search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    போக்கோ டீசர்
    X
    போக்கோ டீசர்

    போக்கோ எக்ஸ்3 என்எஃப்சி வெளியீட்டு தேதி அறிவிப்பு

    போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ்3 என்எஃப்சி வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    போக்கோ எக்ஸ்3 என்எஃப்சி செப்டம்பர் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யூல் விவரங்களை போக்கோ டீசராக வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய போக்கோ ஸ்மார்ட்போன் முந்தைய போக்கோ எக்ஸ்2 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. 

     போக்கோ டீசர்

    எனினும், இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய போக்கோ எக்ஸ்3 என்எஃப்சி மாடல் அறிமுக நிகழ்வு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் நேரலை செய்யப்பட இருக்கிறது.

    முந்தைய தகவல்களின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த கேமரா சென்சார் பிக்சல் பின்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 16 எம்பி ரெசல்யூஷனில் புகைப்படங்களை வழங்கும் என கூறப்படுகிறது.

    கேமரா விவரங்களுடன், அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில், போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் ப்ரோ மோட், அப்ரேச்சர், எக்ஸ்போஷர், ஐஎஸ்ஒ மற்றும் வைட் பேலன்ஸ் உள்ளிட்டவற்றை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி வழங்கப்படுகிறது.
    Next Story
    ×