என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் பி.எஸ். 6 ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் செல்ஃப் ஸ்டார்ட் அலாய் வீல் மாடல் விலை இந்தியாவில் ரூ. 55,925 (எக்ஸ்-ஷோரூம்) என்றும் ஐ3எஸ் வேரியண்ட் ரூ. 57,250 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக ஹீரோ ஸ்பிலென்டர் ஐஸ்மார்ட் பி.எஸ். 6 மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இத்துடன் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ஹெச்.எஃப். டீலக்ஸ் பி.எஸ்.6 வேரியண்ட்டை விற்பனை மையங்களுக்கு அனுப்பும் பணிகளை ஹீரோ மோட்டோகார்ப் துவங்கி இருக்கிறது. 

    ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ்

    விரைவில் மற்ற மாடல்களும் பி.எஸ். 6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ் மாடலில் ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் எக்ஸ்-சென்ஸ் தொழில்நுட்பம் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 9 சதவீதம் வரை கூடுதல் மைலேஜ் மற்றும் சிறப்பான செயல்திறன் வழங்குகிறது. இதன் செயல்திறன் 7.94 பி.ஹெச்.பி. @8000 ஆர்.பி.எம். மற்றும் 8.05 என்.எம். டார்க் @6000 ஆர்.பி.எம். ஆக இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஹீரோ நிறுவனத்தின் ஜெய்பூர் புதுமை மற்றும் தொழில்நுட்ப மையத்தில் உருவாக்கப்பட்டதாகும்.

    இந்தியாவில் 100சிசி மோட்டார்சைக்கிள் வாகனங்கள் பிரிவில் ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ் சுமார் 60 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. புதிய ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ் மோட்டார்சைக்கிள் பிளாக் - ரெட், பிளாக் - பர்ப்பிள் மற்றும் பிளாக் - கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் டெக்னோ புளூ மற்றும் ஹெவி கிரே - கிரீன் நிறங்களிலும் கிடைக்கிறது.
    டேட்சன் நிறுவனம் மேக்னைட் எனும் பெயரில் புதிதாக கார் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    டேட்சன் நிறுவனம் மேக்னைட் எனும் பெயருக்கு காப்புரிமை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பெயரினை டேட்சன் தனது காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களில் பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் டேட்சன் நிறுவனம் புதிதாக எஸ்.யு.வி. மாடல் ஒன்றை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஹெச்.பி.சி. எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

    டேட்சன்

    புதிய மேக்னைட் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலில் ஹெச்.பி.சி. உற்பத்தி மாடலில் வழங்கப்பட்ட என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவற்றில் சி.எம்.எஃப். ஏ பிளஸ் பிளாட்ஃபார்ம் மற்றும் மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களின் கார்கள் ஒரே ஆலையில் உருவாக்கப்படுகின்றன. 

    இதனால் என்ஜின் மற்றும் ஒரே பிளாட்ஃபார்மில் கார்களை உருவாக்குவது சாதாரண விஷயமாக இருக்கிறது. இந்தியாவில் டீசல் மாடல்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க இருப்பதாக ரெனால்ட் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது. அந்நவகையில் புதிய மேக்னைட் கார் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.

    புதிய கார் இந்தியாவில் வெளியானதும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, ஹோண்டா டபுள்யூ.ஆர்.-வி, கியா கியூ.வை.ஐ., மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மற்றும் டாடா நெக்சான் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும்.
    சீனாவை சேர்ந்த டொவ் இ.வி. டெக் நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சீனாவில் பிரபலமாகத் திகழும் டொவ் இ.வி.டெக் நிறுவனம் இந்தியாவில் தனது பேட்டரி ஸ்கூட்டர்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற பேட்டரி வாகன தொழில்நுட்ப கண்காட்சியில் இந்நிறுவன தயாரிப்பான பேட்டரி ஸ்கூட்டர்கள் இடம்பெற்றிருந்தன. 

    இதில் மிகவும் மேம்பட்ட எல்.எஃப்.பி. பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் மோதல் தடுப்பு பாதுகாப்பு வசதி உள்ளது. தானியங்கி முறை, ரிவர்ஸ் பார்க்கிங் வசதி, அவசர கால மீட்பு வசதி, ஸ்மார்ட் லைட் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டதாக இந்த ஸ்கூட்டர் விளங்குகிறது.

    டொவ் இ.வி. டெக்

    இதில் 15 கிலோவாட் பி.எல்.டி.சி. மோட்டாரானது 72 வோல்ட் மின்சாரம் கொண்ட பேட்டரியில் இயங்கக் கூடியது. எகானமி மோடில் இது மணிக்கு 38 கி.மீ. வேகத்திலும் ஸ்போர்ட் மோடில் 45 கி.மீ. வேகத்திலும் செல்லக் கூடியது. இந்த ஸ்கூட்டரை தினசரி பயன்படுத்தும்போது வாகனம் பற்றிய அனைத்து விவரங்களும் உங்களது ஸ்மார்ட்போனுக்கு வந்துவிடும்.

    முதல் கட்டமாக தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களில் இந்த ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பின்னர் படிப்படியாக பிற மாநிலங்களுக்கு இந்த ஸ்கூட்டரை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டார் பிளஸ் காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.



    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டர் பிளஸ் காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய படங்களில் காரின் உள்புற அம்சங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய ஹெக்டார் பிளஸ் காரில் இரண்டாம் அடுக்கு இருக்கைகள் தனித்தனியே இடம்பெற்று இருக்கின்றன.

    மேலும் மூன்றாம் அடுக்கு இருக்கைகளில் கூடுதலாக சீட் பெல்ட்கள் இடம்பெற்றுள்ளது. சோதனை செய்யப்படும் கார் மூலம் தயாரிப்பு மாடலில் கேப்டன் சீட்கள் கொண்டிருக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.

    முந்தைய ஸ்பை படங்களில் எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் காரின் முன்புறம் புதிய வடிவமைப்பு கொண்ட முன்புற பம்ப்பர், புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், புதிய கிரில், ஃபாக் லேம்ப் ஹவுசிங், புதிய வடிவமைப்பு கொண்ட பின்புற பம்ப்பர், புதிய எல்.இ.டி. டெயில் லைட்கள் மற்றும் டூயல் எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்பட இருப்பது தெரியவந்தது.

    எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் புதிய ஸ்பை படம்
    எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் புதிய ஸ்பை படம்

    புதிய எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் மாடலில் 2.0 டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 169 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

    டீசல் என்ஜின் தவிர புதிய காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினும் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 141 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டி.சி.டி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் வெளியானதும் எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் மாடல் டாடா ஹெக்சா, மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500, விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் டாடா கிராவிடாஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும்.

    தற்சமயம் எம்.ஜி. ஹெக்டார் காரின் விலை ரூ. 12.48 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.28 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹெக்டார் பிளஸ் மாடலின் விலை ரூ. 1 லட்சம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம்.

    புகைப்படம் நன்றி: Gagan Choudhary
    மினி நிறுவனம் முற்றிலும் எலெக்ட்ரிக் வசதி கொண்ட கூப்பர் எஸ்.இ. ஹேட்ச்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் திட்டம் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    பிரிட்டனை சேர்ந்த மினி நிறுவனம் முற்றிலும் எலெக்ட்ரிக் கூப்பர் எஸ்.இ. ஹேட்ச்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எலெக்ட்ரிக் மினி கூப்பர் எஸ்.இ. மாடல் இந்தியாவில் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளே வெளியீட்டு திட்டங்களுக்கு காரணமாக மினி நிறுவனம் கூறி இருக்கிறது. 

    எலெக்ட்ரிக் மினி கூப்பர்

    மினி நிறுவனத்தின் ஆசிய பசிபிக், கிழக்கு ஐரோப்பியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவுக்கான துணை தலைவர் ஃபிரான்கோயிஸ் ரோகா இதுபற்றி கூறும் போது, “உற்பத்தி பணிகளை வேகப்படுத்தி இருக்கிறோம். ஆலைக்கு அருகாமையில் உள்ள சந்தைகளில் முதலில் இந்த கார் வெளியாகும். எங்களுக்கு சரியான உள்கட்டமைப்பு வசதிகள் தேவை. இந்த தேவை பூர்த்தியாகும் போது, இந்திய சந்தையில் பேட்டரி எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்வோம்” என தெரிவித்தார்

    கூப்பர் எஸ்.இ. ஐ3எஸ் பவர்டிரெயின் காருக்கு 184 பி.ஹெச்.பி. பவர், 270 என்.எம். டார்க் இழுவிசையை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 32.6kWh பேட்டரி வழங்கப்படுகிறது. இது பயனர் அமரும் இருக்கையின் கீழ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 235 முதல் 270 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.

    புதிய மினி எலெக்ட்ரிக் காரை 50kW சார்ஜ் பாயிண்ட் கொண்டு 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 35 நிமிடங்களே ஆகும் என மினி தெரிவித்துள்ளது. 
    ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார் டர்போ பெட்ரோல் வேரியண்ட் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார் சக்திவாய்ந்த டர்போ பெட்ரோல் என்ஜின் வேரியண்ட் இந்தியாவில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் என ரெனால்ட் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் தெரிவித்தார்.

    ஸ்போர்ட் தோற்றம் கொண்ட ரெனால்ட் டிரைபர் காரில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட இருக்கிறது. 1.0 லிட்டர் டி.சி.இ டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் 99 பி.ஹெச்.பி. பவர், 160 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.

    இந்தியாவில் இந்த என்ஜின் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இத்துடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய டிரைபர் ஸ்போர்ட் மாடலின் விலை தற்சமயம் விற்பனையாகும் வேரியண்ட்டை விட ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரெனால்ட் டிரைபர்

    தற்சமயம் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் டிரைபர் மாடலில் 1.0 லிட்டர் எஸ்.சி.இ. பி.எஸ்.4 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 72 பி.ஹெச்.பி. பவர், 96 என்.எம். டார்க் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் பி.எஸ். 6 அப்டேட் வழங்கும் பணிகளில் ரெனால்ட் ஈடுபட்டுள்ளது. 

    இந்த என்ஜின் விரைவில் 5-ஸ்பீடு ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்பட இருக்கிறது. பி.எஸ். 6 அப்டேட் பெறும் பட்சத்தில் ரெனால்ட் டிரைபர் காரின் விலை உயரும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் ரெனால்ட் டிரைபர் கார் மாருதி சுசுகி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    கே.டி.எம். நிறுவனத்தின் 790 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    கே.டி.எம். 790 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கே.டி.எம். 790 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் முன்னதாக கோவாவில் நடைபெற்ற 2019 ஐ.பி.டபுள்யூ. விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மோட்டார்சைக்கிளுடன் கே.டி.எம். நிறுவனம் 390 அட்வென்ச்சர் மாடலையும் காட்சிப்படுத்தியது. சமீபத்தில் கே.டி.எம். நிறுவனம் 390 அட்வென்ச்சர் மாடலை அறிமுகம் செய்தது.

    இந்தியாவில் 790 அட்வென்ச்சர் மாடலின் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்குள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. 790 அட்வென்ச்சர் மாடல் 1290 அட்வென்ச்சர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் ஹெட்லேம்ப் கிளஸ்டரில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    கே.டி.எம். 790 அட்வென்ச்சர்

    790 அட்வென்ச்சர் மாடலில் 799சிசி பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. கே.டி.எம். 790 டியூக் மாடலிலும் இதே என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அட்வென்ச்சர் மாடலில் இந்த என்ஜின் 94 பி.ஹெச்.பி. பவர் @8250 ஆர்.பி.எம். மற்றும் 88 என்.எம். டார்க் @6600 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் அறிமுகமானதும் 790 அட்வென்ச்சர் மாடல் டிரையம்ப் டைகர் 800, பி.எம்.டபுள்யூ. 850 ஜி.எஸ். போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். கே.டி.எம். 790 அட்வென்ச்சர் மாடலின் விலை ரூ. 10 முதல் ரூ. 11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா கார் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    ஸ்பை படங்களில் விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் மற்றும் புதிய அலாய் வீல் வடிவமைப்பு வழங்கப்படுகிறது. இத்துடன் காரின் முன்புறம் ஃபாக்ஸ் பார் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர காரின் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஸ்பை படம்


    எனினும், புதிய காரில் ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய காரில் 1.2 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். புதிய சீரிசில் 1.3 லிட்டர் ஃபியாட்டின் மல்டிஜெட் டீசல் என்ஜின் வழங்கப்படாது என்றே தெரிகிறது.

    மல்டிஜெட் டீசல் என்ஜினுக்கு மாற்றாக மாருதி நிறுவனத்தின் 1.5 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் இந்தியாவில் ஹோண்டா டபுள்யூ.ஆர். வி, ஹூண்டாய் வென்யூ, ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் மஹந்திரா எக்ஸ்.யு.வி.300 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    புகைப்படம் நன்றி: RushLane
    புத்தாண்டில் அறிமுகமாக இருக்கும் புகாட்டி சிரான் நொய்ரே காரின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    அதிவேக கார்களைத் தயாரிக்கும் புகாட்டி நிறுவனத்தின் வடிவமைப்பு பிரிவின் தலைவர் ஆஷிம் அன்ஷெடிட், ‘லா வொய்சர் நொய்ரே’ காரின் வடிவமைப்பு போன்ற காரை உருவாக்கினார். அதிக திறன் கொண்ட, சொகுசான பிரத்யேக ஸ்போர்ட்ஸ் காராக புத்தாண்டில் வெளிவரும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பிரத்யேகமாக தயாரிக்கப்படும் இந்த கார் தனித்துவம் வாய்ந்ததாக நிச்சயம் இருக்கும் என்கிறார் இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ஸ்டீபன் விங்கெல்மான். லிமோசான் கார்களில் உள்ள சொகுசு தன்மையையும், ஸ்போர்ட்ஸ் காருக்குரிய வேகத்தையும் கொண்டதாக இது இருக்கும் என்கிறார் ஸ்டீபன்.

    புகாட்டி சிரான் நொய்ரே

    லா வொய்சர் நொய்ரே காரின் தனித்துவமே அதன் வடிவமைப்புதான். அதைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட புதிய மாடலில் இரண்டு வெர்ஷன்கள் வர உள்ளன. ஸ்போர்ட்ஸ் பிரியர்களை திருப்திபடுத்தும் வகையில் ‘சிரோன் நொய்ரே ஸ்போர்டிவ்’ என்ற மாடலையும், கம்பீரத்தை விரும்பும் ஆடம்பர பிரியர்களுக்கென ‘சிரோன் நொய்ரே எலிகன்ஸ்’ என்ற மாடலையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

    புதிய காரில் 8 லிட்டர் 16 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 1,103 கிலோவாட் அதாவது 1,500 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். 1,600 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டதாக இது வந்துள்ளது. 

    ஸ்போர்ட் மாடல் கார் ஒரு லட்சம் யூரோ அதிகமாகும். மொத்தமே 20 கார்களை தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த மாடல் காரின் விலை 30 லட்சம் யூரோவாக இருக்கும் என தெரிகிறது. புகாட்டி ஆர்வலர்கள் ஒருபோதும் விலையைப் பெரிதாக நினைப்பவர்கள் அல்ல. அதனால் இந்த 20 காருக்கும் கடும் போட்டி இருக்கும் என்றே தெரிகிறது.
    டொயோட்டா நிறுவனத்தின் யாரிஸ் பி.எஸ்.6 செடான் காரின் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது பி.எஸ்.6 யாரிஸ் செடான் காரை இந்தியாவில் அறிமுகம் இருக்கிறது. இந்தியாவில் புதிய செடான் பி.எஸ்.6 மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. 

    மேம்பட்ட டொயோட்டா யாரிஸ் பி.எஸ்.6 மாடலின் விலை ரூ. 11,000 வரை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய யாரிஸ் காருக்கான முன்பதிவுகளும் துவங்கி இருக்கிறது. மேம்பட்ட செடான் மாடலை வாடிக்கையாளர்கள் ரூ. 50,000 கட்டணத்தில் முன்பதிவு செய்யலாம்.

    டொயோட்டா யாரிஸ்

    புதிய யாரிஸ் மாடல்: ஜெ ஆப்ஷனல், ஜெ, ஜி ஆப்ஷனல், ஜி, வி, வி ஆப்ஷனல் மற்றும் வி.எக்ஸ். என மொத்தம் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட்களும் பி.எஸ். 6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. மேம்பட்ட பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 140 என்.எம். டார்க் செயலதி்றன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆப்ஷனல் சி.வி.டி. கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

    அனைத்து வேரியண்ட்களும் பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டிருக்கிறது. இவற்றில் பல்வேறு அம்சங்கள் இந்த பிரிவு வாகனங்களில் முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் புதிய யாரிஸ் காரை பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் கிடைக்கிறது.
    கவாசகி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் இசட்650 பி.எஸ்.6 மாடலை அறிமுகம் செய்துள்ளது.



    கவாசகி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் 2020 இசட்650 பி.எஸ்.6 மாடலை அறிமுகம் செய்துள்ளது. 2020 கவாசகி இசட்650 பி.எஸ். 6 மாடலின் விலை ரூ. 6.25 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 6.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பி.எஸ்.4 மாடலை விட ரூ. 56,000 அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் பி.எஸ்.6 அப்டேட் பெறும் இரண்டாவது மாடலாக கவசாகி இசட்650 இருக்கிறது. முன்னதாக இசட்900 பி.எஸ்.6 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சிறிதளவு புதிய அம்சங்களுடன் கவாசகி இசட்650 மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    2020 கவாசகி இசட்650 பி.எஸ்.6

    2020 பி.எஸ்.6 கவாசகி இசட்650 மாடலில் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப், 4.3 இன்ச் டி.எஃப்.டி. ஸ்கிரீன், ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. புதிய மாடலில் தற்சமயம் டன்லப் ஸ்போர்ட்மேக்ஸ் ரோட்ஸ்போர்ட் 2 டையர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    பி.எஸ். 6 கவாசகி இசட்650 மாடலில் 649சிசி ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 65.7 என்.எம். டார்க் @6500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் விலை முந்தைய மாடலை விட மூன்று கிலோ வரை குறைவு ஆகும்.

    இந்தியாவில் கவாசகி இசட்650 மாடல் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் சி.எஃப்.மோட்டோ 650 என்.கே., பெனலி டி.என்.டி. 600ஐ மற்றும் லியோன்சினோ 500 மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் 2020 ஹெக்டார் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது முதல் வாகனமாக ஹெக்டார் மிட்-சைஸ் எஸ்.யு.வி. சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எம்.ஜி. ஹெக்டார் கார் ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    இதுதவிர எம்.ஜி. மோட்டார் நிறுவனம் ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலின் மேம்பட்ட வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய எம்.ஜி. ஹெக்டார் கார் இந்தியாவில் ஜனவரி 2020 வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எம்.ஜி. ஹெக்டார் ஸ்பை படம்

    புதிய ஹெக்டார் எஸ்.யு.வி. கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை வெளியாகி இருக்கின்றன. அந்த வரையில் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், சோதனை செய்யப்படும் 2020 எம்.ஜி. ஹெக்டார் கார் முன்புறம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

    ஸ்பை படங்களின்படி எம்.ஜி ஹெக்டார் காரில் புதிய வடிவமைப்பு கொண்ட ஹெட்லேம்ப், டி.ஆர்.எல். கிளஸ்டர் வழங்கப்படுகிறது. இத்துடன் மெயின் ஹெட்லேம்ப் கிளஸ்டர் மேம்படுத்தப்பட்டு புதிய ஹவுசிங் வழங்கப்படுகிறது. 

    காரின் பக்கவாட்டில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. 2020 எம்.ஜி. ஹெக்டார் காரில் 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதே வீல் அமைப்பு தற்சமயம் விற்பனையாகும் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறமும் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    புகைப்படம் நன்றி: Rushlane
    ×