என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பைக்

இதைவிட குறைக்க முடியாதுங்க.. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்த ஒலா..!

- ஒலா S1X பேஸ் வேரியன்டில் 2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
- இந்த மாடல் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒலா S1X என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் S1X (2 கிலோவாட் ஹவர்), S1X மற்றும் S1X பிளஸ் என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கின்றன. டிசைனிங்கை பொருத்தவரை ஒலா S1X மாடல் தோற்றத்தில் S1 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது.
இதன் ஹெட்லைட் கவர் மச்சும் சற்று பெரியதாக காட்சியளிக்கின்றன. இத்துடன் டுவின் எல்.இ.டி. ப்ரோஜெக்டர்கள் மற்றும் இதனை சுற்றி எல்.இ.டி. பெசல்கள் உள்ளன. இத்துடன் ஃபிளாட் ஃபுளோர்-போர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஹேன்டில்பார் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இத்துடன் வட்ட வடிவம் கொண்ட மிரர்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாடல் டூ-டோன் பெயின்ட் ஆப்ஷனில் கிடைக்கிறது.
ஒலா S1X பேஸ் வேரியன்டில் 2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மிட்-ரேன்ஜ் மற்றும் பிளஸ் வேரியன்ட்களில் முறையே 3 கிலோவாட் ஹவர் மற்றும் 4 கிலோவாட் ஹவர் பேட்டரிகள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் இவற்றின் அம்சங்களிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த மாடல் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. புதிய S1X ஹார்டுவேர் அம்சங்களும் அதன் S1 ஸ்கூட்டர்களில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளன. அந்த வைகயில், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டூயல் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
விலை விவரங்கள்:
ஒலா S1X (2 கிலோவாட் ஹவர்) விலை ரூ. 89 ஆயிரத்து 999
ஒலா S1X (3 கிலோவாட் ஹவர்) விலை ரூ. 99 ஆயிரத்து 999
ஒலா S1X (4 கிலோவாட் ஹவர்) விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999
புதிய ஸ்கூட்டர் அறிமுகம் காரணமாக ஒலா S1 ஏர் விலை தற்போது ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.
குறிப்பு: அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
