search icon
என் மலர்tooltip icon

    பைக்

    கரிஸ்மா XMR விலையில் திடீர் மாற்றம்: ஹீரோ மோட்டோகார்ப் அதிரடி
    X

    கரிஸ்மா XMR விலையில் திடீர் மாற்றம்: ஹீரோ மோட்டோகார்ப் அதிரடி

    • ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடலில் தனித்துவம் மிக்க கூர்மையான ஹெட்லைட் உள்ளது.
    • இந்த மாடலில் 210சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் உள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முற்றிலும் புதிய கரிஸ்மா XMR விலையை உயர்த்துகிறது. அதன்படி அக்டோபர் 1-ம் தேதி முதல் கரிஸ்மா XMR விலை ரூ. 7 ஆயிரம் உயர்த்தப்படுகிறது. முன்னதாக ரூ. 1 லட்சத்து 72 ஆயிரத்து 900 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ கரிஸ்மா XMR அடுத்த மாதம் முதல் ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 900 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய கரிஸ்மா XMR 210 மாடலில் இளைஞர்களை கவரும் வகையிலான டிசைன், தனித்துவம் மிக்க கூர்மையான ஹெட்லைட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்-ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் பாடிவொர்க்-இல் மெல்லிய சைடு ஃபேரிங்குகள் உள்ளன. இவை என்ஜின் மற்றும் சேசிஸ்-ஐ மறைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

    இத்துடன் 2023 ஹீரோ கரிஸ்மா XMR 210 முற்றிலும் அசத்தலான தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 210சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 25.15 ஹெச்.பி. பவர், 20.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப், அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடல் சுசுகி ஜிக்சர் SF 250, யமஹா R15 V4 மற்றும் பஜாஜ் பல்சர் RS200 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×