search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2020 கவாசகி இசட்650 பி.எஸ்.6
    X
    2020 கவாசகி இசட்650 பி.எஸ்.6

    இந்தியாவில் 2020 கவாசகி இசட்650 பி.எஸ்.6 அறிமுகம்

    கவாசகி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் இசட்650 பி.எஸ்.6 மாடலை அறிமுகம் செய்துள்ளது.



    கவாசகி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் 2020 இசட்650 பி.எஸ்.6 மாடலை அறிமுகம் செய்துள்ளது. 2020 கவாசகி இசட்650 பி.எஸ். 6 மாடலின் விலை ரூ. 6.25 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 6.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பி.எஸ்.4 மாடலை விட ரூ. 56,000 அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் பி.எஸ்.6 அப்டேட் பெறும் இரண்டாவது மாடலாக கவசாகி இசட்650 இருக்கிறது. முன்னதாக இசட்900 பி.எஸ்.6 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சிறிதளவு புதிய அம்சங்களுடன் கவாசகி இசட்650 மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    2020 கவாசகி இசட்650 பி.எஸ்.6

    2020 பி.எஸ்.6 கவாசகி இசட்650 மாடலில் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப், 4.3 இன்ச் டி.எஃப்.டி. ஸ்கிரீன், ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. புதிய மாடலில் தற்சமயம் டன்லப் ஸ்போர்ட்மேக்ஸ் ரோட்ஸ்போர்ட் 2 டையர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    பி.எஸ். 6 கவாசகி இசட்650 மாடலில் 649சிசி ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 65.7 என்.எம். டார்க் @6500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் விலை முந்தைய மாடலை விட மூன்று கிலோ வரை குறைவு ஆகும்.

    இந்தியாவில் கவாசகி இசட்650 மாடல் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் சி.எஃப்.மோட்டோ 650 என்.கே., பெனலி டி.என்.டி. 600ஐ மற்றும் லியோன்சினோ 500 மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
    Next Story
    ×