search icon
என் மலர்tooltip icon

    பைக்

    புதிய மாற்றங்களுடன் ஹைனெஸ் CB350 லெகசி எடிஷன் இந்தியாவில் அறிமுகம்
    X

    புதிய மாற்றங்களுடன் ஹைனெஸ் CB350 லெகசி எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

    • ஃபியூவல் டேன்க் மீது பிரமாண்ட கிராஃபிக்ஸ் மற்றும் லெகசி எடிஷன் பேட்ஜ் வழங்கப்படுகிறது.
    • இந்த மாடலில் ஆப்ஷனல் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வசதி உள்ளது.

    ஹோண்டா நிறுவனம் தனது ஹைனெஸ் CB350 மோட்டார்சைக்கிளின் லெகசி எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய லெகசி எடிஷன் மாடல் பியல் சைரென் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் ஃபியூவல் டேன்க் மீது பிரமாண்ட கிராஃபிக்ஸ் மற்றும் லெகசி எடிஷன் பேட்ஜ் வழங்கப்படுகிறது. காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலில் வட்ட வடிவிலான டிசைன், க்ரோம் அம்சங்கள் உள்ளது.

    இத்துடன் செமி டிஜிட்டல் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், ஆப்ஷனல் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 348.36சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.78 ஹெச்.பி. பவர், 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்த மோட்டார்சைக்கிளில் டபுள் கிராடிள் ஃபிரேம், 19-18 இன்ச் அலாய் வீல், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டூயல் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 310mm டிஸ்க், பின்புறத்தில் 240mm டிஸ்க் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 15 லிட்டர் ஃபியூவல் டேன்க் உள்ளது.

    இந்திய சந்தையில் ஹோண்டா ஹைனெஸ் CB350 மாடல் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா ஸ்டாண்டர்டு, பெனலி இம்பீரியல் 400 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×