என் மலர்
புதிய கேஜெட்டுகள்
மோட்டோரோலா நிறுவனத்தின் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட மோட்டோ ஜி9 பிளஸ் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி9 பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்தது. அந்த வரிசையில் இந்த ஸ்மார்ட்போனின் புது விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
இதில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ஸ்கிரீன், குவாட் கேமரா சென்சார்கள், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் எஃப்சிசி வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது.
எனினும், இதில் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் பிராசஸர், கேமரா சென்சார்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறவில்லை.

மோட்டோ ஜி9 பிளஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.81 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+LTPS LCD டிஸ்ப்ளே
- 4 ஜிபி ரேம்
- 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- 64 எம்பி பிரைமரி கேமரா
- அல்ட்ரா வைடு சென்சார்
- மேக்ரோ விஷன் சென்சார்
- டெப்த் கேமரா
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
புதிய மோட்டோ ஜி9 பிளஸ் ஸ்மார்ட்போன் ரோஸ் கோல்டு நிறத்திலும் கிடைக்கும் என தெரிகிறது.
சவுண்ட் ஒன் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன் ரூ. 990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனமான சவுண்ட் ஒன் புதிய வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய வயர்லெஸ் ஹெட்போன் வி11 என அழைக்கப்படுகிறது. இது முந்தைய வி10 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
அப்டேட் செய்யப்பட்ட மடிக்கக்கூடிய வடிவமைப்பு, நீண்ட பேட்டரி பேக்கப், பேசிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

சவுண்ட் ஒன் வி11 வயர்லெஸ் ஹெட்போன்களில் 40 எம்எம் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை தரமான ஆடியோ அனுபவம் மற்றும் டீப் பாஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மடிக்கக்கூடிய வடிவமைப்பு, ஹெட்பேண்ட் மற்றும் இயர்கப்களில் மிக மென்மையான குஷன்கள் வழங்கப்பட்டு உள்ளது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை ப்ளூடூத் 5.0 வழங்கப்பட்டுள்ளது. இதில் பேட்டரி தீர்ந்து போனால், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொண்டு வயர்டு மோடிலும் பயன்படுத்த முடியும். பேட்டரியை பொருத்தவரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணி நேர பேக்கப் வழங்கும் என சவுண்ட் ஒன் தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை கேலக்ஸி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் குவாட் கேமரா சென்சார்கள், AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. தற்சமயம் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.
எனினும், புதிய கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போனின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இது கேலக்ஸி ஏ51 5ஜி மாடலை விட விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி ஏ42 5ஜி மாடல் விலை ரூ. 25 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
அந்த வகையில் விலையை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி ஒன்பிளஸ் நார்டு மற்றும் ரியல்மி வி3 போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் என தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
- 6.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் எக்சைனோஸ் அல்லது ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் பிராசஸர்
- 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
மோட்டோரோலா நிறுவனத்தின் 2020 மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
மோட்டோரோலா நிறுவனம் இரண்டாம் தலைமுறை மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ரேசர் ஸ்மார்ட்போன் 5ஜி வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
சீன சந்தையில் 2020 மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் புதிய ரேசர் ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. 5ஜி மட்டுமின்றி புது ரேசர் ஸ்மார்ட்போனின் செயல்திறன் மற்றும் வடிவமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம்.

புது ரென்டர்களின் படி 2020 மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் தோற்றத்தில் முந்தைய வெர்ஷன் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த மாட் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
2020 மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரைமரி சென்சார் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் உள்புறம் 20 எம்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. தற்போதைய மாடலில் 5 எம்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய மோட்டோரோலா ரேசர் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 2845 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் எக்ஸ்52 மோடெம் மூலம் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.
ஒரே சமயத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்யும் சாம்சங் வயர்லெஸ் சார்ஜர் ட்ரியோ அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜர் ட்ரியோ மாடலை அறிமுகம் செய்தது. இந்த சார்ஜர் ஒரே சமயத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கிறது. இந்த சார்ஜரில் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா, கேலக்ஸி வாட்ச் 3 மற்றும் கேலக்ஸி பட்ஸ் லைவ் போன்ற மாடல்களை வைக்க முடியும்.
முன்னதாக வயர்லெஸ் சார்ஜர் டுயோ மாடலை இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. இதை கொண்டு ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். அந்த வரிசையில், புதிய வயர்லெஸ் சார்ஜர் ட்ரியோ மாடலின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

புதிய சாம்சங் வயர்லெஸ் சார்ஜர் ட்ரியோ மாடலின் விலை 99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 7642 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் க்யூஐ வயர்லெஸ் சார்ஜிங் தரத்தை சப்போர்ட் செய்யும் என்பதால், வயர்லெஸ் சார்ஜிங் ட்ரியோ க்யூஐ தர வசதி கொண்ட அனைத்து சாதனங்களையும் சார்ஜ் செய்யும்.
64 எம்பி குவாட் கேமராக்கள் கொண்ட ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது. இது ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
புதிய ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி 7 ப்ரோ மாடலில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 65 வாட் சூப்பர்டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி 7 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.6 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 ஜிபியு
- 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR4x ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
- 64 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 2 எம்பி போர்டிரெயிட் கேமரா
- 2 எம்பி மேக்ரோ சென்சார்
- 32 எம்பி செல்ஃபி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 65 வாட் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மிரர் வைட் மற்றும் மிரர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்குகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதுவித 16 ஜிபி ரேம் சிப்செட்களின் உற்பத்தி பணிகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் 16 ஜிபி ரேம்களின் உற்பத்தியை துவங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தது. இந்த சிப்செட்கள் மூன்றாம் தலைமுறை 10 நானோமீட்டர் தொழில்நுட்ப முறையில் உருவாகும் என்றும் உற்பத்தி பணிகள் ஆண்டின் இரண்டாவது அரையாணடு காலக்கட்டத்தில் துவங்கும் என தெரிவித்து இருந்தது.
அந்த வகையில் கொரியாவில் உள்ள பியோங்டெக் ஆலையில் புதுவித ரேம்களை உற்பத்தி செய்வதற்கான வசதியை ஏற்படுத்தி இருப்பதாக சாம்சங் தெரிவித்து இருக்கிறது. மொபைல் போன் மாடல்களுக்கென உருவாகும் முதல் 16 ஜிபி ரேம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தொழில்நுட்பம் அதிவேகம் மற்றும் அதிக திறன் வழங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. தற்போதைய தகவல்களின் படி புதிய 16 ஜிபி ரேம் சிப்கள் கேலக்ஸி எஸ்21 மற்றும் இதர உயர் ரக சாம்சங் சாதனங்களில் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த சிப்கள் சாம்சங் சாதனங்கள் மட்டுமின்றி மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கும் விற்பனை செய்ய இருப்பதாக சாம்சங் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதிய சிப்செட்களை சீன நிறுவனங்கள் மற்றும் எதிர்கால ஆப்பிள் சாதனங்களிலும் எதிர்பார்க்கலாம்.
நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் 2020 ஐஎஃப்ஏ விழாவில் பங்கேற்க இருப்பதாக ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது. இந்த விழாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நோக்கியா 2.4 மற்றும் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன்கள் இவ்விழாவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் டாக்டர் ஸ்டிரேன்ஜ் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக தகவல் வெளியானது.

தற்சமயம் நோக்கியா 3.4 விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் மெல்லிய பெசல்கள் கொண்டிருக்கும் என்றும், இடதுபுறத்தில் பன்ச் ஹோல் கொண்ட ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. முன்னதாக நோக்கியா 8.3 மாடலும் இதேபோன்ற வடிவமைப்பை கொண்டிருந்தது.
நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் வட்ட வடிவ கட்-அவுட் கொண்டு உருவாகும் முதல் என்ட்ரி லெவல் மாடல் ஆகும். இது அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் வட்ட வடிவ கேமரா மாட்யூல் வழங்கப்படுகிறது. இதில் மூன்று கேமராக்கள், எல்இடி ஃபிளாஷ் யூனிட் வழங்கப்படுகிறது.
கேமரா சென்சார்களின் கீழ் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. நோக்கியா 3.4 மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 8 எம்பி செல்ஃபி கேமரா, 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மற்றும் 5 எம்பி கேமரா வழங்கப்பட இருக்கிறது.
போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ்3 என்எஃப்சி வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
போக்கோ எக்ஸ்3 என்எஃப்சி செப்டம்பர் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யூல் விவரங்களை போக்கோ டீசராக வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய போக்கோ ஸ்மார்ட்போன் முந்தைய போக்கோ எக்ஸ்2 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய போக்கோ எக்ஸ்3 என்எஃப்சி மாடல் அறிமுக நிகழ்வு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் நேரலை செய்யப்பட இருக்கிறது.
முந்தைய தகவல்களின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த கேமரா சென்சார் பிக்சல் பின்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 16 எம்பி ரெசல்யூஷனில் புகைப்படங்களை வழங்கும் என கூறப்படுகிறது.
கேமரா விவரங்களுடன், அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில், போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் ப்ரோ மோட், அப்ரேச்சர், எக்ஸ்போஷர், ஐஎஸ்ஒ மற்றும் வைட் பேலன்ஸ் உள்ளிட்டவற்றை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி வழங்கப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் முதல் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் 5ஜி சிப்செட் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக இதே ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 4ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் போக்கோ எக்ஸ்2 பெயரில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

ரெட்மி கே30 5ஜி வேரியண்ட் ரெட்மி பிராண்டிங் கொண்டு இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்ட்டில் மட்டும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் ஃபிராஸ்ட் வைட் மற்றும் மிஸ்ட் பர்ப்பிள் என இரண்டு வித நிறங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 5ஜி வேரியண்ட்டில் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட், 120 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே, குவாட் கேமரா, 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ அசத்தல் அம்சம் கொண்டு உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலினை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் 2021 ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
மேலும் புதிய மாடலின் வடிவமைப்பு மற்றும் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றும், தற்போதைய அம்சங்களே பெரும்பான்மையாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், புதிய மாடலில் இன்-ஏர் ஜெஸ்ட்யூர் வசதி வழங்கப்படலாம் என சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது.

வயர்லெஸ் ஹெட்போன்களில் ஜெஸ்ட்யூர் வசதி சோனி மற்றும் போஸ் நிறுவனங்களின் பிரீமியம் மாடல்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த வரிசையில் தற்சமயம் ஆப்பிள் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இன்-ஏர் ஜெஸ்ட்யூர் கொண்டு ஏர்பாட்சை தொடாமலேயே இசையை இயக்குவும், அழைப்புகளை ஏற்கவும் முடியும்.
இந்த அம்சம் இருந்தால், பயனர் கைகள் ஏர்பாட்சை நோக்கி வருவது கண்டறியப்பட்டு மியூசிக் பிளேபேக், சிரியை இயக்குவது மற்றும் அழைப்புகளை ஏற்பது போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும். இத்துடன் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை ஆன் / ஆஃப் செய்வதற்கான வசதியும் புது மாடலில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய இன்-ஏர் ஜெஸ்ட்யூர் வசதி மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ள அம்சமாக இருக்கும். காப்புரிமை பெறப்பட்ட இந்த அம்சம் புதிய ஏர்பாட்ஸ் மாடலில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் தனது அதிநவீன மூன்றாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து உள்ளது.
சியோமி நிறுவனம் தனது அதிநவீன மூன்றாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து உள்ளது. இது சரியான டிஸ்ப்ளே மற்றும் செல்ஃபி பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என சியோமி தெரிவித்தது.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் சியோமி தனது முதல் தலைமுறை அன்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. பின் அக்டோபர் மாதத்தில் இரண்டாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய மூன்றாம் தலைமுறை கேமரா தொழில்நுட்பத்தில் OLED ஸ்கிரீன் முற்றிலும் தெரியாத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கென ஸ்கிரீனின் கீழ் இருக்கும் கேமரா பிக்சல்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கின்றன. இவை ஸ்கிரீனில் இருந்து சப்-பிக்சல்களிடையே வெளிச்சத்தை கொண்டு சேர்க்க வழி செய்கின்றன.
சியோமியின் மூன்றாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பம் வழக்கமான செல்ஃபி கேமராக்களை போன்றே சீராக செயல்படும் திறன் கொண்டுள்ளது. புதிய கேமரா தொழில்நுட்பத்திற்கான உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு வாக்கில் துவங்க இருக்கிறது. இந்த அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது.






