என் மலர்
தொழில்நுட்பம்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 ப்ரோ மாடலில் குவால்காம் எக்ஸ்60 5ஜி மோடெம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் சில வாரங்களுக்கு முன் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய ஐபோன்களின் விற்பனை பல்வேறு நாடுகளில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐபோன் 13 ப்ரோ டியர்டவுன் வீடியோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஐபோன் 13 ப்ரோ மாடலில் 3095 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 12 ப்ரோவில் வழங்கப்பட்ட 2815 எம்.ஏ.ஹெச். பேட்டரியை விட அதிகம் ஆகும். அதிக திறன் இருப்பதால் ஐபோன் 13 ப்ரோ முந்தைய மாடலை விட 1.5 மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்குகிறது.

ஐபோன் 13 ப்ரோ மாடலில் உள்ள பேட்டரி எல் வடிவம் கொண்டிருக்கிறது. மேலும் இதனை சன்வுடா எலெக்ட்ரிக் கோ எனும் நிறுவனம் உற்பத்தி செய்து இருக்கிறது. இத்துடன் புதிய ஐபோனில் சாம்சங் வழங்கிய 120 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் உள்ளது. இத்துடன் குவால்காம் எக்ஸ்60 5ஜி மோடெம் வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் எஸ் பென் வசதி கொண்டிருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதில் 6.8 இன்ச் வளைந்த டிஸ்ப்ளே, குவாட் ஹெச்.டி. பிளஸ் அடாப்டிவ் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்துடன் புதிய கேமரா மாட்யூல், 108 எம்பி பிரைமரி கேமரா, பில்ட் இன் எஸ் பென் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 2200 அல்லது ஸ்னாப்டிராகன் 898 பிராசஸர் வழங்கப்படலாம். இந்தியாவில் இம்முறை கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் ஸ்னாப்டிராகன் பிராசஸருடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. தற்போது கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா விவரங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், விரைவில் கேலக்ஸி எஸ்22 மற்றும் கேலக்ஸி எஸ்22 பிளஸ் மாடல்களின் ரெண்டர்களும் வெளியாகலாம்.
மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் கொண்டிருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 1 ஆம் தேதி அறிமுகமாகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஆமோலெட் டிஸ்ப்ளே, 108 எம்பி பிரைமரி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 11 5ஜி பேண்ட்களுக்கான வசதி வழங்கப்படுகிறது.

இத்துடன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் டர்போ சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஐ.பி.52 சான்று, வைபை 6, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., இரண்டு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி +256 ஜிபி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்தில் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இரிடிசண்ட் கிளவுட் மற்றும் மிட்நைட் ஸ்கை என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனில் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யு.ஐ. 2 வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி பிளாக் அண்ட் வைட் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

ரியல்மி நார்சோ 50ஏ அம்சங்கள்
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
- 1000 மெகாஹெர்ட்ஸ் ஏ.ஆர்.எம். மாலி ஜி 52 2 இ.இ.எம்.சி.2 ஜி.பி.யு.
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ரியல்மி யு.ஐ. 2 மற்றும் ஆண்ட்ராய்டு 11
- 50 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 2 எம்பி பிளாக் அண்ட் வைட் கேமரா
- 8 எம்பி செல்பி கேமரா
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங்
ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் ஆக்சிஜன் கிரீன் மற்றும் ஆக்சிஜன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 11,499 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 12,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் டிராப் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12, 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டெக்ஸ்ச்சர் டிசைன் கொண்டிருக்கும் ரெட்மி 9 ஆக்டிவ் மாடலின் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

ரெட்மி 9 ஆக்டிவ் கார்பன் பிளாக், கோரல் கிரீன் மற்றும் மெட்டலிக் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 9,499 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 10,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 13 சீரிஸ் மாடல்களின் இந்திய விற்பனை துவங்கியது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 13 மினி மாடல்களின் விற்பனை இன்று துவங்கியது. இன்று காலை 8 மணிக்கு இந்திய சில்லறை விற்பனை மையங்களில் புதிய ஐபோன்களின் விற்பனை துவங்கியது.
சில்லறை விற்பனை மையங்கள் மட்டுமின்றி முன்னணி ஆன்லைன் வலைதளங்களிலும் புதிய ஐபோன்களின் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் 30-க்கும் அதிக நாடுகளில் புதிய ஐபோன்களின் விற்பனை துவங்கி இருக்கிறது.

புதிய ஐபோன்கள் இந்திய விலை விவரம்
இந்தியாவில் ஐபோன் 13 128 ஜிபி விலை ரூ. 79,900 என துவங்குகிறது. இதன் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மாடல்கள் விலை முறையே ரூ. 89,900 மற்றும் ரூ. 1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐபோன் 13 ப்ரோ 128 ஜிபி விலை ரூ. 1,19,900, 256 ஜிபி விலை ரூ. 1,29,900, 512 ஜிபி ரூ. 1,49,900, 1 டிபி ரூ. 1,69,900 ஆகும்.
ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி விலை ரூ. 1,29,900, 256 ஜிபி ரூ. 1,39,900, 512 ஜிபி ரூ. 1,59,900 மற்றும் 1 டிபி விலை ரூ. 1,79,900 என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. ஐபோன் 13 மினி 128 ஜிபி ரூ. 69,900, 256 ஜிபி ரூ. 79,900 மற்றும் 512 ஜிபி ரூ. 99,900 ஆகும்.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய டேப்லெட் ஜி20 டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி20 டேப்லெட் மாடலை செப்டம்பர் 30 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த மாடலுக்கான டீசர்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதில் 8 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ பி22டி பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, ஸ்டாக் ஆண்ட்ராய்டு, மெட்டல் டிசைன், டால்பி அட்மோஸ் மற்றும் 5100 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

இதன் அம்சங்கள் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட லெனோவோ டேப் எம்8 மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 29 ஆம் தேதி அறிமுகமாகிறது.
வெளியீட்டு தேதியுடன் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களும் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச், மூன்று கேமரா சென்சார்கள், சதுரங்க வடிவம் கொண்ட கேமரா மாட்யூல் கொண்டிருக்கிறது.

இத்துடன் புல் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 12 5ஜி பேண்ட்களுக்கான சப்போர்ட், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிரீமியம் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சர்பேஸ் டுயோ 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் இரண்டு 5.8 இன்ச் பிக்சல் சென்ஸ் பியூஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் திறந்த நிலையில் 8.3 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., மைக்ரோசாப்ட் 365 மற்றும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவைகளுக்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஆடியோ, என்.எப்.சி. போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 அம்சங்கள்
- 5.8 இன்ச் 1344x1892 பிக்சல் அமோலெட் பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
- அட்ரினோ 660 ஜி.பி.யு.
- 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 11
- ஒரு இ-சிம், ஒரு நானோ சிம்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 12 எம்பி பிரைமரி கேமரா, ஓ.ஐ.எஸ். டூயல் எல்.இ.டி. பிளாஷ்
- 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
- 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, ஓ.ஐ.எஸ்.
- 12 எம்பி செல்பி கேமரா
- யு.எஸ்.பி டைப் சி ஆடியோ
- 5ஜி எஸ்.ஏ./என்.எஸ்.ஏ., 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5.1
- 4449 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 23 வாட் பாஸ்ட் சார்ஜிங்
மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 மாடல் கிளேசியர் மற்றும் அப்சிடியன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 128 ஜிபி விலை 1499.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,10,675 என்றும் 256 ஜிபி விலை 1599.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,18,050 என்றும் 512 ஜிபி விலை 1799.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,32,810 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2022 ஐபோன் மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. ஒட்டுமொத்த தோற்றத்தில் பெருமளவு மாற்றங்கள் இல்லை என்றபோதும், புதிய ஐபோன்களின் நாட்ச் முந்தைய மாடல்களில் இருப்பதை விட 20 சதவீதம் குறைவு ஆகும்.
அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் ஐபோன் 14 சீரிஸ் நாட்ச் இல்லாத டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ தெரிவித்துள்ளார். இந்த டிஸ்ப்ளே ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வழங்கப்படலாம் என அவர் தெரிவித்து இருக்கிறார்.

ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் நாட்ச் டிஸ்ப்ளேவுக்கு மாற்றாக பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இத்துடன் 48 எம்பி வைடு ஆங்கில் கேமராக்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஐபோன் 13 மினி ஐபோன் சீரிசில் கடைசி மினி மாடலாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஐபோன்கள் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் 5ஜி ஐபோன் எஸ்.இ. அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய எப்19எஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.
ஒப்போ நிறுவனம் தனது எப்19எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 27 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
இது ஏ.ஜி. ஷிம்மெரிங் சேண்ட் தொழில்நுட்பம் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் குளோயிங் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது. இதன் மற்ற அம்சங்கள் ஒப்போ எப்19 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.
Get ready to say goodbye to battery anxiety with the #OPPOF19s - A combination of the powerful 33W Flash Charge and a long-lasting 5000mAh battery.
— OPPO India (@OPPOIndia) September 22, 2021
Catch the launch event on 27th September at 3:30 pm.
Know more: https://t.co/ogCfEp6BE7pic.twitter.com/eiuspjVVds
அதன்படி ஒப்போ எப்19 மாடலில் 6.43 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் ஆமோலெட் ஸ்கிரீன், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 16 எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் மாடல்களுக்கான புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 749 விலையில் புதிய ஜியோபோன் ஆல்-இன்-ஒன் ரீசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை 336 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. முன்னதாக ஜியோபோன் ரூ. 39 மற்றும் ரூ. 69 விலை சலுகைகள் நீக்கப்பட்டு ரூ. 75 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டது.
புதிய 336 நாட்கள் சலுகை 28 நாட்கள் என 12 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதன்படி இந்த சலுகையில் மொத்தம் 24 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

டேட்டாவுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 50 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஜியோபோன் வைத்திருப்பவர்களும் இந்த சலுகையை பெறலாம். மற்ற பலன்களுடன் ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான இலவச சந்தாவும் இந்த சலுகையில் வழங்கப்படுகிறது. புதிய சலுகை ஜியோபோனிற்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் நீண்ட கால வேலிடிட்டி கொண்ட சலுகை ஆகும்.






