search icon
என் மலர்tooltip icon

    பைக்

    140 கி.மீ. ரேன்ஜ்.. ஸ்போர்ட் லுக்கில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் - டி.வி.எஸ். அசத்தல்
    X

    140 கி.மீ. ரேன்ஜ்.. ஸ்போர்ட் லுக்கில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் - டி.வி.எஸ். அசத்தல்

    • டி.வி.எஸ். எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புதிய டிசைன் கொண்டிருக்கிறது.
    • இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 140 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. எக்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இளைஞர்களை கவரும் வகையிலான ஸ்டைலிங் மற்றும் அசத்தல் தோற்றம் கொண்டிருக்கிறது.

    புதிய டி.வி.எஸ். எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கிறது. இதன் தோற்றம் க்ரியான் கான்செப்ட் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடல் சில ஆண்டுகளுக்கு முன்பு காட்சிக்கு வைக்கப்பட்டது. இதில் எல்.இ.டி. மின்விளக்குகள், 10.2 அங்குல அளவில் டி.எஃப்.டி. ஸ்கிரீன், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இதில் உள்ள 4.44 கிலோவாட் ஹவர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 140 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. மேலும் இதில் உள்ள மோட்டார்கள் அதிகபட்சம் 11 கிலோவாட் வரையிலான திறன் கொண்டிருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 2.6 நொடிகளில் எட்டிவிடும்.

    ஹார்டுவேர் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், 220mm முன்புற டிஸ்க், பின்புறத்தில் 195mm டிஸ்க் பிரேக் மற்றும் சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய டி.வி.எஸ். எக்ஸ் ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் ஆகும். இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 2 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×