என் மலர்
தொழில்நுட்பம்
- சாம்சங் நிறுவனம் தனது புதிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
- புதிய கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போனினை மிட் ரேஞ்ச் பிரிவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கேலக்ஸி F14 5ஜி மாடலில் 6.6 இன்ச் FHD+ 90Hz ஸ்கிரீன், 13MP செல்ஃபி கேமரா, எக்சைனோஸ் 1330 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வசதியை கொண்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5.0 கொண்டிருக்கும் கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு ஒஎஸ் அப்டேட்களையும், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்களையும் பெறும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த், மேக்ரோ கேமராக்கள் வழங்கப்படுகின்றன.

பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன், 6000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி F14 5ஜி அம்சங்கள்:
6.6 இன்ச் 1080x2408 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி V LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
ஆக்டா கோர் எக்சைனோஸ் 1330 பிராசஸர்
மாலி G68 MP2 GPU
4 ஜிபி, 6 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
2MP டெப்த் கேமரா
2MP மேக்ரோ சென்சார், எல்இடி ஃபிளாஷ்
13MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
6000 எம்ஏஹெச் பேட்டரி
25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன் B.A.E. பர்பில், கோட் கிரீன், OMG பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 490 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வெர்ஷன் விலை ரூ. 15 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் விற்பனை மார்ச் 30 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட், சாம்சங் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.
- டுவிட்டர் புளூ சந்தா முதற்கட்டமாக உலகின் தேர்வு செய்யப்பட்ட 50 நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.
- உலகளவில் டுவிட்டர் புளூ வெளியானதை அடுத்து டுவிட்டரில் பழைய வெரிஃபைடு திட்டம் நிறுத்தப்படுகிறது.
ஏப்ரல் 1, 2023 முதல் டுவிட்டரில் அக்கவுண்ட்களை வெரிஃபை செய்யும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. டுவிட்டர் புளூ சந்தா அமலுக்கு வரும் முன் தங்களின் அக்கவுண்ட்களை வெரிஃபைடு செய்து புளூ டிக் பெற்றவர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புளூ டிக் நீக்கப்படும் என டுவிட்டர் அறிவித்து இருக்கிறது.
சர்வதேச சந்தையில் சில நாடுகளில் படிப்படியாக கொண்டுவரப்பட்ட டுவிட்டர் புளூ சந்தா முறை தற்போது உலகளவில் வெளியாகி விட்டது. புதிய அப்டேட்டின் மூலம் டுவிட்டர் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட்டு இருந்த வெரிஃபைடு செக்மார்க் நீக்கப்படுகிறது.
எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாற்றங்களின் படி டுவிட்டர் புளூ சந்தா பயனர்களுக்கு ஏராளமான அம்சங்களை பிரத்யேகமாக வழங்குகிறது. இதில், வெரிஃபைடு செக்மார்க், டுவிட் உரையாடல்களுக்கு முன்னுரிமை, குறைந்த விளம்பரங்கள், புக்மார்க் ஃபோல்டர்கள், நேவிகேஷனை கஸ்டமைஸ் செய்யும் வசதி, டுவிட்களை எடிட் மற்றும் அண்டு செய்யும் வசதி இடம்பெற்று இருக்கிறது.
இத்துடன் அதிகபட்சம் 4 ஆயிரம் எழுத்துக்களில் டுவிட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக டுவிட்டர் புளூ சந்தா உலகின் தேர்வு செய்யப்பட்ட 50 நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. தற்போது உலகம் முழுக்க டுவிட்டர் புளூ சந்தா பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
உலகளவில் டுவிட்டர் புளூ வெளியாகி இருப்பதை அடுத்து டுவிட்டர் நிறுவனம் தனது பழைய வெரிஃபைடு திட்டத்தை நிறுத்துகிறது. பழைய வழக்கப்படி டுவிட்டர் பயனர்களின் ஐடி மற்றும் பொது மக்கள் இடையே பிரபலமாக இருப்போருக்கு குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளின் கீழ் வெரிஃபைடு வழங்கப்பட்டு இருந்தது.
- வாட்ஸ்அப் சேவையை பயனர்கள் ஒரே சமயம் நான்கு சாதனங்களில் பயன்படுத்தலாம்.
- வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் தளத்தில் புதிய அம்சத்திற்கான அப்டேட் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்கள் எளிதில் சாதனங்களுடன் இணைத்துக் கொள்ளும் வசதியை ஏற்கனவே வழங்கி வருகிறது. தற்போது வாட்ஸ்அப்-இன் தாய் நிறுவனமான மெட்டா, விண்டோஸ் தளத்திற்கென உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய செயலியை உருவாக்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
விண்டோஸ் டெஸ்க்டாப்-க்கான புதிய வாட்ஸ்அப் ஆப் அதன் மொபைல் செயலியை போன்றதாகும். இது வாட்ஸ்அப் சேவையின் அதிவேக அனுபவத்தை கூடுதல் சாதனங்களில் வழங்குகிறது. இதுதவிர பயனர்கள் அதிகபட்சம் நான்கு சாதனங்களில் தங்களின் அக்கவுண்ட்-ஐ லின்க் செய்து கொள்ளலாம் என வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது.

இவ்வாறு செய்தபின் பயனர்களின் அக்கவுண்ட் சின்க் செய்யப்பட்டு இருக்கும். இப்படி செய்யும் போது போன் ஆஃப்லைனில் இருக்கும் போதிலும் சேவை சீராகவே இயங்கும். விண்டோஸ் டெஸ்க்டாப்-இல் வாட்ஸ்அப் ஆப்-ஐ அப்டேட் செய்த பின் பயனர்கள் புதிய அம்சங்களை பயன்படுத்த துவங்கலாம். இதில் வீடியோ, வாய்ஸ் காலிங் வசதி உள்ளிட்டவை அடங்கும்.
"சார்ஜர் இல்லையா, பிரச்சினையே இல்லை. இனி உங்களின் வாட்ஸ்அப்-ஐ அதிகபட்சம் நான்கு சாதனங்களுடன் லின்க் செய்து கொண்டு ஸ்மார்ட்போன் ஆஃப் ஆன பின்பும் சாட்களுடன் எந்நேரமும் சின்க், என்க்ரிப்ட் செய்யப்பட்ட நிலையில் தொடர முடியும்," என வாட்ஸ்அப் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது.
பல்வேறு சாதனங்களில் வாட்ஸ்அப் லின்க் செய்வது எப்படி?
- மொபைல் போன் நம்பர் லின்க் செய்யப்பட்டு இருக்கும் சாதனத்தில் வாட்ஸ்அப்-ஐ திறக்க வேண்டும்.
- சாதனத்தில் செட்டிங்ஸ் (Settings) -- லின்க்டு டிவைசஸ் (Linked Devices) ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.
- இனி லின்க் எ நியூ டிவைஸ் (Link a new device) ஆப்ஷனை கிளிக் செய்து திரையில் வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
- விண்டோஸ் டெஸ்க்டாப்-இல் இரண்டாவது சாதனத்தை லின்க் செய்ய, வாட்ஸ்அப் வெப் வலைத்தளத்தை பிரவுசரில் திறக்க வேண்டும்.
- இரண்டாவது சாதனத்தில் இருந்தபடி வலைத்தளத்தில் தெரியும் கியூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்ய வேண்டும்.
- சாதனங்கள் சின்க் ஆகும் வரை காத்திருக்க வேண்டும். உங்களின் சாட்கள் இரண்டாவது சாதனத்தில் தெரியும்.
- இதே வழிமுறைகளை கொண்டு மேலும் அதிக சாதனங்களில் வாட்ஸ்அப்-ஐ லின்க் செய்ய முடியும்.
அதிகபட்சம் நான்கு சாதனங்களில் உங்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ லின்க் செய்ய முடியும். இணைய இணைப்பில் இருக்கும் வரை உங்களின் வாட்ஸ்அப் அக்வுண்ட் கனெக்ட் செய்யப்பட்டு இருக்கும். விரும்பாத பட்சத்திலோ அல்லது தேவையில்லாத சமயத்திலோ என்று எப்போது வேண்டுமானாலும், எந்த சாதனத்தில் இருந்தும் வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ அன்-லின்க் செய்து விடலாம்.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது.
- புதிய நார்ட் ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய நார்ட் பட்ஸ் மாடலையும் அறிமுகம் செய்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் நார்ட் CE 3 லைட் 5ஜி மற்றும் நார்ட் பட்ஸ் 2 மாடல்களின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இரு சாதனங்களும் இந்தியாவில் ஏப்ரல் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய நார்ட் CE 3 லைட் 5ஜி மாடல் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நார்ட் CE 2 லைட் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
புதிய நார்ட் CE 3 லைட் 5ஜி மாடலில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிவேக மற்றும் சீரான அனுபவத்தை வழங்கும் என ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதன் டிசைன் மற்ற மாடல்களில் இருப்பதை விட வித்தியாசமாக இருக்கும் என்றும் ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. நார்ட் CE 3 லைட் 5ஜி மாடல் புதிதாக பேஸ்டல் லைம் நிறத்தில் கிடைக்கும் என உறுதியாகி இருக்கிறது.

ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு யூடியூப் பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் உடனடி எக்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் போனஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
6.7 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
அட்ரினோ 619L GPU
6 ஜிபி, 8 ஜிபி ரேம்
128 ஜிபி, 256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
108MP பிரைமரி கேமரா
2MP டெப்த் கேமரா
2MP மேக்ரோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், சூப்பர் லீனியர் ஸ்பீக்கர்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2 மாடல் அதன் முந்தைய வெர்ஷனில் இருப்பதை போன்ற டிசைன் கொண்டிருக்கிறது. இதன் உள்புறம் மட்டும் சற்றே வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இந்த இயர்பட்ஸ் ஸ்பெக்லெட் பிளாக் நிறத்தில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
இரு சாதனங்களை அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒன்பிளஸ் நிகழ்வு 'Larger than life – A OnePlus Nord Launch Event' எனும் தலைப்பில் நடைபெற இருக்கிறது. அறிமுக நிகழ்வு ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு துவங்க இருக்கிறது. மற்ற ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே நார்ட் CE 3 லைட் 5ஜி மாடலும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
- Vu நிறுவனத்தின் 2023 ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
- புதிய ஸ்மார்ட் டிவி-க்களில் கூகுள் டிவி ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்திய சந்தையில் முன்னணி டிவி உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருக்கும் Vu டெலிவிஷன்ஸ் நிறுவனம் Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இவை Vu GloLED டிவிக்களை தொடர்ந்து அறிமுகமாகி இருக்கும் புதிய மாடல்கள் ஆகும். புதிய ஸ்மார்ட் டிவிக்களில் மேம்பட்ட அம்சங்கள், பிரைட் ஸ்கிரீன் மற்றும் தலைசிறந்த சவுண்ட் வெளிப்படுத்துகின்றன.
Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன்
2023 Vu பிரீமியம் டிவி மாடல் 43 இன்ச் மற்றும் 55 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கின்றன. இவை அனைத்து விதமான அறைகளிலும் எளிதில் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் A+ கிரேட் 400 நிட்ஸ் பிரைட்னஸ் பேனல்கள், 50 வாட் சவுண்ட்பார் மற்றும் டால்பி ஆடியோ வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த டிவியில் மூன்று புறம் ஃபிரேம்லெஸ் டிசைன், முன்புறம் பார்த்த நிலையில், கீழ்புறத்தில் சவுண்ட்பார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவி கூகுள் டிவி ஒஸ், வாய்ஸ் ரிமோட் உடன் கொண்டிருக்கிறது. Vu ஆக்டிவாய்ஸ் ரிமோட் கண்ட்ரோல்-இல் பில்ட்-இன் மைக்ரோபோன் உள்ளது. இது கூகுள் அசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது.
இத்துடன் புதிய ரிமோட் பிக்சர், சவுண்ட் உள்ளிட்டவைகளுக்கு ஹாட்கீ கொண்டிருக்கிறது. இதில் 64-பிட் குவாட் கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 4-கோர் சிபியு, சக்திவாய்ந்த ஜிபியு, 16 ஜிபி மெமரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன் அம்சங்கள்:
மூன்று புறம் ஃபிரேம்லெஸ் டிசைன்
43 இன்ச் மற்றும் 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K LED டிஸ்ப்ளே
டிஜிட்டல் நாய்ஸ் ரிடக்ஷன், டைனமிக் காண்டிராஸ்ட், கேம் மோட்
64 பிட் குவாட் கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி மெமரி
கூகுள் டிவி
ஆக்டிவாய்ஸ், ஹாட்கீ ரிமோட்
வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.0, 3x HDMI, 2x USB, S/PDIF, AV இன்புட், 1x ஈத்தர்நெட்
50 வாட் அவுட்புட், டால்பி ஆடியோ
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன் 43 இன்ச் மாடலின் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் 55 இன்ச் மாடலின் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைத்தளங்களில் நடைபெறுகிறது. ஆன்லைன் மட்டுமின்றி இவற்றின் விற்பனை நாடு முழுக்க ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் நடைபெறுகிறது.
- மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G13 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
- புதிய மோட்டோ G13 மாடல் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது.
மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் தனது மோட்டோ G73 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு மிட் ரேஞ்ச் மற்றும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் மோட்டோரோலா ஈடுபட்டு வருகிறது. இவற்றில் மோட்டோ G53 மற்றும் G53s மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இவைதவிர மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ G13 ஸ்மார்ட்போனினையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுகுறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மோட்டோ G13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. டிப்ஸ்டரான முகுல் ஷர்மா வெளியிட்டு இருக்கும் தகவல்களில் புதிய மோட்டோ G13 ஸ்மார்ட்போன் மார்ச் 29 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே மோட்டோ G13 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ IPS LCD பேனல், 90Hz ரிப்ரெஷ் ரேட், பாண்டா கிளாஸ் பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ G52 பிராசஸர், மாலி G-52 2EEMC2 ஜிபியு, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோ G13 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி, என்எஃப்சி, 50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
Photo Courtesy: @stufflistings
- ஒப்போ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமானது.
- ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் விற்பனை மார்ச் 17 ஆம் தேதி துவங்கியது.
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனினை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அந்நிறுவனத்தின் புதிய டாப் எண்ட் சாதனமாக அறிமுகமானது. எனினும், விற்பனை துவங்கிய சில நாட்களில் இதன் முதற்கட்ட யூனிட்கள் விற்றுத்தீர்ந்துள்ளன.
மார்ச் 17 ஆம் தேதி விற்பனைக்கு வந்த ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் முதல் வாரத்திலேயே விற்றுத்தீர்ந்ததாக ப்ளிப்கார்ட் தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஒப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலின் விலையை ரூ. 89 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்திருந்தது.

ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனில் முற்றிலும் புதிய ஃபிலெக்சியன் ஹிஞ்ச் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் அதிகளவு கிரீஸ் இடம்பெறுவதை தவிர்க்க செய்கிறது. இத்துடன் இந்த மாடலில் 3.26 இன்ச் அளவில் பெரிய இரண்டாவது டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது மற்ற கிளாம்ஷெல் ரக மாடல்களில் இருப்பதை விட பெரியது ஆகும்.
ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் அம்சங்கள்:
6.8 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
3.26 இன்ச் கவர் AMOLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர்
8 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
50MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
32MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
4ஜி, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி போர்ட்
4300 எம்ஏஹெச் பேட்டரி
44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
- முன்னதாக ஜனவரி மாத வாக்கில் ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஜனவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நோட் 12 சீரிஸ் மாடல்கள் அனைத்திலும் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளன. தற்போது ரெட்மி நோட் 12 சீரிசில் மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி புதிய ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் 4ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. மேலும் இது ரெட்மி நோட் 12 என்றே அழைக்கப்படுகிறது. புதிய 4ஜி வேரியண்ட் மார்ச் 30 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சியோமி ஃபேன் ஃபெஸ்டிவல் அங்கமாக அந்நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய சாதனங்களில் இதுவும் ஒன்று ஆகும்.

புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் பக்கத்தில் அதன் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் தோற்றத்தில் அதன் 5ஜி வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் அம்சங்கள் ரெட்மி நோட் 11 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட இருக்கிறது. இதில் 6.67 இன்ச் 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யுஷன் வழங்கப்படுகிறது.
இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 13MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
- உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது.
- வாட்ஸ்அப் க்ரூப்களில் புதிய வசதியை வழங்கும் அப்டேட் வெளியாகி வருகிறது.
வாட்ஸ்அப் செயலியில் அட்மின்கள் நிர்வாகம் மற்றும் நேவிகேட் செய்வதை எளிமையாக்கும் க்ரூப் அப்டேட்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. புதிய அப்டேட் க்ரூப்-இல் யார் இணைய வேண்டும் என்பதை கட்டுப்படுத்துவதோடு, நீங்கள் எந்த க்ரூப்களுடன் பகிர்ந்து கொள்கின்றீர்கள் என்பதை எளிமையாக்குகிறது.
கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் க்ரூப்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களுடன் புதிய அப்டேட்கள் இணைகின்றன. இதில் க்ரூப் அளவு உயர்த்தியது, மெசேஞ்ச் டெலீட் செய்யும் அம்சம் உள்ளிட்டவை அடங்கும்.

அட்மின்களுக்கு கூடுதல் கண்ட்ரோல்:
புதிய அப்டேட் மூலம் அட்மின்கள் யார் க்ரூப்-இல் இணைய முடியும் என்பதை தீர்மானிக்க முடியும். இன்வைட் லின்க் அல்லது கம்யுனிட்டியுடன் க்ரூப்-ஐ இணைக்க செய்யும் போது, யார் க்ரூப்-இல் இணைய வேண்டும் என்பதை அட்மின்கள் தீர்மாணிக்கலாம்.
இதோடு ஏதேனும் காண்டாக்ட் பெயரை க்ளிக் செய்தால், எந்த க்ரூப்-இல் இருக்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த அம்சம் கொண்டு மற்றவர்களுடன் நீங்கள் இருக்கும் க்ரூப்களை எளிமையாக தெரிந்துகொள்ளலாம்.
புதிய அம்சங்கள் வரும் வாரங்களில் சர்வதேச அளவில் வெளியிடப்பட இருக்கிறது. இதுதவிர க்ரூப்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாக மாற்ற தொடர்ந்து புதிய அப்டேட்கள் வழங்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது.
- பயனர்கள் புதிய சிம் கார்டு வாங்கும் போது தாங்களாகவே KYC செய்து கொள்ளும் வசதி 2021-இல் அறிவிக்கப்பட்டு இருந்தது.
- சுயமாக KYC செய்து கொள்ளும் வசதியை பயனர்களுக்கு அறிமுகம் செய்த முதல் நிறுவனமாக வி இருக்கிறது.
மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் 2021 பயனர்கள் தாங்களாகவே KYC செய்து கொள்ளும் வசதியை அறிவித்து இருந்தது. தற்போது இதனை பயனர்களுக்கு அறிமுகம் செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையை வி பெற்றுள்ளது.
வி நிறுவனத்தின் Self-KYC வழிமுறை முதற்கட்டமாக கொல்கத்தா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த அனைத்து போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. வி Self KYC பயனர்கள் புதிய சிம் கார்டு ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து, தாங்கள் விரும்பும் சலுகையை தேர்வு செய்து தங்களின் வீட்டில் இருந்தபடி KYC வழிமுறையை நிறைவு செய்து கொள்ளலாம்.

இந்த வழிமுறையின் மூலம் பயனர்கள் நேரடியாக ரிடெயில் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியத்தை போக்குகிறது. புதிய சேவை மத்திய தொலைத்தொடர்பு துறை வெளியிட்டு இருக்கும் விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படுவதாக வி நிறுவனம் தெரிவித்துள்ளது. படிப்படியாக இந்த சேவை நாட்டின் அனைத்து பகுதிகள் மற்றும் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் நீட்டிக்கப்படும்.
வி நிறுவனத்தின் Self KYC வழிமுறையை மேற்கொள்வது எப்படி?
வி வலைத்தளம் சென்று விரும்பிய சலுகையை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
தேர்வு செய்த சலுகையை உறுதிப்படுத்தி ஆர்டர் செய்யவும். இதற்கு மற்றொரு மொபைல் நம்பர் மூலம் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் அனுப்பப்படும்.
இனி Self KYC மேற்கொள்ள UIDAI வலைத்தளத்தில் ஆதார் சமர்பித்தல் வழிமுறையை நிறைவு செய்ய வேண்டும்.
அடுத்து குறைந்தபட்சம் பத்து நொடிகளுக்கு லைவ் புகைப்படம் அல்லது வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
ஆர்டர் செய்தபின் டிஜிட்டல் வெரிஃபிகேஷனை முடித்ததும், வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டு அவர்களின் வீட்டிற்கே டெலிவரி செய்யப்பட்டுவிடும்.
- மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G32 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி வெர்ஷன் அறிமுகம்.
- ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ G32 ஆண்ட்ராய்டு 13 அப்டேட் பெற இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ G32 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வெர்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரேம் மற்றும் மெமரி தவிர இந்த ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. மோட்டோ G32 ஸ்மார்ட்போனிலும் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதற்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. எனினும், எப்போது வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

மோட்டோ G32 அம்சங்கள்:
6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ மேக்ஸ்விஷன் LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
அட்ரினோ 610 GPU
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் மை யுஎக்ஸ்
ஹைப்ரிட் டூயல் சிம்
50MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா, எல்இடி ஃபிளாஷ்
16MP செல்ஃபி கேமரா
3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
டால்பி அட்மோஸ், எஃப்எம் ரேடியோ
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
30 வாட் டர்போ சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
மோட்டோ G32 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாடின் சில்வர், மினரல் கிரே நிறங்களில் கிடைக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் தற்போது ரூ. 10 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் A8 மாடலுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிப்பு.
- இந்திய சந்தையில் கேலக்ஸி A8 மாடலை சாம்சங் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
சாம்சங் கடந்த ஆண்டு தனது கேலக்ஸி டேப் A8 ஆண்ட்ராய்டு டேப்லெட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரண்டு வைபை மாடல்கள், இரண்டு எல்டிஇ மாடல்கள் என நான்கு வேரியண்ட்களில் கேலக்ஸி டேப் A8 விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கேலக்ஸி டேப் A8 அனைத்து வேரியண்ட்களின் விலையும் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
கேலக்ஸி டேப் A8 மாடலை சாம்சங் நிறுவனம் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட வைபை மாடல்களை முறையே ரூ. 17 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 21 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்தது. விலை குறைப்பை தொடர்ந்து இவற்றின் விலை தற்போது முறையே ரூ. 14 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 16 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி டேப் A8 எல்டிஇ வெர்ஷனின் 3 ஜிபி ரேம் மாடல் ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் 4 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது விலை குறைப்புக்கு பின் இவற்றின் விலை முறையே ரூ. 18 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 20 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி டேப் A8 அம்சங்கள்:
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் A8 மாடலில் 10.5 இன்ச் ஸ்கிரீன், மெல்லிய பெசல்கள், ஆக்டா கோர் பிராசஸர், 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா, ஸ்கிரீன் ரெக்கார்டர் அம்சம், டல்பி அட்மோஸ் வசதி கொண்ட ஸ்பீக்கர், 7040 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.






