என் மலர்tooltip icon

    கணினி

    சியோமி நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. #Xiaomi #MiLEDTV4XPRO55



    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்தது. சமீபத்தில் சியோமி நிறுவனம் தனது Mi டி.வி. 4ஏ 32 இன்ச் மற்றும் Mi டி.வி. 4சி 32 ப்ரோ மாடல்களின் விலையை குறைத்தது. 

    இதைத் தொடர்ந்து அந்நிறுவனம் Mi எல்.இ.டி. டி.வி. 4X ப்ரோ 55 இன்ச் மற்றும் Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 43 இன்ச் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.



    சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4X ப்ரோ 55 இன்ச்:

    சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4X ப்ரோ 55 இன்ச் மாடலில் 55-இன்ச் 4K UHD HDR 10-பிட், 4840x2160 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த டி.வி.யில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ARM கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர் மற்றும் மாலி 450 GPU வழங்கப்பட்டுள்ளது.

    அழகிய வடிவமைப்பு மற்றும் தலைசிறந்த யு.ஐ. கொண்டிருக்கும் Mi எல்.இ.டி. டி.வி. 4X ப்ரோ 55 இன்ச் மாடலில் சிறப்பான அனுபவம் கிடைக்கும். மெட்டாலிக் கிரே வடிவமைப்பு கொண்டிருப்பதால் டி.வி. பார்க்க பிரீமியம் தோற்றத்தில் 11 எம்.எம். அளவில் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது.

    ஆடியோ அனுபவத்தை பொருத்தவைர லாஸ்லெஸ் FLAC ஆடியோ ஃபார்மேட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 பட்டன்களை கொண்ட Mi ரிமோட் மற்றும் ப்ளூடுத், பிரத்யேக வாய்ஸ் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதை கொண்டு டி.வி. மற்றும் செட் டாப் பாக்ஸ்களில் சேனல்களை மாற்றிக் கொள்ளலாம்.

    ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த டி.வி. ஓ.எஸ். மற்றும் பேட்ச் வால் ஓ.எஸ். கொண்டு இயங்குகிறது. டைனமிக் பேக்கிரவுண்டு மற்றும் ஸ்கிரீன் ஆஃப் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்பில்ட் பிளே ஸ்டோர், க்ரோம்காஸ்ட் மற்றும் யூடியூப் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருக்கிறது.



    சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 43 இன்ச்:

    இந்த டி.வி.யில் ஃபிளாக்‌ஷிப் குவாட்-கோர் 64 பிட் அம்லாஜிக் சிப்செட், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. 3 HDMI போர்ட்கள், 3 யு.எஸ்.பி. போர்ட், ஏ/வி, வைபை, ஈத்தர்நெட் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சக்திவாய்ந்த 20 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் DTS கோடெக் வசதி கொண்டிருக்கிறது. 55 இன்ச் மாடலை போன்று இந்த டி.வி.யிலும் இன்பில்ட் பிளே ஸ்டோர், க்ரோம்காஸ்ட் மற்றும் யூடியூப் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

    விலை மற்றும் விற்பனை:

    சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4X ப்ரோ 55 இன்ச் மாடலின் விலை இந்தியாவில் ரூ.39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அறிமுகமான Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 43 இன்ச் மாடலின் விலை ரூ.22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் ஜனவரி 15 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு விற்பனை செய்யப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் சரவ்தேச நுகர்வோர் மின்சாதன விழாவில் 219 இன்ச் அளவில் புதிய டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. #SamsungCES2019



    சாம்சங் நிறுவனம் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் (சி.இ.எஸ். 2019) புதிய தொலைகாட்சிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சி.இ.எஸ். 2019 விழாவில் சாம்சங் சிறிய அளவில் துவங்கி, பெரிய அளவுகளில் மைக்ரோ எல்.இ.டி. மாட்யூலர் பேனல்களை அறிமுகம் செய்துள்ளது.

    அந்த வரிசையில் சாம்சங் நிறுவனம் தி வால் என்ற பெயரில் 219 இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங்கின் புதிய பேனல்களில் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா போன்ற வசதிகளை வழங்கும். எனினும், இதற்கு உங்களிடம் இந்த வசதிகளை சப்போர்ட் செய்யும் ஸ்பீக்கர் இருக்க வேண்டும்.



    புதிய 219 இன்ச் வால் மைக்ரோ எல்.இ.டி. தொழில்நுட்பத்தில் சாம்சங் தன்னால் முடிந்தவற்றை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கில் அமைந்சிருக்கிறது. இத்துடன் 75 இன்ச் அளவில் சாம்சங் சிறிய ரக மைக்ரோ எல்.இ.டி. பேனல் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. 75 இன்ச் பேனலில் 4K வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ஐடியூன்ஸ் மூலம் திரைப்படங்களை வழங்குவதுடன், ஸ்மார்ட் டி.வி. ஆப் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதற்கான அறிவிப்பை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா உள்ளிட்டவற்றுக்கான வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

    இதன் மூலம் பயனர்கள் டி.வி.யின் அடிப்படை அம்சங்களை குரல் மூலமாகவே இயக்க முடியும். ஒருவேளை ஸ்மார்ட் ஸ்பீக்கர் இல்லாத பட்சத்தில் டி.வி.யில் பில்ட்-இன் பிக்ஸ்பி மூலம் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது. 
    எல்.ஜி. நிறுவனம் சுருட்டக்கக்கூடிய வசதி கொண்ட சிக்னேச்சர் OLED டி.வி. ஆர் மாடலை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்தது. #CES2019 #LGCES2019



    எல்.ஜி. நிறுவனம் தனது சுருட்டக்கக்கூடிய சிக்னேச்சர் OLED ரக டி.வி. ஆர் மாடலை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் எல்.ஜி. இந்த டி.வி. மாடல்களின் ப்ரோடோடைப் பதி்ப்புகளை அறிமுகம் செய்திருந்தது. 

    தற்சமயம் எல்.ஜி. அறிமுகம் செய்திருக்கும் சுருட்டக்கக்கூடிய சிக்னேச்சர் OLED டி.வி.க்கள் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் விற்பனைக்கு வருகிறது. மற்ற ஸ்மார்ட் டி.வி.க்கள் போன்று இல்லாமல், எல்.ஜி.யின் புதுவித சிக்னேச்சர் OLED டி.வி. ஆர் மாடலில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது திரையை சுருட்டி வைக்கும் வசதியை வழங்குகிறது.

    புதிய எல்.ஜி. சிக்னேச்சர் டி.வி. மாடல் பார்க்க சிறிய பெட்டி போன்று காட்சியளிக்கிறது, பின் டி.வி.யை ஆன் செய்ததும் திரை பெட்டியில் இருந்து மெல்ல வெளியே வரும் படி உருவாக்கப்பட்டுள்ளது. திரை சுருட்டப்பட்டு இருந்தாலும், காட்சிகள் மிகவும் தெளிவாக இருக்கும் படி அதிநவீன தொழில்நுட்பம் நிறைந்திருக்கிறது.



    அலெக்சா மற்றும் ஏர்பிளே 2 போன்ற பல்வேறு அம்சங்களுடன் கிடைக்கும் எல்.ஜி. சிக்னேச்சர் OLED டி.வி. ஆர் தற்சமயம் 65 இன்ச் அளவில் மட்டும் கிடைக்கிறது. எனினும் இதனை மூன்று விதங்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலாவதாக ஃபுல் வியூ ஆப்ஷனில் பெரிய திரை, ஏ.ஐ. பிக்சர் மற்றும் சவுண்ட் செட்டிங்ஸ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

    இரண்டாவது ஆப்ஷன் லைன் வியூ. இந்த ஆப்ஷனில் டி.வி. பாதி அளவில் வெளியே தெரியும். பயனர்கள் இதில் கடிகாரம் மோட் செட் செய்து நேரம், வானிலை அல்லது ஃபிரேம் மோட் மூலம் குடும்ப புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை ஸ்மார்ட்போனில் இருந்து >ஷேர் செய்து பார்க்க முடியும். மூன்றாவது ஆப்ஷனான சீரோ வியூ திரை முழுமையாக உள்ளேயே இருக்கும். எனினும், பயனர்கள் இசையை டால்பி அட்மோஸ் ஆடியோ தரத்தில் அனுபவிக்க முடியும். 



    இதுவரை எல்.ஜி.யின் புதிய சிக்னேச்சர் OLED டி.வி. ஆர் மாடலின் விலையை அறிவிக்கவில்லை. புதிய சுருட்டக்கூடிய டி.வி. தவிர எல்.ஜி. நிறுவனம் க்ரிஸ்டல் சவுண்ட் ஸ்கிரீன் தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்தது. இதனுடன் 88 இன்ச் 8K OLED, 65 இன்ச் 8K OLED, ஒலியெழுப்பும் திறன் கொண்ட 65 இன்ச் 4K OLED ஸ்கிரீன் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தது. 

    முன்னதாக இந்த தொழில்நுட்பம் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 8K OLED ஸ்கிரீன் 3.2.2-சேனல் டால்பி அட்மோஸ் ஆடியோவை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
    வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தின் பீட்டா பதிப்பில் புதிய வசதிகள் சோதனை செய்யப்படுகிறது. #Whatsapp #Apps
    வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பீட்டா பயனர்களுக்கு புதிய அம்சம் வழங்கப்படுகிறது. புதிய 2.19.10.21 அப்டேட் மூலம் பயனர்களுக்கு பல்வேறு புதிய வசதிகள் கிடைக்கின்றன.

    அந்த வகையில் புதிய அம்சங்கள் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம். இந்த அப்டேட் மூலம் செயலியில் சில முக்கிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு, செயலியின் ஒட்டுமொத்த அனுபவமும் மேம்படுத்தப்படலாம் என தெரிகிறது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது ஜிஃப்களில் ஸ்டிக்கர்களை சேர்க்க முடியும். இதில் பயனர்கள் நேரம், இருப்பிடம் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளில் கிடைக்கும் தனிப்பட்ட ஸ்டிக்கர்களை பயன்படுத்த முடியும். இந்த அப்டேட்டில் ஸ்டிக்கர்களை தேர்வு செய்ய புதிய வடிவமைப்பு கொண்ட பகுதி வழங்கப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: WABetaInfo

    இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே இந்த அம்சம் தெரிகிறது. இதுதவிர குரூப்களில் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பதில் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஏற்கனவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. தற்சமயம் இந்த அம்சம் கொண்டு பயனர் தேர்வு செய்யும் குறுந்தகவல்களுக்கு வாட்ஸ்அப் தானாக புதிய சாட் ஸ்கிரீனை திறக்கும். இதில் பயனர்கள் தனிப்பட்ட முறையில் பதில் அளிக்க முடியும்.

    இத்துடன் ஸ்டேட்டஸ்களை சரிபார்ப்பதற்கென டெவலப்பர்கள் புதிய வழிமுறையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் வழக்கமாக பயனர்கள் 3D ஃபோர்ஸ் முறையில் வாட்ஸ்அப் கான்டாக்ட்கள் அனுப்பும் குறுந்தகவல்களை சரிபார்ப்பதை போன்று இயங்கும். எனினும், தற்சமயம் இந்த அம்சம் 3D டச் தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.  #Whatsapp #Apps
    சியோமி இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதிய டீசரில் அந்நிறுவனம் புதிய ஸ்மார்ட் டி.வி. ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது. #Xiaomi #SmartTV



    சியோமி இந்தியா புதிதாக ஸ்மார்ட் டி.வி. ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதை புதிய டீசர் மூலம் தெரியப்படுத்தியுள்ளது. அந்த வகையில் சியோமியின் புதிய ஸ்மார்ட் டி.வி. ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. 

    புதிய ஸ்மார்ட் டி.வி. சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அந்நிறுவனம் 65 இன்ச் அளவில் 4K தரத்தில் ஹெச்.டி.ஆர். வசதி கொண்ட ஸ்மார்ட் டி.வி.யினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சியோமி நிறுவனம் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் என இருவித அளவுகளில் 4K ஸ்மார்ட் டி.வி. மாடல்களை ஏற்கனவே அறிமுகம் செய்திருக்கும் நிலையில், புதிய ஸ்மார்ட் டி.வி. சியோமியின் விலை உயர்ந்த மாடலாக இருக்கும். புதிய ஸ்மார்ட் டி.வி.க்கான டீசருடன் #TheBiggerPicture எனும் ஹேஷ்டேக் இடம்பெற்றிருக்கிறது. 



    இதுவே பெரிய டி.வி. மாடல் ஒன்று வெளியாக இருப்பதை தெரியப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. சியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் Mi டி.வி. 4 65-இன்ச் மாடல் ஏற்கனவே சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது. சீனாவில் இந்த டி.வி. விலை 5999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.62,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இந்தியாவில் சியோமியின் புதிய டி.வி. விலை ரூ.70,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அறிமுகமான Mi டி.வி. 4 ப்ரோ சீரிஸ் போன்று சியோமியின் புதிய Mi டி.வி. மாடல்களும் ஆண்ட்ராய்டு டி.வி. இயங்குதளம், ஸ்மார்ட் ரிமோட் மற்றும் வாய்ஸ் சர்ச் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் புதிய ரக கியர் ஐகான் எக்ஸ் இயர்பட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung #Earphone



    சாம்சங் நிறுவனம் புதுவித கியர் ஐகான் எக்ஸ் இயர்பட்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கியர் ஸ்போர்ட் மற்றும் கியர் ஃபிட் 2 போன்ற சாதனங்களின் மேம்பட்ட மாடலாக புதிய இயர்பட்கள் இருக்கும்.

    புதிய ஐகான் எக்ஸ் இயர்பட்கள் SM-R170 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இவை கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இயர்பட்களில் 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் அதிகளவு மெமரி கொண்ட சாம்சங்கின் முதல் கியர் பிராண்டு இயர்போனாக புதிய இயர்பட்கள் இருக்கும்.



    கேலக்ஸி வாட்ச் போன்று புதிய ஐகான் எக்ஸ் இயர்பட்களிலும் கேலக்ஸி பிராண்டிங் கொண்டிருக்கலாம். அவ்வாறு சாம்சங் சாதனங்களில் கேலக்ஸி பிராண்டிங் பரவலாக இருக்கும். புதிய இயர்பட்கள் தவிர சாம்சங் நிறுவனம் பிக்ஸ்பி வசதி கொண்ட புதிய கேலக்ஸி ஹோம் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய ஐகான் எக்ஸ் இயர்பட்களில் சிறப்பான பேட்டரி பேக்கப் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே கியர் ஐகான் எக்ஸ் 2018 முந்தைய மாடலை விட அதிகளவு பேக்கப் வழங்குகிறது. இதுதவிர புதிய சாதனத்தின் சார்ஜிங் கேஸ் திறன் மேம்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.  

    புதிய இயர்பட்களின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் அறிமுகம் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    எல்.ஜி. நிறுவனம் சார்பில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் காப்புரிமைகளில் அந்நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் இந்த அம்சத்தை வழங்க இருப்பது தெரியவந்துள்ளது. #LG #smartwatch



    ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்கும் வழக்கத்தை சாம்சங் நிறுவனம் தான் துவங்கியது. சாம்சங்கின் முதல் கியர் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் அந்நிறுவனம் கேமராவினை வழங்கியது, எனினும் அதன்பின் சாம்சங் அறிமுகம் செய்த ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்கப்படவில்லை.

    இந்நிலையில், எல்.ஜி. நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்க இருப்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. எல்.ஜி. நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமைகளில் அந்நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்க இருப்பது தெரியவந்துள்ளது.



    அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் எல்.ஜி. பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில், அந்நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்ச்களில் கேமராக்களை எவ்வாறு வழங்கும் என்பது பற்றி பல்வேறு வடிவமைப்புகள் இடம்பெற்றிருந்தன. புதிய ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா மட்டுமின்றி, மொபைல் டெர்மினல் வசதி வழங்கப்பட்டிருப்பதால் இதில் செல்லுலார் கனெக்டிவிட்டி அம்சமும் வழங்கப்படலாம்.

    புகைப்படங்கள் எடுக்கப்படுவதை எளிமையாக்கும் வகையில், கேமராவினை ஸ்மார்ட்வாட்ச்சில் புகுத்தும் பணிகளில் எல்.ஜி. ஈடுபட்டுள்ளது. இந்த காப்புரிமைகளில் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதை விளக்கும் வரைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வாறு ஸ்மார்ட்வாட்ச்சில் ரிஸ்ட் பேண்ட்-ஐ மாற்றக்கூடிய வகையில், எளிமையாக கேமரா கோணத்தை மாற்ற முடியும்.

    அடுத்ததாக வாட்ச் பேண்ட் மாடலில் கேமராவினை இணைக்கும் மெட்டல் லின்க் காணப்படுகிறது. மூன்றாவதாக வாட்ச் பேண்ட் முழுக்க பயனர் விரும்பும் இடத்தில் ஸ்ப்ரிங் க்ளிக் ஒன்றை இணைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுவதை போன்று காட்சியளிக்கிறது. 


    ஸ்மார்ட்ச்களில் கேமரா வழங்குவதன் மூலம் பயனர்கள் உட்கொள்ளும் உணவுகளை புகைப்படம் எடுத்து அதன் கலோரி அளவுகளை கணக்கிட முடியும், க்யூ.ஆர். கோடு ஸ்கேன் செய்து ஷாப்பிங் மற்றும் இதர இடங்களில் பயன்படுத்தலாம்.

    எல்.ஜி. புதிய அம்சத்தை வழங்குவதற்கான காப்புரிமைகளை மட்டுமே பதிவு செய்திருக்கும் நிலையில், உண்மையில் இந்த சாதனம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதிக்கான சோதனை துவங்கி இருக்கிறது. அந்த வகையில் இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம். #Facebook #messenger



    ஃபேஸ்புக் எஃப்8 2018 டெவலப்பர் நிகழ்வில் மெசஞ்சர் செயலி முழுமையாக மாற்றப்படுவதாக அந்நிறுவனம் கடந்த ஆண்டின் மே மாதத்தில் அறிவித்திருந்தது. அன்று முதல் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு மாற்றங்களை உலகின் வெவ்வேறு பகுதிகளில் படிப்படியாக மேற்கொண்டு வருகிறது.

    ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் தகவல் பரிமாற்றத்திற்கென மெசஞ்சர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மெசஞ்சரில் டார்க் மோட் வசதியை வழங்குவதாக ஃபேஸ்புக் கடந்த ஆண்டு அறிவித்தது. இதைத் தொடர்ந்து டார்க் மோட் அம்சம் பல்வேறு நாடுகளில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

    தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி சோதனை செய்யப்படுகிறது என ஜேன் மேன்சுன் வொங் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அனைத்து பகுதிகளிலும் டார்க் மோட் வசதி வழங்கப்படாத நிலையில், செயலியில் பணிகள் நடைபெறுகிறது (Work in Progress) என குறிப்பிட்டுள்ளதாக வொங் தெரிவித்திருக்கிறார்.



    முன்னதாக மெசஞ்சரில் டார்க் மோட் பற்றிய ட்விட் பதிவிட்ட வொங், பின் இந்த அம்சத்திற்கான ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டார். ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று டார்க் மோட், பின்னணி நிறங்களை கருப்பு நிறத்திற்கு மாற்றுகிறது. எனினும், சில விவரங்கள் மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மெசஞ்சர் செயலியை ஃபேஸ்புக் மாற்றியமைத்தது. அதன்படி புதிய செயலியில் பயனர்கள் மிக எளிமையாக சாட் செய்யவும், வீடியோ கால் மற்றும் இதர அம்சங்களை பயன்படுத்தும் படி உருவாக்கப்பட்டு இருந்தது. மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி எங்கு சோதனை செய்யப்படுகிறது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    மெசஞ்ரில் டார்க் மோட் வசதி Me பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதனை செயல்படுத்தியதும், ஃபேஸ்புக் தரப்பில் இந்த அம்சம் இறுதிகட்ட பணிகளில் இருப்பதாக தெரிவிக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் கோ லேப்டாப் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. #Microsoft #laptop



    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் கோ லேப்டாப் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் புதிய சர்ஃபேஸ் கோ துவக்க விலை ரூ.38,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ லேப்டாப் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த லேப்டாப் விண்டோஸ் 10 இயங்குதளம் சார்ந்து இயங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விலை குறைந்த லேப்டாப் ஆகும். இன்டெல் பிராசஸர், 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ மாடலில் 10.0 இன்ச் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே மற்றும் 500 கிராம் எடை கொண்டிருக்கிறது. ஐபேட் போன்றே புதிய சர்ஃபேஸ் கோ மாடலிலும் சர்ஃபேஸ் கோ மைக்ரோசாஃப்ட் இன் சர்ஃபேஸ் பென் சப்போர்ட் கொண்டிருக்கிறது.



    இந்த டேப்லெட் அல்லது நோட்புக் சாதனம் 7-ம் தலைமுறை கோல்டு பிராசஸர் 4415Y, ஃபேன்-லெஸ் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குவதோடு 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஃபிளாஷ் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    கனெக்டிவிட்டியை பொருத்த வரை 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. சர்ஃபேஸ் கோ நோட்புக் மாடலில் கீபேட் மற்றும் டிராக்கர் பயன்களை வழங்கும் கேஸ் வழங்கப்படுகிறது.
    சியோமி நிறுவன Mi எல்.இ.டி. ஸ்மார்ட் டி.வி. மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. #Xiaomi #GST



    சியோமி நிறுவன சாதனங்களின் விலை சமீப மாதங்களில் அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் Mi எல்.இ.டி. டி.வி. மாடல்களின் விலை நவம்பர் மாதம் அதிகரிக்கப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக விலை அதிகரிக்கப்பதாக சியோமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் புதிய ஆண்டு துவக்க தினமான இன்று, சியோமி தனது Mi எல்.இ.டி. டி.வி. மாடல்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.



    விலை குறைப்புக்கு பின் ஸ்மார்ட் டி.வி.க்களின் புதிய விலை:

    சியோமி Mi எல்.இ.டி. ஸ்மார்ட் டி.வி. 4ஏ விலை ரூ.12,499 (ரூ.1,500 குறைப்பு)
    சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4சி விலை ரூ.13,999 (ரூ.2,000 குறைப்பு)
    சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 49 விலை ரூ.30,999 (ரூ.1,000 குறைப்பு)

    இந்தியாவில் மின்சாதன பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 28% இல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட் டி.வி. மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

    புதிய விலை குறைப்பு காரணமாக சியோமி ஸ்மார்ட் டி.வி.க்களின் விற்பனை புத்தாண்டு மற்றும் பண்டிகை காலக்கட்டத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய Mi எல்.இ.டி. மாடல்களின் புதிய விலை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமைகளில் அந்நிறுவனம் மடிக்கக்கூடிய டிரோன் ஒன்றை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. #Samsung #drones



    சாம்சங் நிறுவனம் சிறிய ரக ஆளில்லா பறக்கும் ஊர்திகளை (டிரோன்) உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் தென்கொரிய நிறுவனம் மடிக்கக்கூடிய டிரோன் ஒன்றை உருவாக்கி வருவதாகவும், இதில் கேமரா, கைரோஸ்கோப், அக்செல்லோமீட்டர் மற்றும் பாரோமீட்டர் போன்றவை இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த டிரோன் பெருமளவு உற்பத்திக்கு எப்போது தயாராகும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் சாம்சங் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய வகையில் புதிய டிரோன் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த டிரோனின் இறக்கையை மடிக்கவும், நீட்டிக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.


    புகைப்படம் நன்றி: USPTO | Samsung

    இந்த டிரோன் இரண்டு பிரிவுகளை கொண்டிருக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை இணைக்கும் போது டிரோன் பறக்க தயாராகி விடும். இந்த ஆண்டு மட்டும் டிரோன் தயாரிப்பது பற்றி சாம்சங் பதிவு செய்துள்ள ஐந்தாவது காப்புரிமை இது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    சாம்சங் டிரோனின் ஒரு பகுதியில் வயர்லெஸ் தகவல் பரிமாற்றம் செய்யும் சர்கியூட், மற்றொரு பகுதியில் வெளிப்புற கண்ட்ரோலர், நேவிகேஷன் சர்கியூட் போன்ற பாகங்கள் பொருத்தப்படுவதாக சாம்சங் காப்புரிமைகளில் தெரிகிறது. 

    மேலும் இந்த டிரோன் வழக்கமான டிரோன்களை போன்ற அம்சங்கள் கொண்டிருக்கும் என்றும் இதனை ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது கணினி உள்ளிட்டவற்றை கொண்டு இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. கூடுதலாக சாம்சங் டிரோன் கொண்டு மற்ற மின்சாதனங்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.
    சோனி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹெட்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Sony #headphones



    சோனி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சோனி WH-CH700N என அழைக்கப்படும் புதிய வயர்லெஸ் ஹெட்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. 

    புதிய ஹெட்போன்களில் சோனி நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் சத்தத்தை தடுக்கும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் நாய்ஸ் கேன்சலேஷன் (Artificial Intelligence Noise Cancellation) தொழிநுட்பத்தை வழங்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் வெளிப்புற சூழலுக்கு ஏற்ப சத்தத்தை கட்டுப்படுத்திக் கொள்ளும்.

    இத்துடன் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை எளிமையாக செயல்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஹெட்போனில் பிரத்யேக என்.சி. (NC) பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்போனில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஹெட்போன்களை தொடாமலேயே வாய்ஸ் கமாண்ட்களை செயல்படுத்திக் கொள்ள ஹெட்போனில் பில்ட்-இன் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது. 

    சோனி WH-CH700N ஹெட்போன்களின் மற்றொரு புதிய அம்சமாக டிஜிட்டல் சவுன்ட் என்ஹான்ஸ்மென்ட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது கம்ப்ரெஸ் செய்யப்பட்ட மியூசிக் ஃபைல்களின் தரத்தை அதிகப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய ஹெட்போன்களில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி மென்பொருள் அப்டேட் மூலம் வழங்கப்படும் என சோனி தெரிவித்துள்ளது.



    கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை சோனி WH-CH700N மாடலில் ப்ளூடூத் 4.1 மற்றும் என்.எஃப்.சி. வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் எளிதில் கழற்றக்கூடிய ஒருபக்க கேபிள் 1.2 மீட்டர் நீளத்தில் வழங்கப்படுகிறது. இதனை வழக்கமான 3.5 எம்.எம். ஜாக் போன்று பயன்படுத்தலாம்.

    இந்த ஹெட்போன்களை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்ய ஏழு மணி நேரம் ஆகும் என சோனி தெரிவித்துள்ளது. இத்துடன் மியூசிக் செட்டிங்கிற்கு ஏற்ப அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கு தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதனுடன் க்விக் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஹெட்போன்களை ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்த வெறும் பத்து நிமிடங்கள் மட்டும் சார்ஜ் செய்தாலே போதுமானது.

    சோனி WH-CH700N ஹெட்போன் மாடல் ஹெட்போன்ஸ் கனெக்ட் ஆப் மூலம் இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களுக்கு வழங்கப்படுகிறது.

    நாடு முழுக்க இயங்கி வரும் சோனி விற்பனை மையங்களில் சோனியின் புதிய WH-CH700N ஹெட்போன்களை வாங்க முடியும். இந்தியாவில் இதன் விலை ரூ.12,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×