search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    சுசுகி அக்சஸ் 125
    X
    சுசுகி அக்சஸ் 125

    இந்தியாவில் சுசுகி அக்சஸ் பி.எஸ். 6 அறிமுகம்

    சுசுகி நிறுவனத்தின் அக்சஸ் பி.எஸ். 6 ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2020 சுசுகி அக்சஸ் பி.எஸ். 6 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புத்தம் புதிய சுசுகி அக்சஸ் பி.எஸ். 6 மாடலில் இகோ-அசிஸ்ட் இலுமினேஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்கூட்டரின் எரிபொருள் தேவையை குறைக்கும்.

    இத்துடன் வெளிப்புற ஃபியூயல் ஃபில்லர் கேப், புதிய வடிவமைப்பு கொண்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப், ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டரில் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.6 பி.ஹெச்.பி. பவர், 10 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இந்த ஸ்கூட்டரில் உள்ள புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப் நீண்ட தூரத்திற்கு வெளிச்சத்தை பாய்ச்சும் திறன் கொண்டதாகும். மேலும் யு.எஸ்.பி. சாக்கெட் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுசுகி அக்சஸ் 125 பி.எஸ். 6 ஸ்கூட்டரில் பயணிக்கும் போதே ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

    சுசுகி அக்சஸ் 125

    பி.எஸ். 4 மாடலை விட அதிகளவு மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என சுசுகி எதிர்பார்க்கிறது. மேலும் இதில் உள்ள புதிய அம்சங்கள் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தும் என சுசுகி தெரிவித்துள்ளது.

    தற்சமயம் விற்பனை செய்யப்படும் சுசுகி அக்சஸ் ஸ்கூட்டர் ரூ. 59,994 (எக்ஸ் ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் பி.எஸ். 6 வெர்ஷன் விலை ரூ. 8000 முதல் ரூ. 10,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×