என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
      • 17 வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் சி.இ.ஓ.ஏ. மதுரை அணியினர் முதல் பரிசை பெற்றனர்

      தென்காசி:

      பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளி முன்னாள் நிர்வாகி எஸ்.கே.பி. குத்தாலிங்க நாடார் நினைவு கைப்பந்து போட்டி நேற்று மடத்தூரில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

      மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் மதுரை மேட்டுப்பட்டி அணியினர் முதல் பரிசும், சி.இ.ஓ.ஏ. மதுரை அணியினர் 2-வது பரிசும், மடத்தூர் இந்து நடுநிலைப் பள்ளி அணியினர் 3-ம் பரிசும், நான்காம் பரிசை மம்சாபுரம் அணியினரும் பெற்றனர்.

      மாணவிகள் பிரிவில் முதல் பரிசு பரமகல்யாணி பள்ளி அணியினரும், 2-வது பரிசை எஸ்.என். அகாடமி அணியினரும், 3-ம் பரிசினை அழகர் கோவில் அணியினரும், 4-வது பரிசினை மடத்தூர் இந்து நடுநிலை பள்ளி மாணவிகளும் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் முதல் பரிசை சி.இ.ஓ.ஏ. மதுரை அணியினரும், 2-வது பரிசினை மம்சாபுரம் அணியினரும், 3-ம் பரிசை ஸ்ரீவில்லிபுத்தூர் அணியினரும், 4-ம் பரிசை ராமேஸ்வரம் அணியினரும் பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடு களை பிரவீன் அகஸ்டின் செய்திருந்தார்.

      • கொடிகுறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் 1000 ஏக்கருக்கும் மேலாக நாட்டு சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
      • தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கத்தில் சில நாட்கள் பெய்ததால் குண்டாறு அணை நிரம்பியது

      செங்கோட்டை:

      செங்கோட்டையை அடுத்துள்ள சுப்பிரமணியபுரம், கணக்கப்பிள்ளை வலசை, இலத்தூர், அச்சன்புதூர், சீவநல்லூர், கொடிகுறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 1000 ஏக்கருக்கும் மேலான மானாவாரி பயிரான மருத்துவ குணம் வாய்ந்த நாட்டு சோளம் சாகுபடி செய்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

      கடந்த சில ஆண்டுகளாக போதிய வருமானம் கிடைக்காததால் தற்போது பெரும்பாலான பகுதிகளில் பூ மகசூல் என சொல்லபடும் கேப்பை சோளம், மொச்சை, தக்காளி வெண்டை, கத்தரி உள்ளிட்ட பயிர்களை பயிரிடாமல் தரிசாகவே போட்டு வருகின்றனர்.

      இந்நிலையில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தென்காசி மாவட்டத்தில் தொடக்கத்தில் சில நாட்கள் பெய்ததால் குண்டாறு அணை நிரம்பியது. இதனால் செங்கோட்டை தாலுகா இலத்தூர் விவசாயிகள் தக்காளி, வெங்காயம், வாழை, நெல் மற்றும் சோளம் போன்ற வற்றை சாகுபடி செய்தனர். ஆனால் பின்னர் பருவமழை கண்ணாமூச்சி காட்டி சென்றது. இதனால் போதிய விளைச்சல் இல்லை. கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் தாங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயி கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

      இதுபற்றி விவசாயி சோழராஜன் கூறும்போது, சோளம் விதைத்து சுமார் 80, 90 நாட்கள் வரை ஏக்கருக்கு சுமார் ரூ.18 முதல் ரூ. 20 ஆயிரம் வரை செலவு செய்தோம். ஆனால் போதிய மழை இல்லாததால் விளைச்சல் இல்லாமல் நஷ்டம் அடைந்துள்ளோம். இதற்கு காரணம் முழுக்க முழுக்க நிலத்தடிநீரை மட்டுமே நம்பி உள்ளதால் கூடுதலாக செலவு செய்தும் எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லாமலும் அதற்கேற்ப விலை இருந்தும் சோளம் பயிரிட்ட விவசாயிகள் ஓவ்வொரு ஆண்டும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம் என்றார்.

      • விழாவின் 2-ம் நாள் காலை சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசனத்திலும், இரவு விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.
      • வருகிற 28-ந் தேதி முக்கிய நிகழ்வான தேர் வீதி உலா நடைபெறுகிறது.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி வைத்தியலிங்க சுவாமி - அன்னை யோகாம்பிகை கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

      விழாவையொட்டி காலை சிம்ம லக்கனத்தில் கொடி மரத்தில் கொடி யேற்றப்பட்டது.

      தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனையும், இரவில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடை பெற்றது.

      விழாவின் 2-ம் நாள் காலை சுவாமி, அம்பாள் ஏக சிம்மாச னத்திலும், இரவு விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.

      தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், தீபாரா தனை, மண்டகப்படி தீபாராதனை, சுவாமி வீதி உலா நிகழ்வுகள் நடைபெறுகிறது.

      விழாவின் 10 -ம் திருநாளான வருகிற 28-ந் தேதி முக்கிய நிகழ்வான தேர் வீதி உலா நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்துச் செல்கின்றனர்.

      11 -ம் நாள் சுவாமி, அம்பாள் ரிஷப வாகன காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

      இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சுப்பிரமணிய உமாபதி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

      • பொது மக்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை முகாம் ராயகிரியில் நடைபெற்றது.
      • முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்றனர்.

      சிவகிரி:

      வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் ராயகிரியில் பொது மக்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

      முகாமை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ். தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி. முருகேசன் மற்றும் ராயகிரி பஞ்சாயத்து தலைவர் விவேகானந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

      இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்றனர். இதன் சிறப்பம்சமாக யோகா, அக்குபஞ்சர், பிசியோதெரபி போன்ற சிகிச்சைகள், வயது முதிர்வு சார்ந்த உபாதைகள், சீரான உணவு பழக்க வழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு, இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டது. டாக்டர் ஏ.வேடியப்பன், டாக்டர் நிலா மற்றும் பயிற்சி மருத்துவ மாணவர்கள் ஆகியோர் பங்குபெற்ற பொது மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி னார்கள். முகாமிற்கான ஏற்பாடுகளை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ ஆராய்ச்சி மைய ஆசிரியர்கள் மற்றும் அலு வலர்கள் செய்திருந்தனர்.

      • 4 வழிச்சாலை விரிவாக்க பணிகளுக்காக குளத்தின் மீது மண்ணை கொட்டி சாலை போடுகின்றனர்.
      • குளத்தின் மீது சாலை அமைத்தால் குளத்தில் நீரின் கொள்ளவு குறைய வாய்ப்பு இருக்கிறது.

      தென்காசி:

      பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளம் கிராமத்தை சேர்ந்தவரும், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு பா.ஜ.க. மாநில செயலாளருமான மருது பாண்டியன் தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

      தென்காசி-நெல்லை 4 வழிச்சாலை விரிவாக்க பணிகளுக்காக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் நாகல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள குளத்தின் மீது சாலையின் இடது பக்கம் சுமார் 25 அடிகளும், வலது பக்கம் சுமார் 50 அடிகளும் சுமார் 6.5 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மண்ணை கொட்டி சாலை போடுகின்றனர்.

      இந்த குளத்தின் நீர்பாசனத்தை நம்பி ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாய நிலங்களும், நீர் ஆதாரத்திற்காகவும் இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது குளத்தின் மீது சாலை அமைத்தால் குளத்தின் மொத்த நீரின் கொள்ளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் பாலம் அமைத்து சாலை அமைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

      இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

      • ஒண்டிவீரன் நினைவிடத்தில் தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
      • நிகழ்ச்சியில் சுப்பிரமணியபுரம் ஊராட்சி தலைவர் வக்கீல் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      சிவகிரி:

      வாசுதேவநல்லூர் அருகே நெல்கட்டும்செவல் பச்சேரியில் விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவிடத்தில் தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ராஜேஷ்ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பார்வையாளர் மகாராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமராஜா, வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ்வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்தன், மாவட்ட செயலாளர்கள் ராஜலட்சுமி, அர்ஜூனன், புலிக்குட்டி, மாவட்ட துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தலைவர், சுப்பிரமணியபுரம் ஊராட்சி தலைவர் வக்கீல் ராம்குமார், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய தலைவர் சண்முகராஜ், சங்கரன்கோவில் நகர தலைவர் கணேசன், குருவிகுளம் ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துப்பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் முப்புடாதி, மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் மரகதம், இளைஞர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் சங்கரநாராயணன், ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச்செயலாளர் கோதண்டராமன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செந்தூர்பாண்டியன், அரசு தொடர்பு பிரிவு குத்தாலிங்கம், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு கண்ணன், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் விவேக்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

      • நிரஞ்சனா 12 ஆண்டு காலமாக ஆக்ஸ்போர்டு பள்ளியில் பயின்று வருகிறார்.
      • பள்ளி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தமைக்காக மாணவியின் பெற்றோர்களை அழைத்து கேடயம் வழங்கப்பட்டது.

      தென்காசி:

      பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சங்க முன்னாள் தலைவர் கே.ஆர்.பால்துரை, ஜானகி ஆகியோரின் பேத்தியும், கீழப்பாவூர் யூனியன் முன்னாள் ஒன்றிய தலைவர் வே.ஆறுமுகநாடார்-முத்தம்மாள் ஆகியோரின் பேத்தியும், பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர்வு குழு நிறுவனர் கே.ஆர்.பி.இளங்கோ- வி.எ.லதா தம்பதியின் மகள் நிரஞ்சனா 12 ஆண்டு காலமாக தென்காசி குத்துக்கல்வலசையில் உள்ள ஆக்ஸ்போர்டு பள்ளியில் பயின்று வருகிறார். மாணவி நிரஞ்சனா பள்ளி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தமைக்கு பெற்றோர்களை அழைத்து நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரிய , ஆசிரியைகள் அனைவரும் பாராட்டி கேடயம் வழங்கினர்.

      • தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமாக இந்த பனை மரங்கள் காணப்படுகிறது.
      • ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் ஆற்றுப்படுகையில் 20 சதவீதம் பனை மரங்கள் காணப்பட்டன.

      செய்துங்கநல்லூர்:

      பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம். இந்த பனைமரம் இந்தியாவில் 8 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமாக இந்த பனை மரங்கள் காணப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற தென்மாவட் டங்களில் தான் அதிகமாக பனைமரங்கள் காணப்படு கிறது.

      வெகுவாக குறைந்தது

      ஒருக்காலத்தில் தாமிரபரணி இருகரையிலும கோடிகணக்கில் பனை மரங்கள் இருந்தன. இங்கு ஒவ்வொரு ஊரிலும் பனைத்தொழில் அதிகமாக நடந்தது. பனைத்தொழிலாளிகளும் அதிகமாக வாழ்ந்து வந்தனர். கடந்த 25 வருடத்தில் பனைத் தொழில் வெகுவாக குறைந்தது. இங்கிருந்த பனை மரங்கள் சுமார் 80 சதவிகிதம் குறைந்துவிட்டது.

      இதில் தப்பி தவறி ஆதிச்சநல்லூர் போன்ற ஒரு சில இடங்களில் ஆற்றுப்படுகையில் 20 சதவீதம் பனை மரங்கள் காணப்பட்டன.

      தற்போது பனை மரங்களை வளர்ப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

      குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கிள்ளிகுளம் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் பனை மரங்களை ஆய்வு மேற்கொள்வதற்காக ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டு அதற்கான ஆராய்ச்சி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

      1 கோடி பனைமர விதைகள்

      இது மனதுக்கு ஆறுதலை தந்து வந்தது. இதை தவிர தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முயற்சியில் தொண்டு நிறுவனங்கள் மூலமாக 1 கோடி பனைமர விதைகள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடப்பட்டு வரு கிறது. ஆனாலும் மரங் களை அழிக்க செயற்கை யோடு இயற்கையும் போட்டிப் போடுகிறது. தூத்துக்குடி மாவட்டங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் அடிக்கும் காற்றில் ஆங்காங்கே வருடம் தோறும் மரங்கள் தீப்பிடித்து எரிவது வாடிக்கையாகி விட்டது.

      தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் சுற்று வட்டாரப்பகுதி களில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

      காற்றின் காரணமாக இந்த தீ விபத்துகள் அனைத்தும் பெரிய அளவில் மரங்களை பாதித்துள்ளது. குறிப்பாக பனைமரங்கள், தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன.

      மரங்கள் கணக்கெடுப்பு

      கடந்த 1-ந் தேதி ஸ்ரீவை குண்டம் அருகே உள்ள பொன்னங்குறிச்சி தாமிர பரணி ஆற்றுப்பகுதியில் உள்ள கரை மற்றும் உள்பகுதியில் இருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமானது.

      இந்த விபத்தில் தனி யாருக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் எரிந்து சேதமானது. தீ பிடித்த மறுநாள் இந்த விபத்து குறித்து வருவாய்த்துறை யினர் ஆய்வு மேற்கொண்டு தீயில் எரிந்த மரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர்.

      இந்த மரங்கள் அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் பொதுப்பணித் துறையினருக்கு சொந்தமானது. ஆனால் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தாமிர பரணி ஆற்றுப்பகுதியில் உள்ள எந்த மரங்களையும் பராமரிப் பதில்லை.

      எரிந்த பனைமரங்களை சுற்றி ஏராளமான காய்ந்த பனை ஓலைகள் கிடந்த காரணத்தி னால் தான் இந்த தீ விபத்து மிகப்பெரிய அளவில் ஏற்பட்டது.

      இந்த மரங்களை பொதுப் பணித்துறையினர் பராமரித்து வைத்திருந்தால் அதிகமான பனை மரங்கள் எரிந்து சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த தாமிர பரணிக்கரையில் உள்ள பனைமரங்கள் மட்டுமல்லாமல் அனைத்து மரங்களையும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

      துளிர்விடத் தொடங்கியது

      இதற்கிடையில் 2 வாரத்திற்கும் மேல் ஆன காரணத்தினால் தீயில் எரிந்த பனைமரங்களில் பெரும்பாலான பனை மரங்கள் குருத்தோலை விடத்தொடங்கி உள்ளது. இதைக்கண்ட பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்களி டையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறியதாவது:-

      பனை மரங்கள் ஒரு முறை தீயில் எரிந்தால் அதன்பின்னர் அதை வளர்ப்பது மிகவும் கடினம். ஆனால் தாமிரபரணிக் கரையில் நீர் படுகையில் இருந்த காரணத்தினால் தற்போது இந்த மரங்கள் அனைத்தும் துளிர் விடத்தொடங்கி உள்ளன.

      எனவே இந்த எரிந்த மரங்களில் உள்ள ஓலைகள், நுங்குகள் என அனைத்தை யும் அகற்றி அனைத்து பனை மரங்களையும் முறை யாக பராமரித்து வருடம் தோறும் இந்த பனைமரங்க ளில் உள்ள காய்ந்த ஓலைகளை அகற்றினாலே காற்றுக் காலங்களில் ஏற்படும் தீ விபத்துக்களை தவிர்க்க முடியும். எனவே பொதுப்பணித் துறையினர் இந்த வேலைகளை முறை யாக செய்ய வேண்டும்.

      தாமிரபரணி ஆற்றுப்படு கையில் ஏராளமான பனை மரங்கள் உள்ளது. இந்த பனைமரங்களில் வருடம் தோறும் ஏற்படும் தீ விபத்துக்களில் பனை மரங்கள் எரிந்து சேதமாகும் நிலை தொடர்ந்து வருகிறது. வருடம்தோறும் இந்த பனை மரங்களை பராமரித்து வைத்தால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாது.

      எனவே இந்த மரங்களை பாதுகாக்க பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

      இவ்வாறு அவர் கூறினார்.


      தீ விபத்தில் கருகிய பனை மரங்கள்.

      தீ விபத்தில் கருகிய பனை மரங்கள்.


       


      • ஆதவா தொண்டு நிறுவனம் பட்டதாரி மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த இளம் பெண்களை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு அமர்த்தி மாத சம்பளம் வழங்கி வந்துள்ளது.
      • ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தை சுமார் 160 ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் வந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      ஆறுமுகநேரி:

      தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் ஆதவா தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனரான பாலகுமரேசன் (வயது 48) தனது அலுவலகத்தின் அருகில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில் பால்பண்ணையும், குடும்ப உணவகத்தையும் நடத்தி வந்தார்.

      இந்த ஆதவா தொண்டு நிறுவனம் பட்டதாரி மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த இளம் பெண்களை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு அமர்த்தி மாத சம்பளம் வழங்கி வந்துள்ளது. இந்த நிலையில் தங்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், தங்களிடம் இருந்து வளர்ச்சி நிதி என்ற பெயரில் பெறப்பட்ட பணத்தை திருப்பி தரும்படி கேட்டும் ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தை சுமார் 160 ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் வந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      இதே போல் பாதிக்கப்பட்டதாக கூறி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தற்காலிக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் அவர்களுக்கான தீர்வு ஏதும் கிடைக்கவில்லை. இதனிடையே ஆதவா நிறுவனத்திற்கு சொந்தமான பால் பண்ணையில் ' திடீர் திடீரென' 2 நாட்கள் பல லட்சம் மதிப்புள்ள வைக்கோல் படப்புகள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் நிறுவனத்திற்கு பணம் கொடுத்தவர்கள் சார்பில் சிலர் அந்த பால் பண்ணையில் முகாமிட்டனர். இதனால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.

      இந்த நிலையில் பல்வேறு இடங்களை சேர்ந்த தற்காலிக ஆசிரியர், ஆசிரியைகள் 65 பேர் நேற்று திரண்டு வந்து அதிரடியாக பால் பண்ணைக்குள் நுழைந்தனர். தாங்கள் இந்த பால் பண்ணையின் பங்குதாரர்கள் என்று உரிமை கோரிய அவர்கள் பால குமரேசனின் விருப்பத்தின்படியே இங்கு வந்துள்ளதாகவும், மற்றவர்கள் இங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

      இது பற்றி தகவல் அறிந்த ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஆசிரியர் குழுவினரை பார்த்து எவ்வித ஆவணமும் இல்லாத உங்களால் இந்த பால் பண்ணையை உரிமை கோர இயலாது என்றும், இதே போல் மற்றொரு தரப்பினரும் வந்தால் அது பெரும் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்பதால் இங்கிருந்து உடனே சென்று விடுங்கள் என்றும் அறிவுறுத்தினர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அந்த ஆசிரியர் குழுவினர் சோகத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர். தொடர்ந்து பால்பண்ணையில் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.

      • சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் பேரவை தொடக்க விழா நடைபெற்றது.
      • வல்லநாடு துளசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனர் சாந்தகுமாரி கலந்து கொண்டு மாணவிகள் பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

      சாத்தான்குளம்:

      சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவர் பூங்கொடி வரவேற்றார். கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை தாங்கினார்.

      சிறப்பு விருந்தினராக வல்லநாடு துளசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனர் சாந்தகுமாரி கலந்து கொண்டு மாணவிகள் பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் சாத்தான்குளம் கல்விக்கழக தலைவர் சுப்பிரமணியம், துணைத்தலைவர் லெட்சுமி நாராயணன், செயலர் ஜெயபிரகாஷ், புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் பாலமேனன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளை வாழ்த்தினர். முடிவில் வணிக நிர்வாகவியல் பேராசிரியை சண்முகசுந்தரி நன்றி கூறினார்.

      விழா நிகழ்ச்சிகளை தமிழ்த்துறை பேராசிரியை சீதாலெட்சுமி தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை பேராசிரியை நீமா தேவ் பொபீனா மற்றும் முனைவர் ஆனந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

      • இன்று மாலை மூப்பன்பட்டியில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்கின்றனர்.
      • வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு கயத்தாறு கிழக்கு ஒன்றியம் கே.குப்பனாபுரத்தில் குறைகள் கேட்கின்றனர்.

      தூத்துக்குடி:

      தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் ஆகியோர் இன்றும், வருகிற 23-ந்தேதியும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிகின்றனர்.

      அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு கோவில்பட்டி மத்திய ஒன்றியம் மூப்பன்பட்டியிலும், 6.30 மணிக்கு கோவில்பட்டி மேற்கு ஒன்றியம் தோனுகால், 7 மணிக்கு சத்திரப்பட்டி, 8 மணிக்கு ஊத்துப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெறும் மக்கள்களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்கின்றனர்.

      இதேபோல் வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு கயத்தாறு கிழக்கு ஒன்றியம் கே.குப்பனாபுரத்திலும், 5 மணிக்கு தெற்கு வண்டானத்திலும், 6 மணிக்கு வடக்கு வண்டானத்திலும், 7 மணிக்கு கொப்பம்பட்டியிலும் நடைபெறும் மக்கள்களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறை களை கேட்டறிகின்றனர்.

      • கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி பொருளியல் துறை உதவி பேராசிரியர் சங்கர நாராயணன் முதுநிலை பொருளியல் மன்றத்தை தொடங்கி வைத்து பேசினார்.
      • பேச்சுப்போட்டியில் முறையே முதல் 5 இடங்களை வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

      திருச்செந்தூர்:

      திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுநிலை பொருளியல் மன்ற தொடக்க விழா மற்றும் ஏ.டி.ஷரோப் நினைவு பேச்சுப்போட்டி யில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறைத்தலைவர் மாலைசூடும் பெருமாள் வரவேற்று பேசினார். கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி பொருளியல் துறை உதவி பேராசிரியர் சங்கர நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதுநிலை பொருளியல் மன்றத்தை தொடங்கி வைத்து பேசினார்.

      பேச்சுப்போட்டியில் முறையே முதல் 5 இடங்களை வென்ற மாணவர்கள் ெசல்வம், ஞான அபினாஷ், இசக்கிமுத்து, ஆஷா, சாமுவேல் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்த முதுநிலை பொருளியல் மாணவிகள் அபிதா, குணவதி, 2-வது இடம் பிடித்த சிவபாரதி மற்றும் பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்த இளங்கலை மாணவர் ஞான அபினாஷ், 2-வது இடம் பிடித்த மாணவர் எரிக் பர்னாண்டோ ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவ செயலர் சிவபாலன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வழிகாட்டுதலின்படி, பொருளியல் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் செய்து இருந்தனர்.

      ×