என் மலர்
பைக்
- இதில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
- இந்த ஸ்கூட்டர் 108 கிலோமீட்டர்கள் வரை ரேன்ஜ் வழங்குகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது. இதன் மூலம் செட்டாக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் என்று மாறிவிடும். இந்த சலுகை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா என இரண்டு மாநிலங்களில் மட்டுமே பொருந்தும். இதன் காரணமாக மற்ற மாநிலங்களில் செட்டாக் ஸ்கூட்டர் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த சலுகை மற்றும் தள்ளுபடி ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் பஜாஜ் நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் களமிறங்கியது. தற்போது இந்த மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 108 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதில் உள்ள பேட்டரியை ஐந்து மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். இந்த வேரியண்ட் தவிர பஜாஜ் நிறுவனம் சற்றே குறைந்த விலையில் புதிய செட்டாக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஏத்தர் நிறுவன ஸ்கூட்டர் மாடல்களுக்கு பண்டிகை கால சலுகைகள் வழங்கப்படுகிறது.
- பண்டிகை கால சலுகைகள் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி எக்சேன்ஜ், கார்ப்பரேட் மற்றும் பண்டிகை கால சலுகைகள் வழங்கப்படுகின்றன.
வாடிக்கையாளர்கள் ஏத்தர் 450X (2.9 கிலோவாட் ஹவர், 3.7 கிலோவாட் ஹவர்) மற்றும் ஏத்தர் 450S (2.9 கிலோவாட் ஹவர்) மாடல்களை வாங்கும் போது எக்சேன்ஜ் முறையில் ரூ. 40 ஆயிரம் வரை தள்ளுபடி பெற முடியும். எனினும், இந்த தொகை வாடிக்கையாளர்கள் எக்சேன்ஜ் செய்யும் பெட்ரோல் இருசக்கர வாகனத்தின் நிலை, வயது மற்றும் வாங்கும் போது அதன் உண்மையான விலை உள்ளிட்டவைகளை பொருத்து நிர்ணயம் செய்யப்படும்.

ஏத்தர் 450S மாடலுக்கு பண்டிகை கால பலனாக ப்ரோ வெர்ஷனுக்கு ரூ. 5 ஆயிரமும், கார்ப்பரேட் பலனாக ரூ. 1500 வழங்கப்படுகிறது. ஏத்தர் 450X மாடலுக்கும் இதேபோன்ற கார்ப்பரேட் சலுகை வழங்கப்படுகிறது. 24 மாதங்களுக்கு மாத தவணையை பயன்படுத்தும் போது 5.99 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் நவம்பர் 15-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
புதிய சலுகைகளின் கீழ் எக்சேன்ஜ் முறையில் முழுமையான தள்ளுபடி பெறும் போது ஏத்தர் 450S விலை ரூ. 86 ஆயிரத்திற்கும், 450X விலை ரூ. 1 லட்சத்திற்கும் குறைந்து விடும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- மோட்டார்சைக்கிள்களின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
- முந்தைய விலையை விட ரூ. 4 லட்சத்து 30 ஆயிரம் வரை குறைவு ஆகும்.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு விசேஷ சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பேன் அமெரிக்கா 1250 ஸ்பெஷல், ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மற்றும் நைட்ஸ்டர் போன்ற மாடல்களின் 2022 வெர்ஷன்களுக்கு தள்ளுபடி அறிவித்து இருக்கிறது.
ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 ஸ்பெஷல் எடிஷன் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 4 லட்சத்து 90 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. விலை குறைப்பின் படி இந்த மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 09 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த பைக் ரூ. 20 லட்சத்து 99 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 51 ஆயிரத்தில் இருந்து ரூ. 12 லட்சத்து 06 ஆயிரம் என்று மாற்றப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த பைக்கின் விலை ரூ. 4 லட்சத்து 45 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று நைட்ஸ்டர் மாடலின் விலை ரூ. 14 லட்சத்து 99 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 லட்சத்து 69 ஆயிரம் என்று குறைக்கப்பட்டு இருக்கிறது. இது அதன் முந்தைய விலையை விட ரூ. 4 லட்சத்து 30 ஆயிரம் வரை குறைவு ஆகும்.
தற்போதைய விலை குறைப்பின் படி ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- ஐந்து ஆண்டுகளுக்கு இலவச நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது.
- ரூ. 24 ஆயிரத்து 500 வரையிலான பலன்களை பெற முடியும்.
பெங்களூரை சேர்ந்த ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் பாரத் இ.வி. ஃபெஸ்ட் என்ற பெயரில் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சிறப்பு விற்பனை அக்டோபர் 16-ம் தேதி துவங்கியது. இதில் பயனர்கள் ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் போது அதிகபட்சம் ரூ. 24 ஆயிரத்து 500 வரையிலான பலன்களை பெற முடியும்.
இதில் ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள ஐந்து ஆண்டுகளுக்கு பேட்டரி வாரண்டி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி, ரூ. 7 ஆயிரத்து 500 வரையிலான தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஒலா S1 ப்ரோ ஜென் 2 மாடலை வாங்குவோருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இலவச நீட்டிக்கப்பட்ட வாரண்டியும், S1 ஏர் மாடலை வாங்கும் போது 50 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் தங்களின் பழைய பெட்ரோல் இருசக்கர வாகனத்தை கொடுத்து ரூ. 10 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் பெற முடியும்.
மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு மாத தவணை முறை சலுகைகளுக்கு ரூ. 7 ஆயிரத்து 500 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இவைதவிர முன்பணம் இன்றி, சேவை கட்டணங்கள் இன்றி, 5.99 சதவீத வட்டியில் நிதி சலுகைகளும் வழங்கப்படுகிறது.
ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு பரிந்துரை செய்து ஒலா கேர் பிளஸ் மற்றும் ரூ. 2 ஆயிரம் வரை கேஷ்பேக் பெற முடியும். புதிய திட்டத்தின் கீழ் பயனர்கள் ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் பெறலாம்.
இந்திய சந்தையில் ஒலா நிறுவனம் தற்போது S1X, S1 ஏர், S1 ப்ரோ போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் S1 ப்ரோ ஜென் 2 மாடலின் வினியோகத்தை சமீபத்தில் துவங்கியது.
- டெயில் பகுதியில் புதிய கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
- புதிய டியூக் 790 மாடலில் LC8c என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
கே.டி.எம். நிறுவனம் 2024 790 டியூக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய டியூக் 790 மாடல் விரைவில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், டியூக் 790 மாடல் அதன் செயல்திறன் மற்றும் அசத்தலான தோற்றத்திற்காக அதிக பிரபலமான மாடலாக இருக்கிறது.
2024 மாடலில் கே.டி.எம். நிறுவனம் டியூக் 790 மோட்டார்சைக்கிளை கிரே மற்றும் ஆரஞ்சு என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் ஃபியூவல் டேன்க் எக்ஸ்டென்ஷன் மற்றும் டெயில் பகுதியில் புதிய கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய டியூக் 790 மாடலில் LC8c என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்.பி. பவர், 87 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் 43mm யு.எஸ்.டி. பின்புறம் பிரீலோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் உள்ளது.
பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் 300mm டுவின் டிஸ்க்குகள், பின்புறம் 240mm டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் நான்கு ரைடிங் மோட்கள் உள்ளன. இத்துடன் டி.எஃப்.டி. கலர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஸ்கிரம்ப்ளர் 400X மாடலின் டிசைன் ஸ்பீடு மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஸ்கிராம்ப்ளர் 400X மாடலில் 399சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் உள்ளது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஸ்கிராம்ப்ளர் 400X மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 2 லட்சத்து 62 ஆயிரத்து 996, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டிரையம்ப் ஸ்பீடு 400 போன்றே ஸ்கிராம்ப்ளர் 400X மாடலும் இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
புதிய டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400X மாடலின் டிசைன் ஸ்பீடு மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த மாடலிலும் வட்ட வடிவம் கொண்ட எல்.இ.டி. ஹெட்லைட், டர்ன் இண்டிகேட்டர்கள், ஃபியூவல் டேன்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் உயரமான ஸ்டான்ஸ், ஹெட்லைட் கிரில், ஸ்ப்லிட் சீட், ஹேண்டில்பார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400X மாடலில் 399சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 39.5 ஹெச்.பி. பவர், 37.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. மேலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை எல்.இ.டி. லைட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட், ரைடு-பை-வயர், ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏ.பி.எஸ்., செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனை பொருத்தவரை யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க்குகள், மோனோஷாக் வழங்கப்பட்டு உள்ளது.
- ஃபியூவல் டேன்க் மீது பிரமாண்ட கிராஃபிக்ஸ் மற்றும் லெகசி எடிஷன் பேட்ஜ் வழங்கப்படுகிறது.
- இந்த மாடலில் ஆப்ஷனல் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வசதி உள்ளது.
ஹோண்டா நிறுவனம் தனது ஹைனெஸ் CB350 மோட்டார்சைக்கிளின் லெகசி எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய லெகசி எடிஷன் மாடல் பியல் சைரென் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் ஃபியூவல் டேன்க் மீது பிரமாண்ட கிராஃபிக்ஸ் மற்றும் லெகசி எடிஷன் பேட்ஜ் வழங்கப்படுகிறது. காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலில் வட்ட வடிவிலான டிசைன், க்ரோம் அம்சங்கள் உள்ளது.

இத்துடன் செமி டிஜிட்டல் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், ஆப்ஷனல் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 348.36சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.78 ஹெச்.பி. பவர், 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் டபுள் கிராடிள் ஃபிரேம், 19-18 இன்ச் அலாய் வீல், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டூயல் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 310mm டிஸ்க், பின்புறத்தில் 240mm டிஸ்க் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 15 லிட்டர் ஃபியூவல் டேன்க் உள்ளது.
இந்திய சந்தையில் ஹோண்டா ஹைனெஸ் CB350 மாடல் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா ஸ்டாண்டர்டு, பெனலி இம்பீரியல் 400 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- டெஸ்டிங் செய்யப்படும் மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது.
- பஜாஜ் நிறுவனத்தின் சன்னி 60சிசி 2-ஸ்டிரோக் ஸ்கூட்டர் விற்பனையில் இருந்து வந்தது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது மிகவும் பிரபல ஸ்கூட்டர் பிராண்டு, சன்னி-யை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர இருப்பதாக தெரிகிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ப்ரோடோடைப் மாடல் பூனே அருகில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
புகைப்படங்களின் படி பஜாஜ் நிறுவனம் சன்னி ஸ்கூட்டரை எலெக்ட்ரிக் வடிவில் உருவாக்கி இருப்பதாக தெரிகிறது. டெஸ்டிங் செய்யப்படும் மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் ஒட்டுமொத்த ஸ்டைலிங் மற்றும் பாடி பேனல்கள் சன்னி ஸ்கூட்டரை போன்றே காட்சியளிக்கின்றன.

இந்திய சந்தையில் பஜாஜ் நிறுவனத்தின் சன்னி 60சிசி 2-ஸ்டிரோக் ஸ்கூட்டர் பல ஆண்டுகளாக விற்பனையில் இருந்து வந்தது. தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செட்டாக் ஸ்கூட்டரை மட்டுமே இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல் பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.
அதன்படி பஜாஜ் நிறுவனம் புதிய சன்னி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டுவரலாம் என்று தெரிகிறது. தற்போதைய தகவல்களில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்றே கூறப்படுகிறது.
Photo Courtesy: Autocarindia
- எக்ஸ்டிரீம் மற்றும் எக்ஸ்பல்ஸ் மாடல்களுக்கு அதிக விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது.
- சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கரிஸ்மா XMR விலையை உயர்த்தியது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் விலையை அக்டோபர் 3-ம் தேதியில் இருந்து உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த முறை ஹீரோ இருசக்கர வாகனங்கள் விலை 1 சதவீதம் வரை அதிகரிக்கிறது.
ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வில் வேறுபாடு இருக்கும் என்று தெரிகிறது. இந்த விலை உயர்வில் ஸ்பிலெண்டர் மற்றும் பேஷன் உள்ளிட்டவைகளின் விலை குறைந்த அளவிலேயே உயரும் என்று கூறப்படுகிறது. மாறாக எக்ஸ்டிரீம் மற்றும் எக்ஸ்பல்ஸ் மாடல்களுக்கு அதிக விலை உயர்வு அறிவிக்கப்பட இருக்கிறது.
சமீபத்தில் தான் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கரிஸ்மா XMR விலையில் ரூ. 7 ஆயிரத்தை உயர்த்தியது. அந்த வகையில், தற்போதைய விலை உயர்வில் இந்த மாடல் சேர்க்கப்படாது என்று கூறப்படுகிறது. பண்டிகை காலம் துவங்க இருப்பதை தொடர்ந்து பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகன விலையை அதிகப்படுத்தி வருகின்றன.
விலை உயர்வு ஒருபக்கம் இருந்தாலும், மறுபுறம் விற்பனையை அதிகப்படுத்தும் சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்ட பலன்களை வாகன விற்பனையாளர்கள் அறிவிப்பர் என்று தெரிகிறது.
- பஜாஜ் பல்சர் N150 மாடலில் 149.6 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் உள்ளது.
- பல்சர் N150 மாடல் மூன்று நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய இருசக்கர வாகனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பல்சர் N150 மாடல் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மூன்றாவது 150சிசி பைக் ஆகும். இதுதவிர பஜாஜ் பல்சர் P150 மற்றும் பல்சர் 150 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
பல்சர் N150 மாடலின் தோற்றம் N160 மாடலில் உள்ளதை போன்ற டிசைன் கொண்டிருக்கிறது. இதில் எல்.இ.டி. ப்ரோஜெக்டர், இரண்டு எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எல்.சி.டி. செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
புதிய பல்சர் மாடலில் 149.6 சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் உள்ளது. இந்த என்ஜின் 14.5 ஹெச்.பி. பவர், 13.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் ரியர் ஷாக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 260mm டிஸ்க், பின்புறம் 130mm டிஸ்க் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய பஜாஜ் பல்சர் N150 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 134, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பஜாஜ் பல்சர் N150 மாடல் ரேசிங் ரெட், எபோனி பிளாக் மற்றும் மெட்டாலிக் பியல் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய பஜாஜ் பல்சர் N150 மாடல் டி.வி.எஸ். அபாச்சி RTR 160 4V, சுசுகி ஜிக்சர் மற்றும் ஹீரோ எக்ஸ்டிரீம் 160R போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடலில் தனித்துவம் மிக்க கூர்மையான ஹெட்லைட் உள்ளது.
- இந்த மாடலில் 210சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முற்றிலும் புதிய கரிஸ்மா XMR விலையை உயர்த்துகிறது. அதன்படி அக்டோபர் 1-ம் தேதி முதல் கரிஸ்மா XMR விலை ரூ. 7 ஆயிரம் உயர்த்தப்படுகிறது. முன்னதாக ரூ. 1 லட்சத்து 72 ஆயிரத்து 900 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ கரிஸ்மா XMR அடுத்த மாதம் முதல் ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 900 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய கரிஸ்மா XMR 210 மாடலில் இளைஞர்களை கவரும் வகையிலான டிசைன், தனித்துவம் மிக்க கூர்மையான ஹெட்லைட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்-ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் பாடிவொர்க்-இல் மெல்லிய சைடு ஃபேரிங்குகள் உள்ளன. இவை என்ஜின் மற்றும் சேசிஸ்-ஐ மறைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

இத்துடன் 2023 ஹீரோ கரிஸ்மா XMR 210 முற்றிலும் அசத்தலான தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 210சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 25.15 ஹெச்.பி. பவர், 20.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப், அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடல் சுசுகி ஜிக்சர் SF 250, யமஹா R15 V4 மற்றும் பஜாஜ் பல்சர் RS200 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
- நாடு முழுக்க 25 நகரங்கள் மற்றும் 45 மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் ரென்டல்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுக்க 25 நகரங்கள் மற்றும் 45 மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 300-க்கும் அதிக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பயன்படுத்த முடியும்.

"உண்மையான மோட்டார்சைக்கிள் அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற எங்களின் எண்ணத்தை நிறைவேற்றியதில் எங்களது மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் மெக்கானிக்குகள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர். எங்களது முயற்சிகளுடன், இவர்கள் எங்களது மோட்டார்சைக்கிள்களை நீண்டதூரம் பயணிக்க செய்துள்ளனர்," என்று ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மூத்த பிராண்டு அலுவலர் மோஹித் தார் ஜெயல் தெரிவித்து இருக்கிறார்.
"ராயல் என்ஃபீல்டு ரென்டல்ஸ் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் மோட்டார்சைக்கிளை வாடக்கைக்கு எடுத்துக் கொள்ள முடியும். இதோடு மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்களுக்கு நாங்கள் வழங்கி வரும் சேவையை மேலும் அதிகப்படுத்திக் கொள்ளவும் இது உதவியாக இருக்கும்," என்று அவர் மேலும் தெரவித்தார்.






