என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சோனி நிறுவனம் பிளேஸ்டேஷன் 5 மற்றும் ஸ்மார்ட்போன்கள் விற்பனை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.


    சோனி கார்ப்பரேஷன் நிறுவனம் 14.9 சதவீதம் வருடாந்திர லாபம் ஈட்டியுள்ளது. மார்ச் 31, 2021 வரையிலான காலாண்டில் மட்டும் சோனி 26.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    இந்த நிறுவனத்தின் சமீபத்திய பிளேஸ்டேஷன் 5 உலகம் முழுக்க சுமார் 78 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் சோனி நிறுவனம் சுமார் 45 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 33 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

     சோனி பிளேஸ்டேஷன் 5

    ஒட்டுமொத்த வியாபாரத்தில் கேம் மற்றும் நெட்வொர்க் சேவைகள் பிரிவில் மட்டும் சோனி கணிசமான லாபம் ஈட்டியுள்ளது. இதன் மின்னணு பொருட்கள் பிரிவு 3 சதவீத சரிவடைந்துள்ளது. டிஜிட்டல் கேமரா, ஒளிபரப்பு, தொழில்முறை ஆடியோ மற்றும் வீடியோ சாதனங்கள் விற்பனையும் சரிவடைந்து இருக்கிறது.
    அசுஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் சென்போன் 8 பன்ச் ஹோல் கட்-அவுட் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    அசுஸ் சென்போன் 8 ஸ்மார்ட்போன் மே 12 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இடதுபுற ஓரத்தில் பன்ச் ஹோல் கட்-அவுட் வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. அந்த வகையில், தற்போது இதன் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

     அசுஸ் டீசர்

    முந்தைய தகவல்களின் படி அசுஸ் நிறுவனம் இந்த ஆண்டு சென்போன் 8, சென்போன் 8 ப்ரோ மற்றும் சென்போன் 8 மினி என மூன்று மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. மூன்று மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.

    அசுஸ் சென்போன் 8 மற்றும் சென்போன் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 64 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது. 
    கார்மின் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புது ஸ்மார்ட்வாட்ச் கொல்ப் விளையாடுவோருக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.


    கார்மின் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் அப்ரோச் எஸ்12 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இது ஜிபிஎஸ் சார்ந்து இயங்குகிறது. இது கொல்ப் விளையாடுவோருக்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த ஸ்மார்ட்வாட்ச் சுமார் 42 ஆயிரம் உலகளாவிய கொல்ப் கோர்ஸ்களை கொண்டிருக்கிறது. இது 1.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது நேரடி சூரிய வெளிச்சத்திலும் டிஸ்ப்ளேவை சிறப்பாக பார்க்க வழி செய்கிறது. இதில் விரைந்து மாற்றக்கூடிய பேண்ட்கள் உள்ளன.

     கார்மின் அப்ரோச் எஸ்12

    இது விளையாட்டு வீரரின் தரவுகளை கார்மின் கொல்ப் செயலி மூலம் அப்டேட் செய்கிறது. இந்த செயலி புள்ளிப்பட்டியலை வாராந்திர அடிப்படையில் மட்டுமின்றி விளையாட்டு தொடர், நேரலை புள்ளி பட்டியல், தானியங்கி ஸ்கோர்கார்டு என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இந்தியாவில் கார்மின் அப்ரோச் எஸ்12 விலை ரூ. 20,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பல்வேறு முன்னணி வலைதளம் மற்றும் ஆப்லைன் தளங்களில் கிடைக்கிறது.
    ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்தியாவில் கொரோனா தொற்று மீட்பு பணிகளுக்கு உதவுவதாக அறிவித்து இருக்கிறார்.


    ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனாவைரஸ் பாதிப்புகளை சரி செய்வதற்கான பணிகளில் ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்.

    `இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ பணியாளர்கள், முன்கள ஊழியர்கள் என பாதிக்கப்பட்டுள்ள அனைவருடன் ஆப்பிள் துணை நிற்கிறது. களத்தில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள தேவையான உதவிகளுக்கு ஆப்பிள் நன்கொடை வழங்கும்,' என டிம் குக் தெரிவித்து இருக்கிறார்.

     டிம் குக்

    கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியா முழுக்க மிகத்தீவிரம் அடைந்துள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் சத்ய நாதெல்லா மற்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் இந்தியாவுக்கு உதவுவதாக அறிவித்தனர்.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி மற்றும் இதர சாதனங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.


    ரியல்மி இந்தியா மூன்றாவது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டின் மிகப்பெரும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மே 4 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த நிகழ்வில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

     ரியல்மி

    இத்துடன் டால்பி விஷன் மற்றும் ஆடியோ, ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல் கொண்ட புது ஸ்மார்ட் டிவியும் இந்த நிகழ்வில் அறிமுகமாகிறது. மேலும் இந்த ஆண்டின் இந்தியாவில் அறிமுகமாகும் சாதனங்களில் பாதி 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும். 

    ரூ. 20 ஆயிரத்திற்கும் அதிக விலையில் வெளியாகும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி வழங்கப்படும். இதோடு குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவும் ரியல்மி திட்டமிட்டு இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ஒப்போ நிறுவனத்தின் புது பட்ஜெட் ரக 5ஜி ஸ்மார்ட்போன் மே 2 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.


    ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ஏ53எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், கலர் ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

     ஒப்போ ஏ53எஸ் 5ஜி

    ஒப்போ ஏ53எஸ் 5ஜி சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
    - மாலி-G57 MC2 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - கலர்ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, PDAF, LED பிளாஷ்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி 

    ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் புளூ மற்றும் இன்க் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 14,990 மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 16,990 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் தளங்களில் மே 2 ஆம் தேதி துவங்குகிறது.
    சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் கேமரா சென்சார் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    சியோமி நிறுவனம் 200 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கேமரா சென்சாரை சாம்சங் உற்பத்தி செய்யும் என்றும் இது முதன்முதலில் சியோமி ஸ்மார்ட்போனில் தான் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    முன்னதாக பல்வேறு ஸ்மார்ட்போன்களை 108 எம்பி கேமராவுடன் சியோமி அறிமுகம் செய்து இருக்கிறது. சமீபத்தில் அறிமுகமான எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ மாடலிலும் இந்த சென்சார் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

     சியோமி ஸ்மார்ட்போன்

    புதிய 200 எம்பி கேமரா சென்சார் சாம்சங் நிறுவனத்தின் ISOCELL சென்சார் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 108 எம்பி கேமரா சென்சார்கள் தற்போது பிரீமியம் மட்டுமின்றி பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடல்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. 

    சாம்சங்கின் 200 எம்பி சென்சார் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இது 0.34 மைக்ரான் பிக்சல்களை கொண்டிருக்கும் என்றும் இது 1/1.37 இன்ச் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சென்சார் அதிகபட்சம் 16K வீடியோ ரெக்கார்டிங், 16-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 
    விவோ நிறுவனத்தின் புது 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    விவோ நிறுவனம் வி21 5ஜி ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 29 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விர்ச்சுவல் முறையில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகமாகிறது. இது ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    தற்போதைய தகவல்களின் படி விவோ வி21 5ஜி மாடலில் 44 எம்பி செல்பி கேமரா, OIS வசதி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. அந்த வகையில் செல்பி கேமராவுக்கு OIS வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இது என்ற பெருமையை பெறுகிறது.

     விவோ வி21 5ஜி

    இத்துடன் இரண்டு பிளாஷ் மாட்யூல்கள் வழங்கப்படுகிறது. இவற்றை விவோ ஸ்பாட்லைட் செல்பி என அழைக்கிறது. இது குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளிலும் தெளிவான செல்பிக்களை எடுக்க வழி வகுக்கிறது. விவோ வி21 மாடலில் சூப்பர் நைட் செல்பி 2.0, ஸ்பாட்லைட் செல்பி, டூயல்-வியூ வீடியோ என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படலாம்.

    இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் எக்ஸ்டென்டெட் ரேம் வசதி வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் இன்டெர்னல் மெமரியில் 3 ஜிபியை பயன்படுத்தி மொத்தம் 11 ஜிபி ரேம் கிடைக்கும்.
    ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 14.5 அப்டேட்டில் ஏடிடி எனும் பாதுகாப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 14.5 அப்டேட் வெளியிட துவங்கியது. இது செப்டம்பரில் வெளியாகும் முழு ஒஎஸ் அப்டேட் இல்லை எனினும், இது அசத்தலான புதிய அம்சங்களை வழங்குகிறது. முகக்கவசம் அணிந்த படி ஐபோனினை அன்லாக் செய்யும் வசதி, ஏடிடி எனப்படும் ஆப் டிராக்கிங் டிரான்ஸ்பெரன்சி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புது அப்டேட் வழங்கும் முக்கிய அம்சமாக ஏடிடி இருக்கிறது. இந்த அம்சம் சாதனத்தில் செயலிகள் பயனர் விவரங்களை சேகரிக்கும் முன் அவர்களின் அனுமதியை கேட்க வழி செய்துள்ளது. இந்த அம்சம் விளம்பர வியாபாரத்தை பெரிதும் பாதிக்கும் என பேஸ்புக் கருத்து தெரிவித்து இருக்கிறது.

     ஐஒஎஸ் 14

    புதிய மாற்றங்களுக்கு அனுமதி அளிக்காத செயலிகள் நீக்கப்படும் என ஆப்பிள் ஏற்கனவே தெரிவித்து விட்டது. ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு பின் சமர்பிக்கப்படும் செயலிகள் ஏடிடி திட்டத்திற்கு ஆதரவளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் ஆப்பிள் தெரிவித்து உள்ளது.

    ஐஒஎஸ் 14.5 அப்டேட் டூயல் சிம் 5ஜி, 200-க்கும் அதிக புது எமோஜிக்கள், புது வடிவமைப்பில் தடுப்பூசி எமோஜி, சிரி சேவையில் புது குரல்கள், விரும்பிய மியூசிக் பிளேயரை தேர்வு செய்யும் வசதி, பிஎஸ்5, எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் கண்ட்ரோலர்களுக்கான சப்போர்ட் வழங்கப்படுகிறது.
    ஐகூ நிறுவனத்தின் ஐகூ 7 5ஜி மற்றும் ஐகூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
     

    ஐகூ நிறுவனம் ஐகூ 7 5ஜி மற்றும் ஐகூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் 6.62 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், 5ஜி SA/NSA, லிக்விட் கூலிங் சிஸ்டம், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மோனோ  டெப்த் சென்சார், 16 எம்பி பன்ச்-ஹோல் செல்பி கேமரா, 4400 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஐகூ 7 5ஜி சாலிட் ஐஸ் புளூ மற்றும் ஸ்டாம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 31,990, 8 ஜிபி + 256 ஜிபி ரூ. 33,990 மற்றும் டாப் எண்ட் 12 ஜிபி + 256 ஜிபி ரூ. 35,990 ஆகும்.

    ஐகூ 7 லெஜண்ட் 6.62 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11.1, 5ஜி SA/NSA, 4000 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் சூப்பர் பாஸ்ட் பிளாஷ் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன், 13 எம்பி போர்டிரெயிட் கேமரா, 16 எம்பி பன்ச்-ஹோல் செல்பி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஐகூ 7 லெஜண்ட் வைட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 39,990, 12 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 43,990 ஆகும். இரு ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் மே 1 ஆம் தேதி துவங்குகிறது. 
    ஐபோன் 13 மினி மாடல் முந்தைய மாடலை விட ஓரளவு வித்தியாச தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் 2021 ஐபேட் ப்ரோ, ஆப்பிள் டிவி 4கே, ஐமேக் மற்றும் ஏர்டேக்ஸ் உள்ளிட்ட சாதனங்களை ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில் அறிமுகம் செய்தது. தற்போது ஆப்பிள் அடுத்தக்கட்ட சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 

    செப்டம்பரில் நடைபெற இருக்கும் நிகழ்வில் ஐபோன் 13 மினி மாடல்களின் படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் கடைசி மினி மாடல் என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஐபோன் 13 மினி படங்கள் சீனாவின் வெய்போ தளத்தில் வெளியாகி உள்ளது. 

     ஐபோன் 12

    தற்போதைய தகவல்களின்படி ஐபோன் 13 மினி சதுரங்க வடிவம் கொண்ட கேமரா பம்ப் கொண்டிருக்கும் என தெரிகிறது. தோற்றத்தில் ஐபோன் 13 மினி முந்தைய மாடலை விட சற்று வித்தியாசமாக இருக்கும் என தெரிகிறது. ஐபோன் 13 மினி புளூ நிறம் கொண்டிருக்கிறது. இத்துடன் மேலும் சில நிறங்களில் இந்த மாடல் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    ஐபோன் 13 மினி மாடலுடன் ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன்கள் அனைத்தும் ஒரே மாதிரியான நாட்ச், ஆப்பிள் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் அறிமுகம் செய்து பின் சாம்சங், சியோமி நிறுவனங்கள் வழியில் நோக்கியாவும் அதேபோன்று செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் சார்ஜர் இன்றி விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம்  செய்யப்பட்டு, அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது. இந்த நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    முன்னதாக ஆப்பிள், சாம்சங் மற்றும் சியோமி நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர் வழங்குதை நிறுத்தின. இவ்வாறு செய்வதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதாக அந்தந்த நிறுவனங்கள் தெரிவித்து வந்தன. 

     நோக்கியா எக்ஸ்20

    நோக்கியா எக்ஸ்20 மாடலுக்கான வலைப்பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் வால் சார்ஜர் இன்றி விற்பனை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போன் வழங்கப்படும் பெட்டி 100 சதவீதம் உரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இன்-பாக்சில் வழங்கப்படும் சாதனங்கள் பட்டியலில் வால் சார்ஜர் இடம்பெறவில்லை. ஹெச்எம்டி குளோபல் இந்த ஸ்மார்ட்போனை ஏப்ரல் 8 ஆம் தேதி ஐரோப்பாவில் அறிமுகம் செய்தது. 
    ×