என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ரேசர் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. அதன்படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    முந்தைய தகவல்களில் ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனின் சிறு வீடியோவையும் மோட்டோரோலா வெளியிட்டு இருந்தது. மோட்டோரோலா ரேசர் 5ஜி ஸ்மார்ட்போன் ஏற்கனவே அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. 

     மோட்டோரோலா ரேசர் 5ஜி

    தற்சமயம் புதிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஸ்மார்ட் டிவி, குளிர்சான பெட்டி மற்றும் வாஷிங் மெஷின் போன்றவற்றையும் மோட்டோரோலா அறிமுகம் செய்ய இருக்கிறது.

    அந்த வகையில், மோட்டோரோலா ரேசர் 5ஜி ஸ்மார்ட்போன், மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி, முன்புறம் லோட் செய்யும் வசதி கொண்ட வாஷிங் மெஷின் மற்றும் இரண்டு கதவுகள் கொண்ட குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவற்றையும் மோட்டோரோலா அறிமுகம் செய்ய இருக்கிறது.

    மேலும் இவை அனைத்தும் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என டீசரில் தெரியவந்துள்ளது. புதிய மோட்டோ ரேசர் போன் தவிர மற்ற சாதனங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
     

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி சென்சார் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இது சாம்சங்கின் முதல் கேலக்ஸி எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும். இது அக்டோபர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் இன்பினிட்டி யு டிசைன், மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. இது கேலக்ஸி எம்31 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  இதில் சாம்சங்கின் சிங்கிள் டேக் அம்சம் வழங்கப்படுகிறது.

     கேலக்ஸி எப்41

    இதுதவிர 6000 எம்ஏஹெச் பேட்டரி, சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வு விர்ச்சுவல் முறையில் இருக்குமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    முந்தைய தகவல்களின் படி கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 9611 பிராசஸர், அதிகபட்சம் 6ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 உள்ளிட்டவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதன் விலை ரூ. 15 ஆயிரத்தில் துவங்கி ரூ. 20 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    கூகுள் நிறுவனம் தனது மீட் வீடியோ காலிங் சேவையில் திடீர் மாற்றத்தை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    கூகுள் நிறுவனம் தனது மீட் வீடியோ காலிங் சேவையின் இலவச பதிப்புகளில் மீட்டிங்களுக்கான கால அளவு 60 நிமிடங்களாக குறைக்கப்படும் என அறிவித்து இருக்கிறது. மீட்டிங்களில் புதிய காலக்கெடு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது.

    ப்ரோமோ மாற்றங்கள் மற்றும் அட்வான்ஸ்டு அம்சங்கள் காலாவதியாவது பற்றி நாங்கள் எந்த கருத்தும் கூறவில்லை. இவற்றில் மாற்றம் ஏற்பட்டால், நிச்சயம் தகவல் வழங்குவோம் என கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பதில் அளித்து இருக்கிறார்.

     கூகுள் மீட்

    எக்ஸ்டென்ஷன் மூலம் கூகுள் அக்கவுண்ட் வைத்திருப்போர் அனைவரும் இலவச மீட்டிங்களை அதிகபட்சம் 100 பேருடன் எந்த கால அவகாசமும் இன்றி கலந்து கொள்ள முடியும். செப்டம்பர் 30 கால அவகாசம் ஜி சூட் மற்றும் ஜி சூட் பார் எட்யூகேஷன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். 

    இரு சேவைகளிலும் மீட்டிங்கின் போது அதிகபட்சம் 250 பேர் கலந்து கொள்ளும் வசதி மற்றும் ஒற்றை டொமைனில் ஒரு லட்சம் பேருடன் நேரலை செய்யும் வசதி, மீட்டிங் ரெக்கார்டிங்களை கூகுள் டிரைவில் சேவ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

    வழக்கமாக இந்த அம்சங்கள் ஜி சூட் என்டர்பிரைஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கான மாத கட்டணம் 25 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1800 வசூலிக்கப்படுகிறது.
    சோனி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் ரூ. 14 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    சோனி நிறுவனத்தின் WF-H800 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய இயர்பட்ஸ் சோனியின் டிரை-ஹோல்டு ஸ்டிரக்சர், சோனி டிஜிட்டல் சவுண்ட் என்ஹான்ஸ்மென்ட் என்ஜின், நீண்ட பேட்டரி லைஃப், ஆட்டோமேடிக் பிளே/பாஸ் மற்றும் பல்வேறு அம்சங்கள் கொண்டிருக்கிறது.

    புதிய இயர்பட்ஸ் 6 எம்எம் டோம்-டைப் டிரைவர்களை கொண்டு இயங்குகிறது. இத்துடன் ப்ளூடூத் 5 மற்றும் புதிய ப்ளூடூத் சிப் கொண்டுள்ளது. இவை சீரான ஆடியோ அனுபவத்தை குறைந்த லேடென்சியில் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் 16 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.

     சோனி WF-H800

    மேலும் இதில் க்விக் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 70 நிமிடங்களுக்கு பயன்படுத்த முடியும். இதில் இயர் டிடெக்ஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இயர்போனை அணிந்து கொண்டால் தானாக ஆன் ஆகும். பின் காதில் இருந்து கழற்றினால் தானாக ஆப் ஆகிவிடும்.

    இத்துடன் சோனி WF-H800 மாடலில் கூகுள் அசிஸ்டண்ட், அலெக்சா மற்றும் சிரி போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவைகளை கொண்டுள்ளது. இது பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 14,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா 7.3 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2.4 மற்றும் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன்களை சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்தது. எனினும், நோக்கியா 7 சீரிஸ் அல்லது 9 சீரிஸ் பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

    இந்நிலையில், நோக்கியா 7.3 ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இவை சிஏடி வரைபடங்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அளவில் இது 165.8x76.3x8.2எம்எம் அளவில் இருக்கிறது. இதன் பின்புறம் பிளாஸ்டிக் பேக் வழங்கப்படுகிறது.

     நோக்கியா 7.3

    மேலும் புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ஸ்கிரீன், நான்கு கேமரா சென்சார்கள், பின்புறம் கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொண்டிருக்கிறது. இத்துடன் 6.5 இன்ச் FHD+HDR பியூர் டிஸ்ப்ளே, 48 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு, மேக்ரோ மற்றும் டெப்த் சென்சார்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    முன்புறம் 24 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இது ஸ்னாப்டிராகன் 690 5ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 20 சாதனங்களை உற்பத்தி செய்ய உள்நாட்டு உற்பத்தியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    இந்தியாவில் சியோமி போன்ற சீன நிறுவனங்களை எதிர்கொள்ள குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

     கோப்புப்படம்

    இதற்கென லாவா இன்டர்நேஷனல், கார்பன் மொபைல்ஸ் மற்றும் டிக்சான் டெக்னாலஜீஸ் போன்ற உள்நாட்டு நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

    புதிய ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் ஜியோ டேட்டா சலுகைகளுடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 4 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

    ஜியோ ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, ஏர்டெல் நிறுவனமும் லாக்டு ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இதற்கென ஏர்டெல் நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உறுதி செய்துள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் அக்டோபர் 8 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகிறது.

    புதிய கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போனில் சூப்பர் AMOLED இன்பினிட்டு யு ஸ்கிரீன், பின்புறம் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருக்கிறது.

     கேலக்ஸி எப்41

    சாம்சங் கேலக்ஸி எப்41 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.4  இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
    - மாலி-ஜி72எம்பி3 ஜிபியு
    - 6 ஜிபி LPDDR4x ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    -  ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 64 எம்பி பிரைமரி கேமரா
    - 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
    - டெப்த் / மேக்ரோ லென்ஸ்
    - 32 எம்பி செல்பி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - எப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப்-சி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ பிளாட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 / எக்சைனோஸ் 990 பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் இன்-டிஸ்ப்ளே ஆப்டிக்கல் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ, பிக்ஸ்பி, சாம்சங் ஹெல்த் மற்றும் சாம்சங் பே போன்ற சேவைகளை கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

     கேலக்ஸி எஸ்20 எப்இ

    சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அட்ரினோ 650 ஜிபியு
    அல்லது
    - ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர், ஏஆர்எம் மாலி-ஜி77எம்பி11 ஜிபியு
    - 6 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி மெமரி
    - 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
    - சிங்கிள் சிம் / ஹைப்ரிட் சிம்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.8, PDAF, 79˚ FOV, OIS
    - 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32° FoV, f/2.4, PDAF, OIS
    - 12 எம்பி 123° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    - யுஎஸ்பி டைப் சி ஆடியோ
    - ஆப்டிக்கல் கைரேகை சென்சார்
    - 5ஜி SA/NSA Sub6 / எம்எம்வேவ், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி 3.1
    - 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்
    -கியூஐ வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர்

    சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ கிளவுட் ரெட், கிளவுட் ஆரஞ்சு, கிளவுட் லாவெண்டர், கிளவுட் மின்ட், கிளவுட் நேவி மற்றும் கிளவுட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 599 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 56,250 முதல் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 819 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 70,350 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனம் குறைந்த விலையில் இரண்டு பவர் பேங்க் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

    சியோமி நிறுவனம் இந்தியாவில் எம்ஐ பவர் பேங்க் 3ஐ 10000 எம்ஏஹெச் மற்றும் 20000 எம்ஏஹெச் பவர் பேங்க் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.

    இவற்றில் 12 அடுக்கு சிப் பாதுகாப்பு மற்றும் ஸ்மார்ட் பவர் மேனேஜ்மென்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் குறைந்த மின்திறன் கொண்ட சாதனங்களை குறைந்த வேகத்தில் சார்ஜ் செய்யும் அம்சம் வழங்கப்பட்டு உள்ளது.

     சியோமி எம்ஐ பவர் பேங்க் 3ஐ

    20000 எம்ஏஹெச் பவர் பேங்க் மாடலில் மூன்று போர்ட் அவுட்புட் வழங்கப்பட்டு உள்ளது. 10000 எம்ஏஹெச் மாடலில் இரட்டை பவர் அவுட்புட் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் டூயல் போர்ட் இன்புட் மற்றும் 18 வாட் இருவழி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதன் 20000 எம்ஏஹெச் பவர் பேங்க் மாடல் யுஎஸ்பி பவர் டெலிவரி வசதி கொண்டுள்ளது. புதிய 10000 எம்ஏஹெச் எம்ஐ பவர் பேங்க் 3ஐ மாடல் மிட்நைட் பிளாக் மற்றும் மெட்டாலிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    20000 எம்ஏஹெச் எம்ஐ பவர் பேங்க் 3ஐ மாடல் சேன்ட்ஸ்டோன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களும் அமேசான் மற்றும் எம்ஐ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    ஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்வதில் பிரபலமான ஹைஃபைமேன் பிராண்டு குறைந்த விலையில் வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.


    இந்திய சந்தையில் ஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்வதில் பெயர்பெற்ற ஹைஃபைமேன் நிறுவனம் புதிய இன் இயர் வயர்லெஸ் ஹெட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹெட்போன் BW200 எனும் பெயரில் அழைக்கப்படுகிறது.

    ஹைஃபைமேன் BW200 ஹெட்போனில் மேக்னெடிக் இயர்பட், ப்ளூடூத் 4.1, க்விக் சார்ஜ் வசதி, ஐபிஎக்ஸ்4 சான்று மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. மிக குறைந்த எடை கொண்டிருக்கும் BW200 ஹெட்செட் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

     ஹைஃபைமேன் BW200

    இதில் இன்-லைன் கண்ட்ரோல், பில்ட் இன் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ப்ளூடூத் 4.1 மூலம் சீரான ஆடியோ அனுபவம் பெற முடியும். இந்த ஹெட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இத்துடன் க்விக் சார்ஜ் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் ஹைஃபைமேன் BW200 நெக் ப்ளூடூத் ஹெட்போன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இது அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் ஹெட்சோன் , ஆடியோஸ்டோர் போன்ற வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட நார்சோ 20 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

    ரியல்மி நிறுவனம் இந்தியாவில் நார்சோ 20 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

     நார்சோ 20

    ரியல்மி நார்சோ 20 சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
     - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
    - மாலி-ஜி52 2EEMC2 ஜிபியு
    - 4 ஜிபி LPPDDR4x ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி eMMC 5.1மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
    - 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
    - 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.1
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி

    ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் குளோரி சில்வர் மற்றும் விக்ட்ரி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 65 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,499 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    சியோமி நிறுவனம் 108 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை குறைந்த விலையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    சியோமி நிறுவனம் 64 எம்பி மற்றும் 108 எம்பி கேமரா சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக கடந்த சில மாதங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும், இதுபற்றி அதிக தகவல்கள் வெளியாகாமல் இருந்தது.

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி நிறுவனம் 108 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக சியோமி நிறுவனம் எம்ஐ நோட் 10 ஸ்மார்ட்போனை 108 எம்பி கேமரா சென்சாருடன் அறிமுகம் செய்தது.

     எம்ஐ நோட் 10

    108 எம்பி கேமரா கொண்ட புதிய சியோமி ஸ்மார்ட்போன்கள் கௌகின் மற்றும் கௌகின் ப்ரோ எனும் குறியீட்டு பெயர்களில் உருவாகி இருக்கிறது. இதன் ப்ரோ வேரியண்ட் 108 எம்பி கேமரா கொண்டிருக்கும் என்றும் கௌகின் வேரியண்ட் 64 எம்பி கேமரா சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் 108 எம்பி சென்சார் கொண்ட கௌகின் ப்ரோ சியோமியின் விலை குறைந்த 108 எம்பி ஸ்மார்ட்போனாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இவைதவிர புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றி அதிக தகவல்கள் வெளியாகவில்லை. விரைவில் சியோமி தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    ×