என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    அசுஸ் நிறுவனம் தனது ரோக் போன் 5 மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.


    அசுஸ் ரோக் போன் 5 மார்ச் 10 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது. கடந்த வாரம் சர்வதேச வெளியீட்டை உறுதிப்படுத்திய நிலையில் தற்சமயம் ரோக் போன் 5 இந்தியாவிலும் மார்ச் 10 ஆம் தேதியே அறிமுகமாகும் என அசுஸ் தெரிவித்து இருக்கிறது. 

    முந்தைய ரோக் போன் போன்றே புதிய மாடலும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் ரோக் போன் 5 விவரங்கள் சீனாவின் TENAA வலைதளத்தில் ASUS_I005DA எனும் மாடல் நம்பருடன் வெளியாகி இருந்தது. இதில் புது ஸ்மார்ட்போனின் பின்புறம் ROG லோகோவில் டாட் மேட்ரிக்ஸ் ஔரா லைட்டிங் செய்யப்படுகிறது.

     அசுஸ் ரோக் போன் 5 டீசர்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரோக் போன் 5 மாடலில் 6.78 இன்ச் OLED டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 65வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 8 ஜிபி / 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் என மூன்று வெர்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், முன்புறம் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் 4800 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என தெரிகிறது. 
    ஹூவாய் நிறுவனம் மேட் எக்ஸ்2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹூவாய் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி மேட் எக்ஸ்2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி போல்டு போன்று உள்புறம் மடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் உள்புறம் 8 இன்ச் OLED ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், வெளிப்புறம் 6.45 இன்ச் OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மேக்னெட்ரான் நானோ-ஆப்டிக்கல் பிலிம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனில் கிரீஸ் பகுதியை பெருமளவு மறைக்கிறது. இதன் ஹின்ஜ் பகுதி பைபர் மற்றும் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது முந்தை மாடலில் உள்ளதை விட உறுதியாக இருக்கிறது.

    ஹூவாய் மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 11 ஒஎஸ் கொண்டுள்ளது. இது ஏப்ரல் மாதம் ஹார்மனி ஒஎஸ் அப்டேட் பெறும் என ஹூவாய் தெரிவித்து உள்ளது. அந்த வகையில் இது ஹார்மனி ஒஎஸ் பெறும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

     ஹூவாய் மேட் எக்ஸ்2

    புகைப்படங்களை எடுக்க 50 எம்பி RYYB பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்பி RYYB 3x டெலிபோட்டோ மற்றும் 8 எம்பி 10எக்ஸ் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் 16 எம்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் கிரின் 9000 5ஜி பிராசஸர் கொண்டுள்ளது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 55 வாட் வையர்டு பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹூவாய் மேட் எக்ஸ்2 பிளாக், வைட், க்ரிஸ்டல் புளூ மற்றும் க்ரிஸ்டல் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 256 ஜிபி மாடல் விலை 17,999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 2,01,705 என்றும் 512 ஜிபி மெமரி மாடல் விலை 18,999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 2,12,970 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    சியோமி நிறுவனம் புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் ப்ளூடூத் இயர்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.


    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எம்ஐ போர்டபில் ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் நெக்பேண்ட் ப்ளூடூத் இயர்போன் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தது. 16 வாட் திறன் கொண்ட ப்ளூடூத் ஸ்பீக்கரில் ப்ளூடூத் 5.0, டூயல் EQ மோட், மைக்ரோபோன், வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இத்துடன் IPX7 வாட்டர் ப்ரூப் வசதி, அதிகபட்சம் 13 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. பேப்ரிக் டிசைன் கொண்டிருக்கும் புதிய ஸ்பீக்கர் கைகளில் இருந்து நழுவாமல் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 2600 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.

     எம்ஐ நெக்பேண்ட் ப்ளூடூத் இயர்போன்

    புதிய எம்ஐ நெக்பேண்ட் ப்ளூடூத் இயர்போன் ப்ரோ ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது. இது சியோமியின் முதல் ANC வசதி கொண்ட நெக்பேண்ட் இயர்போன் ஆகும். மேலும் இதில் அழைப்புகளுக்கு ENC வசதி, ப்ளூடூத் 5, 10எம்எம் பேஸ் டிரைவர், லோ-லேடென்சி ஆடியோ மற்றும் 20 மணி நேர பேட்டரி பேக்கப் கொண்டிருக்கிறது.

    இத்துடன் மேக்னெடிக் இயர்பட்ஸ், ஆன்டி-வாக்ஸ் இயர்டிப்கள் வழங்கப்பட்டுள்ளன. வாய்ஸ் அசிஸ்டண்ட், வால்யூம்/மியூசிக் மற்றும் அழைப்புகளை ஏற்க/நிராகரிக்கும் வசதி கொண்ட பட்டன் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த இயர்போனில் IPX5 தர ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் 150 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய எம்ஐ போர்டபில் ப்ளூடூத் ஸ்பீக்கர் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மார்ச் 1 ஆம் தேதி முதல் அமேசானில் துவங்குகிறது. எம்ஐ நெக்பேண்ட் ப்ளூடூத் இயர்போன் ப்ரோ மாடல் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    லெனோவோ நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.


    லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கடிகாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட் கடிகாரத்தில் கூகுள் அசிஸ்டண்ட் சேவையின் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது இந்தி மொழியில் கமாண்ட்களை வழங்கும் லெனோவோவின் முதல் ஸ்மார்ட் சாதனம் ஆகும்.

    புதிய லெனோவோ ஸ்மார்ட் கிளாக் எசென்ஷியல் 4 இன்ச் LED டிஸ்ப்ளே, ஸ்மார்ட் அலாரம் வசதி, பார்-பீல்டு மைக்ரோபோன் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. இத்துடன் 4 ஜிபி ரேம், 512 எம்பி ரோம், பிளே / அலாரம் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

     லெனோவோ ஸ்மார்ட் கிளாக் எசென்ஷியல்

    லெனோவோ ஸ்மார்ட் கடிகாரம் சிறப்பம்சங்கள்

    - 4 இன்ச் LED டிஸ்ப்ளே
    - அம்லாஜிக் ஏ11மஎக்ஸ் பிராசஸர்
    - 3 வாட் ஸ்பீக்கர்
    - 2 மைக்ரோபோன் அரே
    - 4 ஜிபி ரேம்
    - 512 எம்பி ரோம்
    - மைக்ரோபோன் மியூட் டாகிள்
    - பிளே பட்டன், அலாரம் படட்டன்
    - 2.4ஜி / 5ஜி டூயல் பேண்ட், IEEE 802.11 ac, ப்ளூடூத் 5

    புதிய லெனோவோ ஸ்மார்ட் கடிகாரம் சாப்ட் டச் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஒப்போ நிறுவனம் புதுவித செல்பி கேமரா அமைப்பை பயன்படுத்துவதற்கான காப்புரிமையை பெற்று இருக்கிறது.


    ஒப்போ நிறுவனம் வித்தியாசமான ஸ்மார்ட்போன் டிசைன் மற்றும் அம்சங்களை உருவாக்குவதற்கான பணிகளில் துவக்கம் முதலே ஈடுபட்டு வருகிறது. முன்னதாக ஒப்போ நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்க ஒப்போ காப்புரிமைகளை பெற்று இருந்தது. 

    தற்சமயம் ஸ்லைடிங் செல்பி கேமராவிற்கான காப்புரிமையை ஒப்போ பெற்று இருக்கிறது. புதுவித செல்பி கேமராவிற்கான காப்புரிமையை பெற ஒப்போ நிறுவனம் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தது. 33 பக்கங்கள் அடங்கிய விண்ணப்பத்தில் செல்பி கேமரா தொழில்நுட்பம் எவ்வாறு இயங்கும் என்பதை ஒப்போ விளக்கி உள்ளது. 

     ஒப்போ ஸ்மார்ட்போன்

    அதன்படி ஸ்லைடிங் செல்பி கேமரா கொண்டு வெவ்வேறு கோணங்களில் புகைப்படங்களை எடுக்க முடியும் என ஒப்போ தெரிவித்து இருக்கிறது. காப்புரிமை விவரங்களின்படி இந்த அம்சம் கொண்ட ஸ்மார்ட்போனில் சிறிய மோட்டார் பொருத்தப்படும் இது கேமராவை ஒரு இடத்தில் இருந்து ஸ்லைடு செய்யும். 

    இந்த மோட்டார், தற்போதைய பாப்-ரக செல்பி கேமராக்களை போன்றே, பயனர் ஸ்மார்ட்போனில் செல்பி கேமரா அம்சத்தை இயக்கினால் மட்டுமே செயல்படும் வகையில் உருவாக்கப்படுகிறது. தற்சமயம் காப்புரிமை நிலையில் இருக்கும் புது அம்சம் வர்த்தக ரீதியிலான ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போனை மார்ச் 4 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது. இது அந்நிறுவனம் ரேஸ் எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கி வந்த ஸ்மார்ட்போன் ஆகும். புதிய ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் மாடல் ஆகும். 

    புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கும் என ரியல்மி அறிவித்து இருக்கிறது. புதிய ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன் இளம் தலைமுறையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலான அனுபவத்தை வழங்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

     ரியல்மி ஜிடி

    ரியல்மி ஜிடி மாடல் ஜிடி ஸ்போர்ட்ஸ் கார்களை தழுவிய கான்செப்ட் கொண்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் கார்கள் அதிவேகமாக நீண்ட தூரம் பயணிக்கும் வகையில் அதிக செயல்திறன் மற்றும் நம்பத்தகுந்த அம்சங்களை வழங்கும். ரியல்மி ஜிடி பிளாக்ஷிப் மாடல் இளம் பயனர்களை கவரும் அம்சங்களை கொண்டிருக்கிறது. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன் அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட பன்ச் ஹோல் AMOLED டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், பின்புறம் ஜிடி பிராண்டிங் கொண்டிருக்கும் என கூறப்பட்டு உள்ளது. இத்துடன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 64 எம்பி மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம்.
    டைவா நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய டிவி மாடல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து உள்ளது.


    டைவா நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய டிவி மாடல்களை- டைவா D32S7B மற்றும் D40HDRS எனும் பெயர்களில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக டைவா நிறுவனம் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

    புதிய டிவி மாடல்கள் 32 இன்ச் மற்றும் 39 இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன. இரு டிவி மாடல்களிலும் அலெக்சா சார்ந்த வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி உள்ளது. இந்த டிவியுடன் வழங்கப்படும் ரிமோட் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் சோனி லிவ் போன்ற தளங்களை இயக்க ஹாட்கீ கொண்டிருக்கிறது.

     டைவா ஸ்மார்ட் டிவி

    இரு மாடல்களில் 39 இன்ச் டிவி மட்டுமே ஹெச்டி ரெடி வசதி கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் ஆகும். இரு மாடல்களிலும் மூன்று HDMI மற்றும் இரண்டு யுஎஸ்பி போர்ட்கள், ப்ளூடூத் மற்றும் இ-ஷேர் போன்ற வசதிகள் உள்ளன.

    இ-ஷேர் வசதி இருப்பதால் டிவியை ஸ்மார்ட்போன் கொண்டே இயக்க முடியும். இரு மாடல்களிலும் குவாட்கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 8, 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி மற்றும் டைவா நிறுவனத்தின் தி பிக் வால் மென்பொருள் வழங்கப்பட்டு இருக்கிறது. இது பல்வேறு ஒடிடி தளங்களில் இருந்து தரவுகளை வழங்குகிறது.

    இந்தியாவில் டைவா D32S7B மாடல் விலை ரூ. 15,990 என்றும் D40HDRS மாடல் விலை ரூ. 21,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு டிவிக்களும் ஒரு வருடத்திற்கான வாரண்டியை கொண்டுள்ளன. இவற்றின் விற்பனை விரைவில் துவங்க இருக்கின்றன.
    ரியல்மி நிறுவனத்தின் புது வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ரியல்மி நிறுவனம் விரைவில் ரியல்மி பட்ஸ் ஏர் 2 மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உணர்த்தும் வகையில் ரியல்மி இந்தியா தலைவர் மாதவ் சேத் டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். புதிய இயர்பட்ஸ் ரியல்மி பட்ஸ் ஏர் மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும்.

    முன்னதாக ரியல்மி பட்ஸ் ஏர் 2 மாடல் 2021 முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மாதவ் சேத் தற்சமயம் வெளியிட்டு இருக்கும் டீசர் வீடியோவில் புதிய இயர்பட்ஸ் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

     ரியல்மி இயர்பட்ஸ்

    45 நொடிகள் ஓடும் வீடியோவில் பிளாக் ஓவல் வடிவ கேஸ் ஒன்று இடம்பெற்று இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் பார்க்க பட்ஸ் ஏர் ப்ரோ மாடலின் குறைந்த விலை வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. புதிய பட்ஸ் ஏர் 2 பற்றி ரியல்மி தலைமை செயல் அதிகாரி எந்த தகவலையும் வழங்கவில்லை. 

    எனினும், புதிய இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். இ்துடன் டிரான்ஸ்பேரன்சி மோட் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் வெளிப்புறம் இருக்கும் சத்தத்தை கேட்டுக் கொண்டே இசையையும் அனுபவிக்க வழி செய்கிறது. புதிய ரியல்மி பட்ஸ் ஏர் 2 மாடலின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சிறப்ப்மசங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.


    ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் OLED தொழில்நுட்பத்தில் சாத்தியப்படுத்தப்பட்டு தற்சமயம் பல்வேறு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இது வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனமும் இந்த அம்சத்தை ஐபோன்களில் சேர்க்க இருப்பதாக கூறப்படுகிறது.

    அந்த வகையில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் பெறும் முதல் மாடல் ஐபோன் 13 என்றும் இது கடிகாரம், பேட்டரி மற்றும் இதர நோட்டிபிகேஷன்களை காண்பிக்கும் என தெரிகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன் சீரிசிற்கு ஆப்பிள் நிறுவனம் சாம்சங்கின் LTPO OLED பேனல்களை பயன்படுத்தும் என கூறப்பட்டது.

     ஐபோன் 12

    இது ஐபோன்களில் ப்ரோமோஷன் தொழில்நுட்பத்தை வழங்கி ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே அம்சத்தையும் செயல்படுத்த வழி வகுக்கும். இத்துடன் புதிய ஐபோன் 13 மாடல்களில் உறுதியான மேக்சேப் மேக்னட்கள் வழங்கப்படும் என்றும் நட்சத்திரங்களை பார்த்ததும் ஆஸ்ட்ரோ மோட் வசதியை தானாக ஆன் செய்யும் என கூறப்படுகிறது.

    இவைதவிர புதிய ஐபோன் 13 சீரிஸ் மேட் பினிஷ் செய்யப்பட்டு, போர்டிரெயிட் மோட் வீடியோவிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன் சீரிஸ் மேம்பட்ட அல்ட்ரா வைடு கேமராக்கள், சிறிய நாட்ச் மற்றும் ஷிப்ட் OIS வழங்கப்படலாம் என கூறப்பட்டது.
    ரியல்மி நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ. 19,999 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதவிர மேலும் பல்வேறு 5ஜி ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய ரியல்மி திட்டமிட்டு வருகிறது.

    சமீபத்திய இணைய உரையாடலின் போது ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் 5ஜி ஸ்மார்ட்போன்கள் விலையை மேலும் குறைவாக நிர்ணயிக்க வேண்டுமா எனும் கேள்வியை எழுப்பினார். இதை கொண்டு பார்க்கும் போது புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விலையை ரியல்மி எக்ஸ்7 மாடலை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

     ரியல்மி எக்ஸ்7

    மாதவ் சேத் சமீபத்திய கேள்வி ரியல்மி நார்சோ 30 இந்திய வெளியீட்டை உணர்த்துவதாக கூறப்படுகிறது. ரியல்மி நார்சோ 30 மாடலின் இந்திய விலை ரியல்மி எக்ஸ்7 மாடலை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம். 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி நார்சோ 30 மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 4800 எம்ஏஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11, ஸ்னாப்டிராகன் அல்லது மீடியாடெக் பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் ரென்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல்களை உருவாக்கி வருவதாக பலமுறை இணையத்தில் தகவல் வெளியாகி இருக்கின்றன. சமீப காலங்களில் மடிக்கக்கூடிய ஐபோனின் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகின்றன. 

    அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் மடிக்கக்கூடிய சாதனங்கள் பிரிவில் ஆப்பிள் தனக்கே உரிய பாணியில் அசத்தலாக களமிறங்கும் என கூறப்படுகிறது. அதன்படி முதல் மடிக்கக்கூடிய ஐபோன் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் வீடியோ வடிவில் வெளியாகி உள்ளது. 

     மடிக்கக்கூடிய ஐபோன்

    மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் ஐபோன் ப்ளிப் எனும் பெயரில் அழைக்கப்படலாம். ஆப்பிள் நிறுவனம் இரண்டு விதமான ப்ரோடோடைப்களை மடிக்கக்கூடிய ஐபோனிற்காக உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் போன்றே செங்குத்தாக திறந்து மூடும் வகையிலான வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. சாம்சங் வழியில் ஆப்பிள் கிளாம்ஷெல் டிசைன் கொண்ட மடிக்கக்கூடிய ஐபோனினை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    புதிய மடிக்கக்கூடிய ஐபோனின் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. எனினும், இது ஏராளமான நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் 2022 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது.


    சியோமி இந்தியா நிறுவனம் இரண்டு புதிய ஆடியோ சாதனங்களை பிப்ரவரி 22 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு சாதனங்களும் இதுவரை இல்லாத வகையில் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் புதிய சவுண்ட் வேவ் வெளியிடப்பட இருப்பதாக சியோமி டீசரில் தெரிவித்து இருக்கிறது. இதற்கான டீசர்களில் இரண்டு இன்-இயர் ஹெட்செட் இடம்பெற்று இருக்கின்றன. எனினும், இவை வையர்டு அல்லது நெக்பேண்ட் ஹெட்செட் என எதுவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

     சியோமி டீசர்

    சியோமி இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் இரண்டு புத்தம் புதிய ஆடியோ சாதனங்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். எனினும், இதுபற்றி வேறு எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    ×