கிறது.

    முதல் காலாண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கலின் போது, முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் எப்போது வெளியாகும் என்பது பற்றி ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சித்தார்த் லால் தெரிவித்து இருக்கிறார். அதன்படி எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க மேலும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

     

    இதற்கான திட்டத்தின் கீழ் பலர் பணியாற்றி வருகின்றனர். மேலும் சில ப்ரோடோடைப்களும் தயாராகி இருக்கின்றன. தற்போது பொறியாளர்கள் இந்த ப்ரோடோடைப்களை ஓட்டுகின்றனர். பல்வேறு எலெக்ட்ரிக் வாகன பிளாட்பார்மை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்த பிளாட்பார்ம் சந்தையில் தனித்துவம் மிக்க இடத்தை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்பு தான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் எலெக்ட்ரிக் வெர்ஷன் கான்செப்ட் படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி இந்த மாடலில் பெரிய பேட்டரி பேக் மற்றும் டாப் என்ட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என்று தெரியவந்தது. இந்த கான்செப்ட்-ஐ கொண்டு ராயல் என்பீல்டு நிறுவனம் வளர்ந்து வரும் பிரிவில் ராயல் என்பீல்டு பயணம் குறித்த விவரங்களை வழங்கும் என்று தெரிகிறது.

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் X440 மாடல் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.
    • ஹார்லி டேவிட்சன் X440 மாடலில் 440சிசி, சிங்கில் சிலின்டர், ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது X440 மாடலின் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. புதிய விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. என்ட்ரி லெவல் மாடலான X440 விலை தற்போது ரூ. 2 லட்சத்து 29 ஆயிரத்தில் இருந்து ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் என்று அதிகரித்துள்ளது. இதன் டாப் என்ட் மாடல்களின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 60 ஆயிரம், ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் என்று மாறி இருக்கிறது.

    விவிட் என்று அழைக்கப்படும் மிட்-ரேன்ஜ் மாடலின் முந்தைய விலை ரூ. 2 லட்சத்து 49 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம் என்று மாறி இருக்கிறது. இதன் S வெர்ஷன் விலை முன்னதாக ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     

    ஹார்லி டேவிட்சன் X440 மாடலின் அனைத்து வெர்ஷன்களிலும் 440சிசி, சிங்கில் சிலின்டர், ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27 ஹெச்பி பவர், 38 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    டெனிம் என்று அழைக்கப்படும் X440 மாடலின் பேஸ் வேரியன்டில் வயர்-ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. விவிட் வேரியன்டில் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. S வெர்ஷனில் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் பிரீமியம் கனெக்டிவிட்டி மாட்யுல் மற்றும் இ-சிம் வசதி வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஹார்லி டேவிட்சன் X440 மாடல்- ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் டிரையம்ப் ஸ்பீடு 400 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • சுசுகி அக்சஸ் 125 புதிய நிறம் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
    • புதிய நிறம் தவிர சுசுகி அக்சஸ் 125 மாடல் 13 நிறங்களில் கிடைக்கிறது.

    சுசுகி நிறுவத்தின் அதிகம் விற்பனையாகி வரும் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்று அக்சஸ் 125. இந்திய சந்தையில் சுசுகி அக்சஸ் 125 மாடல் ஏற்கனவே பல்வேறு நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. எனினும், இதன் மற்றொரு புதிய நிற வேரியன்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய நிறம் கொண்ட வேரியன்டின் விலை ரூ. 85 ஆயிரத்து 300, எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.

    புதிய நிறம் கொண்ட சுசுகி அக்சஸ் பியல் ஷைனிங் பெய்க் என்று அழைக்கப்படுகிறது. இதில் வைட் மற்றும் பெய்க் என இரண்டு நிறங்களில் பெயின்ட் செய்யப்பட்டு, சீட் மட்டும் ரெட் நிறம் கொண்டிருக்கிறது. புதிய நிறம் டாப் என்ட் வேரியன்ட் மற்றும் ஸ்பெஷல் எடிஷன் வேரியன்ட்களிலும் கிடைக்கிறது. புதிய நிறம் தவிர சுசுகி அக்சஸ் 125 மாடல் 13 நிறங்களில் கிடைக்கிறது.

     

    சுசுகி அக்சஸ் 125 புதிய நிறம் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த ஸ்கூட்டரில் புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் 124சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 8.5 ஹெச்பி பவர், 10 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் ஹார்டுவேரிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் சிங்கில் ஸ்ப்ரிங் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு டிஸ்க் அல்லது டிரம் பிரேக் என வேரியன்டிற்கு ஏற்ப வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் அக்சஸ் 125 மாடலின் விலை ரூ. 79 ஆயிரத்து 889 என்று துவங்குகிறது. இந்த மாடல் யமஹா பசினோ 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • புதிய ஜூப்பிட்டர் ZX டிரம் வேரியன்டில் டிவிஎஸ் டிரேட்மார்க் செய்திருக்கும் ஸ்மார்ட் எக்சோ-னெக்ட் தொழில்நுட்பம் உள்ளது.
    • டிவிஎஸ் ஜூப்பிட்டர் ZX வேரியன்டிலும் 109.7சிசி, ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஜூப்பிட்டர் ZX டிரம் வேரியன்டில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கி இருக்கிறது. இந்த வெர்ஷனின் விலை ரூ. 84 ஆயிரத்து 468, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ப்ளூடூத் கனெக்டிவிட்டி இல்லாத வேரியன்டை விட ரூ. 2 ஆயிரத்து 300 வரை விலை அதிகம் ஆகும்.

    ப்ளூடூத் வசதி கொண்ட இரண்டாவது ஜூப்பிட்டர் வேரியன்ட் இது ஆகும். ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஜூப்பிட்டர் ZX ஸ்மார்ட் எக்சோ-னெக்ட் வேரியன்ட் விலை இதைவிட அதிகம் ஆகும். இந்த வேரியன்டிற்கு அதிக வரவேற்பு கிடைத்த காரணத்தால், தற்போது இந்த வேரியன்டிலும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    புதிய அப்டேட் காரணமாக ஜூப்பிட்டர் ZX டிரம் வேரியன்டில் டிவிஎஸ் டிரேட்மார்க் செய்திருக்கும் ஸ்மார்ட் எக்சோ-னெக்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், வாய்ஸ் அசிஸ்ட், எஸ்எம்எஸ் மற்றும் கால் அலெர்ட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் பில்ட்-இன் யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    மற்ற வேரியன்ட்களை போன்றே டிவிஎஸ் ஜூப்பிட்டர் ZX வேரியன்டிலும் 109.7சிசி, ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.77 ஹெச்பி பவர், 8.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் வேரியன்ட் விலை ரூ. 73 ஆயிரத்து 240 என்றும் கிளாசிக் வேரியன்ட் விலை ரூ. 89 ஆயிரத்து 648 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் டிவிஎஸ் ஜூப்பிட்டர் மாடல் ஹோண்டா ஆக்டிவா 6ஜி மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    • புதிய மாடலில் யுனிகான் 160 அல்லது ஹார்னெட் 2.0 மாடலில் வழங்கப்படும் என்ஜினே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
    • இந்த பிரிவுகளில் ஹோண்டா நிறுவனம் தற்போது இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான புது டீசரை வெளியிட்டு உள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், புதிய ஹோண்டா பைக் பெயர் மர்மமாகவே இருக்கிறது. டீசர்களின் படி இந்த மோட்டார்சைக்கிள் டூயல் டோன் பினிஷ், விமானங்களில் உள்ளதை போன்ற தோற்றம் கொண்ட பியூவல் கேப் வழங்கப்படுகிறது.

    முந்தைய டீசர்களில் இந்த மோட்டார்சைக்கிள் டெயில் லைட் எப்படி காட்சியளிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பெயரை போன்றே இதன் அறிமுக தேதி பற்றிய விவரங்களையும் ஹோண்டா நிறுவனம் ரகசியமாக வைத்திருக்கிறது.

     

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஹோண்டா பைக் 150 சிசி முதல் 180 சிசி பிரிவில் நிலை நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பிரிவுகளில் ஹோண்டா நிறுவனம் தற்போது இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவை யுனிகான் 160 மற்றும் சிபி ஹார்னெட் 2.0 ஆகும்.

    புதிய மாடலில் யுனிகான் 160 அல்லது ஹார்னெட் 2.0 மாடலில் வழங்கப்படும் என்ஜினே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. யுனிகான் 160 மாடலில் 162.7சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 12.73 ஹெச்பி பவர், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஹார்னெட் 2.0 மாடலில் 184.4சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் 17.03 ஹெச்பி பவர், 16.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹோண்டா மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • டிவிஎஸ் நிறுவனம் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டிவிட இலக்கு நிர்ணயம் செய்து இருந்தது.
    • இந்திய சந்தையில் டிவிஎஸ் ஐகியூப் மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து டிவிஎஸ் ஐகியூப் மாடல் விற்பனையில் இதுவரை சுமார் 1.5 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    2020 ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் ஐகியூப் மாடலின் விற்பனை 89 சதவீதம் யூனிட்கள் மார்ச் 2023 இறுதியிலேயே நடைபெற்று இருக்கிறது. முன்னதாக 2023 நிதியாண்டிலேயே ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டிவிட டிவிஎஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்து இருந்தது. எனினும், 3 ஆயிரத்து 346 யூனிட்கள் இடைவெளியில் இது தவறிவிட்டது.

     

    டிவிஎஸ் ஐகியூப் மாடலில் ஸ்மார்ட் எல்இடி ஹெட்லைட், டிஆர்எல், ஹெச்எம்ஐ, கன்ட்ரோலர், 32 லிட்டர் ஸ்டோரேஜ், பாஸ்ட் சார்ஜிங், 7 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்ட டேஷ்போர்டு, டிவிஎஸ் ஸ்மார்ட் எக்சோ-னெக்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 145 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. 

    மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் டிவிஎஸ் ஐகியூப் மாடலின் விலை ரூ. 98 ஆயிரத்து 564 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 08 ஆயிரத்து 690 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • பிஎம்டபிள்யூ G310 R மாடல் முன்னதாக டிரிபில் பிளாக், பேஷன் மற்றும் ஸ்போர்ட் நிறங்களில் கிடைத்தது.
    • பிஎம்டபிள்யூ G310 R மாடலிலும் 313சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் தனது G310 R மோட்டார்சைக்கிளின் புதிய நிற வேரியன்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த நிறம் ஸ்டைல் பேஷன் என்று அழைக்கப்படுகிறது. இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் டிரிபில் பிளாக், பேஷன் மற்றும் ஸ்போர்ட் போன்ற நிறங்களுடன் இணைகிறது.

    புதிய நிறம் தவிர பிஎம்டபிள்யூ G310 R அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலில் சிங்கில்-பாட் ஹெட்லைட், பாடி நிறத்தால் ஆன கவுல், மஸ்குலர் பியூவல் டேன்க், ரேடியேட்டர் ஷிரவுட்கள், என்ஜின் கவுல், ஸ்டெப்-அப் சாடில், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் மற்றும் 5 ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

     

    ஹார்டுவேரை பொருத்தவரை 41 மில்லிமீட்டர் அளவில் அப்சைடு டவுன் போர்க்குகள், பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகின்றன. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் 300 மில்லிமீட்டர் டிஸ்க், பின்புறம் 240 மில்லிமீட்டர் டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பிஎம்டபிள்யூ G310 R மாடலிலும் 313சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 33.5 ஹெச்பி பவர் மற்றும் 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் E20 ரக எரிபொருள் மற்றும் புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் டியூனிங் செய்யப்பட்டு உள்ளது. 

    • ஒலா S1 ஏர் மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 4.5 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார் உள்ளது.
    • இந்திய சந்தையில் ஒலா S1 ஏர் மாடல் மொத்தத்தில் ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ஏர் மாடல் முன்பதிவை ஜூலை 27-ம் தேதி துவங்கியது. இந்த ஸ்கூட்டரை வாங்க சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஏற்கனவே முன்பதிவு செய்து விட்டனர். இந்திய சந்தையில் புதிய ஒலா S1 ஏர் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    எனினும், இந்த விலை ஜூலை 31-ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்று ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அதன்பிறகு, ஒலா S1 ஏர் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து ஒலா S1 ஏர் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 என்று மாறிவிடும்.

     

    ஒலா S1 ஏர் மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 4.5 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 125 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. தோற்றத்தில் இந்த மாடல் ஒலா S1 மற்றும் S1 ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது.

    எனினும், இந்த மாடலில் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க்குகள், பின்புறம் டுவின் ஷாக்குகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் பிலாட் புளோர்போர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர டுவின் ப்ரோஜெக்டர் எல்இடி ஹெட்லைட்கள், வளைந்த பக்கவாட்டு பேனல்கள் வழங்கப்படுகின்றன.

    இத்துடன் 7-இன்ச் டிஎப்டி ஸ்கிரீன், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஜிபிஎஸ், மியூசிக் பிளேபேக், மூன்று ரைடு மோட்கள், ரிவர்ஸ் மோடு, ரிமோட் பூட் லாக்/அன்லாக், சைடு ஸ்டான்டு அலெர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஒலா S1 ஏர் மாடல் ஸ்டெல்லார் புளூ, நியான், பொர்சிலைன் வைட், கோரல் கிளாம், லிக்விட் சில்வர் மற்றும் மிட்நைட் புளூ ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர் டிவிஎஸ் ஐகியூப் மற்றும் ஏத்தர் 450S மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • இந்த மாடல் ஆகஸ்ட் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
    • டிவிஎஸ் நிறுவனம் மேலும் பல எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

    டிவிஎஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் எலெக்ட்ரிக் XL மொபெட் மாடல் காப்புரிமை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. தற்போது டிவிஎஸ் நிறுவனம் ஐகியூப் மாடலை மட்டுமே எலெக்ட்ரிக் பிரிவில் விற்பனை செய்து வருகிறது.

    இவைதவிர டிவிஎஸ் நிறுவனம் க்ரியான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் ஆகஸ்ட் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. தற்போது XL எலெக்ட்ரிக் மாடல் விவரங்கள் வெளியாகி இருப்பதை அடுத்து டிவிஎஸ் நிறுவனம் மேலும் பல எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

     

    தோற்றத்தில் இந்த மாடல் அதன் பெட்ரோல் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இதன் பிரேம், வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டியுபுலர் கிராப்-ரெயில் உள்ளிட்டவை XL மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. ஹார்டுவேர் அம்சங்களை பொருத்தவரை முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டூயல் ஸ்ப்ரிங்குகள் உள்ளன.

    தற்போதைய டிவிஎஸ் XL மாடலில் 99.7சிசி, சிங்கில் சிலின்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 4.3 ஹெச்பி பவர், 6.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மொபெட் மாடல் 86 கிலோ எடை கொண்டிருக்கிறது.

    Photo Courtesy: Bikewale

    • எனிக்மா ஆம்பயர் N8 ஸ்கூட்டரில் 26 லிட்டர் அன்டர்சீட் ஸ்டோரேஜ் உள்ளது.
    • இந்த ஸ்கூட்டரில் 1500 வாட் BLDC எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    போபால்-ஐ சேர்ந்த எனிக்மா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆம்பயர் N8 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 200 கிலோமீட்டர்கள் வரை செல்ல முடியும். இதில் உள்ள பேட்டரியை இரண்டில் இருந்து அதிகபட்சம் நான்கு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும்.

     

    புதிய எனிக்மா ஆம்பயர் N8 மாடலில் சக்திவாய்ந்த 1500 வாட் BLDC எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் அதிகபட்சம் 200 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.

    புதிய எனிக்மா ஆம்பயர் N8 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அன்டர்சீட் ஸ்டோரேஜ் 26 லிட்டர்கள் ஆகும். இது இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் வழக்கமான ஸ்கூட்டர்களில் இருப்பதை விட அதிகம் ஆகும். இந்த ஸ்கூட்டர் கிரே, வைட், புளூ, சில்வர் மற்றும் மேட் பிளாக் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.

    • ராயல் என்பீல்டு ஹன்டர் 350 கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
    • ராயல் என்பீல்டு ஹன்டர் 350 மாடலில் 349சிசி, ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் உலகளவில் 2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஹன்டர் 350 இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறது.

    பிப்ரவரி 2023 மாதம் முதல் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையான நிலையில், அடுத்த ஒரு லட்சம் யூனிட்கள் வெறும் ஐந்து மாதங்களில் விற்பனையாகி இருக்கிறது. இந்திய சந்தையில் 2 மற்றும் 3-ம் கட்ட நகரங்களில் ஹன்டர் 350 விற்பனை அதிகளவு வளர்ச்சி பெற்று இருப்பதாக ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது.

     

    இந்தியா மட்டுமின்றி ராயல் என்பீல்டு ஹன்டர் 350 மாடல் இந்தோனேசியா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அர்ஜென்டினா, கொலம்பியா, மெக்சிகோ, நியூசிலாந்து போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இதன் விற்பனை பிரேசில் நாட்டிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ராயல் என்பீல்டு ஹன்டர் 350 மாடலில் 349சிசி, ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.2 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹன்டர் 350 மாடல் டிவிஎஸ் ரோனின், ஜாவா 42 மற்றும் ஹோன்டா ஹைனெஸ் CB350 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய வாகனத்திற்கான டீசர் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளது.
    • இந்த வாகனம் முற்றிலும் புதிய கரிஸ்மா XMR 210 மாடல் ஆகஸ்ட் 29-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் உற்பத்திக்கு தயாரான நிலையில், இருக்கும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. அதில் இந்த மோட்டார்சைக்கிள் சிறப்பான தோற்றம் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி இந்த மாடலின் முன்புறம், பக்கவாட்டில் கூர்மையான பேனல்கள், மஸ்குலர் ஃபியூவல் டேன்க் மற்றும் ஸ்ப்லிட்-சீட் ஸ்டைல் சீட் வழங்கப்படுகிறது.

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் முற்றிலும் புதிய 210சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த என்ஜின் 25 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என்றும் இத்துடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

     

    இந்த மாடலில் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள், டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் வழங்கப்படும் என்று தெரிகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும், கரிஸ்மா XMR 210 மாடல் பஜாஜ் பல்சர் F250, சுசுகி ஜிக்சர் SF 250 மற்றும் யமஹா YZF-R15 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது. 

    Photo Courtesy: Bikewale

    ×