search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கே.டி.எம். 790 அட்வென்ச்சர்
    X
    கே.டி.எம். 790 அட்வென்ச்சர்

    கே.டி.எம். 790 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரம்

    கே.டி.எம். நிறுவனத்தின் 790 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    கே.டி.எம். 790 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கே.டி.எம். 790 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் முன்னதாக கோவாவில் நடைபெற்ற 2019 ஐ.பி.டபுள்யூ. விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மோட்டார்சைக்கிளுடன் கே.டி.எம். நிறுவனம் 390 அட்வென்ச்சர் மாடலையும் காட்சிப்படுத்தியது. சமீபத்தில் கே.டி.எம். நிறுவனம் 390 அட்வென்ச்சர் மாடலை அறிமுகம் செய்தது.

    இந்தியாவில் 790 அட்வென்ச்சர் மாடலின் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்குள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. 790 அட்வென்ச்சர் மாடல் 1290 அட்வென்ச்சர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் ஹெட்லேம்ப் கிளஸ்டரில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    கே.டி.எம். 790 அட்வென்ச்சர்

    790 அட்வென்ச்சர் மாடலில் 799சிசி பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. கே.டி.எம். 790 டியூக் மாடலிலும் இதே என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அட்வென்ச்சர் மாடலில் இந்த என்ஜின் 94 பி.ஹெச்.பி. பவர் @8250 ஆர்.பி.எம். மற்றும் 88 என்.எம். டார்க் @6600 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் அறிமுகமானதும் 790 அட்வென்ச்சர் மாடல் டிரையம்ப் டைகர் 800, பி.எம்.டபுள்யூ. 850 ஜி.எஸ். போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். கே.டி.எம். 790 அட்வென்ச்சர் மாடலின் விலை ரூ. 10 முதல் ரூ. 11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
    Next Story
    ×