search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டேட்சன்
    X
    டேட்சன்

    மேக்னைட் பெயரில் புதிய காரை உருவாக்கும் டேட்சன்

    டேட்சன் நிறுவனம் மேக்னைட் எனும் பெயரில் புதிதாக கார் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    டேட்சன் நிறுவனம் மேக்னைட் எனும் பெயருக்கு காப்புரிமை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பெயரினை டேட்சன் தனது காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களில் பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் டேட்சன் நிறுவனம் புதிதாக எஸ்.யு.வி. மாடல் ஒன்றை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஹெச்.பி.சி. எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

    டேட்சன்

    புதிய மேக்னைட் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலில் ஹெச்.பி.சி. உற்பத்தி மாடலில் வழங்கப்பட்ட என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவற்றில் சி.எம்.எஃப். ஏ பிளஸ் பிளாட்ஃபார்ம் மற்றும் மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களின் கார்கள் ஒரே ஆலையில் உருவாக்கப்படுகின்றன. 

    இதனால் என்ஜின் மற்றும் ஒரே பிளாட்ஃபார்மில் கார்களை உருவாக்குவது சாதாரண விஷயமாக இருக்கிறது. இந்தியாவில் டீசல் மாடல்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க இருப்பதாக ரெனால்ட் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது. அந்நவகையில் புதிய மேக்னைட் கார் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.

    புதிய கார் இந்தியாவில் வெளியானதும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, ஹோண்டா டபுள்யூ.ஆர்.-வி, கியா கியூ.வை.ஐ., மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மற்றும் டாடா நெக்சான் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும்.
    Next Story
    ×