search icon
என் மலர்tooltip icon

    பைக்

    ஒரே நாளில் மூன்று 450 மாடல்கள்.. ஏத்தர் எனர்ஜியின் தரமான சம்பவம்..!
    X

    ஒரே நாளில் மூன்று 450 மாடல்கள்.. ஏத்தர் எனர்ஜியின் தரமான சம்பவம்..!

    • புதிய ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டிசைனில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
    • புதிய ஏத்தர் 450S மாடல் இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்தது. இதில் ஒன்று ஏத்தர் 450S மற்ற இரண்டு மாடல்கள் ஏத்தர் 450Xs ஆகும். பெயர்கள் மாற்றப்படாத நிலையில், X வேரியன்ட் தற்போது இரண்டு வேரியன்ட்கள், வித்தியாசமான பேட்டரி மற்றும் அம்சங்களுடன் கிடைக்கிறது.

    புதிய ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒரே மாதிரியான டிசைன் கொண்டிருக்கின்றன. இவற்றில் முன்புறம் கூர்மையான எல்இடி ஹெட்லைட், டர்ன் இன்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் ஹெட்லைட் அப்ரானிலும், இன்டிகேட்டர்கள் ஹேன்டில்பார் கவுல் பகுதியிலும் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் ஒட்டுமொத்த பாடிவொர்க் முற்றிலும் புதிய 450S மற்றும் 450Xs போன்றே காட்சியளிக்கிறது.

    மூன்று வேரியன்ட்களிலும் வெவ்வேறு அம்சங்கள் மற்றும் வசதிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி ஏத்தர் 450s மாடலில் 7 இன்ச் அளவு கொண்ட டீப்வியூ டிஸ்ப்ளே, 450X வேரியன்ட்களில் 7 இன்ச் TFT டச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இத்துடன் பேட்டரி பேக் மற்றும் மோட்டார் வித்தியாசமாக வழங்கப்படுகிறது.

    ஏத்தர் 450S மாடலில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி, 5.4 கிலோவாட் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 115 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. ஏத்தர் 450S மாடலில் 2.9 கிலோவாட் ஹவர், 3.7 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இதில் குறைந்த திறன் கொண்ட பேட்டரி 111 கிலோமீட்டர்களும், பெரிய பேட்டரி பேக் கொண்ட வேரியன்ட் 150 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இரு மாடல்களுடன் 6.4 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளன.

    ஏத்தர் 450S மற்றும் ஏத்தர் 450X (2.9 கிலோவாட் ஹவர்) மாடல்களில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய எட்டு மணி 36 நிமிடங்கள் ஆகிறது. ஏத்தர் 450X (3.7 கிலோவாட் ஹவர்) வேரியன்ட்-ஐ முழுமையாக சார்ஜ் செய்ய ஐந்து மணி 45 நிமிடங்கள் ஆகும்.

    மூன்று மாடல்களிலும் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மோனோஷாக் யூனிட், பிரேக்கிங்கிற்கு டிஸ்க் பிரேக்குகள், ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங் வசதி வழங்கப்படுகிறது. இவற்றில் 12-இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் 90/90 பின்புறத்தில் 100/80 டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    விலை விவரங்கள்:

    ஏத்தர் 450S ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999

    ஏத்தர் 450X (2.9 கிலோவாட் ஹவர்) ரூ. 1 லட்சத்து 38 ஆயிரம்

    ஏத்தர் 450X (3.7 கிலோவாட் ஹவர்) ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 921

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×