search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே குளத்தின் மீது பாலம் அமைத்து  சாலை அமைக்க வலியுறுத்தல்
    X

    பாவூர்சத்திரம் அருகே குளத்தின் மீது பாலம் அமைத்து சாலை அமைக்க வலியுறுத்தல்

    • 4 வழிச்சாலை விரிவாக்க பணிகளுக்காக குளத்தின் மீது மண்ணை கொட்டி சாலை போடுகின்றனர்.
    • குளத்தின் மீது சாலை அமைத்தால் குளத்தில் நீரின் கொள்ளவு குறைய வாய்ப்பு இருக்கிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளம் கிராமத்தை சேர்ந்தவரும், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு பா.ஜ.க. மாநில செயலாளருமான மருது பாண்டியன் தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தென்காசி-நெல்லை 4 வழிச்சாலை விரிவாக்க பணிகளுக்காக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் நாகல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள குளத்தின் மீது சாலையின் இடது பக்கம் சுமார் 25 அடிகளும், வலது பக்கம் சுமார் 50 அடிகளும் சுமார் 6.5 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மண்ணை கொட்டி சாலை போடுகின்றனர்.

    இந்த குளத்தின் நீர்பாசனத்தை நம்பி ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாய நிலங்களும், நீர் ஆதாரத்திற்காகவும் இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது குளத்தின் மீது சாலை அமைத்தால் குளத்தின் மொத்த நீரின் கொள்ளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் பாலம் அமைத்து சாலை அமைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×