என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது பட்ச் இசட் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பட்ஸ் இசட் மாடல் ஒன்பிளஸ் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போனின் குறைந்த விலை எடிஷனாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸ் ஒன்பிளஸ் 8டி சீரிஸ் மாடல்களுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.

    இதுதவிர ஒன்பிளஸ் பட்ஸ் இசட் மாடல் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், பெயருக்கு ஏற்றார்போல் இதன் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் இசட் பிராண்டிங் கொண்ட சாதனங்கள் விலையை குறைவாக நிர்ணயம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

     ஒன்பிளஸ் பட்ஸ் இசட்

    முந்தைய ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் மாடல் விலையும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டது. இது முதல் தலைமுறை ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இயர்போன்களின் விலையை விட குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    ஏற்கனவே வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் பட்ஸ் இசட் மாடல் பற்றிய விவரங்கள் ஆக்சிஜன் ஒஎஸ் 11 குறியீடுகளில் லீக் ஆகி இருந்தது. மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் 8K 960fps தர வீடியோ ரெக்கார்டிங் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும், புதிய இயர்போன் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.
    சவுண்ட்கோர் நிறுவனம் இந்தியாவில் புதிய நெக்பேண்ட் வயர்லெஸ் இயர்போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

    சவுண்ட்கோர் பை ஆன்கர் நிறுவனம் இந்திய சந்தையில் லைஃப் யு2 நெக்பேண்ட் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த இயர்போன் யுஎஸ்பி சி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ப்ளூடூத் 5 மற்றும் பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது.

    மிக குறைந்த எடை கொண்டிருக்கும் புதிய வயர்லெஸ் இயர்போன் சிலிகான் நெக்பேண்ட் மற்றும் டைட்டானியம் அலாய் ஸ்டீல் கோர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன் 10 என்எம் ஒவர்சைஸ் செய்யப்பட்ட டைனமிக் டிரைவர்களை கொண்டு இயங்குகிறது.

     சவுண்ட்கோர் லைஃப் யு2

    இது ஆடியோ அனுபவத்தை மேம்படுத்தி, மிக துல்லியமான கிளாரிட்டி மற்றும் பேஸ் வழங்கும் என சவுண்ட்கோர் தெரிவித்து உள்ளது. இந்த இயர்போன் ஐபிஎக்ஸ்7 சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் சிவிசி 8.0 நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    ப்ளூடூத் 5.0 வசதியுடன் வரும் இந்த இயர்போன் 20 மீட்டர் ரேன்ஜ் கொண்டிருக்கிறது. மேலும் இதில் ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களை இணைக்கும் வசதியுடன் வருகிறது. இந்த இயர்போன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணி நேர பேக்கப் வழங்குகிறது.

    இந்தியாவில் சவுண்ட்கோர் லைஃப் யு2 ப்ளூடூத் மாடல் விலை ரூ. 2899 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.
    சியோமியின் ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் டிராப் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆரா 360 டிசைன் கொண்டிருக்கும் ரெட்மி 9ஐ 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

     ரெட்மி 9ஐ

    ரெட்மி 9ஐ சிறப்பம்சங்கள்

    - 6.53 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 ஐபிஎஸ் எல்சிடி டாட் டிராப் ஸ்கிரீன்
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
    - IMG பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
    - 4 ஜிபி LPDDR4x ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - ஸ்பிலாஷ் ப்ரூஃப்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யுஎஸ்பி 
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்

    ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், சீ புளூ மற்றும் நேச்சர் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8299 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9299 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
    சுழலும் திரை கொண்ட எல்ஜி விங் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    எல்ஜி நிறுவனம் இரட்டை ஸ்கிரீன் கொண்ட விங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் P-OLED ஃபுல்விஷன் ஸ்கிரீன், 3.9 இன்ச் FHD+ இரண்டாவது ஸ்கிரீன் சுழலும் வசதியுடன் வழங்கப்படுகிறது. இதனால் இரே சமயத்தில் இரண்டு ஸ்கிரீன்களையும் பயன்படுத்த முடியும்.

    இரண்டு ஸ்கிரீன் கொண்ட விங் ஸ்மார்ட்போன் உறுதித்தன்மையை எல்ஜி சுமார் 2 லட்சம் முறை சோதனை செய்ததாக தெரிவித்து இருக்கிறது. இதன் மல்டி ஆப் மோட் கொண்டு இரு செயலிகளை ஒவ்வொரு திரையில் ஒரே சமயத்தில் பயன்படுத்த முடியும்.

     எல்ஜி விங்

    எல்ஜி விங் சிறப்பம்சங்கள்

    - 6.8 இன்ச் 2440×1080 பிக்சல் FHD+ 20.5: 9 P-OLED டிஸ்ப்ளே
    - 3.9 இன்ச் 1240x1080 பிக்சல் 1.15:1 G-OLED இரண்டாவது ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
    - அட்ரினோ 620 ஜிபியு
    - 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10
    - 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, OIS
    - 13 எம்பி 117° அல்ட்ரா வைடு லென்ஸ், f/1.9
    - 12 எம்பி 120° அல்ட்ரா வைடு கிம்பல் மோட் கேமரா, f/2.2
    - 32 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா, f/1.9
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
    - யுஎஸ்பி டைப் சி ஆடியோ 
    - 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப்-சி
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி
    - குவிக் சார்ஜ் 4.0
    - 25 ஃபாஸ்ட் சார்ஜிங்

    எல்ஜி விங் ஸ்மார்ட்போன் அரோரா கிரே மற்றும் இல்யூஷன் ஸ்கை நிறங்களில் கிடைக்கிறது. முதற்கட்டமாக இதன் விற்பனை தென் கொரியாவில் துவங்கி அதன் பின் அக்டோபர் மாத வாக்கில் வட கொரியா மற்றும் ஐரோப்பாவில் வெளியாகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் மேம்பட்ட ஐபேட் ஏர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் புதிய ஏ14 பயோனிக் பிராசஸர் கொண்ட ஐபேட் ஏர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. ஏ14 பயோனிக் பிராசஸர் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள நியூரல் என்ஜின் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை சீராக இயக்கும் திறன் கொண்டது.

    இதன் முன்புறம் 7 எம்பி ஃபேஸ்டைம் ஹெச்டி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் புதிய ஐபேட் ஏர் கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை மிக துல்லியமாக எடுக்க முடியும். இதன் டாப் பட்டனில் டச் ஐடி வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

     ஐபேட் ஏர்

    புதிய ஐபேட் ஏர் 10.9 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, ஆல் ஸ்கிரீன் டிசைன், யுஎஸ்பி டைப் சி வசதி கொண்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் பென்சில், மேஜிக் கீபோர்டு சாதனங்களுடன் இயக்கும் வசதி கொண்டுள்ளது. இது ஐபேட் ஒஎஸ்14 இயங்குதளம் கொண்டுள்ளது.

    ஆப்பிள் புதிய ஐபேட் ஏர் மாடல் இதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபேட் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இது ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஐபேட் ஏர் விலை 599 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 44088 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 
    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் 8th ஜென் மாடலை அறிமுகம் செய்தது. இதில் மேம்பட்ட பிராசஸர், அதிரடி அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் டைம் ஃபிளைஸ் நிகழ்வில் ஐபேட் 8th ஜென் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது 2019 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் ஓவர்கிளாக் செய்யப்பட்ட ஆப்பிள் ஏ12 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது  முந்தைய பிராசஸரை விட 40 சதவீதம் சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     ஐபேட்

    இத்துடன் இது முன்பை விட அதிகளவு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இவைதவிர மேம்பட்ட கேமரா, ஆப்பிள் பென்சில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. ஆப்பிள் பென்சில் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய ஐபேட் ஐபேட்எஸ் 14 தளத்துடன் கிடைக்கிறது.

    புதிய ஐபேட் 10.2 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதன் விலை வாடிக்கையாளர்களுக்கு 399 டாலர்கள் என்றும் மாணவர்களுக்கு 299 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்20 புது எடிஷன் ஸ்மார்ட்போனினை செப்டம்பர் நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனம் ‘Galaxy Unpacked for Every Fan’ நிகழ்வினை செப்டம்பர் 23 ஆம் தேதி நடத்துகிறது. இந்த விழாவில் கேலக்ஸி எஸ்20 ஃபேன் எடிஷன் மாடல் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. 

    முன்னதாக சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஃபேன் எடிஷன் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அந்த வரிசையில், புதிய ஸ்மார்ட்போன் இவ்விழாவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

     கேலக்ஸி எஸ்20 ஃபேன் எடிஷன்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்20 ஃபேன் எடிஷன் மாடலில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஐபி68 தர சான்று, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 6 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார் போல் இந்த மாடல் விலை சற்றே குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    நிறங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி எஸ்20 ஃபேன் எடிஷன் மாடல் கிரீன், ஆரஞ்சு, ரெட் மற்றும் வைட் நிறங்களில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இதே நிறங்கள் அனைத்து சந்தையிலும் விற்பனைக்கு வருமா அல்லது வேறுபடுமா என்பது தற்சமயம் கேள்விக்குறியாக இருக்கிறது.
    அசத்தல் அம்சங்கள் கொண்ட ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

    குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடல்களுக்கென பிரத்யேக தளமான ஆண்ட்ராய்டு கோ எடிஷன் உருவாகி வருகிறது. ஆண்ட்ராய்டு கோ எடிஷன் 2018 ஆம் ஆண்டு முதல் வெளியாகி வருகிறது. 

    அந்த வரிசையில் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷனை கூகுள் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. புதிய கோ எடிஷன் அதிவேக செயல்பாடு, மேம்பட்ட பெர்மிஷன்கள், ஜெஸ்ட்யூர் சார்ந்த நேவிகேஷன் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டு உள்ளது. 

    ஆண்ட்ராய்டு 11 தளத்தில் இருக்கும் மூன்று அம்சங்கள் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷனிலும் வழங்கப்பட்டு உள்ளது. இவை கான்வெர்சேஷன்களுக்கு தனி பகுதி, செயலிகளுக்கு மேம்பட்ட பெர்மிஷன் கண்ட்ரோல் மற்றும் சிஸ்டம் வைடு ஜெஸ்ட்யூர் நேவிகேஷன் ஆகும்.  

     ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன்

    கோ எடிஷனில் உள்ள பெர்மிஷன்கள் ஆண்ட்ராய்டு 11 தளத்தில் உள்ளதை போன்றே இயங்குகிறது. பயனர்கள் ஒருமுறை பெர்மிஷன்களை வழங்கினால் அவை அந்த செயிலியில் ஆட்டோ-ரீசெட் செய்யப்பட்டுவிடும். அடுத்த முறை இதே பெர்மிஷன் தானாக செயல்படுத்தப்பட்டு விடும்.

    இத்துடன் ஜெஸ்ட்யூர் சார்ந்த நேவிகேஷன் சிஸ்டம் வசதியும் கோ எடிஷனில் வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் ஹோம் ஸ்கிரீன், பின்புறமாக நேவிகேட் செய்தால் செயலிகளுக்கிடையே ஸ்விட்ச் செய்ய முடியும். 

    இதேபோன்று கூகுள் ஃபைல்ஸ் சேவையில் புதிதாக சேஃப் ஃபோல்டர் வழங்கப்படுகிறது. இதை கொண்டு தனிப்பட்ட தரவுளை 4 இலக்க பின்-என்க்ரிப்ட்டெட் ஃபோல்டரில் வைத்துக் கொள்ளலாம். 

    ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் அதிகபட்சம் 2 ஜிபி ரேம் கொண்ட சாதனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதை கொண்டு செயலிகளை 20 சதவீதம் வேகமாக லான்ச் செய்ய முடியும். ரேம் வசதி நீட்டிக்கப்பட்டு இருப்பதால், அதிகபட்சம் மூன்றில் இருந்து நான்கு செயலிகளை பேக்கிரவுண்டில் இயக்க முடியும்.
    அசத்தல் அம்சங்கள் கொண்ட ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஒப்போ நிறுவனம் எஃப்17 மற்றும் எஃப்17 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்தது. ஒப்போ எஃப்17 ப்ரோ விலை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, இரு 2 எம்பி மோனோ கேமராக்கள், 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

     ஒப்போ எஃப்17

    ஒப்போ எஃப்17 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2400×1080 பிக்சல் 20:9 FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR4x ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - கலர் ஒஎஸ் 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - 16 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
    - 8 எம்பி 119.9° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
    - 2 எம்பி மோனோ லென்ஸ், f/2.4
    - 2 எம்பி மோனோ லென்ஸ், f/2.4
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 4015 எம்ஏஹெச் பேட்டரி
    - 30 வாட் வூக் ஃபிளாஷ் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போன் நேவி புளூ, கிளாசிக் சில்வர் மற்றும் டைனமிக் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 17,990 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
    7000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம், 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ கேமரா, 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

    3டி கிளாஸ்டிக் பேக் கொண்டிருக்கும் கேலக்ஸி எம்51 மாடலின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 7000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு உள்ளது. 

     கேலக்ஸி எம்51

    சாம்சங் கேலக்ஸி எம்51 சிறப்பம்சங்கள்

    - 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி ஓ சூப்பர் AMOLED பிளஸ்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
    - அட்ரினோ 618 ஜிபியு
    - 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி UFS 2.1 மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.1
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
    - 12 எம்பி 123° அல்ட்ரா-வைடு ஆங்கில்  கேமரா, f/2.2
    - 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2
    - 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
    - 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப்-சி
    - 7000 எம்ஏஹெச் பேட்டரி
    - 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் செலஸ்டியல் பிளாக் மற்றும் எலெக்ட்ரிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு குறைந்த விலையில் மற்றொரு ரெட்மி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி 9 பிரைம், ரெட்மி 9, ரெட்மி 9ஏ, ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் போன்ற சாதனங்களை இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. 

    அந்த வரிசையில், ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 9ஐ எனும் பெயரில் அறிமுகமமாகிறது. புது ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை ரெட்மி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து இருக்கிறது. 

     ரெட்மி 9ஐ

    ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கென பிரத்யேக மைக்ரோசைட் ஒன்று துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த வலைதளத்தில் புதிய ஸ்மார்ட்போனின் சில விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.

    அதன்படி புதிய ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போனில் டாட் டிராப் ஸ்கிரீன், 4 ஜிபி ரேம், பெரிய பேட்டரி, எம்ஐயுஐ 12 உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 9ஏ மாடலின் மற்றொரு வேரியண்ட் ஆக இருக்கும் என தெரிகிறது.

    புதிய ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. ரெட்மி 9ஐ மாடல் பற்றிய இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம்.
    சியோமி நிறுவனம் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மாடலினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    சியோமியின் ரெட்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி தனது புதிய ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. 

    புதிய ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் 1.08 இன்ச் சதுரங்க வடிவம் கொண்ட டச் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 14 நாட்கள் பேட்டரி பேக்கப், பில்ட் இன் சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை கொண்டுள்ளது. 

    இத்துடன் இதய துடிப்பு சென்சார், ஆக்டிவிட்டி டிராக்கர், ஸ்லீப் மாணிட்டர், செடன்ட்டரி ரிமைன்டர் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    ரெட்மி ஸ்மார்ட் பேண்ட்

    ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் சிறப்பம்சங்கள்

    - 1.08 இன்ச் 128x220 பிக்சல் எல்சிடி கலர் டிஸ்ப்ளே
    - 2டி டெம்பர்டு கிளாஸ்
    - ப்ளூடூத் 5.0
    - அழைப்புகள், செயலிகளின் நோட்டிபிகேஷன்
    - 24/7 இதய துடிப்பு சென்சார்
    - செடன்ட்டரி ரிமைண்டர்
    - 5 ஸ்போர்ட் மோட்
    - டிரை-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
    - 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸடண்ட்
    - 130 எம்ஏஹெச் பேட்டரி

    ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் பிளாக் நிறத்திலும் புளூ, பிளாக், கிரீன் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ×