என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதித்தனார் கல்லூரியில் பொருளியல் மன்ற தொடக்க விழா
    X

    ஆதித்தனார் கல்லூரியில் பொருளியல் மன்ற தொடக்க விழா

    • கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி பொருளியல் துறை உதவி பேராசிரியர் சங்கர நாராயணன் முதுநிலை பொருளியல் மன்றத்தை தொடங்கி வைத்து பேசினார்.
    • பேச்சுப்போட்டியில் முறையே முதல் 5 இடங்களை வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுநிலை பொருளியல் மன்ற தொடக்க விழா மற்றும் ஏ.டி.ஷரோப் நினைவு பேச்சுப்போட்டி யில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறைத்தலைவர் மாலைசூடும் பெருமாள் வரவேற்று பேசினார். கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி பொருளியல் துறை உதவி பேராசிரியர் சங்கர நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதுநிலை பொருளியல் மன்றத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    பேச்சுப்போட்டியில் முறையே முதல் 5 இடங்களை வென்ற மாணவர்கள் ெசல்வம், ஞான அபினாஷ், இசக்கிமுத்து, ஆஷா, சாமுவேல் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்த முதுநிலை பொருளியல் மாணவிகள் அபிதா, குணவதி, 2-வது இடம் பிடித்த சிவபாரதி மற்றும் பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்த இளங்கலை மாணவர் ஞான அபினாஷ், 2-வது இடம் பிடித்த மாணவர் எரிக் பர்னாண்டோ ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவ செயலர் சிவபாலன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வழிகாட்டுதலின்படி, பொருளியல் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×