என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை கவுண்டர்பாயிண்ட் குளோபல் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
    கடந்த ஆண்டு உலகம் முழுவதும் அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

    இதில் ஆப்பிள் ஐபோன்12 போன் முதலிடத்தை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து 2-வது இடத்தில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் இருக்கிறது. 3-வது இடத்தில் ஐபோன் 13, 4-வது இடத்தில் ஐபோன் 12 ப்ரோ, 5-வது இடத்தில் ஐபோன் 11 அதிகம் விற்கப்பட்ட போன்களாக இருக்கிறது. முதல் 5 இடங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் போன்களே ஆதிக்கம் செலுத்துகின்றன.

    அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

    6-வது இடத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ12, 7-வது இடத்தில் ஜியோமி ரெட்மி 9ஏ, 8-வது இடத்தில் ஆப்பிள் ஐபோன் எஸ் எஸ்இ 2020, 9-வது இடத்தில் ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், 10-வது இடத்தில் ரெட்மி 9 ஆகிய போன்கள் அதிகம் விற்கப்பட்டுள்ளன.

    இந்த பட்டியலை கவுண்டர்பாயிண்ட் குளோபல் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
    ஐபோன் எஸ்இ 2022 போனை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள நிலையில், முந்தைய மாடல் போனின் விற்பனையை நிறுத்தியுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் எஸ்இ 2020 போன் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது. அந்நிறுவனம் நேற்று முந்தினம் புதிய ஐபோன் எஸ்இ 2020-ஐ அறிமுகம் செய்தது. இதையடுத்து தனது பழைய மாடல் போனான ஐபோன் எஸ்இ 2020-ஐ தனது இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளது. 

    இருப்பினும் அந்த போன் க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட சில இணையதளங்களில் கிடைக்கிறது. மேலும் கையிருப்பு இருக்கும் ஐபோன் எஸ்.இ 2020 போன்களை விற்பதற்காக தள்ளுபடியை அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஐபோன் எஸ்இ 2020 போனில் 4.7 இன்ச் டிஸ்பிளே, ஆப்பிள் ஏ13 பயோஒனிக் சிப்செட், ஐபோஎஸ் 13, 7 எம்பி கேமரா முன்பக்க கேமரா, 12 எம்பி பின்புற கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளது.

    இந்த போன் 3 ஜிபி + 256 ஜிபி, 3 ஜிபி + 128 ஜிபி, 3 ஜிபி + 64 ஜிபி ஆகிய வேரியண்டுகளில் கிடைக்கிறது.
    இந்த போனில் சமீபத்திய வரவான Qualcomm Snapdragon 8 Gen 1 chipset பிராசஸர் இடம்பெறும் என கூறப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 10 ப்ரோவை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த போன் மார்ச் 22 அல்லது மார்ச் 24-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

    இதில் சமீபத்திய வரவான Qualcomm Snapdragon 8 Gen 1 chipset பிராசஸர் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதில் ஹாசல்பிளாட்டுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட 3 லென்ஸ் கேமரா செட்டப் இடம்பெறும் என கூறப்படுகிறது. மேலும் இதில் 2கே ரெஷலியூஷன் உள்ள 6.7-inch LTPO2 டிஸ்பிளே, 120Hz, HDR 10+ மற்றும் 1300 nits பீக் பிரைட்னஸை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    ஒன்பிளஸ் 10 ப்ரோ

    இந்த போன் ஒன்பிளஸின் ஆக்சிஜன் ஓஎஸ், ஆண்ட்ராய்டு 12-ல் இயங்கும் என்றும், 5000mAh பேட்டரி, 80W வேகமான சார்ஜிங், 50W ஒயர்லெஸ் சார்ஜிங் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் விலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
    ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனை ஹெச்.டி.எஃப்.சி கார்டு கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ரெட்மி நிறுவனம் ரெட்மி நோட் ப்ரோ, ரெட்மி நோட் ப்ரோ+ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

    ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67-inch full-HD+ AMOLED Dot டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடனும், 1,200 நிட்ஸ் பீக் பிரைட்னஸுடனும் வழங்கப்பட்டுள்ளது. இதில் MediaTek Helio G96 SoC பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 

    கேமராவை பொறுத்தவரை இந்த போனில் 108 மெகா பிக்ஸல் f/1.9 லென்ஸ் கொண்ட சாம்சங் ஹெச்.எம்2 பிரைமர் சென்சார், f/2.2 லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா, f/2.2 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார்,  f/2.45 லென்ஸ் கொண்ட 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    இதில் 5000mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வழங்கப்படவுள்ளது.

    மேலும் பல சிறப்பம்சங்கள் கொண்ட இந்த போனின் 6ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.17,999-ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.19,999-ஆகவும் உள்ளது. இந்த போன் மார்ச் 23-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போன் மார்ச் 23-ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

    ரெட்மி நோட் 11 ப்ரோ, ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி

    இதேபோன்று ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனில் 6.67-inch full-HD+ (1,080x2,400 pixels) AMOLED டிஸ்பிளே, 120Hz ரெப்ரெஷ்ரேட், 1,200 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் octa-core Qualcomm Snapdragon 695 SoC பிராசஸர் இடம்பெற்றுள்ளது.

    கேமராவை பொறுத்தவரை ப்ரோ+ 5ஜி போனில் f/1.9 லென்ஸ் கொண்ட 108 மெகாபிக்ஸல் சாம்சங் ஹெச்.எம்2 பிரைமரி சென்சார், f/2.2 லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா, f/2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா, f/2.45 லென்ஸ் கொண்ட 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை இடபெற்றுள்ளன. இந்த போனில் 5000mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த போனில் 6ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.20,999-ஆகவும், 8 ஜிபி ரேம்+ 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.22,999-ஆகவும், 8ஜிபி ரேம்+256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.24,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனை ஹெச்.டி.எஃப்.சி கார் கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படும். இந்தபோன் வரும் மார்ச் 15-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
    ஐபோன் எஸ்இ 2022 மார்ச் 18-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
    அனைவரும் எதிர்பார்த்த ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

    இந்த ஐபோனில் iOS 15 வழங்கப்பட்டுள்ளது. 4.7 இன்ச் ரெட்டினா ஹெச்.டி டிஸ்பிளே 750x1334 ரெஷலியூஷன், 3262ppi பிக்ஸல் டென்சிட்டி, 625 nits வரை பிரைட்னஸ் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

    இந்த போன் இதுவரை உள்ள ஸ்மார்ட்போன்களிலேயே கடினமான கண்ணாடியை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இது ஏ15 பயோனிக் சிப்பை கொண்டுள்ளது. இதில் 12 மெகாபிக்ஸல் கேமரா சென்சார் f/1.8 வைட் ஆங்கிள் லென்சுடன் பின்பக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா டீப் ஃயூஷன், ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர் 4, போட்டோகிராபிக் ஸ்டைல்ஸ் ஆகியவை உள்ளன. இந்த போன் 60fps வரை 4கே வீடியோ ரெக்கார்டிங்கை வழங்குகிறது. இந்த கேமரா சப்பையர் கிரிஸ்டல் லென்ஸ் கவர் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

    முன்பக்கத்தில் 7 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா f/2.2 லென்சுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த செல்ஃபி கேமரா நேர்ச்சுரல், ஸ்டூடியோ, ஸ்டேஜ், ஸ்டேஜ் மோனோ, ஹைகீ போனோ உள்ளிட்ட 6 போர்ட்ரைட் லைட்டிங் எஃபெக்ட்ஸ்களை சப்போர்ட் செய்கிறது. மேலும் இந்த கேமராவிலும் டீப் ஃபூஷன், ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர் 4 தரப்பட்டுள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் முன்பக்க கேமராவிக் 1080p ரெக்கார்டிங்கை வழங்கியுள்ளது. இத்துடன் டைம்லேப்ஸ் வீடியோ, நைட்மோட் டைம்லேப்ஸும் இதில் இடம்பெற்றுள்ளன.

    ஐபோன் எஸ்இ 2022 பயோமெட்ரிக் ஆந்தண்டிகேஷனுக்கான ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொண்ட டச் ஐடியுடன் வருகிறது. அதுமட்டுமின்றி இதில் உள்ள இன்பில்ட் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 15 மணி நேர வீடியோ பிளேபேக் நேரத்தையும், 50 மணி நேர ஆடியோ பிளேபேக் நேரத்தையும் வழங்குகிறது.

    இந்த போனுக்கு Qi ஸ்டாண்டர்ட் பேஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. 20W வயர்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சார்ஜர் போனுடன் வராது.

    இந்த போனின் 64 ஜிபி மாடலின் விலை ரூ.43,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.48.900-ஆகவும், 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.58,900-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தபோன் மிட்நைட், ஸ்டார்லைட், ப்ராடக்ட் ரெட் ஆகிய நிறங்களில் வருகிறது. ஐபோன் எஸ்இ 2022 மார்ச் 18-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அறிமுகமாகியுள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விலை குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
    சாம்சங் நிறுவனம் அனைவரும் எதிர்பார்த்த கேலக்ஸி எம்33 5ஜி மற்றும் கேலக்ஸி எம்23 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை ஸ்பெயினில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

    அவற்றை விரிவாக இப்போது பார்க்கலாம்:

    சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

    • 6.6-இன்ச் (2408×1080 பிக்சல்ஸ்) FHD+ LCD Infinity-V டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
    • Exynos 1200 Octa-Core (2.4GHz Dual + 2GHz Hexa) பிராசஸர், Mali-G68 GPU
    • 6GB ரேம், 128GB ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 1TB வரை நீட்டித்துக்கொள்ளலாம்.
    • ஆண்ட்ராய்டு 12, சாம்சங் ஒன் UI 4.1
    • இரட்டை சிம்
    • f/1.8 அப்பெர்சருடன் 50 மெகாபிக்ஸல் பின்புற கேமரா, எல்.இ.டி ஃபிளாஷ், 5MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா f/2.2 அப்பெர்சருடன், 2MP டெப்த் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா f/2.4 அப்பெர்ச்சருடன்
    • f/2.2 அப்பெர்ச்சருடன் 8MP முன்பக்க கேமரா
    • பக்கவாட்டில் உள்ள ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்
    • டைமென்சன்: 165.4 x 76.9 x 9.4mm; எடை: 215g
    • 5G SA/NSA, டூயல் 4G VoLTE, வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் + க்ளோநேஸ்
    • 6,000mAh பேட்டரி 25W வேகமான சார்ஜிங்
    சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன்

    சாம்சங் கேலக்ஸி எம்23 5ஜி

    • 6.6-இன்ச் (2408×1080 pixels) FHD+ LCD Infinity-V டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
    • Octa Core (2.2GHz Dual + 1.8GHz Hexa Kryo 570 CPUs) Snapdragon 750G 8nm மொபைல் பிளாட்பார்ம் Adreno 619 GPU உடன்.
    • 4GB ரேம், 128GB ஸ்டோரேஜ், 1TB நீட்டிக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்
    • ஆண்ட்ராய்டு 12, சாம்சங் ஒன் UI 4.1
    • இரட்டை சிம்
    • 50MP பின்பக்க கேமரா f/1.8 அப்பெர்ச்சருடன், 8MP அல்ட்ரா வைட் கேமரா f/2.2 அப்பெர்ச்சருடன், 2MP டெப்த் சென்சார் f/2.4 அப்பெர்ச்சருடன்
    • 8MP முன்பக்க கேமரா f/2.2 அப்பெர்ச்சருடன்
    • பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
    • டைமென்சன்: 165.5 x 77 x 8.4mm; எடை: 198g
    • 5G SA / NSA, Dual 4G VoLTE, வைஃபை  802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.0, GPS + GLONASS, USB Type-C
    • 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங்

    இந்த போன்களின் விலை குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
    மார்ச் 12-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த போனை ஃபிளிப்கார்ட், ரியல்மி.காம் ஆகிய தளங்களில் வாங்கலாம்.
    ரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் ரியல்மி சி35 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    இந்த போனில் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, 90.7 ஸ்கிரீன் டூ பாடி ரேட்சியோவுடன் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் ஆக்டோ கோர் Unisoc T616 SoC பிராசஸர் தரப்பட்டுள்ளது.

    கேமராக்களை பொறுத்தவரை ரியல்மி சி35 போனில் f/1.8 லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்சல் பின்புற கேமரா, f/2.4 அபார்ச்சர் கொண்ட 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர், 2f/2.8 லென்ஸ் கொண்ட மோனோகிரோம் சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 மெகா பிக்சல் சோனி IMX355 முன்பக்க கேமரா இடம்பெற்றுள்ளது.

    இந்த போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரியின் விலை ரூ.11,999-ஆகவும், 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரியின் விலை ரூ.12,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மார்ச் 12-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த போனை ஃபிளிப்கார்ட், ரியல்மி.காம் ஆகிய தளங்களில் வாங்கலாம்.
    இந்த போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் QM 215 சிப்செட் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.
    ஜியோ நிறுவனத்தின் ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இன்று முதல் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகமாகி ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முதல் இந்த போன் கடைகளிலும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போனில் 5.45 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் புரொடக்‌ஷன், குவால்காம் ஸ்நாப்டிராகன் QM 215 சிப்செட், குவாட் கோர் பிராசஸர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 13 மெகா பிக்ஸல் பின்புற கேமராவும், 8 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமராவும் இடம்பெற்றுள்ளது.

    ஜியோ போன்

    இந்த போன் ஆண்ட்ராய்டு 11 கோ ஓஎஸ்ஸை அடிப்படையாக கொண்ட பிரகதி ஓ.எஸ்ஸில் இயங்கும். இந்த போனில் பல ஜியோ செயலிகள் இடம்பெற்றுள்ளன.

    3,500mAh பேட்டரி, 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி  கொண்ட இந்த போனின் விலை கடைகளில் ரூ.6,499-ஆகும். 
    இந்த போனை ஃபிளிப்கார்ட் ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்ட் வாங்குவது மூலம் 5 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படும்.
    ஆசுஸ் நிறுவனத்தின் 'ஆசுஸ் 8z' ஸ்மார்ட்போன இந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது.

    ஐபோன் 13 மாடல் ஸ்மார்ட்போனை ஒத்த வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 5.9 இன்ச் Samsung E4 AMOLED டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்.டி, ஸ்னாப்டிராகன் 888 SoC தரப்பட்டுள்ளது. 

    கேமராவை பொறுத்தவரை, பின்பக்கத்தில் 64 மெகாபிக்சல் சோனி IMX686 பிரைமரி சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் சோனி IMX363 செகண்டரி சென்சார் என 2 கேமராக்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் 12 மெகாபிக்சல் கொண்ட Sony IMX663 செல்ஃபி கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. 

    இது தவிர 4000mAh பேட்டரி, 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன், டைப் சி சார்ஜிங் போர்ட் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெறுகின்றன. 

    8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்ஜில் மட்டுமே வெளிவரும் இந்த போனின் விலை ரூ.42,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்த போனை ஃபிளிப்கார்ட் ஆக்ஸில் வங்கி கிரெடிட் கார்ட் வாங்குவது மூலம் 5 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படும். மேலும் இந்த போனுடன் இணைந்து வாங்கினால் கூகுள் பிக்ஸல் பட்ஸ் ஏ சீரிஸை ரூ.6,999-க்கு பெறலாம்.
    இன்று மதியம் விற்பனைக்கு வரும் இந்த போனை ஹெச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
    போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்4 ப்ரோ இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

    இந்த போனில் 6.43 இன்ச் AMOLED டிஸ்பிளே 90Hz ரெஃப்ரெஷ்ரேட் மற்றும் 1000 nits பிரைட்னஸுடன் இடம்பெற்றுள்ளது. மேலும் octa-core MediaTek Helio G96 SoC பிராசஸர், ஆண்ட்ராய்டு 11, MIUI 13 ஓ.எஸில் இந்த போன் இயங்குகிறது.

    கேமராவை பொறுத்தவரை 64 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 118 டிகிரி 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா, 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா, 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெற்றுளன. 

    மேலும் இதில் லிக்விட் கூல் தொழில்நுட்பம் 1.0, டயனமிக் ரேம் எக்ஸ்பேஷன் ஆகியவை தரப்பட்டுள்ளன.

    போக்கோ எம்4 ப்ரோ

    இந்த போனின் 6 ஜிபி ரேம்+64 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.14,999-ஆகவும், 6 ஜிபி ரேம்+128 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.16,499-ஆகவும் மற்றும் 8 ஜிபி ரேம் +256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.17,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கூல் ப்ளூ, போக்கோ யெல்லோ, பவர் பிளாக் ஆகிய நிறங்களில் இந்த போன் கிடைக்கிறது.

    இன்று மதியம் விற்பனைக்கு வரும் இந்த போனை ஹெச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். 

    ஃபிளிப்கார்ட் ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மார்ச் 11-ம் தேதி வெளியாகும் இந்த போனை முன்பதிவு செய்து ரூ.400 தள்ளுபடியுடன் ரூ.6,599-க்கு பெறலாம்.
    இந்தியாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா புதிய லாவா எக்ஸ்2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

    இந்த போனில் 6.5-inch HD+ IPS டிஸ்பிளே, octa-core MediaTek Helio SoC பிராசஸர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் 8 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 5 மெகாபிக்ஸல் செஃல்பி கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    5000mAh பேட்டரி, 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி ஆகியவை வழங்கப்பட்டுள்ள இந்த போனின் விலை ரூ.6,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மார்ச் 11-ம் தேதி வெளியாகும் இந்த போனை முன்பதிவு செய்து ரூ.400 தள்ளுபடியுடன் ரூ.6,599-க்கு பெறலாம். இந்த போன் நீலம் மற்றும் சியான் நிறங்களில் கிடைக்கிறது.
    ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள ஒரு அம்சம் 1000-க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் கேம்களின் செயல்திறனை தடுப்பதாக கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி எஸ்22 சீரிஸை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்தது. பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த இந்த போனில் புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டிருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதன்படி சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் போனில் உள்ள கேம் ஆப்டிமைசிங் சர்விஸ் பிற செயலிகளின் செயல்பாடுகளை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேம் ஆப்டிமைசிங் சர்வீஸ்

    கேமிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக கேமிங் ஆப்டிமைசிங் சர்வீஸ் அம்சம் எஸ் 22 சீரிஸில் தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த அம்சத்தை பயன்படுத்தும்போது 1000-க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் கேம்களின் செயல்திறன் பாதிக்கப்படுவதாக புகார் வந்துள்ளது.  

    இருப்பினும் ஃபேஸ்புக் உள்ளிட்ட பிரபலமான செயலிகளில் எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.

    இதுகுறித்து சாம்சங் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், சிபியூ, ஜிபியூ செயல்திறனை மேம்படுத்தவே இந்த கேம் ஆப்டிமைசிங் அம்சம் வேலை செய்கிறது. பிற செயலிகள் இதனால் பாதிக்கப்படுவதில்லை. இருப்பினும் வர இருக்கும் புதிய அப்டேட்டில் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என தெரிவித்துள்ளது.
    ×