என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பைக்

உடனே வாங்கிடலாம் போலயே.. எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 22 ஆயிரம் விலை குறைப்பு..!

- விலை குறைப்பு குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.8 கிலோவாட்ஹவர் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது ஒரே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு அசத்தலான விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் புதிய விலை ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று மாறி இருக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 1 லட்சத்து 52 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய விலை குறைப்பு காரணமாக பஜாஜ் செட்டாக் விலை ஏத்தர் 450X, டாப் என்ட் ஒலா S1 ப்ரோ ஜென் 2 மாடல்களை விட குறைந்து இருக்கிறது. ஏத்தர் 450X மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 38 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒலா S1 ப்ரோ ஜென் 2 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 47 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த விலை குறைப்பு குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் இது மாற்றப்பட்டு விடும் என்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்து உள்ளது. குறுகிய கால சலுகை என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் எவ்வளவு காலத்திற்கு விலை குறைப்பு அமலில் இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.8 கிலோவாட்ஹவர் மோட்டார் மற்றும் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 107 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதனை முழு சார்ஜ் செய்ய நான்கு மணி நேரங்கள் ஆகின்றன. இந்த பேட்டரியின் ஆயுள் ஏழு ஆண்டுகள் அல்லது 70 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை நீடித்து உழைக்கும் என்று பஜாஜ் ஆட்டோ தெரிவித்து இருக்கிறது.