என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஆடி நிறுவனத்தின் புத்தம் புதிய ஏ8எல் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆடி இந்தியா நிறுவனம் விரைவில் புதிய கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த வகையில் ஜனவரி மாதத்தில் புதிய கியூ8 ஃபிளாக்ஷிப் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த வரிசையில் ஆடி நிறுவனம் புதிய ஏ8எல் மாடலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் செடான் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், ஜாகுவார் எக்ஸ்.எல். ஜெ மற்றும் பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
புதிய ஆடி ஏ8எல் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்தியாவில் இந்த கார் அவுரங்கபாத்தில் உள்ள ஆலையில் அசெம்பில் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்.எல்.வி. இவோ பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் புதிய ஆடி ஏ8எல் கார் 5,302 எம்.எம். நீளமாகவும், 1945 எம்.எம். அகலம் மற்றும் 1,488 எம்.எம். உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 3,128 எம்.எம். ஆகும்.
புதிய ஆடி ஏ8எல் காரில் எல்.இ.டி. மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப்கள், ஆடியின் விர்ச்சுவல் காக்பிட், 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு மசாஜ் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் லெவல் 3 ஆட்டோனோமஸ் தொழில்நுட்பம் வழங்கப்படலாம்.
ஆடி ஏ8எல் மாடலில் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் மற்றும் 3.0 லிட்டர் வி6 டீசல் மோட்டாருடன் வரும் என தெரிகிறது. இவற்றில் முதற்கட்டமாக பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் டீசல் மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அல்ட்ரோஸ் காரின் முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது.
இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் காருக்கான முன்பதிவு துவங்கியது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய காருக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறது. முன்பதிவு துவங்கியதை புதிய வீடியோ டீசர் மூலம் டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது.
டாடா அல்ட்ரோஸ் கார் ஆன்லைன் அல்லது நாடு முழுவதிலும் இயங்கி வரும் விற்பனை மையங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாடா அல்ட்ரோஸ் விற்பனை இந்தியாவில் ஜனவரி 2020 வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் டாட் நிவறுவனத்தின் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக அல்ட்ரோஸ் கார் இருக்கிறது. டாடா அல்ட்ரோஸ் கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாகியுள்ளது. டாடா ஹேரியர் மாடலை தொடர்ந்து இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாகி இருக்கும் இரண்டாவது கார் மாடலாக டாடா அல்ட்ரோஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டாடா நிறுவனம் புதிய அல்ட்ரோஸ் காரை நேரடியாக பி.எஸ். 6 விதகளுக்கு பொருந்தும் என்ஜின் ஆப்ஷன்களில் வெளியிட முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அல்ட்ரோஸ் காரின் வெளியீடு தாமதமாகி இருப்பதாக தெரிகிறது.
இந்திய சந்தையில் டாடா அல்ட்ரோஸ் கார் மாருதி சுசுகி பலேனோ, டொயோட்டா கிளான்சா மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
கவசாகி நிறுவனத்தின் 2020 இசட்900 பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
கவசாகி இந்தியா நிறுவனம் பி.எஸ்.6 இசட்900 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய எம்.வை.20 கவாசகி இசட்900 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் துவக்க விலை ரூ. 8.50 லட்சம் மற்றும் ரூ. 9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கவாசகி இசட்900 பி.எஸ்.6 மாடலில் 948சிசி இன்-லைன் நான்கு லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 123 பி.ஹெச்.பி. பவர் @9500 ஆர்.பி.எம். மற்றும் 98.4 என்.எம். டார்க் @7700 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
2020 கவாசகி இசட்900 பி.எஸ்.6 மாடலில் ஹெட்லேம்ப், டெயில்லேம்ப்களுக்கு எல்.இ.டி. லைட்டிங், 4.3 இன்ச் டி.எஃப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ரைடியாலஜி செயலியின் மூலம் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. புதிய மாடலில் பவர் மோட் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

கவாசகி இசட்900 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் டூயல் டோன் நிறங்கள்: மெட்டாலிக் கிராஃபைட் கிரே / மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் மற்றும் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் / மெட்டாலிக் ஃபிளாட் ஸ்பார்க் பிளாக் கிடைக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் மாற்றங்கள் மற்றும் அப்டேட்களை தவிர புதிய கவாசகி இசட்900 மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், இதன் சஸ்பென்ஷனில் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாடலிலும் முன்புறம் 41 எம்.எம். யு.எஸ்.டி. ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் கார் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய டாடா கார் 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பை படங்களில் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் கார் இம்பேக்ட் 2.0 வடிவமைப்பில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் புதிய வடிவமைப்பு கொண்ட ஹனிகொம்ப் மெஷ் கிரிஸ், மெல்லிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், சிக்னல் இன்டிகேட்டர்கள் காணப்படுகின்றன. டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பம்ப்பர், ஃபாக் லேம்ப் ஹவுசிங் போன்றவையும் வழங்கப்படுகின்றன.

காரின் உள்புறம் 7.0 இன்ச் ஹார்மன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகிறது. இதே அம்சங்கள் தற்சமயம் விற்பனையாகும் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.
டிகோர் டீசல் மாடல்களை பி.எஸ். 6 ரகத்திற்கு அப்டேட் செய்ய அதிக முதலீடுகள் தேவைப்படும் என்பதால், இவற்றின் விற்பனையை நிறுத்த டாடா மோட்டார்ஸ் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமே விற்பனை செய்யப்படலாம்.
தற்போதைய மாடல்களில் 1.2 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 84 பி.ஹெச்.பி. பவர், 114 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய பி.எஸ். 6 வெர்ஷனின் செயல்திறன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. டிரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
புகைப்படம் நன்றி: ElectricVehicleWeb
ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார் வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ரெனால்ட் நிறுவனம் தனது டிரைபர் காரை தென்னாப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கி இருக்கிறது. சமீபத்தில் ரெனால்ட் டிரைபர் கார் இந்திய விற்பனையில் 20,000 யூனிட்கள் விற்பனையை கடந்தது.
டிரைபர் காரில் பம்ப்பர் சற்று தடிமனாகவும், ஃபாக் லேம்ப் மற்றும் எல்.இ.டி. உள்ளிட்டவை அதிலேயே வழங்கப்பட்டுள்ளன. இதன் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப் பார்க்க பிரீமியம் தோற்றத்தை கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய அலாய் வீல்கள், கேரக்டர் லைன், ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளது.

காரின் பக்கவாட்டில் கருப்பு நிற கிளாடிங், பிளேர்டு வீல் ஆர்ச்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரின் பின்புறம் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் பிரத்யேக டெயில் லேம்ப்கள், சிக்னல் இன்டிகேட்டர்கள், ரிவர்ஸ் லேம்ப் வழங்கப்பட்டுள்ளன.
ரெனால்ட் டிரைபர் கார் 1.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் ரெனால்ட் க்ளியோ மற்றும் சான்ட்ரியோ போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 71 பி.ஹெச்.பி. பவர், 96 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஈசி ஆர் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரெனால்ட் டிரைபபர் கார் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
மஹிந்திரா நிறுவன கார் மாடலுக்கு ரூ. 4 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் தனது அல்டுராஸ் ஜி4 எஸ்.யு.வி. மாடலை வாங்குவோருக்கு ரூ. 4 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை டிசம்பர் 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. மேலும் சலுகை விற்பனையாளரை பொருத்து வேறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மராசோ மாடலுக்கு ரூ. 1.71 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக மராசோ இருக்கிறது. மேலும் 4 ஸ்டார் குளோபல் NCAP பெறும் மஹிந்திராவின் முதல் வாகனமாக இது இருக்கிறது. அந்த வகையில் இந்த பிரிவு வாகனங்களில் பாதுகாப்பான மாடலாக இது இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 மாடலுக்கு ரூ. 84,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு புதிய எக்ஸ்.யு.வி.500 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதேபோன்று மஹிந்திரா டி.யு.வி.300 மாடலுக்கு ரூ. 75,000 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் எக்ஸ்.யு.வி.300 மாடலுக்கு ரூ. 70,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஸ்கார்பியோ மாடலுக்கு ரூ. 60,000 வரையிலும், பொலிரோ மாடலுக்கு ரூ. 47,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள மாடல்களில் மஹிந்தியா கே.யு.வி.100 எலெக்ட்ரிக் வேரியண்ட் மட்டும் இடம்பெறவில்லை.
சுசுகி நிறுவனத்தின் அக்சஸ் பி.எஸ். 6 ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2020 சுசுகி அக்சஸ் பி.எஸ். 6 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புத்தம் புதிய சுசுகி அக்சஸ் பி.எஸ். 6 மாடலில் இகோ-அசிஸ்ட் இலுமினேஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்கூட்டரின் எரிபொருள் தேவையை குறைக்கும்.
இத்துடன் வெளிப்புற ஃபியூயல் ஃபில்லர் கேப், புதிய வடிவமைப்பு கொண்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப், ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டரில் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.6 பி.ஹெச்.பி. பவர், 10 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்த ஸ்கூட்டரில் உள்ள புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப் நீண்ட தூரத்திற்கு வெளிச்சத்தை பாய்ச்சும் திறன் கொண்டதாகும். மேலும் யு.எஸ்.பி. சாக்கெட் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுசுகி அக்சஸ் 125 பி.எஸ். 6 ஸ்கூட்டரில் பயணிக்கும் போதே ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

பி.எஸ். 4 மாடலை விட அதிகளவு மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என சுசுகி எதிர்பார்க்கிறது. மேலும் இதில் உள்ள புதிய அம்சங்கள் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தும் என சுசுகி தெரிவித்துள்ளது.
தற்சமயம் விற்பனை செய்யப்படும் சுசுகி அக்சஸ் ஸ்கூட்டர் ரூ. 59,994 (எக்ஸ் ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் பி.எஸ். 6 வெர்ஷன் விலை ரூ. 8000 முதல் ரூ. 10,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XP பிளஸ் டிராக்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் இந்த வருட பொங்கலுக்கு புதிய XP பிளஸ் சீரிஸ் டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறந்த செயல்திறனுடன் கூடிய எரிபொருள் சிக்கனம் கொண்டதாக விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது இந்த புதிய மாடல் டிராக்டர்.
இன்றைய விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அதிக செயல்திறன், உறுதியான கட்டமைப்பு, குறைந்த எரிபொருள் தேவை, சிறந்த நம்பகத்தன்மை போன்ற அம்சங்களுடன் வந்துள்ளன மஹிந்திரா XP பிளஸ் சீரிஸின் 275XP பிளஸ் ELS DI (37 HP) 475 XP பிளஸ் ELS DI (44 HP) மற்றும் 575 XP பிளஸ் ELS DI (47 HP) என்ஜின்கள் கொண்ட இந்த புதிய டிராக்டர்களின் அணி வகுப்பு.

மஹிந்திராவின் பூமிபுத்தா சீரிஸ் என்ஜின்கள் 30-50 ஹெச்பி சக்தி கொண்டவைகளாக ட்ராக்டர் சந்தையில் வெற்றி பெற்று திகழ்கிறது. தற்போது XP பிளஸ் சீரிஸ் அதிகரிக்கப்பட்ட சக்தி கொண்ட எக்ஸ்ட்ரா லாங் ஸ்ட்ரோக (ELS) என்ஜின்களை கொண்டுள்ளதால் அதிக செயல்திறனும் அதிக இழுக்கும் திறனும் (டார்க்) கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய டிராக்டர்களின் வெளிப்புறத் தோற்றமும் கருப்பு மற்றும் சில்வர் நிறம் கொண்ட அழகிய ஹெட்லைட்களுடன் கம்பீரமாக தோற்றமளிக்கிறது. 6 வருட உத்திரவாதத்துடன், சிறந்த எரிபொருள் சிக்கனம், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் அதிக சொகுசு அம்சங்களுடன் வந்துள்ளது மஹிந்திரா XP பிளஸ் சீரிஸ்.
மேலும் இந்த டிராக்டர்கள் 49 பைசா குறைவான வட்டி விகிதத்திலும் தவணையில் வாங்குவோருக்கு முதல் தவணை இலவசமாகவும் குறைவான முன் பணம் செலுத்தியும் வாங்கக்கூடிய வசதி கொண்டுள்ளன.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய செடான் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறை கியா ஆப்டிமா செடான் காரை உருவாக்கியுள்ளது. இதற்கு ‘கே5’ என பெயர் சூட்டியுள்ளது. சொகுசு மாடல் கார்களுக்குரிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் முன்பகுதி திமிங்கலத்தின் மூக்கு முனை போன்று உள்ளது. முன்புற கிரில் புலியின் முகம் போன்று உள்ளது. இவை அனைத்தையும் சேர்த்து பார்க்கும்போது காருக்கு கம்பீரமான தோற்றம் கிடைக்கிறது. 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. 10.5 இன்ச் தொடுதிரை மற்றும் 8 இன்ச் ஹெட் அப் டிஸ்பிளே ஆகியன உள்ளன.
போதிய அளவு வெளிச்சம், வயர்லெஸ் போன் சார்ஜிங் வசதி மற்றும் 12 போஸ் ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் உள்ளது. இந்த கார் டர்போ சார்ஜ்டு என்ஜினைக் கொண்டுள்ளது. 1.6 லிட்டர் முதல் 2.5 லிட்டர் வரை திறன் கொண்டதாக என்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 2.5 லிட்டர் டர்போ சார்ஜ்டு என்ஜின் 286 பி.ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும்.

8 ஸ்பீடு டியூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியோடு வந்துள்ளது. அனைத்து சக்கர சுழற்சி கொண்ட மாடலும் சில வேரியன்ட்களில் கிடைக்கின்றன. புத்தாண்டில் அறிமுகமாக உள்ள இந்த காரில் ஹைபிரிட் மாடலை அறிமுகம் செய்யவும் கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்புக்கு வசதியாக இதில் 9 ஏர்பேக்குகள் உள்ளன. மேம்பட்ட டிரைவர் உதவி (ஏ.டி.ஏ.எஸ்.) மற்றும் ரிமோட் மூலம் பார்க் செய்யும் (ஆர்.எஸ்.பி.ஏ.) வசதி கொண்டது. இதன் மூலம் வெளியிலிருந்தபடியே காரை பார்க் செய்யவும், பார்க் செய்த இடத்திலிருந்து கொண்டு வரவும் முடியும்.
இந்த காரை ஸ்டார்ட் செய்து 6.6 விநாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கி.மீ. வேகத்தை தொட்டுவிடமுடியும். குரல் வழி கட்டுப்பாடு மூலமும் இந்த காரை செயல்படுத்தும் வசதி உள்ளது. டெல்லியில் புத்தாண்டில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் இந்த கார் காட்சிப்படுத்தப்படுகிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் பி.எஸ். 6 ரக இருசக்கர வாகனங்கள் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் ஆக்டிவா 125 பி.எஸ். 6 மற்றும் 125சிசி மோட்டார்சைக்கிள் எஸ்.பி. 125 மாடல்கள் 60,000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பி.எஸ். 6 மாடல்கள் இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.
ஹோண்டா அக்டிவா 125 மாடலின் முன்புறம் சற்று மாற்றப்பட்டு, எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய மாற்றங்கள் ஸ்கூட்டருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. ஹோன்டா ஆக்டிவா 125 பி.எஸ். 6 ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ. 67,490 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகமாகி இருக்கிறது.

ஹோண்டா எஸ்.பி. 125 மாடலில் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 10.7 பி.ஹெச்.பி. @7500 ஆர்.பி.எம். மற்றும் 10.9 என்.எம். டார்க் @9000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
புதிய எஸ்.பி. 125 மாடலில் ஹோண்டாவின் ஹெச்.இ.டி. அம்சம் வழங்கப்படுகிறது. இது மோட்டார்சைக்கிளின் மைலேஜ், என்ஜின் பயன்பாடு போன்றவற்றை மேம்படுத்தி என்ஜினில் இருந்து வரும் சத்தத்தை குறைக்கும்.
ஹோண்டா எஸ்.பி. 125 விலை ரூ. 72,900 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா எஸ்.பி. 125 டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஹோண்டா எஸ்.பி. 125 டிஸ்க் வேரியண்ட் விலை ரூ. 77,100 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பியாஜியோ இந்தியா நிறுவனம் தனது அப்ரிலியா மற்றும் வெஸ்பா ஸ்கூட்டர்களின் பி.எஸ். 6 வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
பியாஜியோ இந்தியா நிறுவனம் அப்ரிலியா மற்றும் வெஸ்பா ஸ்கூட்டர்களின் பி.எஸ்.6 வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இரு ஸ்கூட்டர்களிலும் தற்சமயம் 160சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. புதிய என்ஜின் வழங்கப்பட்டுள்ளதால், அப்ரிலியா எஸ்.ஆர். 150 மாடல் அப்ரிலியா எஸ்.ஆர். 160 என அழைக்கப்படுகிறது. புதிய அப்ரிலியா எஸ்.ஆர். 160 மாடலின் விலை ரூ. 85,431 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது பழைய மாடலை விட ரூ. 10,000 வரை விலை அதிகம் ஆகும். புதிய பி.எஸ். 6 வெஸ்பா 150 எக்ஸ்.எல். மாடலின் விலை ரூ. 91,492 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய 160 சிசி மோட்டார் பி.ஸ்.4 மாடல்களில் வழங்கப்பட்ட 154.8சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாருக்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ளது. புதிய என்ஜின் தற்சமயம் 10.8 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இது முந்தைய என்ஜினை விட 0.4 பி.ஹெச்.பி. வரை அதிகம் ஆகும். தோற்றத்தில் புதிய மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
புதிய 160 சிசி வெஸ்பா மற்றும் அப்ரிலியா ஸ்கூட்டர்கள் விரைவில் இந்தியா முழுக்க விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இத்துடன் புதிதாக 125 சிசி ஸ்கூட்டர் ஒன்றை ஜனவரி 2020 வாக்கில் அறிமுகம் செய்ய பியாஜியோ இந்தியா திட்டமிட்டுள்ளது.
மாருதி சசுகி நிறுவனத்தின் டிசையர் கார் இந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது. முழு விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி டிசையர் கார் இந்திய சந்தையில் காம்பேக்ட் செடான் பிரிவில் கடந்த பல ஆண்டுகளாக அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
2019-20 முதல் எட்டு மாதங்களில் மாருதி சுசுகி டிசையர் கார் சுமார் 1.2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலக்ட்டத்தில் அதிகம் விற்பனையான காராகவும் டிசையர் இருக்கிறது. இந்திய சந்தையின் காம்பேக்ட் செடான் பிரிவில் டிசையர் மட்டும் 60 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது.

இந்திய சந்தையில் மாருதி சுசுகி டிசையர் கார் சமீபத்தில் 20 லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் டிசையர் காரின் பி.எஸ். 6 வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் பி.எஸ். VI ரக டிசையர் பெட்ரோல் மாடல் விலை ரூ.5.82 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ.9.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






