என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் இ.வி. காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் இ.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்சமயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்டெர்னல் கம்பஷன் என்ஜின் கொண்ட அல்ட்ரோஸ் காரை வெளியிடும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. இதைத் தொடர்ந்து 2020 டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும், அதன்பின் டியாகோ, டிகோர் மற்றும் ஹேரியர் கார்களின் பி.எஸ்.6 வெர்ஷன்களை வெளியிட இருக்கிறது.
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன், இந்தியாவில் அடுத்த 18 மாதங்களில் டாடா நிறுவனம் நான்கு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருந்தார். அந்த வரிசையில் முதல் இரண்டு கார்கள் மற்றும் நெக்சான் இ.வி. நீண்ட தூரம் பயணிக்கக்கூடியதாக இருக்கிறது.

இத்துடன் அல்ட்ரோஸ் இ.வி. கார் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத மாடல் ஒன்று இருக்கிறது. இவை 2021-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். டாடா அல்ட்ரோஸ் இ.வி. காரின் ப்ரோடோடைப் மாடல் 2019 மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.
புதிய காரில் லித்தியம் அயன் பேட்டரி மற்றும் IP-67 தரச்சான்று பெற்றிருக்கும் என்றும், இது எட்டு வருட வாரண்டியுடன் வரும் என கூறப்படுகிறது. சிப்டிரான் மூலம் இயங்கும் இ.வி. கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 250 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் கார் முன்பதிவில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது. முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் கார் இந்திய சந்தையில் 1,00,000 முன்பதிவுகளை கடந்துவிட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் அறிமுகமான செல்டோஸ் எஸ்.யு.வி. மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிக பிரபல காராக உருவெடுத்து இருக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் செல்டோஸ் கார் முறையே 50,000 மற்றும் 80,000 யூனிட்கள் முன்பதிவை கடந்தது. டிசம்பர் மாதத்தில் செல்டோஸ் முன்பதிவுகளில் சரிவை சந்தித்தது.

செல்டோஸ் மாடலின் டீசல் வேரியண்ட்டிற்கு அதிக வரவேற்பு கிடைத்து வருவதாக கியா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த எஸ்.யு.வி.-யின் டாப் எண்ட் மாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்சமயம் வரை நடைபெற்று இருக்கும் முன்பதிவுகளில் பெரும்பான்மை வேரியண்ட்களில் டாப்-லைன் ஜி.டி.எக்ஸ்.+, ஹெச்.டி.எக்ஸ். மற்றும் ஹெச்.டி.எக்ஸ்.+ உள்ளிட்டவை இருக்கின்றன.
இதுதவிர இந்த பிரிவில் வேகமாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக கியா செல்டோஸ் இருக்கிறது. மேலும் இந்த எஸ்.யு.வி. மாடலில் கூர்மையான மற்றும் கம்பீர வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் பிளாக்-அவுட் மெஷ் கிரில், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.
யமஹா நிறுவனத்தின் எம்.டி.15 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
யமஹா நிறுவனத்தின் எம்.டி.15 பி.எஸ்.6 மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி யமஹா எம்.டி.15 பி.எஸ்.6 மாடலில் யமஹா ஆர்15 வி3 மாடலில் உள்ள என்ஜின் வழங்கப்படுகிறது. எனினும், ஸ்பிராக்கெட், ஸ்விங் ஆம் உள்ளிட்டவை வித்தியாசமாக வழங்கப்படுகிறது.
இத்துடன் இந்த மோட்டார்சைக்கிளில் முழுமையான எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ்., முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் டெல்டாபாக்ஸ் ஃபிரேம், செக்கன்டரி ரிடக்ஷன் கியர் மற்றும் ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.

தற்சமயம் விற்பனையாகும் யமஹா எம்.டி.15 பி.எஸ்.4 மாடலில் 155சிசி லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 19 பி.ஹெச்.பி. பவர், 15 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
புதிய எம்.டி.15 பி.எஸ்.6 மாடலில் 155சிசி லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 18.3 பி.ஹெச்.பி. பவர், 14.1 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
யமஹாவின் பி.எஸ்.4 எம்.டி.15 மாடலின் விலை ரூ. 1.36 லட்சத்தில் துவங்கி ரூ. 1.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பி.எஸ்.6 மாடலின் விலை ரூ. 7000 முதல் ரூ. 9000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
வால்வோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்.சி.60 பி.எஸ்.6 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
வால்வோ நிறுவனத்தின் 2020 எக்ஸ்.சி.60 பி.எஸ்.6 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஸ்பை படங்களின் படி புதிய காரின் வெளிப்புறத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் டி5 இன்ஸ்க்ரிப்ஷன் டீசல் வேரியண்ட் என தெரிகிறது. அந்த வகையில் எக்ஸ்.சி.60 கார் இரண்டு வேரியண்ட்களில் வெளியாக இருக்கிறது. மற்றொரு மாடல் டி4 மொமண்ட்டம் டீசல் வேரியண்ட் ஆகும்.
தற்சமயம் விற்பனையாகும் வால்வோ எக்ஸ்.சி.60 பி.எஸ்.4 மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 235 பி.ஹெச்.பி. பவர், 480 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டி4 மொமண்ட்டம் வேரியண்ட்டில் 2.0 லிட்டர் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இரு என்ஜின்களுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. பி.எஸ்.6 அப்கிரேடு காரணமாக புதிய காரின் செயல்திறன் அளவுகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வால்வோ எக்ஸ்.சி.60 பி.எஸ்.6 டி5 இன்ஸ்க்ரிப்ஷன் வேரியண்ட்டில் 12.3 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே யூனிட், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகிறது.
இந்தியாவில் அறிமுகமானதும் வால்வோ எக்ஸ்.சி.60 பி.எஸ்.6 மாடல்கள் ஆடி கியூ5, பி.எம்.டபுள்யூ. எக்ஸ்3, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ., லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
புகைப்படம் நன்றி: Rushlane
ஹூண்டாய் மோட்டார் குழுமம் ஆட்டோமொபைல் சந்தையில் புதிதாக 44 எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் குழுமம் சர்வதேச சந்தையில் 2025-க்குள் மொத்தம் 44 எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இவற்றில் எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள் அடங்கும்.
இதற்கென ஹூண்டாய் நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி கொரிய வோண்களை முதலீடு செய்ய இருப்பதாக ஹூண்டாய் துணை தலைவர் எய்சுன் சங் தெரிவித்தார்.

2019-ம் ஆண்டில் ஹூண்டாய் குழுமம் மொத்தம் 24 எலெக்ட்ரிக் மாடல்களை வெளியிட்டுள்ளது. 2025-ம் ஆண்டிற்குள் ஹூண்டாய் நிறுவனம் 13 ஹைப்ரிட், ஆறு பிளக்-இன் ஹைப்ரிட், 23 பேட்டரி எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் இரண்டு ஃபியூயல் செல் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க இருக்கிறது.
இத்துடன் புதிதாக இ.வி. தளம் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஹூண்டாய் ஈடுபட்டுள்ளது. புதிய தளத்தின் கீழ் ஹூண்டாய் நிறுவனம் புதிய கார்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா பி.எஸ். 6 மற்றும் ஃபார்ச்சூனர் பி.எஸ். 6 கார்களுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்டா பி.எஸ்.6 மற்றும் ஃபார்ச்சூனர் பி.எஸ்.6 மாடல்களுக்கான முன்பதிவு ஜனவரி 6-ம் தேதி அதிகாரப்பூர்வமாக துவங்க இருக்கிறது. எனினும், இரு கார்களுக்கான முன்பதிவுகளை விற்பனையாளர்கள் ஏற்கனவே துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி புதிய கார்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பூனேவை சேர்ந்த விற்பனையாளர் ஒருவர் இரு கார்களுக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் துவங்கப்பட்டுவிட்டதாக தெரிவித்து இருக்கிறார்.

புதிய கார்களுக்கான விநியோகம் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத துவக்கத்திலோ துவங்கும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுக்க பி.எஸ்.6 ரக எரிபொருள் கிடைப்பதற்காக டொயோட்டா நிறுவனம் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா மாடல்களின் பி.எஸ்.4 வெர்ஷன்களை விற்பனையாளர்கள் ஏற்கனவே விற்றுவிட்டதாக தெரிகிறது. இரு கார்களும் அதிகம் விற்பனையாகும் மாடல்களாக இருப்பதாக கூறப்படுகிறது. இரு கார்கள் மட்டுமின்றி யாரிஸ் பி.எஸ்.6 மாடலுக்கான முன்பதிவுகளை விற்பனையாளர்கள் துவங்கிவிட்டனர்.
இந்திய சந்தையில் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்கள் டொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் கார்களாக இருக்கின்றன. ஏப்ரல் 2020 முதல் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்படும் என தெரிகிறது.
பென்லி நிறுவனத்தின் புதிய 302எஸ் மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இத்தாலி நாட்டு மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான பென்லி இந்தியாவில் புதிதாக 302எஸ் என்ற மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய மோட்டார்சைக்கிள் அந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்து வரும் டி.என்.டி. 300 மாடலுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய 302எஸ் மோட்டார்சைக்கிளை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக பென்லி தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பென்லி 302எஸ் மாடலில் அந்நிறுவனத்தின் டி.என்.டி. 300 மாடலை தழுவி காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய 302எஸ் மாடலில் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெனட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. பென்லி டி.என்.டி. 300 மாடலில் ஹாலோஜென் ஹெட்லேம்ப் மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெனட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

டி.என்.டி. 300 மாடலுடன் ஒப்பிடும் போது புதிய 302எஸ் மாடலில் பெரிய ரேடியேட்டர் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. வெளிப்புறம் 302எஸ் மாடலின் ஃபியூயல் டேன்க், என்ஜின் கவுல், ஸ்ப்லிட்சீட், பின்புற பேனல் உள்ளிட்டவை டி.என்.டி. 300 மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படுகிறது.
பென்லி 302எஸ் மாடலில் 300சிசி பி.எஸ்.6 ரக பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு , நான்கு வால்வுகள் கொண்ட DOHC என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 37.5 பி.ஹெச்.பி. பவர், 25.62 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் ஏ.பி.எஸ். உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டிசம்பர் மாதத்தில் கார், பைக் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களின் விற்பனை நிலவரம் வெளியாகி இருக்கிறது.
இந்திய சந்தையில் கடந்த டிசம்பர் மாதம் கார், பைக் போன்ற மோட்டார் வாகனங்களின் விற்பனை நிலவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி மாருதி சுசுகி நிறுவனம், மொத்தம் 1.33 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தை காட்டிலும் இது 3.9 சதவீதம் உயர்வாகும். 2018 டிசம்பரில் விற்பனை 1.28 லட்சம் கார்களாக இருந்தது.
மஹிந்திரா நிறுவனம் மொத்தம் 39,230 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2018 டிசம்பரில் அது 39,755-ஆக இருந்தது. அந்த வகையில் விற்பனை 1 சதவீதம் குறைந்து இருக்கிறது. இதில் உள்நாட்டு விற்பனை 1 சதவீதம் அதிகரித்து (36,690-ல் இருந்து) 37,081-ஆக உயர்ந்து இருக்கிறது.
வர்த்தக வாகனங்கள் விற்பனை 16,018-ஆக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் அது 16,906-ஆக இருந்தது. பயணிகள் வாகனங்கள் விற்பனை 4 சதவீதம் உயர்ந்து (15,091-ல் இருந்து) 15,691-ஆக அதிகரித்து இருக்கிறது. ஏற்றுமதி 30 சதவீதம் சரிவடைந்து 2,149 வாகனங்களாக இருக்கிறது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், மொத்தம் 50,135 கார்களை விற்பனை செய்துள்ளது. 2018 டிசம்பரில் அது 55,638 கார்களாக இருந்தது. அந்த வகையில் விற்பனை 9.9 சதவீதம் சரிந்துள்ளது. உள்நாட்டு விற்பனை 37,953-ஆக குறைந்து இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 42,093-ஆக இருந்தது. ஏற்றுமதி 10 சதவீதம் குறைந்து 12,182 கார்களாக உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனை 6.91 லட்சமாக இருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.6 சதவீதம் குறைவாகும்.
ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் இந்தியாவில் ஜனவரி 15-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் டீசர் ஒன்றை ஹோண்டா வெளியிட்டுள்ளது. புதிய ஆக்டிவா ஸ்கூட்டரில் பி.எஸ்.6 ரக என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் ஹோண்டா ஆக்டிவா மாடல் அதிகம் விற்பனையாகும் ஆட்டோமேடிக் ஸ்கூட்டர் மாடலாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஹோண்டா நிறுவனம் சுமார் 2.5 லட்சம் ஆக்டிவா யூனிட்களை விற்பனை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவர ஹோண்டா தொடர்ந்து ஆக்டிவா மாடல்களை அப்டேட் செய்து கொண்டே வருகிறது.
விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் அதிகளவு கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கனெக்டிவிட்டி அம்சங்களை ஆக்டிவா 6ஜி மாடலில் வழங்கும் முதல் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமாக ஹோண்டா இருக்கும்.

ஆக்டிவா 6ஜி வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனை டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் இணைத்து பல்வேறு கண்ட்ரோல்களை இயக்க முடியும். புதிய ஸ்கூட்டரில் ஹோண்டா 12 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், ஆப்ஷனல் டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிகிறது.
புதிய ஸ்கூட்டரில் 109.19சிசி HET ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் விற்பனையாகும் மாடலில் உள்ள பி.எஸ்.4 என்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர், 9 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய பி.எஸ்.6 என்ஜின் செயல்திறன் அளவுகளில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது.
ஹோண்டா ஆக்டிவா 5ஜி மாடல் விலை ரூ. 57,094 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 6ஜி மாடல் விலை ரூ. 5000 முதல் ரூ. 8500 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. அந்த வகையில் புதிய ஆக்டிவா 6ஜி மாடலின் விலை ரூ. 65,500 வரை நிர்ணயிக்கப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஹெக்டார் கார் விற்பனை தொடர்ந்து இரண்டாவது மாதமாக சரிவை சந்தித்துள்ளது.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் டிசம்பர் 2019 மாத்திற்கான வாகன விற்பனை விவரம் வெளியாகியுள்ளது. அதில் எம்.ஜி. ஹெக்டார் கார் மொத்தம் 3,021 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றது. இந்தியாவில் ஜூலை 2019-ல் வெளியான ஹெக்டார் கார் இதுவரை 15,930 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
நவம்பர் மற்றும் அக்டோபர் 2019-ல் முறையே 3239 மற்றும் 3536 ஹெக்டார் கார்களை எம்.ஜி. மோட்டார் விற்பனை செய்துள்ளது. இந்திய சந்தையில் எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் முதல் காராக ஹெக்டார் இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமானதும் அமோக வெற்றி பெற்ற ஹெக்டார் கார் துவக்க கால விற்பனையில் அசத்தியது.

இதைத் தொடர்ந்து எம்.ஜி. மோட்டார் இந்தியா ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலின் உற்பத்தியை உயர்த்துவதாக அறிவித்தது. தற்சமயம் ஹெக்டார் காரை முன்பதிவு செய்தால், மூன்று மாதங்களுக்கு வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.
இந்தியா முழுக்க எம்.ஜி. மோட்டார் நிறுவனம் மொத்தம் 150 மைங்களில் இயங்கி வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விற்பனை மையங்களின் எண்ணிக்கையை 250 வரை படிப்படியாக உயர்த்த எம்.ஜி. மோட்டார் திட்டமிட்டுள்ளது.
விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமின்றி எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இசட்.எஸ். இ.வி. காரை இந்திய சந்தையில் வெளியிடும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் விற்பனை அடுத்த மாதம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய பெராக் மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் பெராக் பாபர் ஸ்டைல் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. இந்தியாவில் ஜாவா பெராக் மாடல் விலை ரூ. 1.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜாவா பெராக் முன்பதிவுகள் குறிப்பிட்ட அளவை கடந்ததும் நிறுத்தப்பட்டு, அதன்பின் மீண்டும் துவங்கப்படும் என தெரிகிறது. இதன் விநியோகம் ஏப்ரல் 2, 2020 முதல் துவங்கும் என ஜாவா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜாவா பெராக் மாடல் ஜாவா நிறுவனத்தின் முதல் பி.எஸ்.6 மாடல் ஆகும்.

இந்த மோட்டார்சைக்கிள் முன்னதாக 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இது பாபர் ஸ்டைலிங் தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், டியர்டிராப் ஃபியூயல் டேன்க் மற்றும் ஒற்றை இருக்கை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் மேட் பெயின்ட்டிங் செய்யப்பட்டுள்ளது.
ஜாவா பெராக் மாடலில் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் 334சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் ஜாவா மற்றும் ஃபார்டி டு மாடல்களில் வழங்கப்பட்டுள்ள என்ஜினின் போர்டு-அவுட் வெர்ஷன் ஆகும். இது 30 பி.ஹெச்.பி. மற்றும் 31 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
சஸ்பென்ஷனை பொருத்தவரை இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது.
ஃவோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் ஆல் ஸ்பேஸ் ஆர் லைன் காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஃவோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் ஆல் ஸ்பேஸ் ஆர் லைன் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய டிகுவான் ஆல் ஸ்பேஸ் ஆர் லைன் மாடல் ஏழு பேர் அமரக்கூடிய வேரியண்ட் இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் ஐந்து பேர் அமரக்கூடிய வேரியண்ட்டிற்கு மாற்றாக வெளியாக இருக்கிறது.
புதிய டிகுவான் ஆல் ஸ்பேஸ் மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்ய ஃவோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இது முற்றிலும் புதிய மாடல் இல்லை என்ற போதும், இரண்டாம் தலைமுறை டிகுவான் மாடலை சிறிய மற்றும் நீண்ட வீல் பேஸ் உடன் அறிமுகம் செய்தது.
தோற்றத்தில் ஃவோக்ஸ்வேகன் டிகுவான் ஆல் ஸ்பேஸ் மாடலின் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், பின்புறம் சிறிதளவு ட்வீக் செய்யப்பட்டு இருக்கிறது. பின்புற ஸ்பாயிலர் பெரியதாகவும், கிளாஸி பிளாக் ஷேட் கொண்டிருக்கிறது.

காரின் முன்புறம் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட பம்ப்பர், ட்வீக் செய்யப்பட்ட கிரில் காணப்படுகிறது. புதிய காரில் 17-இன்ச் டுல்சா அலாய் வீல்களும் வழங்கப்படுகின்றன.
டாப் எண்ட் டிகுவான் ஆல் ஸ்பேஸ் ஆர் லைன் வேரியண்ட்டில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. ரியர் காம்பினேஷன் லேம்ப்கள், ஆக்டிவ் இன்ஃபோ டிஸ்ப்ளே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 8 இன்ச் டிஸ்கவரி மீடியா நேவிகேஷன் சிஸ்டம், முன்புறம் ஸ்போர்ட்ஸ் சீட்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஃவோக்ஸ்வேகன் டிகுவான் ஆல் ஸ்பேஸ் மாடலில் 2.0 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: TeamBHP






