என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    விவோ நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு புது அம்சங்களை வழங்கும் ஒஎஸ் அப்டேட் வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட விவோ எஸ்1 ப்ரோ, விவோ இசட்1 ப்ரோ மற்றும் விவோ இசட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் யூனிட்களுக்கு பன்டச் ஒஎஸ் 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த அப்டேட் கிரேஸ்கேல் டெஸ்ட் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    கிரேஸ்கேல் டெஸ்டிங்கின் போது தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் அப்டேட் வழங்கப்படும். விவோ எஸ்1 ப்ரோ, விவோ இசட்1 ப்ரோ மற்றும் விவோ இசட்1எக்ஸ் மாடல்கள் ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த பன்டச் ஒஸ்9 உடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின் பன்டச் ஒஎஸ் 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வெளியிடப்பட்டது.

     விவோ ஸ்மார்ட்போன்

    புது அப்டேட் கிடைத்து இருப்பதாக விவோ எஸ்1 ப்ரோ, விவோ இசட்1 ப்ரோ மற்றும் விவோ இசட்1எக்ஸ் மாடல்களை பயன்படுத்துவோர் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது கிரேஸ்கேல் டெஸ்ட் துவங்கி இருக்கும் நிலையில், அனைவருக்குமான அப்டேட் விரைவில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

    விவோ எஸ்1 ப்ரோ மாடலுக்கான அப்டேட் 3.79 ஜிபியாகவும், விவோ இசட்1எக்ஸ் மாடலுக்கான அப்டேட் 3.29 ஜிபியாகவும், விவோ இசட்1 ப்ரோ மாடலுக்கான அப்டேட் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த ஸ்மார்ட்போன்களை அப்டேட் செய்யப்படும் போது யூனிட்களை சார்ஜ் செய்திருப்பதையும், சீரான வைபை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
    ஒப்போ நிறுவனம் தனது ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

    ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. புதிய ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு வர இருக்கிறது. முன்னதாக ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 17,990 விலையில் வெளியிடப்பட்டது.

    புதிய ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஒப்போ சமீபத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்த ஒப்போ ஏ55 மாடலில் உள்ளதை போன்றே இருக்கிறது.

     ஒப்போ ஏ53எஸ்

    ஒப்போ ஏ53எஸ் 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

    - 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
    - மாலி-G57 MC2 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - கலர்ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, PDAF, LED பிளாஷ்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி 

    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி டால்பி விஷன் மற்றும் HDR10+ அம்சங்களை கொண்டிருக்கிறது.

    எம்ஐ 11 அல்ட்ரா மற்றும் எம்ஐ 11 எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சியோமி நிறுவனம் தனது டாப் எண்ட் QLED ஸ்மார்ட் டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய QLED 4K டிவி 75 இன்ச் எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே, குவாண்டம் டாட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.

    இத்துடன் டால்பி விஷன், HDR10+, மெல்லிய பெசல்கள், விவிட் பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், HDMI 2.1 போர்ட், ஆட்டோ லோ லேடென்சி மோட், 30 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம், டால்பி ஆடியோ மற்றும் DTS-HD போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    சியோமி ஸ்மார்ட் டிவி

    சியோமி எம்ஐ டிவி கியூ1  / எம்ஐ QLED டிவி (75″) அம்சங்கள்

    - 75 இன்ச் 3840×2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
    - குவாட்கோர் மீடியாடெக் MT9611 (ஏ55) பிராசஸர்
    - மாலி G52 MP2 GPU
    - 2 ஜிபி ரேம்
    - 32 ஜிபி மெமரி
    - ஆண்ட்ராய்டு 10
    - வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.0, 1 x HDMI 2.1, 2 x HDMI 2.0, 2 x யுஎஸ்பி
    - 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், ஈத்தர்நெட்
    - 30 வாட் ( 2 x 15 வாட்) 6 ஸ்பீக்கர் சிஸ்டம்
    - டால்பி ஆடியோ, DTS-HD

    சியோமி எம்ஐ QLED டிவி 75 விலை ரூ. 1,19,999 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி துவங்குகிறது.

    அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    அசுஸ் சென்போன் 8 மற்றும் சென்போன் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கின்றன. முன்னதாக சென்போன் 8 மினி விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    அந்த வகையில் அசுஸ் நிறுவனம் இந்த ஆண்டு சென்போன் 8, சென்போன் 8 ப்ரோ மற்றும் சென்போன் 8 மினி என மூன்று மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. மூன்று மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.

     அசுஸ் சென்போன்

    கீக்பென்ச் விவரங்களின் படி அசுஸ் சென்போன் 8 மற்றும் சென்போன் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ASUS_1004D எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கின்றன. மேலும் இரு மாடல்களும் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 64 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது.

    சியோமி நிறுவனத்தின் எம்ஐ 11 எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் 27 ஆம் தேதி விற்பனைக்கு வருகின்றன.


    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் 6.67 இன்ச் E4 AMOLED ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 20 எம்பி செல்பி கேமரா மிக சிறிய பன்ச் ஹோலில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    எம்ஐ 11 எக்ஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது. எம்ஐ 11 எக்ஸ் மாடலில் 48 எம்பி பிரைமரி கேமரா, எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ மாடலில் 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளன.

     சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ

    இத்துடன் 8 எம்பி அல்ட்ரா வைடு 5 எம்பி டெலிபோட்டோ மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 4520 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. 

    சியோமி எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ மாடல்கள் செலஸ்டியல் சில்வர் மற்றும் லூனார் வைட் நிறங்களில் கிடைக்கிறது. எம்ஐ 11 எக்ஸ் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 29,999, 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 31,999 என்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 39,999, 8 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 41,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    இன்ஸ்டாகிராம் செயலியின் ரீல்ஸ் அம்சம் இந்தியாவில் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பேஸ்புக் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் செயலியின் ரீல்ஸ் அம்சத்தில் விளம்பரங்களை வழங்க சோதனை செய்ய துவங்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக இந்த சோதனை இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் துவங்கி உள்ளது.

     இன்ஸ்டா ரீல்ஸ்

    இன்ஸ்டா ரீல்ஸ் அம்சத்தில் இருந்து வருவாய் ஈட்டும் நோக்கில் இந்த நடவடிக்கை துவங்கப்பட்டு இருக்கிறது. டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது முதல் ரீல்ஸ் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து இருக்கிறது. 

    ரீல்ஸ் அம்சத்தில் வரும் மற்ற வீடியோக்களுடன் விளம்பர வீடியோக்கள் அதிகபட்சம் 30 நொடிகள் வரை இருக்கும். பயனர்களுக்கு இடையூறு ஏற்படும் பட்சத்தில் விளம்பரங்களை முடக்கும் வசதியும் வழங்கப்படும் என பேஸ்புக் தெரிவித்து உள்ளது.
    ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 12 ஜிபி ரேம் கொண்ட எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருகிறது.


    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் எம்ஐ 11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.81 இன்ச் E4 AMOLED குவாட் கர்வ்டு டாட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 1.1 இன்ச் AMOLED ஸ்கிரீன் ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே வசதியுடன் வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், லிக்விட் கூல் தொழில்நுட்பம், 50 எம்பி பிரைமரி கேமரா, 48 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 48 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் வயர்டு பிளாஷ் சார்ஜிங், 67 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

     சியோமி எம்ஐ 11 அல்ட்ரா

    சியோமி எம்ஐ 11 அல்ட்ரா அம்சங்கள்

    - 6.81 இன்ச் 3200×1440 பிக்சல் QHD+ AMOLED 20:9 HDR10 + டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்
    - 1.1 இன்ச் 126x294 AMOLED ரியர் டச் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
    - அட்ரினோ 660 GPU
    - 12 ஜிபி LPPDDR5 6400MHz ரேம்
    - 256 ஜிபி UFS 3.1 மெமரி
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - எம்ஐயுஐ12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
    - 50 எம்பி பிரைமரி கேமரா, 1.4μm, f/1.95, OIS, LED பிளாஷ்
    - 48 எம்பி 128° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
    - 48 எம்பி டெலிபோட்டோ கோமரா
    - 20 எம்பி செல்பி கேமரா, 0.8μm, f/2.2
    - இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார்
    - யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஹை-ரெஸ் ஆடியோ, டூயல் ஸ்பீக்கர்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி

    சியோமி எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் மற்றும் செராமிக் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 69,999 ஆகும். இது அமேசான் மற்றும் ஆப்லைன் தளங்களில் விரைவில் விற்பனைக்கு வருகிறது. 
    டைவா நிறுவனம் மிக மெல்லிய பெசல்களை கொண்ட புது ஸ்மார்ட் டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.


    நுகர்வோர் மின்சாதன பொருட்கள் உற்பத்தியாளரான டைவா இந்திய சந்தையில் 50 இன்ச் D50162FL 4K ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்தது. இது மேட் இன் இந்தியா டிவி மாடல் ஆகும். பெசல்-லெஸ் டிசைன், HDR10, dbx-டிவி ஆடியோ தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் இந்த டிவியில் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய டைவா D50162FL மாடல் மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது. மேலும் 96 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 4K ரெசல்யூஷன், குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பம் கொண்டது ஆகும். இது ஏ-55 குவாட் கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

     டைவா ஸ்மார்ட் டிவி

    ஆண்ட்ராய்டு 9 ஒஎஸ் மற்றும் தி பிக் வால் யுஐ கொண்டிருக்கும் டைவா ஸ்மார்ட் டிவி டிஸ்னி பிளஸ், ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லிவ், வூட் போன்ற ஸ்டிரீமிங் சேவைகளை இயக்கும் வசதி கொண்டுள்ளது. இது 20 வாட் ஸ்பீக்கர் சிஸ்டம், 5 சவுண்ட் மோட்களை கொண்டுள்ளது.

    டைவா D50162FL 4K ஸ்மார்ட் டிவி விலை ரூ. 39,990 ஆகும். இது நாடு முழுக்க பெரும்பாலான விற்பனை மையங்களில் கிடைக்கிறது. 
    இந்திய சந்தையில் புதிய டிமென்சிட்டி 1200 5ஜி மொபைல் பிராசஸர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    மீடியாடெக் நிறுவனம் தனது டிமென்சிட்டி 1200 பிராசஸரை அறிமுகம் செய்துவிட்டது. தற்போது இந்த பிராசஸர் இந்திய சந்தையில் வெளியாகி இருக்கிறது. வெளியீட்டை தொடர்ந்து புதிய மீடியாடெக் பிராசஸர் ரியல்மி ஸ்மார்ட்போனில் முதலில் வழங்கப்படுகிறது.

    இதனை ரியல்மி டீசர் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்திய சந்தையில் ரியல்மி விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்டிருக்கும். 

     மீடியாடெக் டிமென்சிட்டி 1200

    புதிய மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் 6 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது 3 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் ஆக்டா-கோர் சிபியுக்களை கொண்டுள்ளது. இது முந்தைய தலைமுறை பிராசஸரை விட 22 சதவீதம் அதிவேக சிபியு திறன் வழங்கும்.

    இதனுடன் ARM மாலி - G77 MC9 GPU, 6 கோர் மீடியாடெக் APU 3.0 வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஏஐ அம்சங்கள், அசத்தலான டிஸ்ப்ளே, அதிவேக ரிப்ரெஷ் ரேட், கேமிங் என பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
    சியோமி நிறுவனத்தின் எம்ஐ மிக்ஸ் போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சர்வதேச IMEI தளங்களில் இடம்பெற்று இருக்கிறது.

    சியோமி நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக எம்ஐ மிக்ஸ் போல்டு அறிமுகமானது. எனினும், இது சீன சந்தையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சர்வதேச IMEI தளங்களில் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

     எம்ஐ மிக்ஸ் போல்டு

    அதன்படி இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச IMEI தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் M2011J18G எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதில் G எனும் வார்த்தை குளோபல் அதாவது சர்வதேச சந்தையை குறிக்கிறது.

    எம்ஐ மிக்ஸ் சர்வதேச மற்றும் இந்திய வெளியீடு குறித்து சியோமி  சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. மேலும் சியோமி நிறுவனம் எம்ஐ 11எக்ஸ் மற்றும் எம்ஐ 11 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
    ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் வழங்கப்பட இருக்கும் புது அம்சங்கள் பற்றி அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை ஒன்பிளஸ் வாட்ச் பெயரில் அறிமுகம் செய்தது. முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படவில்லை என உலகம் முழுக்க வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

     ஒன்பிளஸ் வாட்ச்

    இந்த நிலையில், ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் பற்றி அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன் ஒன்பிளஸ் புது அப்டேட் ஒன்றை அமெரிக்கா மற்றும் கனடாவில் வெளியிட்டு இருக்கிறது. வரும் நாட்களில் இந்த அப்டேட் இந்தியா உள்பட மற்ற நாடுகளுக்கும் வெளியிடப்பட இருக்கிறது. 

    எதிர்காலத்தில் வெளியாகும் அப்டேட்கள் ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, கேமராவை இயக்கும் வசதி, 12 மணி நேர கடிகார அமைப்பை வைத்துக் கொள்ளும் வசதி, புது ஏஐ வாட்ச் பேஸ் உள்ளிட்ட அம்சங்களை வழங்கும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.
    மீடியாடெக் டிமென்சிட்டி 700 5ஜி பிராசஸர் கொண்ட ரியல்மி 8 ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ரியல்மி ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 16 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி பிளாக் அன்ட் வைட் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

     ரியல்மி 8 5ஜி

    டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ரியல்மி 8 5ஜி 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் சூப்பர்சோனிக் புளூ மற்றும் சூப்பர்சோனிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், ரியல்மி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.
    ×