என் மலர்tooltip icon

    பைக்

    • ஹீரோ டெஸ்டினி 125 மாடலில் அன்டர் சீட் சார்ஜிங் போர்ட், ஆட்டோ ஸ்டார்ட் / ஸ்டாப் வசதி உள்ளது.
    • புதிய டெஸ்டினி 125 மாடலிலும் 124.6சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்கூட்டர் மாடலின் குறைந்த விலை எடிஷனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்கூட்டர் டெஸ்டினி 125 பிரைம் என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 71 ஆயிரத்து 499, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது LX மற்றும் VX வேரியன்ட்களை விட முறையே ரூ. 7 ஆயிரத்து 749 மற்றும் ரூ. 14 ஆயிரத்து 239 வரை குறைவு ஆகும்.

    புதிய டெஸ்டினி மாடல் பழைய ஸ்கூட்டரை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. எனினும், இதில் பெரிய ஹெட்லேம்ப், பாடி நிறத்தால் ஆன மிரர்கள், ஒற்றை கிராப் ரெயில், சிங்கில் டோன் சீட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதே ஸ்கூட்டரின் எக்ஸ்-டெக் வேரியன்டில் உள்ள ப்ளூடூத் கனெக்டிவிட்டி இந்த வேரியன்டில் வழங்கப்படவில்லை.

     

    ஆனாலும், புதிய வேரியன்டில் அன்டர் சீட் சார்ஜிங் போர்ட், அன்டர் சீட் லேம்ப், ஆட்டோ ஸ்டார்ட் / ஸ்டாப் அம்சம், செமி டிஜிட்டல் கன்சோல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஹீரோ டெஸ்டினி 125 பிரைம் மாடலில் 10-இன்ச் ரிம்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிரம் பிரேக்குகள் உள்ளன.

    இத்துடன் 124.6சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9 ஹெச்.பி. பவர், 10.36 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் CVT ரியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் உள்ள ஃபியூவல் டேன்க் ஐந்து லிட்டர்கள் கொள்ளளவு கொண்டிருக்கிறது. 

    • விலை குறைப்பு குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.8 கிலோவாட்ஹவர் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது ஒரே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு அசத்தலான விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் புதிய விலை ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று மாறி இருக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 1 லட்சத்து 52 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய விலை குறைப்பு காரணமாக பஜாஜ் செட்டாக் விலை ஏத்தர் 450X, டாப் என்ட் ஒலா S1 ப்ரோ ஜென் 2 மாடல்களை விட குறைந்து இருக்கிறது. ஏத்தர் 450X மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 38 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒலா S1 ப்ரோ ஜென் 2 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 47 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     

    இந்த விலை குறைப்பு குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் இது மாற்றப்பட்டு விடும் என்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்து உள்ளது. குறுகிய கால சலுகை என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் எவ்வளவு காலத்திற்கு விலை குறைப்பு அமலில் இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.8 கிலோவாட்ஹவர் மோட்டார் மற்றும் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 107 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதனை முழு சார்ஜ் செய்ய நான்கு மணி நேரங்கள் ஆகின்றன. இந்த பேட்டரியின் ஆயுள் ஏழு ஆண்டுகள் அல்லது 70 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை நீடித்து உழைக்கும் என்று பஜாஜ் ஆட்டோ தெரிவித்து இருக்கிறது. 

    • ஒலா S1 ப்ரோ ஜென் 2 மாடலில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய ஒலா ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 120 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் S1 ப்ரோ ஜென் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்டு இருக்கும் வகையில், உருவாக்கப்பட்டு உள்ளது. எனினும், இதன் ஒட்டுமொத்த டிசைன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது.

    புதிய மாடலிலும், அதன் முந்தைய வெர்ஷனை போன்று வளைந்த மற்றும் பெரிய சைடு பேனல்கள், டுவின் ப்ரோஜெக்டர் எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் மோனோஷாக் மற்றும் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகளுக்கு மாற்றாக புதிய மாடலில் ரியர் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் மாற்றங்கள் தவிர்த்து, புதிய S1 ப்ரோ ஜென் 2 மாடலின் ரேன்ஜ் மற்றும் வேகத்தை ஒலா நிறுவனம் அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த மாடலில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்கூட்டர் 195 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் மற்றும் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ஒலா S1 ப்ரோ ஜென் 2 ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 499, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய ஜென் 1 மாடலை விட ரூ. 7 ஆயிரம் வரை அதிகம் ஆகும். இதன் மூலம் ஒலா நிறுவனம் ஒலா S1 ப்ரோ, S1 ஏர் மற்றும் S1X போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் விவரங்கள் இணையத்தில் வெளியானது.
    • குறைந்த விலை ஏத்தர் ஸ்கூட்டர் பற்றி அந்நிறுவன சி.இ.ஒ. விளக்கம் அளித்தார்.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் குறைந்த விலையில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும் இதன் விலை ரூ. 1 லட்சத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இது உண்மையாகும் பட்சத்தில் நன்றாகவே இருக்கும் என்ற போதிலும், இதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன.

    இந்த நிலையில், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போதைக்கு குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் திட்டத்தில் இல்லை என்று அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தருன் மேத்தா அறிவித்து இருக்கிறார்.

     

    "ஏத்தர் நிறுவனம் ரூ. 1 லட்சம் பட்ஜெட்டில் தற்போதைக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்க வாய்ப்பு இல்லை. எனக்கு இப்படியான வாகனமும், இதன் நம்பகத்தன்மையே புரியவில்லை," என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தருன் மேத்தா தெரிவித்துள்ளார்.

    சந்தையில் நிலவும் போட்டியை உற்று நோக்குவோம். ரூ. 1 லட்சம் பட்ஜெட்டில் வேறு எதேனும் மாடல்கள் அறிமுகமாகிறதா என்பதை பார்ப்போம். இந்த விலை பிரிவில், பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையான செயல்திறனை வழங்குவது சவாலாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • ஒலா S1X பேஸ் வேரியன்டில் 2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த மாடல் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒலா S1X என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் S1X (2 கிலோவாட் ஹவர்), S1X மற்றும் S1X பிளஸ் என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கின்றன. டிசைனிங்கை பொருத்தவரை ஒலா S1X மாடல் தோற்றத்தில் S1 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது.

    இதன் ஹெட்லைட் கவர் மச்சும் சற்று பெரியதாக காட்சியளிக்கின்றன. இத்துடன் டுவின் எல்.இ.டி. ப்ரோஜெக்டர்கள் மற்றும் இதனை சுற்றி எல்.இ.டி. பெசல்கள் உள்ளன. இத்துடன் ஃபிளாட் ஃபுளோர்-போர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஹேன்டில்பார் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இத்துடன் வட்ட வடிவம் கொண்ட மிரர்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாடல் டூ-டோன் பெயின்ட் ஆப்ஷனில் கிடைக்கிறது.

     

    ஒலா S1X பேஸ் வேரியன்டில் 2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மிட்-ரேன்ஜ் மற்றும் பிளஸ் வேரியன்ட்களில் முறையே 3 கிலோவாட் ஹவர் மற்றும் 4 கிலோவாட் ஹவர் பேட்டரிகள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் இவற்றின் அம்சங்களிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த மாடல் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. புதிய S1X ஹார்டுவேர் அம்சங்களும் அதன் S1 ஸ்கூட்டர்களில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளன. அந்த வைகயில், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டூயல் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    விலை விவரங்கள்:

    ஒலா S1X (2 கிலோவாட் ஹவர்) விலை ரூ. 89 ஆயிரத்து 999

    ஒலா S1X (3 கிலோவாட் ஹவர்) விலை ரூ. 99 ஆயிரத்து 999

    ஒலா S1X (4 கிலோவாட் ஹவர்) விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999

    புதிய ஸ்கூட்டர் அறிமுகம் காரணமாக ஒலா S1 ஏர் விலை தற்போது ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.

    குறிப்பு: அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    • கவாசகி H2 SX சீரிஸ் மாடல்களில் 998சிசி, சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட, இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் உள்ளது.
    • இரண்டு சூப்பர்பைக் மாடல்களிலும் அட்வான்ஸ்டு ரைடர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கவாசகி இந்தியா நிறுவனம் 2024 நின்ஜா H2 SX மற்றும் நின்ஜா H2 SX SE மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு சூப்பர்பைக் மாடல்களிலும் புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர பைக்கின் பெரும்பாலான டிசைன், அம்சங்கள், ஹார்டுவேர் மற்றும் எலெக்ட்ரிக் அம்சங்கள் முந்தைய வெர்ஷனில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    2024 கவாசகி மாடலில் கூர்மையான முன்புறம், எல்.இ.டி. ஹெட்லைட்கள், டிரான்ஸ்பேரன்ட் வைசர், சைடு ஃபேரிங்குகள் உள்ளன. இவை பைக்கிற்கு அதிரடி தோற்றத்தை வழங்குகின்றன. இரு மாடல்களிலும் ஸ்ப்லிட்-சீட் செட்டப், பக்கவாட்டில் மவுன்ட் செய்யப்பட்ட எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    புதிய கவாசகி H2 SX மற்றும் H2 SX SE மாடலில் 998சிசி, சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட, இன்-லைன் நான்கு சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 200 ஹெச்.பி. பவர், 137.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரண்டு சூப்பர்பைக் மாடல்களிலும் அட்வான்ஸ்டு ரைடர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், டயர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம், வெஹிகில் ஹோல்டு அசிஸ்ட், பிலைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், அடாப்டிவ் குரூயிஸ் கன்ட்ரோல், ஃபார்வேர்டு கொலிஷன் வார்னிங், ரைடு மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், 6.5 இன்ச் டி.எஃப்.டி., ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஏ.பி.எஸ். மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.

    2024 கவாசகி நின்ஜா H2 SX மற்றும் நின்ஜா H2 SX SE மாடல்களின் விலை முறையே ரூ. 31 லட்சத்து 95 ஆயிரம், ரூ. 32 லட்சத்து 95 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் ஸ்டான்டர்டு வேரியன்ட் மெட்டாலிக் டயப்லோ பிளாக் நிறத்திலும், H2 SX SE மாடல் மெட்டாலிக் கிராஃபைட் கிரே நிறத்திலும் கிடைக்கின்றன.

    • ஹோண்டா CD110 டிரீம் டீலக்ஸ் மாடலில் ACG ஸ்டார்டர் மோட்டார் வழங்கப்படுகிறது.
    • ஹோன்டா CD110 டிரீம் டீலக்ஸ் மாடலில் 109.51சிசி, ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய CD110 டிரீம் டீலக்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 73 ஆயிரத்து 400, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலில் OBD-2 விதகளுக்கு பொருந்தும் என்ஜின் மற்றும் ஹோண்டா என்ஹான்ஸ்டு ஸ்மார்ட் பவர் சிஸ்டம் (eSP) வழங்கப்படுகிறது.

    ஹோண்டா CD110 டிரீம் டீலக்ஸ் மாடலில் ACG ஸ்டார்டர் மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் சைலன்ட் ஸ்டார்ட் மெக்கானிசம், ப்ரோகிராம் செய்யப்பட்ட ஃபியூவல் இன்ஜெக்ஷன், டியூப்லெஸ் டயர்கள், இன்-பில்ட் சைடு-ஸ்டான்டு என்ஜின் கட்-ஆஃப் வசதி வழங்கப்படுகிறது.

    புதிய ஹோண்டா CD110 மாடல் பத்து ஆண்டுகள் வாரண்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் மூன்று ஆண்டுகள் ஸ்டான்டர்டு வாரண்டி, ஏழு ஆண்டுகளுக்கு ஆப்ஷனலாக நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது.

    ஹோன்டா CD110 டிரீம் டீலக்ஸ் மாடலில் 109.51சிசி, ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.67 ஹெச்.பி. பவர், 9.30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டுவின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகின்றன. இதன் இருபுறங்களிலும் டிரம் பிரேக்குகள் மற்றும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    • புதிய ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டிசைனில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
    • புதிய ஏத்தர் 450S மாடல் இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்தது. இதில் ஒன்று ஏத்தர் 450S மற்ற இரண்டு மாடல்கள் ஏத்தர் 450Xs ஆகும். பெயர்கள் மாற்றப்படாத நிலையில், X வேரியன்ட் தற்போது இரண்டு வேரியன்ட்கள், வித்தியாசமான பேட்டரி மற்றும் அம்சங்களுடன் கிடைக்கிறது.

    புதிய ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒரே மாதிரியான டிசைன் கொண்டிருக்கின்றன. இவற்றில் முன்புறம் கூர்மையான எல்இடி ஹெட்லைட், டர்ன் இன்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் ஹெட்லைட் அப்ரானிலும், இன்டிகேட்டர்கள் ஹேன்டில்பார் கவுல் பகுதியிலும் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் ஒட்டுமொத்த பாடிவொர்க் முற்றிலும் புதிய 450S மற்றும் 450Xs போன்றே காட்சியளிக்கிறது.

     

    மூன்று வேரியன்ட்களிலும் வெவ்வேறு அம்சங்கள் மற்றும் வசதிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி ஏத்தர் 450s மாடலில் 7 இன்ச் அளவு கொண்ட டீப்வியூ டிஸ்ப்ளே, 450X வேரியன்ட்களில் 7 இன்ச் TFT டச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இத்துடன் பேட்டரி பேக் மற்றும் மோட்டார் வித்தியாசமாக வழங்கப்படுகிறது.

    ஏத்தர் 450S மாடலில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி, 5.4 கிலோவாட் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 115 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. ஏத்தர் 450S மாடலில் 2.9 கிலோவாட் ஹவர், 3.7 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இதில் குறைந்த திறன் கொண்ட பேட்டரி 111 கிலோமீட்டர்களும், பெரிய பேட்டரி பேக் கொண்ட வேரியன்ட் 150 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இரு மாடல்களுடன் 6.4 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளன.

    ஏத்தர் 450S மற்றும் ஏத்தர் 450X (2.9 கிலோவாட் ஹவர்) மாடல்களில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய எட்டு மணி 36 நிமிடங்கள் ஆகிறது. ஏத்தர் 450X (3.7 கிலோவாட் ஹவர்) வேரியன்ட்-ஐ முழுமையாக சார்ஜ் செய்ய ஐந்து மணி 45 நிமிடங்கள் ஆகும்.

    மூன்று மாடல்களிலும் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மோனோஷாக் யூனிட், பிரேக்கிங்கிற்கு டிஸ்க் பிரேக்குகள், ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங் வசதி வழங்கப்படுகிறது. இவற்றில் 12-இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் 90/90 பின்புறத்தில் 100/80 டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    விலை விவரங்கள்:

    ஏத்தர் 450S ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999

    ஏத்தர் 450X (2.9 கிலோவாட் ஹவர்) ரூ. 1 லட்சத்து 38 ஆயிரம்

    ஏத்தர் 450X (3.7 கிலோவாட் ஹவர்) ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 921

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • சுசுகி நிறுவனம் குறைந்த விலை அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • 2023 EICMA நிகழ்வில் புதிய மோட்டார்சைக்கிள் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

    சுசுகி நிறுவனம் அட்வென்ச்சர் பிரிவை விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சுசுகி நிறுவனம் புதிய என்ட்ரி லெவல் V ஸ்டார்ம் 800 மாடலை என்ட்ரி லெவல் பிரிவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து இணையத்தில் லீக் ஆகி இருக்கும் தகவல்களில் சுசுகி நிறுவனம் 2024 ஆம் ஆண்டு அறிமுகம் செய்வதற்காக மூன்று மாடல்களை பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு மாடல்கள் V ஸ்டார்ம் 800DE அட்வென்ச்சர் மற்றும் V ஸ்டார்ம் 800DE மாடல்களின் 2024 வெர்ஷன் ஆகும். இந்த இரு மாடல்களும் 2022 EICMA ஆட்டோ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

     

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

    தற்போது லீக் ஆகி இருக்கும் தகவல்களின் படி சுசுகி நிறுவனம் குறைந்த விலை மாடல் ஒன்றை இந்த பிரிவில் அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி புதிய மாடல் V ஸ்டார்ம் 800 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம். இதில் சிறிய முன்புற வீல், அலாய் வீல்கள், வித்தியாசமான சஸ்பென்ஷன் செட்டப் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரிகிறது.

    புதிய குறைந்த விலை மோட்டார்சைக்கிள் 2023 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. சுசுகி நிறுவனம் தனது V ஸ்டார்ம் 800DE மாடலை இந்திய சந்தையில் டெஸ்டிங் செய்வதால், அது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    • ஒலா S1 ஏர் மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி, 4.5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய ஒலா S1 மாடலில் எல்இடி இலுமினேஷன், டிஜிட்டல் கன்சோல் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான டீசரை அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. சமீபத்தில் ஒலா நிறுவனம் தனது S1 வேரியன்டை நிறுத்திய நிலையில், புதிய ஸ்கூட்டருக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது.

    டீசரின் படி புதிய ஒலா ஸ்கூட்டர் சற்று வித்தியாசமான ஹேண்டில்பார் மற்றும் ஸ்விட்ச் கியூப்களை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் வட்ட வடிவம் கொண்ட கண்ணாடிகள், புதிய ஹெட்லைட் கவுல் வழங்கப்படுகிறது. புதிய ஸ்கூட்டரில் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

     

    இவைதவிர புதிய ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த டிசைன் ஒரே மாதிரியே இருக்கும் என்று தெரிகிறது. புதிய ஒலா ஸ்கூட்டரின் ஹார்டுவேர் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், புதிய ஸ்கூட்டர் ஒலா S1 ஏர் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என்பதால், அதன் அம்சங்கள் மற்றும் ரேன்ஜ் சற்று குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.

    தற்போது விற்பனை செய்யப்படும் ஒலா S1 ஏர் மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 4.5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 125 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    புதிய ஒலா S1 மாடலில் எல்இடி இலுமினேஷன், டிஜிட்டல் கன்சோல், இரண்டு ரைடு மோட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் இருபுறங்களிலும் டிரம் பிரேக்குகள் வழங்கப்படலாம்.

    இந்திய சந்தையில் புதிய ஒலா ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விலை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஒலா S1 ஏர் மாடலை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்தியாவில் ஒலா S1 ஏர் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • 2023 கவாசகி Z H2 சீரிசில் 998சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட, லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது.
    • புதிய கவாசகி Z H2 சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    கவாசகி நிறுவனத்தின் 2024 Z H2 மற்றும் Z H2 SE மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் விலை ரூ. 23 லட்சத்து 48 ஆயிரம், என்று துவங்குகிறது. இதன் பிரீமியம் மாடல் விலை ரூ. 27 லட்சத்து 76 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான டிசைன் மற்றும் கூர்மையான ஹெட்லைட் கொண்டிருக்கிறது. இத்துடன் பிரமாண்ட பியூவல் டேன்க், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் மற்றும் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் ஸ்டான்டர்டு மாடல் மெட்டாலிக் கார்பன் கிரே மற்றும் எபோனி பெயின்ட் நிறங்களில் கிடைக்கிறது.

     

    அதிக பிரீமியம் மாடலான Z H2 SE மெட்டாலிக் மேட் கிராஃபீன்ஸ்டீல் கிரே மற்றும் எபோனி நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் ஃபிரேம் மற்றும் என்ஜின் கவர்கள் பச்சை நிறம் கொண்டிருக்கின்றன. இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான மெக்கானிக்கல் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இவற்றில் 998சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 197.2 ஹெச்பி பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவியை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் 320mm டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் ஒற்றை 260mm டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷனுக்கு மேனுவல் அட்ஜஸ்ட் வசதி கொண்ட சஸ்பென்ஷனும், SE வேரியண்டில் ஷோவா ஸ்கைஹூக் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இந்திய சந்தையில் புதிய கவசாகி Z H2 சீரிஸ் மாடல்கள் டுகாட்டி ஸ்டிரீட்ஃபைட்டர் V4 மற்றும் பிஎம்டபிள்யூ S 1000 R மாடல்களுக்கு போட்டியாக அமைகின்றன. இரு மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டு வந்தது.
    • புதிய SP160 மாடலில் 162.71சிசி, சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய கம்யுட்டர் மாடலை SP160 என்ற பெயரில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஹோண்டா நிறுவனத்தின் இரண்டாவது SP மோட்டார்சைக்கிள் ஆகும். முன்னதாக ஹோண்டா SP125 மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாக புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டு வந்த நிலையில், தற்போது SP160 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கம்யுட்டர் டிசைன் கொண்டிருக்கும் போதிலும், ஹோண்டா SP160 மாடல் இளமை மிக்க தோற்றம் கொண்டிருக்கிறது. புதிய ஹோண்டா SP160 மாடல் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது.

     

    புதிய SP160 மாடலில் 162.71சிசி, சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 13.2 ஹெச்பி பவர், 14.59 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. யுனிகான் மாடலின் என்ஜின் திறன், போர் ஸ்டிரோக் மற்றும் செயல்திறன் உள்ளிட்டவை ஒரே மாதிரி இருக்கிறது. அந்த வகையில், இரு மாடல்களிலும் ஒரே என்ஜின் வழங்கப்பட்டு இருக்கலாம்.

    அம்சங்களை பொருத்தவரை புதிய SP160 மாடலில் முழுமையான டிஜிட்டல் கன்சோல், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப்மீட்டர், சைடு ஸ்டான்டு இன்டிகேட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், ஃபியூவல் லெவல் ரீட்-அவுட், கடிகாரம் மற்றும் சராசரி எரிபொருள் பயன்பாட்டு விவரங்கள் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட், பல்பு இன்டிகேட்டர்கள் உள்ளன.

    புதிய ஹோண்டா பைக்கின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு 276mm முன்புற டிஸ்க், பின்புறம் 220mm டிஸ்க் அல்லது 130mm ரியர் டிரம் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 12 லிட்டர் பியூவல் டேன்க் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹோண்டா SP160 சிங்கில் டிஸ்க் கொண்ட மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 500 என்றும் இரட்டை டிஸ்க் கொண்ட வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 21 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரும் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் ஹோண்டா SP160 மாடல் பஜாஜ் பல்சர் 150 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    ×