என் மலர்
தொழில்நுட்பம்
அசத்தல் அம்சங்களுடன் உருவாகி வரும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் உருவாக்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் குவிக்சில்வர் எனும் குறியீட்டு பெயர் கொண்டுள்ளது. புது நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இது நோக்கியா 6.3 அல்லது 6.4 மாடலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போதைய ரென்டர்களின் படி புது நோக்கியா ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச், குவாட் கேமரா செட்டப், 6.45 இன்ச் பிளாட் டிஸ்ப்ளே, பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 6 ஜிபி ரேம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 690ஜி பிராசஸர், அட்ரினோ 619 GPU கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 6.4 5ஜி என்றும் அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.
புகைப்படங்களை எடுக்க புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் 24 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பவர் பட்டனுடன் பொருத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
போக்கோ பிராண்டின் புதிய சி3 மாடல் ஸ்மார்ட்போன் விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்திய சந்தையில் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் அறிமுகமான குறுகிய காலக்கட்டத்தில் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.
புது மைல்கல்லை அறிமுகமான மூன்றே மாதங்களில் போக்கோ எட்டியுள்ளது. விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளதை ஒட்டி போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ஜனவரி 24 ஆம் தேதி வரை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி போக்கோ சி3 (3 ஜிபி + 32 ஜிபி) ரூ. 6999 விலையிலும், 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 7999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களின் விலையும் ரூ. 500 குறைக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர HDFC வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ சி3 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூ-டோன் டிசைன் கொண்டிருக்கும் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
ட்விட்டர் சேவையில் மீண்டும் வெரிபிகேஷன் சேவை துவங்கப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ட்விட்டர் சமூக வலைதள சேவையில் மீண்டும் வெரிபிகேஷன் துவங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர பயன்பாட்டில் இல்லாத, முழுமை பெறாத ட்விட்டர் கணக்குகளின் வெரிபிகேஷனை நீக்கவும் அந்நிறுவனம் துவங்கி உள்ளது.
ட்விட்டரில் வெரிபிகேஷன் பெறுவதற்கான விதிமுறைகளில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இவை பயனர்கள் வழங்கிய கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி இனிமேல், ட்விட்டரில் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் பாளோவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வெரிபிகேஷன் வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக இது குறிப்பிட்ட நாட்டில் உள்ள பாளோவர்கள் எண்ணிக்கையை கொண்டு வழங்கப்பட்டு வந்தது.
இத்துடன் வெரிபிகேஷன் வழங்க முன்பை விட அதிக பிரிவுகளை சேர்க்க ட்விட்டர் திட்டமிட்டு உள்ளது. அதன்படி கல்வி, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மத தலைவர்கள் உள்ளிட்ட பிரிவுகள் சேர்க்கப்பட இருக்கின்றன.
தற்சமயம் இந்த பிரிவுகளை சேர்ந்தவர்கள் ட்விட்டரில் ஆர்வலர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இதர பிரிவுகளை தேர்வு செய்து வெரிபிகேஷனுக்கு விண்ணப்பிக்கலாம்.
ட்விட்டர் வலைதளம் அல்லது செயலியின் அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில் இருக்கும் ‘Request Verification’ ஆப்ஷனை க்ளிக் செய்து, தேவையான ஆவணங்களை சமர்பித்து வெரிபிகேஷனுக்கு விண்ணபிக்க முடியும்.
ரிலையன்ஸ் ஜியோமார்ட் தளத்தில் நான்கு நாட்களுக்கு சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோமார்ட் தளத்தில் நான்கு நாட்கள் சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டு உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோமார்ட் ஆன்லைன் வர்த்தக சேவை இந்தியாவில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது.
இதன்மூலம் உணவுப்பொருட்கள், உடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோமார்ட் சார்பில் ‘புல் பைசா வசூல் சேல் - 2021' எனும் சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விற்பனை நாளை (ஜனவரி 23) துவங்கி ஜனவரி 26 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி மேற்கண்ட நாட்களில் காய்கறி-பழங்கள், உணவு பொருட்கள், அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் பெறலாம்.
ரிலையன்ஸ் ஜியோமார்ட் ஆன்லைன் வர்த்தக சேவையின் ‘புல் பைசா வசூல் சேல் - 2021' எனும் சிறப்பு விற்பனைக்கான விளம்பர தூதராக நடிகை ராஷ்மி தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெபிஎல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஜெபிஎல் பிராண்டின் புதிய சி115 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய இயர்பட்ஸ் இன்-இயர் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த இயர்போனுடன் மெல்லிய சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது.
இத்துடன் புதிய ஜெபிஎல் சி115 இயர்பட்ஸ் 5.8எம்எம் டிரைவர் மற்றும் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் ஆட்டோனோமஸ் கனெக்டிவிட்டி, மோனோ மற்றும் ஸ்டீரியோ மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதனால் அழைப்புகளை மேற்கொள்ளும் போது ஒரு இயர்பட் மட்டும் பயன்படுத்த முடியும்.
இதன் இயர்பட்ஸ் மட்டும் ஆறு மணி நேர பிளேபேக் வழங்குகின்றன. மேலும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் 15 மணி நேரத்திற்கு கூடுதல் பிளேபேக் கிடைக்கிறது. அந்த வகையில் புதிய ஜெபிஎல் சி115 இயர்பட்ஸ் மொத்தம் 21 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.

அழைப்புகள், வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் மியூசிக் அம்சங்களை இயக்க டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் கூகுள் அசிஸ்டண்ட், அமேசான் அலெக்சா சேவைகளை இயக்கும் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கேபிள் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் புதிய ஜெபிஎல் சி115 விலை ரூ. 4999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பிளாக், மின்ட், ரெட் மற்றும் வைட்
போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
சியோமியின் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சியோமி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. எனினும், கடந்த ஆண்டு ரெட்மி நோட் 9 சீரிஸ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு சியோமி புதிய நோட் 10 மாடல்களின் விலையை போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யும் என கூறப்படுகிறது.
முதற்கட்டமாக இந்தியாவில் ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ 4ஜி வேரியண்ட் மட்டும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகமாகும் என தெரிகிறது. இரு மாடல்களும் கிரே, வைட் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ரெட்மி நோட் 10 சீரிஸ் மட்டுமின்றி சியோமி நிறுவனம் எம்ஐ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு புதிய ஒஎஸ் அப்டேட் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 7 மற்றும் 7டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஆக்சிஜன் ஒஎஸ்11 அப்டேட் வழங்க துவங்கி இருக்கிறது. முன்னதாக இந்த அப்டேட்டில் குறைகள் இருந்த நிலையில், தற்சமயம் அவை சரி செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
கடந்த ஆண்டு ஆக்சிஜன் ஒஎஸ்11 ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களுக்கு வெளியிடப்பட்டது. அந்த வரிசையில் தற்சமயம் ஒன்பிளஸ் 7 மற்றும் 7டி சீரிஸ் மாடல்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்படுகிறது. தற்சமயம் பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்டேபில் வெர்ஷன் வெளியிடப்படலாம்.
ஓபன் பீட்டா அப்டேட் என்பதால் இதில் ஏராளமான குறைகள் இருக்கலாம் என்பதால், அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் இதனை இன்ஸ்டால் செய்வது பரிந்துரைக்கப்பட இயலாது. ஸ்மார்ட்போன்களை அப்டேட் செய்யும் முன் அதில் உள்ள தரவுகளை பேக்கப் செய்வது நல்லது.
விவோ நிறுவனத்தின் இரண்டு புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
விவோ நிறுவனத்தின் புதிய வை20ஜி மற்றும் வை31 ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் விவோ வை20ஜி மாடலில் 6.51 இன்ச் ஹெச்டி பிளஸ் ஹாலோ ஐவியூ டிஸ்ப்ளே, 13 எம்பி + 2 எம்பி + 2 எம்பி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
விவோ வை31 ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2408 பிக்சல் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி + 2 எம்பி சென்சார் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ வை31 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 கொண்டிருக்கிறது.
விவோ வை31 மாடலிலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய விவோ வை31 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஓசன் புளூ மற்றும் ரேசிங் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
விவோ வை20ஜி மாடல் அப்சிடியன் பிளாக் மற்றும் பியூரிஸ்ட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 14,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் 2021 ஆண்டு மட்டும் ஆறு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஒப்போ திட்டமிட்டு இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் 2021 ஆண்டு மட்டும் இந்திய சந்தையில் தனது 5ஜி ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ரெனோ5 ப்ரோ ஸ்மார்ட்போனினை முதல் 5ஜி மாடலாக இந்தியாவில் ஒப்போ அறிமுகம் செய்தது.
2021 ஆண்டில் மட்டும் ஒப்போ நிறுவனம் குறைந்தபட்சம் ஆறு 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஒப்போ திட்டமிட்டு உள்ளது. அனைத்து விலை பிரிவுகளிலும் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய ஒப்போ திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் சீனா தவிர வெளிநாட்டு சந்தையில் தனது முதல் 5ஜி இன்னோவேஷன் ஆய்வகத்தை இந்தியாவில் ஒப்போ துவங்கி இருக்கிறது. சீனாவுக்கு அடுத்தப்படியாக ஐதராபாத் நகரில் ஒப்போ ஆய்வு மையம் கட்டமைத்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
இந்தியாவில் செயல்பட்டு வரும் ஒப்போ ஆய்வு குழுவினர் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், குவால்காம், மீடியாடெக் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பணியாற்றி வருகிறது. தற்சமயம் உலகம் முழுக்க 20-க்கும் அதிகமான நாடுகளில் ஒப்போ தனது 5ஜி தொழில்நுட்பத்தை கட்டமைக்கும் பணிகளில் ஒப்போ ஈடுபட்டு வருகிறது.
பிரைவசி பாலிசி விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் கோரிக்கைக்கு வாட்ஸ்அப் அளித்த பதில் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் புது பிரைவசி பாலிசியை அமலாக்கும் நடைமுறையை மறு பரிசீலனை செய்யக் கோரி மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரிக்கு கடிதம் எழுதி இருந்தது. அதன்படி மத்திய அரசு விடுத்த கோரிக்கைக்கு வாட்ஸ்அப் பதில் அளித்துள்ளது.

இது குறித்து வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் கூறியதாவது,
“புது அப்டேட் பேஸ்புக்குடன் தரவுகளை பகிர்வது தொடர்பாக எந்த வசதியையும் வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். எங்களின் நோக்கம் வியாபாரங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் சிறப்பான சேவையை வழங்கி வளர்ச்சி பெறுவதற்கான வசதியை வழங்குவது தான்.”
“வாட்ஸ்அப் எப்போதும் தனிப்பட்ட குறுந்தகவல்களை முழுமையான என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கும். இதனால் வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் அவற்றை பார்க்க முடியாது. தவறான தகவல் பரவுவதை சரி செய்யவும், எந்த விதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்க நாங்கள் எப்போதும் காத்திருக்கிறோம்,”
என அவர் தெரிவித்து இருக்கிறார்.
போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் சீன சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.
புதிய போக்கோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது. சீனாவில் இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி போக்கோ இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.

எனினும், இந்தோனேசியா சந்தையில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஜனவரி 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இதன் இந்திய வேரியண்ட் M2010J19CI எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி என இரு வேரியணட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 12,500 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அமேசான் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு விற்பனை துவங்கப்பட்டு இருக்கிறது.
அமேசான் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு விற்பனையை (கிரேட் ரிபப்ளிக் டே விற்பனை) அறிவித்து இருக்கிறது. அதன்படி, இன்று (புதன் கிழமை) முதல் ஜனவரி 23 ஆம் தேதி வரை இந்த விற்பனை நடைபெற உள்ளது. இந்த விற்பனையை அமேசான் பிரைம் உறுப்பினர்கள் 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே பெற முடியும்.
ஸ்மார்ட்போன்கள், மின்சாதன பொருட்கள், பேஷன் மற்றும் அத்தியாவசிய அழகு சாதனங்கள், வீடு மற்றும் சமையல் அறை உபகரணங்கள், அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை பெரிய பிராண்டுகளில் இருந்து பெரிய சேமிப்புகளை இந்த விற்பனை மூலம் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.
அந்த வகையில் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் அசத்தல் சலுகை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

ஐபோன் 12 மினி 64 ஜிபி மாடல் விலை ரூ. 59,990 என துவங்குகிறது. இத்துடன் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ. 4500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒப்போ பைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போனிற்கு ரூ. 13 ஆயிரம் சலுகை அறிவிக்கப்பட்டு ரூ. 51,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஐபோன் 11 64 ஜிபி மாடல் ரூ. 48,999 விலையில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 8டி 5ஜி 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 43,499 விலையில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 8டி 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 40,499 விலையிலும், ஒன்பிளஸ் 7டி ப்ரோ 8 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 38,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று சாம்சங், நோக்கியா மற்றும் ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் சிறப்பு சலுகை மற்றும் அசத்தல் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.






