என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய Mi ஸ்மார்ட் பேண்ட் 7 மற்றும் ரெட்மி பட்ஸ் 4 ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

    சியோமி நிறுவனம் Mi ஸ்மார்ட் பேண்ட் 7 மற்றும் ரெட்மி பட்ஸ் 4 ப்ரோ மாடல்களை சீன சந்தையில் நேற்று அறிமுகம் செய்தது. புதிய பிட்னஸ் பேண்ட்: ஸ்டாண்டர்டு வெர்ஷன் மற்றும் என்.எப்.சி. வெர்ஷன் என இரு மாடல்களில் கிடைக்கிறது. இதில் பெரிய AMOLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஏராளமான உடல்நலன் சார்ந்த மாணிட்டரிங் அம்சங்கள் உள்ளிட்டவை வழங்ப்பட்டு உள்ளது. 

    ரெட்மி பட்ஸ் 4 ப்ரோ

    ரெட்மி பட்ஸ் 4 ப்ரோ மாடலில் 360 டிகிரி சரவுண்ட் சவுண்ட், அதிகபட்சமாக 36 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் டிரான்ஸ்பேரன்சி மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி பட்ஸ் 4 ப்ரோ மாடல் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை CNY 399 இந்திய மதிப்பில் ரூ. 4 ஆயிரத்து 650 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    Mi ஸ்மார்ட் பேண்ட் 7 மாடலின் ஸ்டாண்டர்டு வெர்ஷன் விலை CNY 249 இந்திய மதிப்பில் ரூ. 2 ஆயிரத்து 900 என்றும் என்.எப்.சி. வெர்ஷன் விலை CNY 299 இந்திய மதிப்பில் ரூ. 3 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய Mi ஸ்மார்ட் பேண்ட் 7 மாடல்: பிளாக், புளூ, கிரீன், ஆரஞ்சு, பின்க் மற்றும் வைட் என மொத்தம் ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் சம்மர் லிமிடெட் எடிஷன் ரிஸ்ட் பேண்ட்களையும் வாங்க முடியும்.  
    மோட்டோரோலா நிறுவனம் ஸ்னாப்டிபாகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட தனது ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி அப்டேட் செய்து இருக்கிறது. இந்த மாடலில் 200MP கேமரா வழங்கப்பட இருக்கிறது.


    குவால்காம் நிறுவனம் கடந்த வாரம் தனது ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸரை அறிமுகம் செய்தது. ஃபிளாக்‌ஷிப் மாடல்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புது பிராசஸர் கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக ஏராளமான நிறுவனங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டன. இந்த வரிசையில், தற்போது மோட்டோரோலா நிறுவனமும் இணைந்து இருக்கிறது. 

    மோட்டோரோலா வெளியிட்டு இருக்கும் புது டீசர்களின் படி மோட்டோரோலா நிறுவனமும் புதிய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. இத்துடன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான டீசரையும் மோட்டோரோலா வெளியிட்டு இருக்கிறது. 

    மோட்டோ ஸ்மார்ட்போன்

    ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் மற்றும் 200MP பிரைமரி கேமரா கொண்ட மோட்டோரோலா ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜூலை மாத வாக்கில் அறிமுகமாகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் 200MP சாம்சங் ISOCELL HP1 சென்சார் வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் மோட்டோரோலா பிராண்டியர் 22 பெயரில் பலமுறை வெளியாகி உள்ளன.

    முதற்கட்டமாக சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் மோட்டோரோலா எட்ஜ் X30 ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா பெயரில் மற்ற நாடுகளில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 
    குவால்காம் நிறுவனம் சமீபத்தில் புதிய பிளாக்‌ஷிப் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸரை அறிமுகம் செய்தது. பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த பிராசஸர் கொண்ட மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன.


    ஸ்மார்ட்போன் சிப்செட்களை உற்பத்தி செய்து வழங்கும் குவால்காம் நிறுவனம், சமீபத்தில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸரை அறிமுகம் செய்தது. இது குவால்காம் நிறுவனத்தின் அதிநவீன பிளாக்‌ஷிப் பிராசஸர் ஆகும். 

    புது பிராசஸர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஒன்பிளஸ், ரியல்மி மற்றும் அசுஸ் என பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிளாக்‌ஷிப் பிராசஸர் கொண்டிருக்கும் என அறிவித்து வருகின்றன.

    ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1

    அதன் படி அசுஸ் நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் ரோக் போன் 6 சீரிஸ் மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே போன்று ஒன்பிளஸ் நிறுவனமும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் உருவாகி வருவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் புது ஸ்மார்ட்போன் 2022 மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. 

    ஒன்பிளஸ் மற்றும் அசுஸ் நிறுவனங்களை போன்றே ரியல்மி நிறுவனமும் தனது GT2 மாஸ்டர் எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என அறிவித்து உள்ளது. இவை தவிர மற்ற ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளன.
    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புது Y சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 4GB விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

    விவோ நிறுவனத்தின் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ Y75 மாடலில் 6.44 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், யு நாட்ச் டிசைன், 44MP செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ G96 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 4GB விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ Y75 ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.2, ஃபன்டச் ஓ.எஸ். 12 மற்றும் 4050mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    விவோ Y75 அம்சங்கள்:

    - 6.44 இன்ச் FHD+ 2400x1080 AMOLED ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G96 12nm பிராசஸர்
    - மாலி-G57 MC2 GPU
    - 8GB ரேம் (+4GB விர்ச்சுவல் ரேம்) 
    - 128GB மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஓ.எஸ். 12
    - 50MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
    - 8MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 2MP மேக்ரோ கேமரா, f/2.4
    - 44MP AF செல்பி கேமரா, f/2.0
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2, GPS, BEIDOU, GLONASS, GALILEO
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 4050mAh பேட்டரி
    - 44W ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய விவோ Y75 ஸ்மார்ட்போன் மூன்லைட் ஷேடோ மற்றும் டேன்சிங் வேவ்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. 
    சென்ஹெய்சர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    சென்ஹெய்சர் நிறுவனத்தின் மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் 3 இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலில் அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 28 மணி நேர பேட்டரி பேக்கப் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. 

    இதில் உள்ள அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் சுற்றுப்புற சூழலில் உள்ள சத்தத்திற்கு ஏற்றவாரு தானாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். இந்த தொழில்நுட்பம் ஆம்பியண்ட் நாய்ஸ்-ஐ கடந்து கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தும். ANC அம்சத்தை டி-ஆக்டிவேட் செய்ய பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இத்துடன் டச் கண்ட்ரோல் மூலம் டிரான்ஸ்பேரன்சி மோடிற்கும் ஸ்விட்ச் செய்து கொள்ளலாம். 

    சென்ஹெய்சர் மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் 3
     
    புதிய இயர்பட்ஸ் மாடலில் மூன்று பில்ட்-இன் மைக்குகள் உள்ளன. இவை க்ரிஸ்டல் க்ளியர் காலிங் அனுபவத்தை வழங்குகின்றன. பேட்டரியை பொருத்தவரை புது இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் ஏழு மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்கும். இதனுடன் வரும் கேஸ் பயன்படுத்தும் போது மொத்தத்தில் 28 மணி நேரத்திற்கான பேக்கப் பெற முடியும். இந்த இயர்பட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    சென்ஹெய்சர் மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் 3 இயர்பட்ஸ் மாடல் பிளாக், வைட் மற்றும் கிராபைட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் அம்சங்களை இயக்க ஸ்மார்ட் கண்ட்ரோல் செயலியை ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். புதிய சென்ஹெய்சர் மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் 3 இயர்பட்ஸ் விலை ரூ. 24 ஆயிரத்து 999 ஆகும். ஆனால் அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் ரூ. 21 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    ஒன்பிளஸ் நிறுவனம் நேற்று சீனா சந்தையில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியா வர இருக்கிறது.


    ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் நேற்று (மே 17) சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் மாடல் விவரங்கள் ஒன்பிளஸ் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் காணப்பட்டது. 

    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு 3 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. எனினும், இதுபற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும் ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் இந்திய வெளியீட்டு விவரமும் அறிவிக்கப்படவில்லை.

     ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன்

    டிப்ஸ்டரான முகுல் ஷர்மா புதிய ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை ஒன்பிளஸ் வலைதளத்தில் கண்டதாக தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் முற்றிலும் புது பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நார்டு 3 பெயரில் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் இதன் வெளியீடு ஜூலை மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புது ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் மாடலில் 6.59 இன்ச் 120Hz LCD ஸ்கிரீன், வேரியபில் ரிப்ரெஷ் ரேட், ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 மேக்ஸ் பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம், 256GB மெமரி, டூயல் சிம் ஸ்லாட், புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட், வைபை, ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இதில் 67W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புது Y01 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விலை மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    விவோ நிறுவனத்தின் புதிய விவோ Y01 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது விவோ நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். புதிய விவோ போன் வாட்டர் டிராப் ரக நாட்ச் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    இத்துடன் 2GB ரேம், 32GB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 8MP பிரைமரி கேமரா, 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    விவோ Y01

    விவோ Y01 அம்சங்கள்:

    - 6.51 இன்ச் HD+ 720x1600 பிக்சல் ஹாலோ ஃபுல் வியு டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர்
    - 2GB ரேம்
    - 32GB மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 11.1
    - 8 MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5MP செல்பி கேமரா
    - 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத்
    - மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
    - 5000mAh பேட்டரி

    புதிய விவோ Y01 ஸ்மார்ட்போன் எலிகண்ட் பிளாக் மற்றும் சஃபையர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தலைமுறை ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
     

    மோட்டோரோலா நிறுவனம் மேவன் “Maven” குறியீட்டு பெயரில் புதிய ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த மாடல் முந்தைய வெர்ஷனை போன்றே கிளாம்ஷெல் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும், மோட்டோரோலா ரேசர் புது வேரியண்ட் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

    இந்த நிலையில், டிஸ்ப்ளே துறை வல்லுனரான ராஸ் யங் புதிய மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிவித்து இருக்கிறார். அதன்படி புதிய தலைமுறை மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்டிருக்கும என அவர் தெரிவித்து உள்ளார். முந்தைய மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டிருந்தது. மெயின் டிஸ்ப்ளே போன்றே கவர் டிஸ்ப்ளேவும் பெரியதாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனில் 2.7 இன்ச் வெளிப்புற டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது. புதிய ரேசர் மாடலில் 3 இன்ச் வரையிலான எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என தெரிகிறது. இரு ஸ்கிரீன்களும் சீனா ஸ்டார் ஒப்டோ-எலெக்டிரானிக்ஸ் உற்பத்தி செய்து வழங்க இருக்கிறது. முன்னதாக ஜனவரி மாத வாக்கில் வெளியான தகவல்களில் புதிய மோட்டோ ரேசர் மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட், FHD+ ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    புகைப்படங்களை எடுக்க 32MP செல்பி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் அதிகபட்சமாக 12GB ரேம், 512GB மெமரி, 2800mAh பேட்டரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    ரியல்மி நிறுவனம் புதிய நார்சோ 50 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து தொடர்ந்து பார்ப்போம்.


    ரியல்மி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நார்சோ 50 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான டீசர் வெளியிடப்பட்டது. மேலும் நார்சோ 50 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் மே 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. நார்சோ 50 சீரிசில் மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர் வழங்கப்படுகிறது. இது அந்த பிரிவில் சக்திவாய்ந்த பிராசஸர் ஆகும். 

    டீசரில் புது ஸ்மார்ட்போன் பன்ச்-ஹோல் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. டிமென்சிட்டி 920 பிராசஸர் கொண்டு அறிமுகமான ரியல்மி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி ஆகும். எனினும், இதன் விலை ரூ. 24 ஆயிரத்து 990 என்றே தொடங்குகிறது. 

    அந்த வகையில், நார்சோ 50 ஸ்மார்ட்போன் விலை இதைவிட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் மற்றும் 5 அடுக்கு கூலிங் வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் வெப்பத்தை பெருமளவு குறைக்க வழி செய்யும். இத்துடன் கேமிங் அனுபவமும் இந்த மாடலில் சிறப்பானதாகவே இருக்கும். 

    கடந்த ஆண்டு ரியல்மி அறிமுகம் செய்த நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 800u பிராசஸர் வழங்கப்பட்ட நிலையில், புதிய நார்சோ 50 சீரிசில் அதிநவீன மீடியாடெக் பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. மேலும் நார்சோ ஸ்மார்ட்போன்களிலேயே இது மிகவும் மெல்லிய மாடல் என ரியல்மி தெரிவித்து உள்ளது. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி Q5i மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது.

     ரியல்மி நார்சோ 50 5ஜி

    ரியல்மி நார்சோ 50 5ஜி / Q5i அம்சங்கள்:

    - 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 6nm பிராசஸர்
    - மாலி-G57 MC2 GPU
    - 4GB / 6GB LPDDR4x ரேம், 128GB (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யு.ஐ. 3.0
    - 13MP பிரைமரி கேமரா, f/2.2, LED ஃபிளாஷ்
    - 2MP 4cm மேக்ரோ சென்சார், f/2.4
    - 8MP செல்ஃபி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.1, 
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5000mAh பேட்டரி
    - 33W பாஸ்ட் சார்ஜிங்
    சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 4 ரெண்டர்களை தொடர்ந்து, Z ப்ளிப் 4 மாடலுக்கான கேட் சார்ந்த ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதில் சாம்சங் ப்ளிப் போனின் புது மாடல் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது. 

    கேலக்ஸி Z ப்ளிப் 4
    Photo COurtesy: @OnLeaks

    அதன்படி புது கேலக்ஸி Z ப்ளிப் 4 மாடலின் கேமரா மாட்யூல் சற்றே வித்தியாசமாக வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 6.7 இன்ச் FHD+AMOLED இன்பினிட்டி பிளெக்ஸ் 120Hz டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 3700mAh பஏட்டரி வழங்கப்படலாம். முந்தைய கேலக்ஸி Z ப்ளிப் 3 மாடலில் 3300mAh பேட்டரி மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இத்துடன் புதிய கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் 25W வயர்டு சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்றும் இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி Z ப்ளிப் 4 மற்றும் கேலக்ஸி Z போல்டு 4 போன்ற மாடல்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர்கள் வழங்கப்படலாம். இந்த பிராசஸர் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கேலக்ஸி S22 மாடலின் புது நிறத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் புதிதாக பின்க் கோல்டு நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் இதுவரை மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தான் இந்த ஸ்மார்ட்போனின் புது நிறம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி S22 மாடலில் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 8GB+128GB மற்றும் 8GB+256GB என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன் 3700mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25W மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

     சாம்சங் கேலக்ஸி S22

    புதிய பின்க் கோல்டு நிறம் மட்டுமின்றி சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன் தற்போது- கிரீன், ஃபேண்டம் பிளாக் மற்றும் ஃபேண்டம் வைட் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது. புதிய பின்க் கோல்டு நிற சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன் முன்னணி விற்பனை மையங்கள் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனின் பின் கோல்டு நிற 8GB+128GB மெமரி மாடல் விலை ரூ. 72 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முந்தைய கிரீன், ஃபேண்டம் பிளாக் மற்றும் ஃபேண்டம் வைட் நிற வேரியண்ட்களின் 8GB+256GB மாடல் விலை ரூ. 76 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    கூகுள் நிறுவனம் விரைவில் பிக்சல் வாட்ச் மற்றும் பிக்சல் டேப்லட் மாடல்களை அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

    கூகுள் நிறுவனம் தனது கூகுள் I/O நிகழ்வில் பிக்சல் வாட்ச் மாடல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இது கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆகும். இதில் வளைந்த ஸ்கிரீன், டோம்டு டிசைன் உள்ளது. இத்துடன் டாக்டைல் கிரவுன் மற்றும் இரண்டு பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் மற்றும் கஸ்டமைஸ் செய்யக்கூடிய பேண்ட்களை கொண்டிருக்கிறது.

    இத்துடன் GPS வசதி, 5ATM அல்லது 50m வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் எல்.டி.இ. ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதில் இதய துடிப்பு சென்சார், உறக்கத்தை டிராக் செய்யும் சென்சார் மற்றும் ஃபிட்பிட் இண்டகிரேஷன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் இன்னும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

     கூகுள் பிக்சல் டேப்லட்

    பிக்சல் 7 சீரிஸ் மற்றும் பிக்சல் வாட்ச் மாடல்களுடன் பிக்சல் டேப்லட் மாடலுக்கான டீசரையும் கூகுள் தனது IO நிகழ்வில் வெளியிட்டது. நெக்சஸ் டேப்லெட் விற்பனையை சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தியதை அடுத்து கூகுள் அறிமுகம் செய்யும் முதல் பிக்சல் சீரிஸ் டேப்லட் மாடல் ஆகும். இந்த ஆண்ட்ராய்டு டேப்லட் கூகுள் டென்சார் பிராசஸர் கொண்டிருக்கிறது.

    டீசரின் படி புது பிக்சல் டேப்லட் மாடலில் பெரிய ஸ்கிரீன், மேல்புற பெசலில் கேமரா, பவர் பட்டன், பின்புறம் ஒற்றை பிரைமரி கேமரா, பக்கவாட்டுகளில் குவாட் ஸ்பீக்கர்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஆண்ட்ராய்டு 13 அல்லது ஆண்ட்ராய்டு 13L ஓ.எஸ். வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    ×